• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
விகடகவி

தினசரி தூறல்கள்...

Recommended Posts

தினசரி தூறல்கள்...

பட்டப்பகலில் ஒரு

நிலா..பிரகாசமாக..

அது நீதான்...

ஒரு குயில்க்கூட்டம்..

கவலையாக மௌனவிரதம் இருக்கிறது..

நீ பாடியதை அவை கேட்டனவாம்..

நிலைக்கண்ணாடியின்

தலைக்கணம் தவறேயில்லை..

தினமும் உன்னைத் தரிசிக்கின்றதே..

உன்னைச் சுற்றியிருப்பவர்கள்

எல்லாம்..கவிஞரானார்கள்..

உன் பேரைச் சொல்லியே..

எனது வாழ்க்கை..

முழுமை பெறாத நூலாகியது..

உன் முதல் பாதியை நான் படிக்கவேயில்லை..

எங்கள் முதலிரவில் மட்டும்

நான் தூக்கத்தில் விழிக்கவில்லை..

அன்றுதான் நாம் தூங்கவேயில்லையே..

ஒரு ஏழையாயிருந்தும்.

இருபது வயதின் பின்..நான்

பசிக்கொடுமையை உணவில்லாத

போதும் உணர்ந்ததில்லை..

அப்போதிலிருந்து நீ

என்னைக் காதலிக்கிறாய்..

Share this post


Link to post
Share on other sites

மாமாவின் தினசரி தூறல் நன்றாக இருகிறது இன்னும் நனைவதிற்கு காத்திருகிறேன் :) தூறலில் நனைந்தா பேபிக்கு காய்ச்சல் வராது தானே மாமா :unsure: ...........சிதரட்டும் மாமாவின் தூறல்கள் இரசித்திட நான் தயார்..........மாமாவின் தூறலில் நான் மிகவும் இரசித்த தூறல்........ <_<

பட்டப்பகலில் ஒரு

நிலா..பிரகாசமாக..

அது நீதான்...

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

தினசரி நனைய நான் தயார். இடைவிடாது தூறிக் கொள்ளுங்கள்.

நான் அதிகம் நனைந்த தூறல்

ஒரு குயில்க்கூட்டம்..

கவலையாக மௌனவிரதம் இருக்கிறது..

நீ பாடியதை அவை கேட்டனவாம்..

Share this post


Link to post
Share on other sites

தூறல் நாள் -2

ஏய் மரமே..

நீயோ மாரியில் உதிர்ந்து

கோடையில் துளிர்க்கிறாய்...

உன் போல்..சுழற்சிமுறை

ஏன் மற்றவர்களிடம் இல்லை...

மெல்லினங்களுக்கும்..

வல்லினங்களுக்கும்..

எப்போதும் (கட்டில்)சண்டை

ஆச்சரியம்..

ஜெயிப்பதென்னமோ..

எப்போதும்.. மெல்லினங்கள்தான்..

ஏய் சலங்கையே..

அவள் கால்களிலிருந்து

சல்.. சல்லென்று சிணுங்கும்போது

இரசிக்கவைக்கிறாய்..

கட்டில்மேல்.. என்னைக்

கள்வனாக்கி..

காட்டிக்கொடுத்து

வெறுக்கவைக்கிறாய்..

ஏனிப்படி..எசமான்

விசுவாசமில்லாமல்..

நீ.. இட்ட

இதழ் முத்திரை கோடி பணம்தானாம்..

ஆனால்..அன்பே..

உன் விண்ணப்பக்கடிதத்திற்கு..

இன்னும் நிறைய முத்திரைகள்

தேவைபோல இருக்கிறதே..

"முன் சக்கரத்தை பின்சக்கரம்

துரத்துவது போல்.. அன்பே..

உன்னை துரத்திக்கொண்டிருக்கிறேன்"என்றேன்..

நீ சொன்னாய்..

"புரிந்துகொண்டாயா

நீ எப்போதும்

என்னை தொடமுடியாது"என்று

Edited by vikadakavi

Share this post


Link to post
Share on other sites

"முன் சக்கரத்தை பின்சக்கரம்

துரத்துவது போல்.. அன்பே..

உன்னை துரத்திக்கொண்டிருக்கிறேன்"என்றேன்..

நீ சொன்னாய்..

"புரிந்துகொண்டாயா

நீ எப்போதும்

என்னை தொடமுடியாது"என்று

தினமும் தூறும் தூறல் தொடர்ந்து தூறட்டும் வாழ்த்துக்கள் விகடகவி.

ரொம்ப நல்லா இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

தூறல் நாள் -3

போகிறபோக்கில்..

ஆண்கள் பக்கம்..

கல்லெறிந்துவிட்டுப்

போகும் பெண்களே...

அவர்கள் இதயம்

சுக்குநூறாய் உடைந்து

போவதனை அறிவீர்களா..

என் எண்ணமும்

வாழ்வும்..

தெளிந்த நீரோட்டமாகத்தான்

இருந்தது..பெண்ணே..

நீ வந்து

காதல்க்குப்பைகளைக்

கொட்டாதவரை!

பெண்களையும்..

ரோஜாக்களையும்..

ஒருபோதும் ஒப்பிட்டுப்

பேசாதீர்கள்..

இதழ் திறந்த ரோஜா..

எப்போதும் மீள

மூடிக்கொள்ளாது..

இதயம் திறந்த பெண்

எப்போது வேண்டுமானாலும்

மூடிக்கொள்வாள்.

"என் பாதங்களைக்

காக்க.. பாதி..

தேய்ந்த செருப்பே..உனக்கு

நான் கடமைப்பட்டிருக்கிறேன்.."

என்று மேடையில்..முழங்கும்..

புலத்துக் கவிஞனே..

ஊன் கரைத்து..

உனை வரைந்த தாய்..

ஊரில் உயிர்

கரைந்துகொண்டிருக்கிறாளாம்..

தெரியுமா..

Share this post


Link to post
Share on other sites

ஊன் கரைத்து..

உனை வரைந்த தாய்..

ஊரில் உயிர்

கரைந்துகொண்டிருக்கிறாளாம்..

தெரியுமா..

இன்றைய தூறல் நல்லா இருக்கு. அதிலும் இவ்வரிகள் நெஞ்சை தொட்டுச் செல்கின்றன.

Share this post


Link to post
Share on other sites

தூறல்கள் சில மனதை நனைக்கும் தூறட்டும் தூறல்கள் தினசரி ....

Share this post


Link to post
Share on other sites

தூறல் நாள் -4

என் ஆங்கில ஆசிரியரை

எனக்கு மிகவும் பிடிக்கும்..

ஆச்சரியமாக இருக்கிறதா...

உண்மை...

அவர் மட்டும்தான்.

"பிடிக்காதவர்கள் வெளியே போகலாம்"

என்பார்.

அப்பா..

உன் விரல் பிடித்து

நடந்த என்

சுவடுகள் மறையமுன்..

விட்டுச்சென்றாயே...

காலன் கொடியவன்தான்..

தந்தையில்லாத

இளமைக்காலங்கள்..

அதனிலும் கொடிது

என்பதனை அறியாயோ..

பிறன்மனை தீண்டாமல்..

வயதெல்லை தாண்டாமல்..

உறவுமுறை மீறாமல்..

மனம் கவர்ந்த பெண்ணை

சுதந்திரமாக காதல் செய்..

அவளை நான் அணைப்பதிலும்..

இன்பம்..

அவள் என்னை அணைப்பது..

அன்போடு அணைக்கும்போதுதான்..

அங்கே ஆத்மசுகம்..

நெஞ்சக்கூட்டில்..

தென்றலாய் வீசும்.

ஏழையின் கொஞ்ச உழைப்பையும்..

இலஞ்சமாய்க் கறத்தலா..

இன்றைய ஜனநாயகம்..

Share this post


Link to post
Share on other sites

விகடகவி உங்களுடைய தினசரி தூறல் நன்றாக உள்ளது. தூறல் துளியாகி, வெள்ளமாகி கரைபுரண்டு ஓட வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

தூறல் நாள் -5

உடல் உருகி..

உடல் உருகி..

ஒளி தரும்..மீள

உருப்பெறும்..எச்ச

மெழுகுதிரி.

உள்ள அழுக்கு

உடனே விலக்கு

நேசம் காட்டு

நல்லன கடைப்பிடி

வருந்தி உழை

வறியோரை வாழவை

புத்தாண்டு கண்டேனும்

புதியவனாய் மாறு..

நான் சொல்ல நினைத்ததை

அவன் சொல்லிவிட்டான்..

நான் ஆள நினைத்தவளை

அவன் ஆளுகின்றான்..

சொல்லவேண்டியதை அன்று

சொல்லாத நான் கோழை..

இருந்தாலும்..சின்ன ஆனந்தம்..

சொன்னவனாகிவிட்டான் ஏழை..

கல்லூரி போர்க்களத்தில்

கன்னியர் வீசிய

விழி அம்புகள் கிழித்தும்.

அஞ்சாமல்.. காளைகள்..

காத்துக்கிடக்கின்றனர்..

கலாட்டாக்கற்களை

மட்டும் வைத்துக்கொண்டு..

ஆயிரம் பூக்கள்..

ஒன்றாய்ப்பூக்கம்..

மத்தாப்பூ..அதில்

விரியும் உயிர்ப்பூ

மன ஈர்ப்பூ..

வேறென்ன அதுவன்றோ..

மழலைச் சிரிப்பூ

Edited by vikadakavi

Share this post


Link to post
Share on other sites

தினம் நனைந்து தொப்பலாகி விட்டது. அருமை விகடகவி. . .

Share this post


Link to post
Share on other sites

தூறல் நாள் -6

அமாவாசைக்கு

அந்தப்பக்கம்..

பௌர்ணமி இருக்கிறது

என்ற நிஜம்

மறக்கடிக்கப்பட்தைப்போல்

மனிதனுக்குள் வாழும்..

தெய்வம்..நிகழ்நாளில்

புதைக்கப்பட்டிருக்கிறான்..

உன்னையும் என்னையும்..

சேர்த்துவைப்பது..இரவு..

பெண்ணே..

தப்பர்த்தம் பண்ணிக்கொள்ளாதே..

நீ இப்போது..

என்னைக் காண வருவது..

கனவில் மட்டும் தானே..

என்னிடம்

"ஏழுஸ்வரம்"

உறங்குகிறது..

அதை எப்போதாவது எடுத்துவிட

நினைக்கையில்..

உங்கள் கேலியால்.

புரிந்துகொள்வேன்..

வெளியே வருவதென்னவோ

"அபஸ்வரம்" என்பதனை

கடவுளே..

பல அரச அதிகாரிகள்..

முன்னிலையிலேயே..

நான் பலரை

சாகடித்திருக்கிறேன்..

மனிதனைக்கொல்வது..

எனக்கு சரியாகப் படவில்லை..

உயிரை எடுக்கும் உரிமை

நமக்கேது..

இருந்தாலும்.. இதை

தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்..

எனக்கு விமோசனம் கிடைக்குமா..

இப்படிக்கு

தூக்குகயிறு

மத்திய சிறைச்சாலை

இந்தக்குடையின் கீழ்தான்..

நானும் அவளும்...

நெருங்கி..உரசி..

நடந்து வந்தோம்..

இதை அன்றுதான்.

வாங்கியிருந்தேன்..

இன்றும் பத்திரமாக..

இந்தக்குடை..என்னிடமே..

இப்போதென்ன கொஞ்சம்

துருப்பிடித்துவிட்டது..ஆம்..

அதற்கும்..இருபத்தைந்து வருடங்கள்..

வயதாகிவிட்டதல்லவா..

ம்..அவளுக்கும் எனக்கும்

காதலாகி..திருமணமாகி..

இரண்டு பிள்ளைகள்.

சிறியவன் அவளோடு..

பெரியவனும்..குடையும்.. என்னோடு..

Edited by vikadakavi

Share this post


Link to post
Share on other sites

தூறல்கள் மீன்டும் மீன்டும் துளிர்க்கட்டும் கவிஞரே! நன்றி. :lol::)

Share this post


Link to post
Share on other sites

தூறல் நாள் -7

நான்..

என்னால்..

என்னிடம்...

என்னை..

என்ற மாயைக்குள் விழுந்து..

நிலையில்லா வாழ்வில்..

தற்பெருமை கொள்ளும்..

ஆனந்தமா.. அகந்தை..

ஏய்.. அழகியே..

இந்த சாலை மரங்களையெல்லாம்..

இப்போதுதான்.. திட்டிக்கொண்டிருந்தேன்..

"பெற்ற மழலையைக் குப்பையில் எறிவது போல்

அழகான பூக்களைத் தரையில் கொட்டுகின்றாயே.."என்று

மரங்களில் தவறேயில்லை..

வானாளாவ உயர்ந்த மரங்கள்..

நீ.. நடந்து வருவதனைக் கண்டுதான்..

உன் மென்பாதங்களுக்காகத்தான்..

பூக்கம்பளம் விரித்திருக்கின்றன!!!

அன்புள்ள தம்பி..

நலமாக இருக்கிறாயா..

நாங்கள் நலம்.. உன்

நலத்தைப் பார்த்துககொள்..

...இப்படி அண்ணாவின் கடிதம்..

பல பக்கங்கள் நீண்டிருந்தாலும்..

என்னை வாழ வைத்த.

தெய்வம்.. தன்.

துக்கங்களைப் பற்றி மட்டும்..

துளியும் எழுதவில்லை

தன் வறுமையைப் பற்றி

வரியும் சொல்லவில்லை..

அண்ணா உன் இதய சுத்தமும்..

சுய கௌரவமும்..

என்னிடம் இல்லை..

உன் ஏழ்மை அறிந்தும்..

உதவ இயாலாமல்..ச்சே..

பொறுத்துக்கொள் அண்ணா..

என்னுடைய மனைவியிடம்..

கொஞ்ச பணம் அனுப்பலாமா..என

கேட்டிருக்கின்றேன்..

நல்ல பதில்

கிடைக்கும் என நம்புகிறேன்..

இப்படிக்கு..

உன் அன்புத் தம்பி

என் காதலி மௌனவிரதம்

இருப்பாள்.. அப்போதெல்லாம்..

நான் கேட்பேன்..

"எதற்காக மௌனவிரதம்

இருக்கிறாய்.. நீ விரதம்.

இருந்திடாத போது மட்டும்..என்ன

எதாவது பேசிவிடப்போகின்றாயா"என்று

..இப்போது அவள் என் மனைவி..

"நான் வீட்டில் இருக்கும்போது

நீ மௌனவிரதம் இருக்கமாட்டாயா."

என்று மனது அவளிடம்

கேட்டுக்கொண்டே இருக்கிறது..

Share this post


Link to post
Share on other sites

தூறல் நாள் -8

மைவிழிகண்டேன் பெண்ணே..

உந்தன் மையலில் விழுந்தேன்

அன்பே என்றேன்..அடி

நீதானா..நீதானா...

நினைவை நிரப்பியது...

என் வைப்பகம் நிரம்பி வழிகிறது..

இனி எங்கே ஓரிதயம் தேடுவது....

உன் நடையும்.. மெல்லிடையும்..

என் இளமையைக் குடையும்..

உன் கூந்தல் உன் பார்வை

என் முகவரியை மூடியது..

உந்தன் வண்ணத்தில் கொஞ்சம் தொட்டு..

செந்தாமரை மிளிர்கிறது...

உந்தன் புன்னகை வெளிச்சம்

பெற்று வெண்ணிலா ஒளிர்கிறது..

உன் கன்னக்குழியில் என்

வன்மை வழுக்கிடுமோ..

உன் காதுநுனியில் என்

பற்களின் அணிநடையோ..

நீ வீணை போல ராகம் தந்திட

விரல்கள் மீட்டாதா..

என் விரலுக்கு அசையும் வீணை

என்ன தாளம் கேட்கிறதா..

விழிகள் மூடும் இமையூடே

என்னைப் பார்த்தாயோ..

ஒளியில்லாத இரவுக்குள்..

எனைக்கண்டு மலர்ந்தாயோ..

அன்பை மட்டும் சொல்லில் சொல்ல

அன்பே முடியாது.. என்

அன்பை எல்லாம்

வாரித்தருவேன்..ஜென்மம் போதாது

வாழ்விலும் தாழ்விலும்..ஒன்றே..

ஈருடல் ஓருயிர் என்றே...

என் இன்பத்தாலுன் துனபம் துடைப்பேன்..

ஏகபத்தினி விரதனாய் வாழ்ந்து இறப்பேன்.

Share this post


Link to post
Share on other sites

தூறல் நாள் -9

முத்தும் மணியும் மரகதமும்..

கொட்டி குவித்த திரவியமும்..

பொன்னும் பொருளும் பெரும் புகழும்..

பூமியை ஆழும் அரியணையும்..

யாவும் பெற்றும் மனிதனுக்கு-பெற்ற

தாய் அன்பு இன்றேல் வாழ்வெதற்கு..

ஒரு வெள்ளை ரோஜா

குலுங்கி சிரிக்கிறது..

ஒரு பூங்காவனம்

வீதியுலா போகிறது..

ஒரு வெண்ணிலா

கட்டிலில் உறங்குகிறது..

ஒரு தேவதை என்

திருமதியானது..

என்னுடைய எல்லாப்

கற்பனைப் புகழுரைக்கும்

அவள் ஒப்பானவள்.. ஆனால்..

அந்த பாவத்திற்காக..தினசரி..

நான் கொடுக்கவேண்டியிருக்கிறது..

வரன்தட்சணை

முதல் காதல்..

முதல் முத்தம்..

முதல் வார்த்தை..

முதல் அணைப்பு.

எல்லாம் நினைவில்

நீங்கா இனிமை..

அவற்றிற்குரியவள்..

முதல் விவாகரத்து

கேட்காதவரை

அவள்மௌனம் கூட

ஆயிரம் கதை பேசும்..

அவள் புன்னகை கூட

நூறு அர்த்தங்கள்

சொல்லும்..

அவள் வழிகள் பல

விதிகள் செய்யும்..

அவள் விரல்களால்

புதுப்புது ஆணை போடுவாள்..

அவள் இறுதியில்..

"அண்ணா" என்ற சொல்லால்...

ஆளையே கொல்வாள்..

Share this post


Link to post
Share on other sites

என் காதலி மௌனவிரதம்

இருப்பாள்.. அப்போதெல்லாம்..

நான் கேட்பேன்..

"எதற்காக மௌனவிரதம்

இருக்கிறாய்.. நீ விரதம்.

இருந்திடாத போது மட்டும்..என்ன

எதாவது பேசிவிடப்போகின்றாயா"என்று

..இப்போது அவள் என் மனைவி..

"நான் வீட்டில் இருக்கும்போது

நீ மௌனவிரதம் இருக்கமாட்டாயா."

என்று மனது அவளிடம்

கேட்டுக்கொண்டே இருக்கிறது..

தாங்க முடியலைப்பா.

நல்லாக இருக்கு அனைத்து தூறல்களும்.

Share this post


Link to post
Share on other sites

கவிஞரே! அவர்கள் மௌனவிரதம் இருந்ததே உங்கள் மௌனத்தைக் கலைக்கத்தான். தொடருங்கள். வாழ்த்துக்கள். :lol::D

Share this post


Link to post
Share on other sites

தூறல் நாள் -10

நாம் இருவரும்..

செதுக்கிய உயிர் சிலை..

உன் சாயலா...

என் சாயலா..

என்று சர்ச்சை

எழுந்ததையிட்டு..

சந்தோசம்..

இருவர் சாயலும் இருப்பதால்தான்..

உச்ச நிம்மதி

தேவதைப் பெண்ணே..

உன்னிடம்.. தவறு

செய்தபின்..

குமுறி அழ..

தாய்மடி வேண்டாம்..

உன்மடிதான் வேண்டும்.

இதய பரப்புக்குள் நுழைந்தாய்

சரி..

இரண்டே நாளில்..

என்னை எப்படி ஆயுள்க் கைதியாய்..

செய்தாய்?..

உன் மௌமும்..

என் மௌனமும்..

நம் முத்த உச்சத்தில்

ஏறி.. தேக வெப்பத்தில்

தற்கொலை செய்து

கொள்ளும் சத்தம் ஊருக்கு

கேட்குமோ என்று

பயமாக இருக்கிறது.

பார்க்கவும்..

பேசவும்..

வழிதேடித்தவிக்கும்..

இரு உள்ளங்களை தடுத்து

வைத்திருக்கும்..

தூரம் காதலில்

கொடுந் துயரம்.

உன் முனகல் கூட

கவிதைதான்..

அதில் சம்மதத்தையும்..

மறுப்பையும்.. அமுதம்

கலந்து தருவதால்..

அதை நினைத்து

நினைத்து ரசிக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

தூறல் நாள் -11

உன்னருகில்..

உன்னணைப்பில்...

கண்மயங்கி...

மெய்யிறுக்கி..

காதில் இதழ்கள் உரசி..

காற்றுக்கலந்த கொஞ்சல் மொழி பேசி..

காற்றுக்கும் ஆடைக்கும்..

இடமின்றி ஒட்டிக்கிடந்து..

உயிரை உயிரில் உள்வாங்கி...

ஜென்மசுகம் கண்டு..

மெல்லிய நிலவொளியில்

உன்முகம் பார்த்தேன்..

மயங்கிக்கிடந்ததென்ன..

தேவதையேதானா...

என்ன அழகடி நீ..

மறந்தும் பிரியாமல்..

மண்ணில் வாழ வா..

இணைந்தேயிறந்து..

விண்ணிலும் வாழ்வோமா..

என்னை ஜீவசுத்தம் செய்தவளே...

என்னைப் பிரதி செய்தவளே...

என்னைத்துதி செய்பவளே..

என்னைக் கேலி செய்பவளே..

என்னை சிற்பமாய்ச் செய்பவளே..

என்னைக் குழந்தையாயும்..

என்னைக் கோவாயும் செய்தவளே..

என் பிறப்பர்த்தமே..உயிரே..

உன்னைச் சரணடைந்தேன்..

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் விகடகவியாரே

உங்கள் தினசரி தூறல்கள் மிகவும் நன்றாகஉள்ளது.

அன்புடன்

எரிமலை

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் விகட கவி. நன்றாக உள்ளது உங்கள் தூறல்கள்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now