விகடகவி

தினசரி தூறல்கள்...

506 posts in this topic

முற்றுபுள்ளி அருகே
முளைக்குமொரு புள்ளியிலே 
மெல்ல திறக்கும்
ஒரு கதவு!!

 

உண்ண உணவும் 
உடுக்க உடையும் இன்றி
ஏழைகள் ஏங்கி கிடக்க..
வாக்கு பிச்சை கேட்டு
வாசலில் நின்றவர்
தங்கமும் பணமும்
ஊரெல்லாம் பதுக்கி
உப்பி கிடக்கிறார்..
ஒதுக்கியது போதாதென்றோ 
பதவியை நீடிக்க..
அம்மா..சின்னம்மா..
ஐயா சின்னையா..
கால் விழுந்து கிடக்கிறார்.!!

 

 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

கவிதை நன்றாக இருக்கு , தொடருங்கள் கவிஞரே ....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

ஊழல் வெல்ல
உண்மை மாள

தேர்தல் இன்றி 
வெற்றி கொள்ள

பணம் கொண்டு
பயம் காட்ட

பதவி கனவில்
பவ்யம் காட்ட

அம்மாவை மறந்த 
சின்னம்மா பிள்ளைகளே

காத்திருங்கள் வரும்
மக்களின் தீர்ப்பு!

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, விகடகவி said:

ஊழல் வெல்ல
உண்மை மாள

தேர்தல் இன்றி 
வெற்றி கொள்ள

பணம் கொண்டு
பயம் காட்ட

பதவி கனவில்
பவ்யம் காட்ட

அம்மாவை மறந்த 
சின்னம்மா பிள்ளைகளே

காத்திருங்கள் வரும்
மக்களின் தீர்ப்பு!

பணம் தான் எல்லாம் என்றாகி  விகடகவி.

Share this post


Link to post
Share on other sites

எப்போது தமிழா சிரிப்பாய்..

ஆதி மொழியென்றாய்
அழகான தமிழென்றாய்..

இயல் என்றாய்
இசை என்றாய்
நாடகம் என்றாய்
முத்தமிழே மூலமென்றாய்

கடாரம் வென்றவனென்றாய் -போர்
களம் பல கண்டவெனென்றாய்

செம்மொழி
தந்ததே நம்
திருக்குறளென்றாய்

ஆய கலைகளுக்கும்
ஆணி வேரென்றாய்..

ஆண்ட பரம்பரை..
அடிமையாய் 
எபபோதானாய்..

சிறப்புகளின்
சிகரமின்று
சிரிப்பிழந்து
போனதேனோ..

ஈகத்தில் ஈடில்லை
என்ற பெயர்
கேட்கத்தானா..

வந்தாரை வாழவைத்து
ஆழ வைத்து 
பார்க்கத்தானா..

முன்னே பார்த்திருந்து
முதுகில் புண்
பார்க்கத்தானா

பின்னோரை நினையாமல்
மன்னித்து
மறப்பதாலா...

வஞ்சனை அறியாமலே-வாக்குப்
புள்ளடி பொறித்ததாலா..

வாஞ்சனை என நினைத்து
பாம்புகள் வளர்த்ததாலா..

ஊரெல்லாம் நிறைந்தும்
உலகெல்லாம் தெரிந்தும்
நாடுமில்லை நாதியுமில்லை

எப்போது தமிழா சிரிப்பாய்..

உனைத்தீண்டி
சிரித்தோரை 
எரித்தால்...

உனைச் சுரண்டி
வாழ்வோரை
எரித்தால்..

உனைத் தீண்ட
நினைப்போரை
எரித்தால்..

இருப்பாய்
தமிழா
நெருப்பாய்..

சிரிப்பாய்
சுதந்திரமாய்
அந்நாள் !

Share this post


Link to post
Share on other sites

அப்பழுக்கில்லாத ஆரம்பம்
வெள்ளைக்காகித மனது

அப்பாவின் தோளின்
சவாரி அவரின்
அவசரத்தால் முடிய..

விரிந்த புற்தரையும்
திறந்த ஆகாயமுமே
எதிரே எதிர்காலமாய்

இரவு கனவுகளையும்
பகல் பயத்தையும்
பிரசவித்துக்கொண்டிருக்கிறது

அழகான இளமை
அன்பான மாசற்ற மனது
கனவில் கடவுள் வந்தார்..

கனவில் வந்த கடவுளை
பகலில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்..

ஆம் ஆசை என்னை
தின்றுகொண்டிருக்கிறது

வரம் தந்த கடவுளை வைத்து
வியாபாரம் செய்கிறேன்..

பணம் கொட்டிய கடவுள்..
பயம் காட்டிய மனட்சாட்சி..

கனவு வேண்டி கண்கள் மூடுகிறேன்
தூக்கம் வரவில்லை..

கடவுள் ஏமாற்றிவிட்டார்?

பழைய பழக்கத்தில்
கல்லை வைத்து வியாபாரம் செய்கிறேன்

எனக்கு மட்டும்தான் தெரியும்
தூக்கமும் கடவுளும்
காணாமல் போனது !

மீண்டும் அந்த
மாசற்ற மனதும்
விழுந்ததும் தூக்கமும்
வரவே வராதா..

வராது
திரும்பி போகமுடியாத
வாழ்க்கை..

பிராயசித்தங்களை
கல்லை விட்டோடிவிட்ட
கடவுள் ..
கனவில் வந்து
சொல்வாரென
காத்துக்கிடக்கிறேன்..

Share this post


Link to post
Share on other sites

பணம் கொட்டிய கடவுள்..
பயம் காட்டிய மனட்சாட்சி..

 

இது மிகவும் பிடித்திருக்கு கவிஞரே....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

நன்றி சுவி 

Share this post


Link to post
Share on other sites

அன்னையர் தின வாழ்த்துக்கள்

எங்கேயும் என்னை 
விட்டுவிடாமல் 
கண்ணுக்குள்ளேயே 
வைத்திருந்தாள் ..அம்மா

( மூன்று மாதம் 
அக்கா வீட்டிலும் 
மூன்று மதம் 
அண்ணன் வீட்டிலும் 
மூன்று மாதம் 
என்னோடும் 
யார் பார்த்துக்கொள்வதென 
சுமையாக நினைத்தோமே..)

அன்னையர் தின வாழ்த்துக்கள்

தூசு விழுந்து 
நோகுமென்று 
அலறித்துடித்து 
பார்ப்பாளே அம்மா

( ஓரிடமாய் இருக்காமல் 
ஏன் விழுந்து தொலைகிறீர்கள் 
சலிப்புகளை அவள் 
உணர்ந்திருப்பாளே )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

"வெறும் வயிற்றில் 
தூங்க கூடாது ராசா" 
தூங்கி விழ விழ 
ஊட்டுவாளே அம்மா

( அப்பாவின் நினைவென்று 
பழைய வீட்டில் போய் 
வசித்தாள் ..
"சாப்பிட்டாயா அம்மா "
என்று பிள்ளை கேக்கவிலையே 
என வருந்தி இருப்பாளே அம்மா )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

வினாடிகள் எல்லாம் கூட 
எமக்காக கொடுத்தவளை 
நூறுமுறை சலிக்காமல் 
கொஞ்சி கதை சொன்னவளே அம்மா

( அழைக்கமாட்டாயா 
குரல் கேட்க ஆசை என்றும் 
வந்து போகாயா 
முகம் பார்க்க ஆசை என்றும் 
கெஞ்சி கேட்ட அன்னையிடம் 
நேரமில்லை என்றபோது 
ஏங்கி துடித்திருப்பாளே )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

வாழும்வரை சொல்லவில்லை 
வாஞ்சையுடன் இருந்ததில்லை 
விரல் பற்றி நடை கொடுத்தாய் 
விடை சொல்ல வரவில்லை

கூனிகுறுகாமல் 
யாருக்காய் சொல்லுகிறேன் 
முகப்புத்தகத்தில் இன்று 
அன்னையர் தின வாழ்த்துக்கள்

2 people like this

Share this post


Link to post
Share on other sites

ச்...சா  என்ன ஒரு அருமையான கவிதை. மிக நன்றாக இருக்கின்றது.....! tw_blush:

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

மிக  அருமையான கவிவரிகள் விகடகவி தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

மூச்சு முட்டிய
ஏக்கங்களோடு
சொந்த மண்ணில்
பிறந்த மண்ணில்
வாழ முடியாமல்
திக்கு திக்காய்
திசைக்கொன்றாய்
சிதறி வாழ்கின்ற
ஈழத்தமிழரின்
சின்ன சின்ன
இதயங்களின்
பெரிய ஏக்கம்..
விடுதலை பெற்ற
மண்ணில் ஒரு
நாளேனும் வாழ்வதுதான்..

சின்ன சின்ன
வெற்றிகளையும்
இப்படி கொண்டாடுகிறீர்களே
எனக் கேட்கிறார்கள்..

ஆம்
எம்மவரின்
சின்ன சின்ன
வெற்றிகள் கூட
எமக்கு பெரிய
சாதனைதான்
பெருமிதம்தான்..

ஒவ்வொரு சின்ன
வெற்றிக்கு பின்னாலும்
பெரிய ஒரு அர்ப்பணம் இருக்கிறது
கடினமான பயணம் இருக்கிறது
வடுக்களும் வலிகளும்
விசும்பலும் வேதனையும்
காலங்கள் தாண்டியும்
காயாத கண்ணீரும் இருக்கிறது

எழிலும் வளமும்
ஈரமும் நிறைந்த எங்கள்
ஈழத்தில்..
கந்தகம் படாத கற்கள் இல்லை
இரத்தம் சொட்டாத
மனிதன் இல்லை..

வாழ்க்கை சக்கரம்
ஓடும்போது நினைக்கிறோம்
ஓய்வெடுக்கும்போது
அழுகிறோம்..

எங்கள் சின்ன சின்ன
வெற்றிகள்தான்
எங்கள் காயங்களுக்கு களிம்பு
வேதனைக்கு மருந்து..

எங்கள் சின்ன சின்ன
வெற்றிகளை ..
இனி
நீங்களும் கொண்டாடுவீர்கள்

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

மேகங்கள் கூட
ஏழைகள் பக்கம் இல்லை..
நா வரள
வானம் பார்க்கிறான்
விவசாயி -தன்
நிலம் போல்..

Share this post


Link to post
Share on other sites

மூச்சு முட்டிய
ஏக்கங்களோடு
சொந்த மண்ணில்
பிறந்த மண்ணில்
வாழ முடியாமல்
திக்கு திக்காய்
திசைக்கொன்றாய்
சிதறி வாழ்கின்ற
ஈழத்தமிழரின்
சின்ன சின்ன
இதயங்களின்
பெரிய ஏக்கம்..
விடுதலை பெற்ற
மண்ணில் ஒரு
நாளேனும் வாழ்வதுதான்..

 

இது முழுக்க முழுக்க உண்மை விகடகவி....! 

Share this post


Link to post
Share on other sites

உனைப்போலவே..
உன்னை அறவே
மறந்ததாகவே
வாழமுயன்றபோதும்..
நினைவுகளுக்குத்தான்
தடை போட முடிந்தது..
நீ வந்து உறவாடும்
கனவுகளுக்கல்ல!!

Share this post


Link to post
Share on other sites

ஒரு பேனா பேசுகிறேன்...

எங்கேயோ பிறந்து..
எங்கேயோ வளர்ந்து..
இவன் கையில் விழுந்தேன்..

இவன் எடுத்ததும் எழுதியது
அவள் பெயரைத்தான்..

எத்தனை முறை
எழுதியிருப்பான் அவள் பெயரை

தேவதைகள் பூமியிலும்
பிறக்குமென உனைக் கண்டே
அறிந்தேன்..

நீ வரம் தருவாய்
என எண்ணி நீ
வரும் வழியில்
சுழன்றேன்..

தலை சாய்க்கும்
பக்கமோடி நிலைக்
கல்லாய் நின்றேன்

நீ பாராதே
சென்றுவிட
பரிதவித்துக்கொண்டேன்

ஈட்டிவிழி
தொட்ட இடம்
என் இதயமென்று
பாட்டெழுதும் என்
நிலைக்கு பரிகசிப்பும்
உண்டு

நீ வராத
நாளில் நான்
நிலவில்லாத வானம்
நீ நடந்த
பாதையில்தான்
என் காதல் தியானம்

இவன் அவளுக்காய்..
ஆயிரம்மாயிரமாய்
எழுதினான்..

காதலே கண்ணீர் விடும்..
கவியெழுதி காகிதத்தில்
தூங்கினான்...

பேனா.. நானே
இவனைக்
காதலிக்க ஆரம்பித்தேனே..

பெண்ணவள்
காதலிக்க மாட்டாளா?..
மாட்டாள்..
காதலை சொல்லவே
தைரியம் இல்லையே
இவனை எங்கனம்
காதலிப்பாள்

என்னாலும் முன்போல்
எழுத முடியவில்லை..

காகிதத்தை கிழிப்பான்
என்னை தரையில் எறிவான்..
இயலாமை..என்ன
செய்வான்..

அவளுக்கு தெரியாமல்
இவன் வளர்த்த காதல்
அவளறியாமலே..
இவனோடு மரித்த காதல்..

ஆம்..அதற்கும்
நானே சாட்சி
அவனே எழுதினான்..
என் சாவுக்கு
யாரும் காரணமில்லை என..

முட்டாள்..
முதல்முறை எழுதிய
கடிதத்தை கொடுத்திருந்தாலே
தப்பித்திருப்பான்..

இவனுக்குள்ளே..
இவன் ஒருதலை காதல் வளர
காரணமான ..
கன்னியே..
கற்பனையே
கவிதையே..
காகிதமே..
பேனாவே....

ஐயகோ.. இந்த
கோழையின்
சாவுக்கு நானும்
காரணமா?..

ஒரு பேனா..
நான் என்ன செய்வேன்

Share this post


Link to post
Share on other sites

புத்தகத்தில் மூடி வைத்த
மயிலிறகை
ஓடிச்சென்று பார்த்த
சிறு பையனாய் -என் 
பதிலுக்கு உன் பதிலை 
ஓடி சென்று பார்க்கிறேன் 
மயிலிறகும் குட்டி 
போட்டதில்லை
இந்த மயிலும் 
பதில் இட்டதில்லை 
யோசித்து பார்த்ததில் 
காதல் கூட மூட நம்பிக்கைதான்
இடம் மாறுவதற்கு நம்பும் 
இதயங்கள் எங்கும் மாறுவதில்லை
நீ இல்லாமல் நன் இல்லை
என்று யாரும் வீழ்வதில்லை
வார்த்தைகள் பூசி
நினைவுகள் கோலம் 
போட்டாலும் காலத்தால்
அழியாத கோலங்கள் 
எதுவும் இல்லை 
காவியங்கள் 
உண்மை இல்லை -காதல்
கல்லறையில் 
பெண்கள் இல்லை 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

வணங்கப்படாமலே
நூறு கடவுள்கள்

சொல்லப்படாமலே
ஆயிரம் மந்திரங்கள்

சென்று வராமலே
இலட்சம் கோயில்கள்
உள்ள பூவுலகில்..

அம்மாவை வணங்காத உயிரும்

அவள் அன்பை ஓதாத உளமும்

கர்ப்ப கோயில் வாழாத
யாரும் உளரோ..

Share this post


Link to post
Share on other sites

தாண்டிச் செல்லவேண்டிய
மேடுபள்ளங்களா வாழ்க்கை?..

பறந்து செல்லவேண்டிய
பால்வெளி இல்லையா..

சுகர்ந்து செல்லவேண்டிய
சோலைகள் இல்லையா..

நனைந்து செல்லவேண்டிய
சாரல்கள் இல்லையா..

மகிழ்ந்தும் இசைந்தும்
செல்லவேண்டிய
பயணம் இல்லையா...

தாய்தந்தை..ஆசான்
ஆணைப்படி
பாதி பயணமும்...

பிள்ளையின் பயண
ஆயத்தங்களில்
மீதி பயணமும்..

எங்கோ வாழ்க்கை
வாழ மறந்து
வழக்கமாகி கிடக்கிறது?

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

தூறல்களில் நனையும் ஆசையினால் குடை எடுத்து வரவில்லை.... தூறட்டும் விடாமல் தூறல் .....!  tw_blush:

2 people like this

Share this post


Link to post
Share on other sites

விழிகள்
கண்டதும் 
மாண்டது
வல்லினம்..

அவளின்
கால்களில்
சிணுங்கும்ம்
இசையினம்..

வாசக்கூந்தலில்
மனசோ
பூவினம்..

பேசும் ஓவியம்
அவளோ
குயிலினம்

பேதை
அழகியல்
தோகை 
மயிலினம்

காதல்
பிறந்திட்டால்
ஆணும்
மெல்லினம்
நாணும்
சொல்லினம் !

2 people like this

Share this post


Link to post
Share on other sites

கவிதையின் கவர்ச்சியில் சாரலாய் அடிக்குது ஜொள்லினம்.....!  tw_blush:

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

வெளிச்ச வீடுகள்
பார்த்து
இருண்டு
போகிறது மனது
ஒரே ஒரு நாள்
உயரம் தொடர்ந்தாளே
என்னோடு!

 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites