Jump to content

தேசிய நலனும் வெளியுறவுக் கொள்கையும், பாகம்-1, 2, 3


Recommended Posts

இந்தத் தொடரின் நோக்கம் மலரவிருக்கும் சுதந்திர தமிழீத்தின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற போதனை நோக்கோடு எழுதப்படவில்லை. மாறாக பொதுவில் நாடுகளின் தேசிய நலன்கள் அதன் அதிகார கட்டமைப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் என்பன பற்றிய சில அடிப்படைப் புரிதல்களை தர முற்படுவதும் அதன் அடிப்படையில் "சர்வதேசம்" அல்லது "சர்வதேசச் சமூகம்" மற்றும் "உலக ஒழுங்கு" போன்ற பெயரளவில் பரந்து விரிந்த அர்த்தத்தை தரும் பதங்களிற்கான தற்போதைய யதார்த்தபூர்வமான அர்த்தத்தை விளங்க முற்படுவதும் ஆகும். இந்தப் பின்னணியில் இறுதியாக எம்மைப் போன்று அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் தேசியங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் அவற்றிற்கான பின்னணிகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

தமிழ்த் தேசியதின் மீள்-எழுச்சி

சந்ததி சந்ததியாக அடிமையாக கூலியாக இருக்கும் எந்தவொரு இனத்திற்கும் தேசியம் சுதந்திரம் என்பவற்றிற்கான அர்த்தத்தை புரிவது இயலாதது. இதற்கு தமிழர்களும் விதிவிலக்கல்ல. ஜரோப்பியர்களால் வெற்றிகரமாக அடிமையாக்கப்பட்டு சந்ததி சந்ததியாக ஆளப்பட்டு இறுதியில் பிரித்தானியா 2ஆம் உலகமா யுத்தத்தின் பின்னான காலப்பகுதியில் தனது உள்நாட்டு மீள்கட்டுமான மற்றும் அபிவிருத்தி சவால்களை எதிர்கொண்ட தால் காலனித்துவ நாடுகளில் தனது பொறுப்புகளை குறைக்க வேண்டி நிர்ப்பந்தத்தில் கொடுத்த கிட்டத்தட்ட இலவசமான சுதந்திரத்தை எதிர்பாராதவகையில் பெற்றவர்களிற்கு தமது தேசியம் சார்ந்த சுயமரியாதையோ பெருமையையோ விடுதலை உணர்வையோ உருவாக்குவது முயல்கொம்பு.

நம்மைப் பொறுத்தவரை இந்த இயலாததை ஒரு தொகை தமிழருக்கு ஓரளவு முடியும் என்றாக்கியது சிங்களவர்களின் தமிழர்களிற்கு எதிரான பேரினவாத அடக்குமுறை. சிங்கள பேரினவாதம் எம்மீது கட்டவிள்த்துவிட்ட அழிவுகள் அவலங்கள் தொடர் அடக்குமுறைகள் தான் இன்று தமிழ்த் தேசிய மீள்-எழுச்சியை துண்டியிருக்கிறது. அதாவது இன்றய தமிழ்த் தேசிய மீள்-எழுச்சி என்பது சிங்களத்தின் அடக்குமுறையின் எதிர்விளைவு. எம்மில் ஒரு தொகையினரையாவது எமது சுயஅடையாளங்கள் அதன் தனித்துவம் வரலாறு மற்றும் சிறப்புத் தன்மை பற்றி சிந்திக்க தேடல் செய்யவும் அவை சார்ந்து எம்மை ஒன்றிணைப்பதற்கான நிர்ப்பந்தத்தை எம்மீது திணித்து புறச்சூலை உருவாக்கியது நாம் பரவலாக ஒற்றுமையாக சந்தித்த கசப்பான அனுபவங்கள்.

அது பூரணமானதா?

இதனால் தமிழர்கள் என்ற இனத்தில் பல நூற்றாண்டுகளிற்கு பிறகு தேசியம் என்பது மீண்டும் காத்திரமான அளவில் கருக்கட்டியுள்ளது. அந்தக் கரு முழுமையடைவதற்குரிய அனைத்துத் தகமைகளும் உடனடியாக எம்மிடம் தன்னகத்தே இல்லை என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த தகமைகளிற்கு இருக்கக் கூடிய பல்பரிமாண சிக்கல்கள் ஆழங்கள் அகலங்கள் அடர்த்திகள் பற்றி எம்மால் மூழுமையாக விளங்கி அறிந்து கொள்ளக் கூடிய சிந்தனையாற்றைலையும் அதை வழர்த்து பரீட்சிக்க உதவும் பாரம்பரியத்தையும் எமது உடனடி மூதாதையர் (அதாவது எம்மால் விபரமாக அறியக் கூடிய அண்மைய வரலாற்றுக்குரியவர்கள்) எமக்கு கைய்யளிக்கைவில்லை. காரணம் எமது அண்மைய சந்ததிகள் அடிமைகளாக ஜரோப்பிய ஆட்சியின் கீழ் இருந்ததால் வந்த பாரம்பரியத்தைத்தான் எம்மிடம் கைய்யளித்திருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில் தான் எமது கற்கைகளும் சிந்தனைகளும் வாழ்வுமுறையும் செதுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு இனம் தன்னைத் தானே சுதந்திரமாக ஆழுவதற்கான தகமைகளை அதன் தேசியம் சார்ந்து கட்டியெழுப்பி அதை தக்கவைப்பதற்குரிய திறமைகளை ஒரு பாரம்பரியமாக சந்ததி சந்ததியாக காவி வருவதுடன் காலத்துக்கு ஏற்ப அவற்றிற்கான தந்திரங்களில் அணுகுமுறைகளில் மாற்றங்கள் செய்வபை தான் வெற்றிகரமாக இன்றுவரை இயங்குகின்றன. அதாவது சுதந்திரமாக இயங்குவதால் கிடைக்கும் அனுபவமும் பட்டறிவும் தான் ஒரு பாரம்பரியம் தொட்டதாக வழர்த்தெடுக்கபடும் சந்ததி சந்ததியாக. எனவே சுதந்திரமடையாதவர்கள் அந்த தகமையை எப்படி பெறுவது என்பது வெற்றி கொள்ள முடியாத ஒரு வட்டமாக தெரிகிறது (அதாவது paradoxical situation or catch22).

பிரதிபலிப்புகள் என்ன?

இன்று புலம்பெயர்ந்த தமிழர்களை எடுத்துக் கொண்டால் அவர்களைப் பின்வரும் பிரிவுகளில் அடக்கலாம்:

-1- ஜனநாயகத்தின் பெயரால் தேசிய எதிர்நிலைப்பாட்டை கூலிக்கு பிரதிநிதித்துவப்படுத்தி துரோகம் செய்பவர்கள்.

இவர்கள் சிறுபகுதியினரே. போராட்ட காலத்தில் மாத்திரமல்ல விடுதலை பெற்று அங்கீகாரம் கிடைத்த பின்னர் கூட துரோகிகள் எங்கும் இருப்பார்கள். எனவே துரோகத்தை தமது வளங்கள் மூலம் ஊக்குவித்து உருவாக்கி பயன்படுத்த முனையும் சக்திகளை நேரடியாக எதிர்கொள்வேண்டி நிலைக்கு எமது போராட்டம் இன்று வழர்ச்சி பெற்றுவிட்டது.

-2- தமக்கும் அரசியலிற்கும் சம்பந்தம் இல்லை ஏதோ ஒரு தீர்வு கிடைத்து பிரச்சனை என்பது தமது சிந்தனைக்கு எட்டியாக காலங்களிற்கு இல்லாவிட்டால் போதும் என்று நினைத்த படி தமக்கு இருக்கக் கூடிய தேசிய அடையாளத்தை தொலைத்தவர்களாக வாழுபவர்கள் இன்னொரு தொகையினர். ஆனால் தாயகத்திற்கான மனிதாபிமான உதவிகளிற்கு ஓரளவு இரங்கக் கூடியவர்கள்.

-3- தேசியத்தை ஆதரிப்பவர்கள் தான் பெரும்பான்மையானவர்களாக இருக்கிறார்கள்.

சிங்கள பேரினவாத அடக்குமுறையின் எதிர்விளைவினால் ஒன்றிணைக்கப்பட்டு கருக்கட்டியுள்ள தமிழ்த்தேசியதில் பூரணப்படுத்தப்படாது இருப்பவை சிங்களப் பேரினவாதத்தினோடான அனுபவங்களின் எதிர்வினையான உணர்வுகள் சார்ந்தவையினால் நிரப்பப்பட்டிருக்கின்றன. எமது போராட்டத்தின் பலமாக இருப்பதாக பெருமைப்படக் கூடிய இந்த 3 ஆம் தரப்பில் அறிதிப் பெரும்பான்மையினர் சிறைப்பட்டு ஏமார்ந்து கொண்டிருப்பது இந்த உணர்வுகள் சார்ந்த நிலைகளில் தான். இவற்றிற்கான இரண்டு வேறுபட்ட ஆனால் இந்த ஒரே அடிப்படைக் குறைபாட்டினைக் கொண்ட உதாரணங்களாகக் கொள்ளக் கூடியவை:

-1- சிங்கள பேரினவாதத்தை இராணுவரீதியில் எதிர்கொள்வதை மாத்திரம் கணக்கிலெடுத்து எமது போராட்டத்தை எடைபோடுபவர்கள்.

-2- சிங்கள பேரினவாதம் அரங்கேற்றும் மனித அவலங்கள் அழிவுகளைப் பற்றி சர்வதேசம் மொளனமாக இருக்கிறது குருடாக இருக்கிறது பக்கச்சார்பாக இருக்கிறது என்பவர்கள்.

தீர்வு என்ன?

எமது அன்றாட வாழ்வில் எவ்வாறு எமது உடல் நலனும் உள நலனும் வயதும் அடிப்படைத் தகுதிகளாக இருந்தாலும் பல படிநிலைகளைக் கொண்ட ஏட்டுப்படிப்பு மேலதிக தகமைகளாகவும் இறுதியில் "வேலை அனுபவம்" என்பதே "வேலையைப்" பெறுவதற்கு தேவை என்ற சற்று வெற்றி கொள்ள முடியாத வட்டம் என்ற சவாலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதை ஒரு இலகுவான ஒப்பீடாக பார்க்கலாம். ஒரு முறை வேலை அனுபவம் என்பது கிடைத்தவுடன் அதை தொடர்வதும் மேலும் அபிவிருத்தி செய்து பலப்படுத்துவதும் தனிமனிதர்களாக இலகுவாவது போன்றதே சுதந்திரமடைந்த நாடுகளின் தகமைகளும். சுதந்திரத்தோடு வெற்றிகரமாக இயங்கும் பல்வேறு நாடுகளை இன்று எடுத்துக் கொண்டால் அவர்கள் தமது கொள்கை வகுப்புக்களை சட்டமுறைகளை தந்திரோபாயங்களை மூலோபாயங்களை தமது மூதாதையர் அனுபவரீதியில் அறிந்து கொண்டவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கிறார்கள் அதுபற்றி ஒரு பாரம்பரியமான முறையில் அடுத்த சந்ததிகளிற்கு சித்தாந்தங்கள் (doctrine) என்று போதிக்கவும் படுகிறது அவை சார்ந்த தளங்களில் சிந்திக்கவும் தூண்டப்படுகிறது.

எமது தனித்துவமான பூகோள இருப்பு, சமூகவியல் கலாச்சார பிணைப்புகள், வளங்கள் அடிப்படையிலான பலங்கள் பலவீனங்களை அறிந்து அவை சார்ந்த தகமைகளின் பல்பரிமாண சிக்கல்களின் விபரங்களைத் தேடி ஆராய்ந்து வலிந்த முயற்சியில் பரீட்சித்து அபிவிருத்தி செய்து வரும் அனுபவங்களினூடாகத்தான் இந்த வட்டத்தை வெற்றி கொள்ள முடியும். இவற்றை எமது தமிழ்த்தேசிய தலமை எந்தவித பாரம்பரிய அனுபவத்தொகுப்புகளின் கய்யளிப்புகளும் இன்றி ஆரம்பத்தில் இருந்து அனுபவரீதியில் கட்டியெழுப்ப வேண்டி நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. இந்த அனுபவத்தின் தொகுப்பே பழந்தமிழினத்தின் நவீன வரலாறாகவும் பாரம்பரியமாகவும் வடிவம் பெறும். இவ்வாறான வரலாற்று முக்கியத்துவமான போராட்டத்தின் சமகாலத்தில் வாழும் நம்மவர்களில் பலர் எம்மினத்தின் நவீன வரலாற்றை எழுதுபவர்களில் ஒருவராக முடியும் என்பதை உணராதவர்களாக இருக்கிறார்கள் என்பது வேறு விடையம்.

எனவே சுதந்திர நாடாக எம்மை நாமே ஆழுவதற்கான தகமைகளை ஏன் இதுவரை அடையவில்லை என்பதற்கான காரணங்களை நமக்குள்ளே தான் தேடி நிவர்த்தி செய்ய வேண்டும். இன்று சுதந்திரமாக இயங்கும் தேசியங்கள் தமது தேசியம் என்ற தளத்தினுள் இருக்கும் பல்வேறு பட்ட விரிசல்கள் பிளவுகளை சரியாக எதிர்கொண்டு ஒற்றுமைப்படுத்தி மனிதவளங்களை மேம்படுத்தி தேசிய வளங்களை இனங்கண்டு பாதுகாத்து பயன்படுத்தி அபிவிருத்தி செய்து தமது குடிமக்களின் வாழ்க்கைத்தராதரத்தைப் பேணுவது என்பன ஒருவகைச் சவால்கள். அதேநேரம் அயல்நாடுகள் உட்பட உலகில் இருக்கக் கூடிய ஏனை நாடுகளோடு தங்களது நலன் சார்ந்து ஆரோக்கியமான உறவுநிலையை பேணமுற்படுவதும், புதிய உறவுகளை தந்திரோபாயரீதியில் விருத்தி செய்வதும், வெளியிலிருந்து வரும் ஆபத்துக்களை எதிர்கொள்வதும் இன்னொருவகை சவாலாகிறது. இந்த இரண்டாம் வகையான சவால்களை எதிர்கொள்வதை வெளியுறவுக் கொள்கைக்கான இலகுவான அடிப்படை வரவிலக்கணமாகக் கொள்ளலாம்.

அடுத்த பாகத்தில் வெற்றிகரமாக தம்மை நிலை நிறுத்தி இயங்கும் தேசியங்களின் பார்வையில் உலகம் எப்படி என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

குறுக்ஸ்.... நல்லதொரு பொருள்பொதிந்த விடயத்தை தொட்டிருக்கிறீர்கள். அடுத்த பகுதியையும் இணையுங்கள். அதன்பின் இதைச் சிறிது நுணுக்கமாகவே பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

தேசிய நலனும் வெளியுறவுக் கொள்கையும், பாகம்-2

கடந்த பாகத்தின் முடிவில் வெளியுறவுக் கொள்கை பற்றிக் கொடுக்கப்பட்ட எளிமையான விளக்கத்தின் சாரம்சமாக குறித்த தேசத்தின் அல்லது நாட்டின் நலன் சார்ந்த ஏனைய தரப்போடான உறவாடலாக கொள்ளலாம். எனவே ஒரு தேசத்தின் நலன் என்பதாக என்னத்தைக் கொள்ளலாம் என்று அடுத்துப்பார்ப்போம்.

தேசிய நலன்

ஒரு நாட்டின் தேசிய நலன் அல்லது நலன்களாக எவற்றைக் கொள்ளலாம்?

  1. ஒரு நாட்டின் இருப்பிற்கு முழுமுதற் காரணமான தேசிய பாதுகாப்பு முதலாவது இடத்தைப் பெறுகிறது.
  2. அந்த பாதுகாப்பு உட்பட ஏனை அடிப்படை நிர்வாக தேவைகளையும் பொளதீக இருப்பையும் பூர்த்தி செய்து தனது குடிமக்களின் இயல்பு வாழ்கையை ஒரு தராதரத்தில் பேணுவதற்குமான பொருளாதாரம்.
  3. அடுத்து அந்த நாட்டின் தேசியம் என்பதற்கான வரவிலக்கணைத்தை தரும் கலாச்சார அடையாளத்தை மற்றும் கொளரவத்தைப் பாதுகாத்;தல்.
இவை ஒரு நாட்டின் நிரந்தரமான விட்டுக்கொடுக்கப்பட முடியாத முதலாம் நிலை நலன்கள்.

அயல்நாடுகளுடனான ஒத்துளைப்பு - நேசம் என்பது நிரந்தர நலனாக இருந்தாலும் மேற்கூறிய முதலாம் நிலை நலன்களை விட்டுக் கொடுத்துப் பேண முடியாத ஒரு இரண்டாம் நிலை நலனிற்கான உதாரணமாகப் பார்க்கலாம்.

மனிதஉரிமை மற்றும் ஜனநாயகத்தைக் காத்தல் வறுமை ஒழிப்பு என்பன பொதுவான நீண்டகால நோக்கிலான நலனாகளாகப் பார்க்கலாம். இவை உலகின் அனைத்துப் பகுதிகளிற்கும் ஏற்றதாக இருந்தாலும் ஒரு நாட்டின் பிராந்திய நலன் என்ற வரையறையில் அதிகரித்த முக்கியத்துவத்தை கொண்டிருக்கும்.

சர்வாதிகார ஆட்சி நடக்கும் ஒரு அயல்நாட்டோடு கோட்பாட்டுரீதியில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் உறவுகளை பேணுவது தற்காலிக நலனாகப் பார்க்கலாம்.

அதிக அளவு புலம்பெயர்ந்த தனது நாட்டவர்களைக் அல்லது பொருளாதார முதலீடுகளைக் கொண்டிருக்கும் இன்னொரு நாட்டோடான உறவை ஒரு குறிப்பிட்ட வரையறையைக் கொண்ட நலனாகப் பார்க்கலாம். இந்த இரு உதாரணங்களில் கூட பொருளாதார முதலீடு என்பது கால நோக்கில் புலம்பெயர்ந்த சமூகத்தோடு ஒப்பிடும் போது குறைந்த நிரந்தரத் தன்மையைக் கொண்டது.

இவ்வாறு ஒவ்வொரு நாடுகளினது தனிப்பட்ட பார்வையில் பல தரப்பட்டதாக இருக்கும் நலன்கள் ஒன்றாக (உலகில்) இயங்க முனையும் பொழுது அவற்றின் தன்மைகளிற்கு ஏற்ப ஒற்றுமையானதாக, முரண்படுபவையாக பூரணப்படுத்துபவையாகவும் (complementary) ஏனையவர்களின் நலன்களோடு காணப்படும். இந்த ஒற்றுமைகளும், முரண்பாடுகளளும் பூரணப்படுத்த உதவும் பங்காளித்துவமும் கால ஓட்டத்தில் சில நிரந்தரமானவையாகவும் பல தற்காலிகமானவையாகவும் இருக்கும். இந்த இயக்கவிலில் தோன்றும் முரண்பாடுகளை குறைப்பதும் அதன் பக்கவிளைவுகளையும் கட்டுப்படுத்தி ஒரு தேசத்தின் - நாட்டின் நீண்ட கால இருப்பை உறுதி செய்ய முயற்சிப்பது தான் இராஜதந்திரம்.

வெளியுறவுக் கொள்கை

ஒரு நாட்டின் தேசிய நலன்(கள்) என்பது பலதரப்பட்ட, கால ஓட்டத்திற்கு ஏற்ப ஏனையவர்களோடு ஒற்றுமையாக, முரண்பாடாக பூரணப்படுத்தும் பங்காளித்துவமான தன்மைகளைக் கொண்ட ஒரு சிக்கலான உயிரினம் போன்றது (a very complex living organism) என்றால் மிகையாகாது. எனவே ஒரு நாட்டின் அதி உச்ச பிரதிநிதித்துவமான அதன் தேசிய நலனின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய அந்த நாட்டின் அனைத்து வளங்களும் உரிமுக்கியத்துவத்தோடு களமிறக்கப்படுகின்றன. இங்கே வளங்கள் என்பது இராணுவ, பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் என்று அனைத்துத் துறைகளிலும் விரிகின்றன. அடிப்படையில் உள்நாட்டிற்கு வெளியோயான இந்த வளங்களின் பயன்பாடு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பது அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையாகும்.

யதார்த்தத்தில் எந்த வளங்களும் அளவுகடந்தவை அல்ல. எனவே மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை எவ்வாறு எங்கு எப்போ பயன்படுத்துவது என்பது முக்கியத்துவங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாடுகளினதும் வளப் பிரயோகம் என்பது என்ன அடிப்படைகளில் மேற்கொள்ளப்படுகிறது என்பதில் வெளியுறவுக் கொள்கை காத்திரமான பங்கை வகிக்கின்றது. உள்நாட்டிற்கு வெளியே (வெளியுறவுக் கொள்கையில்) இன்னொரு நாட்டில் வளப் பிரயோகம் என்பதற்கு கவனத்தில் எடுக்கும் விடையங்களாக பின்வருவன இருக்கின்றன.

  1. அதன் அமைவிடம், அதாவது அயல் நாடா என்பது கவனத்தில் எடுக்கப்படுகிறது. அயல்நாடாகும் பொழுது அதனோடான நலன்கள் பலதரப்பட்டதாகவும் சிக்கலான முறையிலும் விரியக் கூடியது.
  2. அதன் பூகோள இருப்பிடம், அதாவது தூர தேசமாக இருந்தாலும் அதன் போக்குவரத்து வளங்கல் நலன்களிற்கு இருக்குக் கூடிய முக்கியத்துவம், உதாரணமாக பனாமா கால்வாயில் அமெரிக்காவிற்கு இருந்த நலன்.
  3. அந்த நாட்டில் இருக்கக் கூடிய இயற்கை வளங்கள் மற்றும் அவற்றின் பரந்த அளவிலான பயன்பாட்டினால் ஏற்படும் பலவீனமும் அருகிய தன்மையில் உள்ள முக்கியத்துவமும். இவற்றிற்கான உதாரணங்களாக முறையே பரவலான பயன்பாட்டைக் கொண்ட மசகு எண்ணை உருவாக்கு மத்திய கிழக்கையும் மிகவும் குறித்த பயன்பாட்டைக் கொண்ட யுரேனியம் என்பது அதன் அருகிய தன்மையால் முக்கியத்துவமாகும் தென்ஆபிரிக்காவையும் அவுஸ்ரேலியாவையும் பார்க்கலாம்.
  4. ஏற்றுமதிக்கு உகந்தாகக் கருதக் கூடிய அந்த நாட்டின் உள்@ர்ச் சந்தை. ஒரு நாட்டின் முதன்நிலை நிரந்தர நலனான பொருளாதாரம் என்பதை விரிவாக்கிப் பலப்படுத்தத் துணை போகக் கூடிய கணிசமான ஏற்றுமதிச் சந்தைகள் எவையும் முக்கியத்துவம் பெறுகின்றன.
  5. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தயாரித்த பொருட்களின் முக்கியத்துவம். எந்தவொரு நாடும் இயற்கை வளங்களில் மாத்திரமல்ல தயாரித்த பொருட்களில் கூட யதார்த்தத்தில் தன்னிறைவை அடைய முடியாது. பரந்தளவு மாத்திரமல்ல குறித்த ஆனால் முக்கிய பயன்பாட்டை கொண்டிருக்கக் கூடி தயாரித்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளும் முக்கியமாகின்றன.
  6. அந்த நாட்டில் செய்யப்பட்டுள்ள தனியார்துறையின் பொருளாதார முதலீடுகள். ஒரு நாட்டில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை அந்த நாட்டோடான உறவுகளை சுமூகமாகப் பேணுவதன் மூலம் பாதுகாக்க வேண்டியதாக்கிறது. இந்த முதலீடுகளை மேற்கொண்ட குறித்த தனியார்துறையினர் ஆளும்வர்க்கத்தின் மீது வைத்திருக்கும் கருத்தியல்த் தாக்கம் (lobbying power/influence) என்பது இதை இறுதியில் நிர்ணயிக்கும்.
  7. அந்த நாட்டில் சனத்தொகையின் அளவும் அவர்களின் தன்மையும். அதாவது ஒரு நாட்டின் சனத்தொகையின் எண்ணிக்கை என்பதும் அவர்களின் வயது, அடிப்படைப் படிப்பறிவு முதல் உயர்கல்வி, பல தரப்பட்ட திறமைகள், சுகாதாரம், சுறுசுறுப்பு, தேசிய நலனிற்கான தியாகம், போராடத் தயாரானவர்கள் போன்றவையும் அவர்களின் பொருளாதார முன்னேற்றம், தொழில்நுட்ப வழர்ச்சி பற்றி நிலைப்பாடுகளும் அவர்களை பொருளாதார இராணுவரீதியில் பலமிக்கவர்களாக மாற்றக் கூடியதா என்பதனூடாக அந்த நாட்டின் முக்கியத்துவத்தை தீர்மானிக்கின்றது.
  8. அந்த நாட்டின் கைத்தொழிற்சாலைகளினது பலம். ஒரு நாடு தனது கைத்தொழிற்துறையின் பலம் மூலம் மட்டுமே ஏனைய நாடுகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்திற்கு நல்ல உதாரணமாக யப்பானைக் கொள்ளலாம். இங்கு யப்பானில் இருந்து தூரத்தில் இருக்கக் கூடிய ஒரு நாட்டினது நலன் என்பது அதனோடு சிக்கலானதாக இருக்கலாம். அதாவது யப்பான் ஏனைய நாடுகளில் செலுத்தக் கூடிய காத்திரமான தாக்கங்களும் அவற்றிற்கும் இந்த நாட்டிற்கும் இருக்கும் நலன்கள்.
  9. அந்த நாட்டின் இராணுவ பலம். எந்த ஒரு நாட்டின் இராணுவ பலமும் தனது நாட்டின் இராணுவ பலத்தின் ஒப்பிடக் கூடிய நிலையிலோ அல்லது மிக முக்கியமாக அதற்கு மேலுள்ளதோ அந்த நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் பலதரப்பட்ட தீர்மானங்களில் அதை கவனமெடுக்க வேண்டியதும் தவிர்க்க முடியாததாகிறது.
வெளியுறவுக் கொள்கைவகுப்பு

மேலே பட்டியலிட்டவற்றின் அடிப்படையில் ஒரு நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவை இருந்தாலும் யதார்த்தத்தில் அதன் இறுதிப் போக்கு என்பது அவர்களின் முயற்சி, சர்வதேச நிலமை, உள்நாட்டு நிலமை என்ற முன்று தரப்பினருக்கு மத்தியில் ஏற்படும் சமன்பாட்டில் தீர்மானிக்கப்படுகிறது. இருந்த போதும் கொள்கை வகுப்பாளர்களின் அடிப்படைத் தீர்மானங்கள் எடுக்கும் முறை என்பது முற்றிலும் முக்கியத்துவம் சார்ந்தது. உதாரணத்திற்கு முக்கியத்துவத்தின் உச்சத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு என்ற நலன் என்பது என்ன விலைகொடுத்தாயினும் பாதுகாக்க முயற்சிக்கப்படும்.

ஏலவே தீர்மான எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள் தரும் பலன்களும் விளைவுகளும் அதற்கான செலவுகள் வினைத்திறன் என்பன பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அணுகுமுறையில் மாற்றங்கள் கொண்டுவருவதும் ஏனைய நலன்களோடான ஒப்பீட்டில் அதன் முக்கியத்துவத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவை பற்றியும் மீள்பார்வை செய்யப்படுகிறது.

ஒரு நாட்டின் தேசிய நலன்கள் பற்றி முடிவுகளை மிகவும் உயர்மட்டத்தில் உள்ள அதிகாரவர்க்கத்தால் எடுத்துவிடலாம் என்ற தோற்றப்பாடு இருந்தாலும் அது கொண்டுள்ள உள்ளக ஆட்சி அதிகரமுறை (சர்வாதிகாரம்- முடியாட்சி - ஜனநாயகம், மத்தி ஆட்சியா அதிகாரப்பரவலாக்கம் கொண்ட ஆட்சிய போன்றவை) கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களின் அபிப்பிராயத்தின் நிர்ப்பந்தத்திலும் ஏனய அரசியல் தள அழுத்தங்களினாலும் வெளியுறவுக்கொள்கையில் நலன் சாராத விடையங்கள் தற்காலிகமாகவேனும் உள்ளடக்க வேண்டிய தேவைகள் உருவாகிறது.

அதாவது ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உள்நாட்டுக் காரணிகளாக முக்கியமாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை:

  1. படைத்துறை
  2. அரசியல் கட்சிகள்
  3. புலநாய்வுத்துறைகள்
  4. பொருளாதார மய்யங்கள்
  5. பரப்புரைகளும் ஊடகத்துறை
  6. கல்வி மற்றும் அறிவியல்த்துறை
  7. அரசச்சார்பற்ற மற்றும் தொண்டர் நிறுவனங்கள்
  8. இனம் மதம் போன்ற குறுகிய வரையறையுடையவர்கள்
இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணகளின் இயக்கத்தில் விட்டுக் கொடுப்புகள் அற்ற ஒற்றுமை இருக்க முடியாது (never an uncompromised win-win situation). எனவே ஒவ்வொரு தரப்பும் தமது நிலைப்பாடு சார்ந்த முன்னெடுப்புகளை ஊக்குவிக்க முயற்சிக்கும் போது பொழுது ஒரு போட்டி நிலை தோன்றுகிறது.

அடுத்த பகுதியில் வெளியுறவுக் கொள்கை முன்னெடுப்பு முறைகளும் அவை தரும் அனுபவங்கள் காலப்போக்கில் எப்படியான மாற்றங்களை கொண்டு வருகிறது என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

அருமையான கட்டுரைத் தொடர். அடுத்தடுத்த பகுதிகளையும் ஆவலாய் எதிர்பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

குறுக்காலபோவோன் அண்ணா பல பிரயோசனமான விடயங்களை உங்கள் பதிவில் இருந்க்டு பெற்றேன் நன்றி...........எனக்கு எழுந்த ஒரு சந்தேகம் அதை தீர்பீர்கள் என்று நம்புகிறேன் பிழையாக இருப்பீன் மன்னிக்கவும்..........வெளிநாட்டு கொள்கையில் தீர்மானிபதில் நாணய அலகும் செல்வாக்கு செலுத்தும் தானே ஆகவே எம்மை போல அங்கீகாரத்தை வேண்டு நிற்கும் தேசியங்கள் புதிய நாணய கொள்கைகளை கொண்டு வாறது சிறப்பா அல்லது ஏற்கனவே புழகத்தில் உள்ள நாணய கொள்கைகள் மற்றும் நாணய அலகுகளிள் கவனம் செலுத்துவது சிறந்ததா?

Link to comment
Share on other sites

ஜமுனா மிகவும் பயனுள்ள முக்கியமான கேள்வி.

ஆம் பொருளாதாரம் அத்தோடு இணைந்த நாணமாற்றுக் கொள்கை என்பவையும் எமது நலன் சார்ந்த வெளியுறவுக் கொள்கைகளை முன்னெடுப்பதற்கு உதவும் கருவிகள்.

ஆனால் அங்கீகாரம் அற்ற தேசியங்கள் என்ற வகையில் தனிமனிதர்களின் தெளிவிலும் தெரிவிலும் தான் பெரும்பாலும் தங்கியிருக்க வேண்டும் பொருளாதாரம் என்ற கருவியின் பலத்தைத் திரட்ட.

அங்கீகாரம் இல்லாதவர்கள் புதிய நாணயத்தை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தக் கூடிய முறையில் அறிமுகப்படுத்த முடியாது என்பது விளங்கும் தானே. ஆனால் எந்த நாணயத்தில் தமது பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள் என்பதும் ஒப்பீட்டளவிலான அவர்களது பொருளாதார பலத்தைப் பொறுத்தும் எதிர்த்தரப்பு மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிறீலங்காவின் பொருளாதாரத்தின் மோசமாகும் தன்மை அதன் நாணயத்தை தொடர்ச்சியாக பலவீனமடையச் செய்து கொண்டிருக்கிறது. இதன் போக்கு மாறி சிறீலங்கா ரூபாய் பலமடைவதற்கான காரணங்கள் எதிர்காலத்தில் இல்லை. அதே நேரம் இந்தியாவின் பொருளாதார வழர்ச்சி என்பது அதன் நாணயத்தை பலமுள்ளதாக பேணுவது மாத்திரமல்ல அது மேலும் பலமாவதற்கான சந்தர்ப்பங்கள் தான் அதிகம்.

எனவே தந்திரோபாயரீதியில் தமிழர்தரப்பு இந்திய ரூபாயை தாயகத்தில் (உள்ளூரில்) புழக்கத்தில் கொண்டுவருவது பின்வரும் பயன்களைத் தரும்.

  • எமது சேமிப்புகள் இருப்புகள் சிறீலங்கா ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியோடு பெறுமதியை இழக்காது பாதுகாக்கலாம்.
  • காலப் போக்கில் ஒப்பீட்டளவில் சிறீலங்கா நாணயம் பெறுமதியை இழக்கவும் இந்திய நாணயம் பொறுமதி அதிகரிக்கும் நிலையில் தமிழர் தாயகத்தின் பெரும்பாலும் ஏற்றுமதி அற்ற இறக்குமதிப் பொருளாதாரம் பயன் அடையும்.
  • புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணங்கள் கூட சிறீலங்கா நாணயத்தை பலப்படுத்தாது. இது இந்தியாவின் பொருளாதாரத்தின் அளவோடு ஒப்பிடுகையில் புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணம் விகிதாசாரத்தில் சிறியது என்பதால் இதன் உண்மையான தாக்கம் இந்திய நாணயத்தில் குறைவாக இருக்கும் .
  • எமது பூகோள அமைவிடத்தை வைத்துப் பார்க்கும் பொழுது அத்தியாவசிய பொருட்களிற்கு தமிழ்நாட்டை நம்பியிருப்பது தவிர்க்க முடியாது. அந்த வகையில் உருவாகும் தவிர்க்க முடியாத பொருளாதாரப் பிணைப்பு மற்றும் dependency இற்கு கூட இந்திய நாணயத்திலான எமது உள்ளூர் பொருளாதாரம் பலமாக இருக்கும்.

இவை சிறீலங்காவின் பொருளாதாரத்தில் மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும்.

இந்திய நாணயத்தை எமது பொருளாதாரத்திற்கு கொண்டுவருவதால் ஏற்படக் கூடிய பாதகங்கள்:

  • இந்திய நாணயத்தின் போக்கை எமது நலன் சார்ந்து எம்மால் கட்டுப்படுத்த முடியாது. (இது சிறீலங்கா நாணயத்திற்கும் ஓரளவு இன்று பொருந்தும் தான்.)
  • இந்திய நாணயத்தின் பலம் எமது பொருளாதாரத்தில் இருக்கக் கூடிய ஏற்றுமதிகளை பாதிக்கும்.
  • இந்திய நாணயத்தின் பாவனையூடாக நாம் இந்தியாவில் தங்கியிருப்பதான ஒரு தோட்டப்பாட்டை கொடுக்கும். அது கொள்கைவகுப்பாளர்களின் மேலாண்மைவாதப் போக்கை ஊக்குவிப்பதாக மாறலாம்.

சர்வதேச அளவிலான எமது பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நாணய இருப்புகள் சேமிப்புகளை அமெரிக்க வெள்ளியல் இருந்து யுரோ போன்ற ஒன்றிற்கு மாற்றுவதும் எதிர்காலத்திற்கு நல்லது.

Link to comment
Share on other sites

மிகவும் நல்லதொரு விளக்கம் பலவற்றை அறிந்தேன் மிக்க நன்றி உங்களின் விளகதிற்கு,தேசிய நலனும் வெளியுறவு கொள்கையின் பாகம் 3 ஜை படிக்க ஆவலாக இருகிறேன்....... :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

குறுக்ஸ் அண்ணா எங்கே பாகம் 3 எப்போது வரும்!! :icon_idea:

Link to comment
Share on other sites

தேசிய நலனும் வெளியுறவுக் கொள்கையும், பாகம்-3

வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை நோக்கம் தேசிய நலன் சார்ந்தது. அந்த தேசிய நலன் சார்ந்த கொள்கைகளில் ஒரு நாடு தனது வளங்களை பிரயோகிக்கிறது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. இந்த முயற்சிகள் இறுதி நோக்கத்தின் அடிப்படையில் 3 வகையாகப் பிரிக்கலாம்.

-1- தேசிய சுயவிரிவாக்கம் (self-extension), அதாவது தற்பொழுது கிடைக்காத உரிமைகள் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலானவை. இதற்கு அதிகரித்த பலம் என்பதோ பிரதேச ரீதியான விரிவாக்கமோ அல்லது இழந்த வெளியாரின் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியை மீட்பதான இலட்சியங்களை கொண்டிருக்கலாம்.

-2- தேசிய சுயபேணல் (self-preservation), அதாவது தற்பொழுது கிடைத்த உரிமைகள் அதிகாரங்களைப் பேணும் நோக்கிலானவை. இவை தாயகத்தின் சுதந்திரம், பிரதேச ஒருமைப்பாடு போன்றவற்றோடு மாத்திரமல்லாது முதலாம் நிலை தேசிய நலன்களைப் பாதிக்கும் எவையும் உள்ளடக்கப் படலாம். உதாரணத்திற்கு தமது நாட்டின் முதலாம் நிலை தேசிய நலனான பொருளாதாரத்தை விழுத்தக் கூடிய வகையில் இன்னொரு நாட்டில் இருந்து இறக்குமதியோ ஏற்றுமதியோ முதலீடுகளோ இருக்கலாம். அதன் அடிப்படையில் அந்த நாட்டை பாதுகாத்துப் பேணுவது சுயபேணலுக்கு தேவையாகிறது.

சுயபேணலிற்கு தனியே தற்பாதுகாப்பு சித்தாந்தத்தை கொண்டிருக்காது வெளியக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நீக்குதல் என்ற சித்தாந்தமாக மாற்றம் அடையும் பொழுது அது சுயவிரிவாக்கம் என்ற நிலையை நோக்கிச் மறைமுகமாகச் செல்கிறது.

-3- தேசிய சுயவிட்டுக்கொடுப்பு (self-abnegation), அதாவது தற்பொழுது கிடைத்திருக்கும் உரிமைகள் அதிகாரங்களை பொது நோக்கிலான உலக சமாதானம் ஒருமைப்பாடு போன்ற உயரிய சிந்தனையில் விட்டுக் கொடுத்தல். இவை தமது பலத்திலும் மேலாண்மையிலும் திடமான நம்பிக்கையுள்ளவர்களால் தேசிய நலனிற்கு பாதகம் இன்றி இலகுவாக கைய்யாளப்படக் கூடியது. அணு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தில் அணு ஆயுத அபிவிருத்தி திட்டங்களையும் பரிசோதனைகளையும் செய்தவர்கள் அவற்றைக் கைவிட்டும் செய்வதற்குரிய பொருளாதார தொழிநுட்ப மனித வளங்களை கொண்ட நாடுகளும் கைய்யெழுத்திட்டதை சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

முற்று முழுக்க சுயநலன்களிற்காக காலணித்து மனோபாவங்களோடு காட்டுத்தர்ப்பாராக (anarchic system) இயங்கிக் கொண்டிருந்த உலக ஒழுங்கில் இருந்து உயரிய பொது நல நோக்கங்களிற்காக கொள்கைகள் வகுக்கப்படல் தேசிய வளங்கள் பலம் என்பவை பிரயோகித்தல் என்ற நிலைப்பாட்டின் ஆரம்பமாக அல்லது செயல் வடிவ அறிமுகமாக அமெரிக்க ஜனாதிபதி வூட்றோ வில்சன் 1917 இல் உலகமா யுத்தம் 1 இல் தம்மை ஈடுபடுத்தியதை கூறுவார்கள். அத்தோடு கமியூனிசம் என்ற சித்தாந்தத்தால் கவரப்பட்டு தாமாக கமியூனிசத்தை அறிமுகப்படுத்திய நாடுகளை இதற்கு இன்னொரு உதாரணமாக கொள்ளலாம்.

சுயவிட்டுக் கொடுப்பினால் கிடைக்கக் கூடிய நன்மைகளும்- தீமைகளும் இலாபங்களும்- நட்டங்களும் ஒவ்வொரு நகர்வுகளின் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தான் தங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் சுயநலன் அற்ற விட்டுக்கொடுப்புடனான அணுகுமுறை என்பது உயரிய நோக்கம் உடையவையாக சித்தரிக்கப்பட்டாலும் நீண்டகால நோக்கில் சுயபேணலிற்கு பலம் சேர்க்கக் கூடியவையாக இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் சுயவிரிவாக்கத்திற்கான எதிர்ப்பை குறைப்பதற்கும் தற்காலிகமாகவேனும் உதவுகிறது.

கொள்கை முன்னெடுப்பும் பலமும்

இவ்வாறு பலதரப்பட்ட நோக்கங்களோடு வகுக்கப்படும் கொள்கைகளை அடைவதற்கு அரசுகளும் கொள்கைவகுப்பாளர்களும் பலம் என்பதையே முதன்மை வழியாக நம்புகிறார்கள். அந்தவகையில் எல்லா அரசுகளும் தமது கொள்கைகளை அடைவதற்கு தேவையான பலத்தை அபிவிருத்தி செய்வதிலும் தக்க வைப்பதிலும் தொடர்ச்சியாக கவனம் செலுத்துவார்கள். முக்கியமாக சுயவிரிவாக்க கொள்கை கொண்ட ஒரு அரசு தனது பலத்தை பெருக்க வேண்டிய தேவையில் இருக்கிறது. அந்த விரிவாக்கல் நோக்கிலான பலப் பெருக்கலால் அச்சுறுத்தப்படும் இன்னொரு அரசு தனது சுயபேணலின் அடிப்படையில் பலப் பெருக்கலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறது.

பலப் பெருக்கலின் எல்லை என்பது அந்தந்த தேசியத்தின் வளங்களில் தான் முற்று முழுக்க தங்கியிருக்கிறது. இங்கு வளங்களாக தனியே இயற்கை வளங்களையும் மூலப் பொருட்களை மாத்திரமன்றி தரமான மனித வளங்களை கொண்டவை தான் வெற்றி பெற்றவையாக இன்று உலகில் திகழ முடிகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுயபேணலை நோக்காகக் கொண்ட நாடுகளில் நிதானமாக வகுக்கப்படும் வெளியுறவுக் கொள்கை என்பது பலத்தின் தேவையைய் வெளியக அச்சுறுத்தலின் அளவிற்கு ஏற்ப கூட்டிக் குறைக்கக் கூடியதாக இருக்கும்.

அதேபோல் சுயவிட்டுக்கொடுப்போடு இயங்க முனையும் தேசம் ஒன்று பலப் பிரயோகத்தையோ பலப்பெருக்கத்தை நோக்காகக் கொண்டு இயங்க முடியாது எனலாம். இவ்வகையான நாடுகள் காலப் போக்கில் தமது தேசிய பலத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆனால் உயரிய மனித விழுமியங்களையும் நம்பிக்கைகளையும் பரப்பும் நோக்கோடு தேசிய பலம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் வருகிறது. அவ்வாறான நிலையில் சுயவிரிவாக்கத்திற்கு பெருக்கப்பட்டு பிரயோகிக்கப்படுவது போன்று பலம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தவகையில் பலம் என்பது இறுதி இலட்சியம் அல்ல. அது இலட்சியத்தை அடைவதற்கான முதன்மையான வழிமுறையாக இருக்கிறது. பலத்தின் அளவு என்பது இலட்சியத்தை அடைவதற்கான வழியை இலகுவாக்கி தெரிவுகளை அதிகரிக்கிறது. எனவேதான் கொள்கைவகுப்பாளர்களிற்கு தமது தரப்பிடம் இருக்கும் பலம் அல்லது ஒன்று சேர்க்கக் கூடிய பலத்தின் எல்லைகளை தெளிவாக விளங்கி வைத்திருப்பது முக்கியமாகிறது.

கொள்கை முன்னொடுப்பு

-1- யுத்தமும் பலப் பிரயோகமும் (War & Use of Force)

யுத்தமும் பலப் பிரயோகமும் தேசியநலன்களை பாதுகாக்கவும் அபிவிருத்தி செய்யவும் பயன்படுத்தப்படும் பழம் பெரும் அணுகுமுறை. அத்தோடு காலப்போக்கில் இறுக்கமாக இணைந்தாக சமாதான அணுகுமுறையும் உள்வாங்கப்பட்டது. ஒரு தேசம் தனது நலன்களை பாதுகாக்க எடுக்கக் கூடிய அணுகுமுறை என்பது முற்று முழுக்க அதன் கட்டுப்பாட்டில் மாத்திரமன்றிப் புறக்காரணிகளிலும் தங்கியிருக்கிறது. பலப் பெருக்கத்தில் ஈடுபடும் இரண்டு தேசங்கள் யுத்தங்களினூடாக ஒரு சமநிலையை அடைய வேண்டிய தேவையை அனுபவத்தினூடாக பெற்றுக் கொள்கிறார்கள். இராஜதந்திர நகர்வுகளாலும் கால ஓட்டத்தினாலும் யுத்தங்கள் தவிர்க்கப்பட்டு சமநிலை உருவாகும் சந்தர்ப்பங்களும் உண்டு.

-2- சமநிலை பேணலும் கைமாற்றலும் (Balancing & Passing the Buck)

தற்பாதுகாப்பை தேடும் நாடுகளிற்கு இருக்கும் யதார்த்தபூர்வமான அணுகுமுறையாக இது பார்க்கப்படுகிறது. இதன் முதல் அங்கமாக தற்போது இருக்கும் வலுச் சமநிலையை பேணுவதற்கான முயற்சிகளில் மாத்திரம் ஈடுபடல். அடுத்தாக கைமாற்றல் என்பது எந்தவித முயற்சிகளையும் சுயமாக எடுக்காது பொறுத்திருந்து இன்னொரு தரப்பின் பொறுப்பிற்கு மாற்றுவது. அந்தத் தரப்பு ஒரு நேச நாடாகக் கூட இருக்கலாம். கைமாற்றல் என்பது சமநிலை பேண எடுக்கும் முயற்சிகளை விட 3 காரணங்களிற்காக சிறந்ததாக கணிக்கப்படுகிறது.

  • வள ஒதுக்கீடு மற்றும் ஏற்படக் கூடிய இழப்புகளின் பார்வையில் மலிவானது.
  • பல எதிரிகளை அச்சுறுத்தல்களை சமகாலத்தில் எதிர்கொள்வதை தவிர்க்கும்; உத்தியாகிறது.
  • அச்சுறுத்தும் தரப்பும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொறுப்பை கைமாற்றத்தில் பெற்றுக் கொண்ட தரப்பிற்கும் இடையில் மோதல் உருவானால் கைமாற்றல் செய்த தரப்பு இறுதியில் பலம் பொருந்தியதாக மாறலாம்.

வலுச்சமநிலை அற்ற அயலவர்கள் இடையேயான சர்ச்சையில் பலவீனமான தரப்பிற்கு கைமாற்றல் என்ற அணுகுமுறை அர்த்தமற்றதாகிறது. மாறாக பலமான தரப்போடு இணைந்து அதனைப் பலப்படுத்துவதனூடாக ஒன்றிணைந்த பலம் என்பது ஒப்பீட்டளவில் அதிகரிக்கும். அந்த வகையில் பேரரசுகளைப் பொறுத்தவரை இவ்வாறு பயனடைவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கிறது. தற்பாதுகாப்பிற்காக சமநிலையை பேண முற்படும் சுயமுயற்சிகள் தான் அதிக அளவில் இயற்கையாகத் தூண்டப்படுகிறது. ஆனால் இவ்வாறு பெருக்கப்படும் பலம் குறித்த தேவைகளிற்காக மட்டுப்படுத்தப்பட்ட நோக்கங்களோடு ஒன்றிணைக்கப்படுகிறது.

-3- கூட்டணியும் முன்னணியும் (Alliances & Coalitions)

கூட்டணி என்பது பொதுவாக ஒற்றுமையான அல்லது பூரணப்படுத்தும் நலன்களைக் கொண்ட தரப்புகள் ஒன்று சேர்ந்து இயங்குவதற்கு தேவையான விபரங்களை இனங்கண்டு அவற்றைப் பாதுகாப்பதற்குரிய சட்டரீதியான கட்டமைப்புகளை உருவாக்குவதாகிறது. நலன்களின் அடிப்படையில் அல்லாது வெறும் பலத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் கூட்டணிகள் தோல்வியில் முடியும். கூட்டணியின் உள்ளடக்கமும் இயக்கமும் பலதரப்பட்ட நலன்களின் ஒத்திசைவாக இருக்கும். அவை ஏலவே பாகம் 2 இல் குறிப்பிட்டது போல் முதன்மையானவை, நிரந்தரமானவை மாற்றமடைபவை என விரிந்து செல்லும். வழர்ந்துவரும் ஒற்றுமையான மற்றும் பூரணப்படுத்தக் கூடிய நலன்களை காலத்தோடு இனங்கண்டு அவற்றைக் கொண்ட கூட்டணியை உருவாக்குவதில் முழுப்பலத்தோடு இறங்கும் நாடு அந்தக் கூட்டணியில் அதிகளவு சாதகமான நிலையைக் கொண்டிருக்கும்.

ஆனால் அணுவாயுத உலகில் கூட்டணிகளினால் பெருக்கப்படும் பலமும் தரக்கூடிய நன்மை என்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக மாறியுள்ளது. அணுவாயுத வல்லமை பொருந்திய தரப்புகளைப் பொறுத்தவரை ஏற்படும் சமநிலையானது உதரவாதமளிக்கப்பட்ட இருதரப்பு அழிவு ( Mutually Assured Destruction). எனவே பாரம்பரிய யுத்தமுனைப்புகளை அடிப்படையாக கொண்ட கூட்டணிகளினூடான தேசிய நலன் காப்பு முயற்சிகள் அர்த்தமற்றதாகிறது. இதன் அர்த்தம் அணுவாயுத வல்லமை தேசிய நலன்களின் எல்லைகளை குறுக்குவிட்டதாக கொள்ள முடியாது. மாறாக அவற்றை அடைய முனையும் வழிமுறைகளைத்தான் மாற்றியுள்ளது. குறிப்பாக இராஜதந்திரமும் அமைதி முயற்சிகளும் அதிகரித்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

கூட்டணி என்பது பயனுள்ளதாக அதனைக் கட்டியெழுப்ப உதவிய நலன்கள் உள்ளவரை தொடரும். மாறாக முன்னணி என்பது குறுகிய கால நோக்கில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நோக்கோடு உடனடித் தேவைகளின் நிர்ப்பந்தத்தில் உருவாக்கப்படுபவை. முன்னணியின் அங்கத்தவர்கள் மத்தியில் வரலாற்றுரீதியான அரசியல் சமூக கலாச்சாரப் பிணைப்புகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இவை அரசியல் ரீதியில் பலவீனமானவை. முன்னணியில் கிடைக்கும் அனுபவங்கள் எதிர்காலத்தில் கூட்டணியை அமைக்கக் கூடிய நம்பிக்கையை உருவாக்கலாம். முன்னணியின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டவுடன் கலைக்கப்பட்டுவிடுகிறது. முன்னணிகளிற்குரிய பங்காளிகளின் தேவை என்பது நவீன போரியல் தந்திரோபாயங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றது.

-4- இராஜதந்திரமும் சமாதான வழித் தீர்வுகளும் (Diplomatic Negoitiations & Peaceful Settlement)

வலுச்சமநிலையைப் பேணுவதில் தொடர்ச்சியான கவனமும் தொய்வற்ற பரஸ்பர உறவாடலும் தேவை. இந்தத் தேவையின் அடிப்படையில் 18 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது தான் இராஜதந்திரம் என்கிறார்கள். அதாவது முரண்பாடுகளை உள்வாங்கி ஒற்றுமையான மற்றும் பூரணப்படுத்தும் நலன்களை முன்னிறுத்தி சர்ச்சைக்குட்படக் கூடிய தரப்புகளிற்கு மத்தியில் சமரசத்தை உருவாக்கும் உத்தியாகும். அதன் மூலம் சூழ்நிலமையில் மாற்றத்தைக் கொண்டுவந்து முரண்பாடுகளினால் வரக்கூடிய பாதகங்களை முடிந்தளவு குறைப்பதாகும்.

பேச்சுவார்த்தை என்பது நலன்களின் மத்தியில் உள்ள முரண்பாடுகளை விட்டுக் கொடுப்புகள் மூலம் குறைக்க முயல்வதாகும் இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் தீர்வு என்பது சம்பந்தப்பட்ட தரப்புகளினால் தேசிய நலன் சார்ந்து விட்டுக்கொடுக்கக் கூடியதன் எல்லையையும் அவர்களது பலத்தின் அளவினாலும் வரையறுக்கப்படுகிறது. இதனால் இராஜதந்திரத்தின் அதிமுக்கிய பணியாக இருப்பது பேச்சுவார்த்தை மூலமான தீர்வு என்பது எந்தளவிற்கு சாத்தியப்பாடானது என்பதை எதிர்த்தரப்பின் முதன்நிலை தேசிய நலன்களையும் பலதரப்பினர் சம்பந்தப்படும் பொழுது அவர்கள் மத்தியில் இருக்கக் கூடிய பிணைப்புகளையும் மதிப்பிடுவதும் ஆகும். இந்த மதிப்பிடல் 3 வகையான முடிவுகளைத் தரலாம்.

-1- முதன்மையானதும் ஒற்றுமையற்றதும் (primary & incompatible) அதாவது விட்டுக்கொடுக்க முடியாத நலன்களில் முரண்பாடுள்ளது எனவே பேச்சுவார்த்தை பலனைத்தரப் போவதில்லை.

-2- முதன்மையானதும் ஒற்றுமையானதும் (primary & compatible) அதாவது விட்டுக்கொடுக்க முடியாத நலன்களில் ஒற்றுமை அல்லது பூரணப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களைக் கொண்டது. பேச்சுவார்த்தை மூலம் மீள்வரையறை செய்யலாம்.

-3- இரண்டாம் நிலையானதும் ஒற்றுமை அல்லது முரண்பாடுகளைக் கொண்டவை (secondary & compatible or incompatible) அதாவது பேச்சுவார்த்தை மூலம் விட்டுக்கொடுப்புகளினால் ஒரு தீர்வை அடையலாம்.

ஆனால் விட்டுக்கொடுப்புகளுடன் பேச்சுவார்த்தையூடான தீர்வு என்பது எப்பொழுதும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பிற்கு அனுகூலமான தீர்வைத் தரப்போவதில்லை. தவறாக வழிநடத்தப்பட்ட பேச்சுவார்த்தையூடாக காட்டப்படும் விட்டுக் கொடுப்புகள் உரிய பலனைப் பெற்றுத்தரப்போவது மாத்திரமன்றி முதன்நிலை தேசியநலன்களை பாதிக்கக் கூடிய முடிவுகளை எட்டலாம்.

-5- சர்வதேச அமைப்புகளில் தேசிய நலன்கள் (Nation interest in International Organisations)

ஜக்கிய நாடுகள் சபை உலக வர்த்தக அமைப்பு சர்வதேச நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகள் என்பது தேசிய நலன்களை முன்னொடுக்கவும் அவற்றை நியாப்படுத்துவதற்குமான தளங்களாகப் பார்க்கப்படுகிறது. ஏனைய நாடுகளிற்கு ஏற்புடையதாக நலன்கள் பற்றிய விபரிப்புகளிலும் அணுகுமுறைகளிலும் மாற்றம் தேவைப்படலாம். அதனால் கொள்கைகளின் ஊர்மை மழுங்கடிக்கப்படலாம். இந்த பாதிப்பு ஏற்புடையதாக இல்லாதவிடத்து சர்வதேச அமைப்புகளிற்கு வெளியில் தேசிய நலன்சார் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும். சர்வதேச அமைப்புகள் தரும் தளம் என்பது புதிய இராஜதந்திர அணுகுமுறைகளை பரீட்சித்து அபிவிருத்தி செய்யவும் தற்பாதுகாப்பு சமரச முயற்சிகளிற்கான சந்தர்ப்பங்களையும் தருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.