Jump to content

வைகாசி நிலவே! வைகாசி நிலவே!!


Recommended Posts

  • Replies 67
  • Created
  • Last Reply

பாட்டின் மூலம் கூகிலில் தேடல் செய்து பெற்றது. இப்போது இணைப்பை கிளிக் செய்ய வேலை செய்கிது இல்லை. ஏனென்று தெரியவில்லை.. :lol:

Link to comment
Share on other sites

குருவே அந்த மாதிரி இருக்கு உங்களின் விமர்சனம்..............இந்த படம் முதல் சீடியில எடுத்து பார்தனான்..........அன்றைக்கே எல்லா பாட்டும் பிடித்து படமும் நல்லா பிடித்து கொண்டது படத்தில பாட்டு கேட்டு பிடித்த படம் இதுவா தான் இருக்கு இல்லை என்றா படத்தில பாட்டு வந்தா ஓட விடுவேன்..............அன்றைக்கே இந்த படத்தை 2தரம் பார்தேன் பிகோஸ் எனக்கு நல்லா பிடித்து கொண்டது............இது வரை இந்த படத்தை 10 தரம் பார்த்து விட்டேன் என்றா பாருங்கோ குருவே................. :lol:

இதில வாற கதாநாயகனின் 2 காதலியாகா வருவா அவா சூப்பர் அப்படி தான் எல்லாரும் இருந்தா கரைச்சலே இல்லையப்பா நான் சொல்லுறது சரி தானே குருவே...............குரு எப்படியோ தெரியாது நமக்கு அப்படி வந்தா தான் நல்லது குருவே.............. :P

முதலாவது காதலி ஓவர் பில்டப் அவன் எவ்வளவு கெஞ்சியும் காதல் மனசில இருக்குதாம் ஆனா சேர்ந்து வாழமாட்டாவாம்...............நானா இருந்தா போடி என்று போய் கொண்டிருபேன் கதையில வாறவர் சுத்த வெஸ்ட் குருவே........ :angry:

மற்றது நம்ம நாட்டிற்கு வந்தவுடனே தான் படம் சூப்பரா இருக்கு...........அது மெல்பனா போச்சு அதில கொவி சோப்பில ஒரு தமிழ் ஆள் வருவார் அவரின்ட நகைசுவை எல்லாம் நல்லா இருந்தது............ :P

ஆனா படத்தின்ட முடிவு சூப்பர் அதில கீரோ வந்து மற்ற ஆளை கல்யாணம் பண்னுறது தமிழ் சினிமாவில நடகாத ஒன்று நடத்தி காட்டினதிற்கு ஒரு "ஓ" போடலாம் குருவே...........ஆனாலும் கடைசி பேட்டியில தான் இப்படியே வாழ்வதாக கூறுவா உது எல்லாம் சுத்த வெஸ்ட் பார்ட்டிகள் தாங்களும் நொந்து மற்றவர்களையும் வருத்தபடவைக்கிற பார்டிகள் என்று தான் சொல்லாம்............ :angry:

என்றாலும் எனக்கு படமும் பாட்டுகளும் ரோம்பவே பிடித்து கொண்டது குருவே இதை பற்றி அழகாக எழுதிய குருவிற்கு ஒரு "ஓ" போடலாம்........... :P

Link to comment
Share on other sites

ஹாஹா.. :lol::lol::lol:

இந்தப்படத்தில் வரும் கதாநாயகனின் 2 காதலியாக வருகிற ஆளைப்பற்றி நான் சொல்ல மறந்துபோனன்..

ஓமோம்!! :lol::lol::lol: அவா சூப்பர்!!! அப்படி - அவவ மாதிரி எல்லாரும் இருந்தா கரைச்சலே இல்லையப்பா! :P எனக்கும் அப்படி ஒரு பொண்ணு வந்தால்/கிடைச்சால் கடவுளுக்கு ஒரு போடலாம்! :D

முதலாவது காதலி ஓவர் பில்டப் தான்! அவன் எவ்வளவு கெஞ்சியும் காதல் மனசில இருக்குதாம்!! ஆனா சேர்ந்து வாழமாட்டாவாம்!! ...............நானும் தான் போடி என்று சொல்லிவிட்டு போய் கொண்டிருப்பேன். கதையில வாறவர் சுத்த வேஸ்ட் தான்!!

உங்கட நாட்டில எடுக்கிற படம் எல்லாம் சூப்பரா வருகிதோ? அப்ப ஏன் அந்த நளதமயந்தி அப்பிடி வர இல்லை? :lol:

அழகான சுருக்கமான விமர்சனம் தந்த சீடனை இன்னொரு முறை 'ஜெனரல் ஜமுனா' என்று அழைத்து அவருக்கும் ஒரு போடுகின்றேன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா!

எல்லோர் மனசிலும் இரண்டாவதாக வந்த பெண் தான் ! ...இடம் பிடிச்சாவா! நல்லதுதான் அப்படித்தான் இருக்க வேண்டும்!. எடுத்ததுக்கெல்லாம் முகத்தை தூக்கி வைச்சிருந்தால் எந்த ஆண்களுக்கும் பிடிக்காது தானே?!. 'சதா" 'ஜெயம்" படத்தோட சரி. அதுக்குப்பிறகு அந்த முகம் எடுபடவே இல்லை. கஜோலில் தங்கை மிக "கலகல" இரகம். தன் மீது நம்பிக்கை உள்ளவன் அடுத்தவனை சந்தேகப்பட மாட்டான்.

சந்தேகமும், காதல் என்ற பெயரைக்கொண்டு அடக்கி ஆளுதலும் காதலே அல்ல!. 'தூய அன்பு யாரையும் அடிமைப்படுத்தாது!. அது புரிந்துணர்வு நிறைந்தது!. 'எனக்கானவன் என்னை விட்டுப்போகமாட்டான்" என்பதே தெரியாவிட்டால் என்ன காதல் அது?!!

"உன்னாலே! உன்னாலே" பலருக்கும் பிடித்த படம். நல்ல முடிவும் கூட!. நானும் கதாநாயகனின் முடிவையே எடுத்திருப்பேன் (ஆனால்..மது அருந்துவதும்/புகைப்பதும் தடுக்கப்பட்டுள்ளது :D என் காதல் ஏட்டிலே :D

Link to comment
Share on other sites

2வது நாயகி உண்மையாக் கஜோலின் தங்கையா? அல்லது மின்சாரக கனவு படத்தில் கஜோலின் தோழியாக நடித்தவரா?

ஆனால் அந்நாயகி தற்போது திருமணமாகி விட்டாரே.

Link to comment
Share on other sites

ஓ நல்ல தத்துவ முத்துக்களை உதிர்ந்து இருக்கிறீங்கள்.. :D

பிள்ளைகளே தமிழ்தங்கை அக்கா சொல்லும் பொன்மொழிகளை நீங்களும் தெரிஞ்சு கொள்ளுங்கோ..

1. தன் மீது நம்பிக்கை உள்ளவன் அடுத்தவனை சந்தேகப்பட மாட்டான்.

2. சந்தேகமும், காதல் என்ற பெயரைக்கொண்டு அடக்கி ஆளுதலும் காதலே அல்ல!.

3. தூய அன்பு யாரையும் அடிமைப்படுத்தாது!. அது புரிந்துணர்வு நிறைந்தது!.

4. 'எனக்கானவன் என்னை விட்டுப்போகமாட்டான்" என்பதே தெரியாவிட்டால் என்ன காதல் அது?!!

இதில அக்கா நாலாவதா சொன்னது ரொம்ப பிடிச்சு இருக்கு.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ நல்ல தத்துவ முத்துக்களை உதிர்ந்து இருக்கிறீங்கள்.. :D

பிள்ளைகளே தமிழ்தங்கை அக்கா சொல்லும் பொன்மொழிகளை நீங்களும் தெரிஞ்சு கொள்ளுங்கோ..

1. தன் மீது நம்பிக்கை உள்ளவன் அடுத்தவனை சந்தேகப்பட மாட்டான்.

2. சந்தேகமும், காதல் என்ற பெயரைக்கொண்டு அடக்கி ஆளுதலும் காதலே அல்ல!.

3. தூய அன்பு யாரையும் அடிமைப்படுத்தாது!. அது புரிந்துணர்வு நிறைந்தது!.

4. 'எனக்கானவன் என்னை விட்டுப்போகமாட்டான்" என்பதே தெரியாவிட்டால் என்ன காதல் அது?!!

இதில அக்கா நாலாவதா சொன்னது ரொம்ப பிடிச்சு இருக்கு.. :P

<<

கலைஞா, நீங்களுமா?!!!!!!!!!!!! என்னை "அக்கா" என்றழைக்கும் பிரிவில் சேர்ந்து விட்டீர்களா? இது தகுமா? இது முறையா? இது தர்மம் தானா?!! B)

Link to comment
Share on other sites

என்னை விட அனுபவம் கூடியவர்களை அக்கா என்று தானே அழைக்க வேண்டும்? அதுவும் காதல் விடயத்தில் கூடுதலான அனுபவம் உள்ள ஒருவரை சுவாமி என்று அல்லவா கூப்பிட்டு இருக்கவேண்டும்?? :D

அத்திலாந்திக் சமுத்திரத்தை நீந்திக் கடப்பது மாதிரி நீங்களும் காதலில் வெற்றி பெற்று இருப்பதாக நினைக்கின்றேன், அதனாலும் தான் உங்களை கெளரவிக்க அக்கா என்று அழைத்தேன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை விட அனுபவம் கூடியவர்களை அக்கா என்று தானே அழைக்க வேண்டும்? அதுவும் காதல் விடயத்தில் கூடுதலான அனுபவம் உள்ள ஒருவரை சுவாமி என்று அல்லவா கூப்பிட்டு இருக்கவேண்டும்?? :D

அத்திலாந்திக் சமுத்திரத்தை நீந்திக் கடப்பது மாதிரி நீங்களும் காதலில் வெற்றி பெற்று இருப்பதாக நினைக்கின்றேன், அதனாலும் தான் உங்களை கெளரவிக்க அக்கா என்று அழைத்தேன்.. :D

கலைஞா,

என்னவோ நல்லா சமாளிச்சுட்டீங்கள். இந்த மாதிரி பனிக்கட்டியெல்லாம் தலையில் வைச்சாத் தாங்காதுப்பா :D !

!!..சரி சரி!! இந்த இழையில் மட்டும் "அக்கா"போதும்!!... :D

Link to comment
Share on other sites

இவ்ளோ பீல் பண்ணுறீங்கள்... அப்ப இனி தமிழ்தங்கை என்றே உங்களை அழைக்கின்றேன்.. :P

பரணியின் காதல் பள்ளிக்கூடம் என்று ஒரு தலைப்பு யாழில் உள்ளது. உங்கள் பெயரிலும் ஒரு காதல் பள்ளியை இங்கு ஆரம்பிப்போமா?? மாணவர்களை நான் சேர்த்து தருகின்றேன்.. :D

அனுபவஸ்தர்களின் சேவைகளை நாம பாவிப்பது எப்போதும் நல்லது தானே! திருமணம் செய்த பிறகு யாழ் பக்கம் தலை காட்டுவீங்களோ தெரியாது. என்றபடியால் இப்போதே உங்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முனைகின்றோம்.. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேணும்!!

Link to comment
Share on other sites

முதலாவது காதலி ஓவர் பில்டப் தான்! அவன் எவ்வளவு கெஞ்சியும் காதல் மனசில இருக்குதாம்!! ஆனா சேர்ந்து வாழமாட்டாவாம்!! ...............நானும் தான் போடி என்று சொல்லிவிட்டு போய் கொண்டிருப்பேன். கதையில வாறவர் சுத்த வேஸ்ட் தான்!!

உங்கட நாட்டில எடுக்கிற படம் எல்லாம் சூப்பரா வருகிதோ? அப்ப ஏன் அந்த நளதமயந்தி அப்பிடி வர இல்லை? :D

அழகான சுருக்கமான விமர்சனம் தந்த சீடனை இன்னொரு முறை 'ஜெனரல் ஜமுனா' என்று அழைத்து அவருக்கும் ஒரு போடுகின்றேன்.. :D

குருவே நீங்க சொல்ல மறந்ததை நான் சொல்லிட்டேன் பீல் பண்ணாதையுங்கோ...........படத்தில முதல் கதநாயகியை விட அவாவை எனக்கு பிடித்தபடியா வடிவா சொன்னனான் பாருங்கோ.......... :P

என்ன குருவே இன்னுமா ஒன்றும் கிடைக்கவில்லை உங்களுக்கு எப்ப கிடைத்து அதற்கு பிறகு எனக்கு எப்ப கிடைத்து..........சரி சரி கவலைபடாதையுங்கோ...........உங்களுகு 2 கதாநாயகி போல் ஒரு காதலி அமைய வாழ்துகிறேன்....... ;)

குருவே நளதமந்தி அது ஆயிரத்தில ஒன்று அதற்காக ஆயிரம் படம் எடுத்தவையோ என்று கேட்க கூடாது சரியோ................மற்றம்படி எல்லா படமும் வெற்றி தான் நம்ம நாட்டில எடுத்தா..........குருவே நீங்களும் ஒரு படம் எடுங்கோவேன்............. :P

எனக்கு "ஓ" போட்ட ஜெனரல் கலைஞன் குருவுக்கு ஒரு "ஓ" போடு............. :D

குருவே எனக்கு அந்த படத்தில இடைகிடை வரும் ஒரு பாட்டு நல்லா பிடிக்கு ஏன் என்று எல்லாம் கேட்க கூடாது நீங்களும் ஒருக்கா கேட்டு பாருங்கோ........ :D

Link to comment
Share on other sites

குருவே கிளைமாக்ஸ் அதுவும் நம்ம சிட்னியில எனக்கு மிகவும் பிடித்த காட்சி படத்தில இதுவும் ஒன்று நீங்களும் கண்டு களியுங்கோ............. :P

அவன் மாறவில்லையா அப்படியா இருகிறான் அது தான் கார்திக் அது மாதிரி தான் ஜம்முவும் உது எப்படி இருக்கு குருவே.............. :P ;)

சுபம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம்.. கலைஞன் அழகான பாடல்....பாடலுக்காகவே படம் பார்க்கலாம்.

ஆனால் படம் எனக்கு பிடிக்கலை. :lol:

Link to comment
Share on other sites

யமுனா,

நீங்கள் இணைத்த காட்சி, மற்றும் பாடல் சூப்பர்! :lol: என்றாலும் கதாநாயகியின் அந்தக் கடைசி பேட்டி - புலம்பல் எனக்கு பிடிக்கவில்லை. தன்னை ஏதோ தியாகி மாதிரி சொல்லிறா. :angry:

மேலும், அவா தேவையில்லாமல் கதாநாயகனை துன்புறுத்தி வேற இருக்கிறா. உவ்ளோ கதைக்கிறவ ஏன் காதல் செய்ய, ஜொல்லு விடத் துவங்கினவ?

ஏனென்றால் படத்தை பார்த்தால் தெரியும். கதாநாயகன் கதாநாயகியை தானாக தேடிப் போகவில்லை. எங்கோ, தற்செயலாக சந்தித்தார்கள். ஆனால், இவா வம்புக்கு அவனை போலிஸில் மாட்டிவிட்டதாலேயே அவனும் அவளை பின் தொடரத் துவங்கினான். சோ ஸ்டார்ட் - நெருப்பை பத்த வைச்சது கதாநாயகிதான்! எங்கட கதாநாயகன் அல்ல!!

உவ, உவ்ளோ கதைக்கிறா, ஆனா யோசிச்சு பாருங்கோ, ஒரு பொம்பிளை ஒரு ஆணை சும்மா வம்புக்கு போலிசில மாட்டிவிடுற ஆளா இருந்தால், அவாவிண்ட கரக்டர் எப்படி இருக்கும்?? கதாநாயகனுடன் சேட்டை விட்டது மாதிரி, எத்தனை ஆம்பளைகளுடன் முன்பு முசுப்பாத்தி பண்னி இருப்பாவோ? - கதாநாயகனை சந்திக்கும் முன்?? இதெல்லாம் இவவுக்கு மறந்துபோச்சோ?? :lol:

எனவே, அவா செய்தால் அது ச்சும்மா! ச்சும்மா! பகிடி - முசுப்பாத்தி - ஆனா இந்த இளிச்சவாயன் செய்தால் மாத்திரம் அது பொறுக்கித் தனமா? :)

அதாவது இவாவுக்கு தான் செய்யும் பொறுக்கித்தனமான வேலைகள் சரியென்று தெரியுது, ஆனா மற்றவன் அதையே செய்யும் போது பிழையாகத் தெரியுது? ஏன் அப்படி? அவ முன்பு என்ன செய்தா என்று அவவுக்கு மறந்து போச்சா? :angry:

இதனால், இறுதியாக இவா கூறும் நோண்டி புலம்பலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவவிண்ட பேட்டியை இறுதியில் படத்தில் போட்டது வேஸ்ட்! :angry:

அதற்கு பதிலாக, எங்கட சூப்பர் 2வது கதாநாயகியோட ஒரு டூயட் பாட்டை போட்டு படத்தை ஜாலியாக முடித்து இருக்கலாம். :)

வீட்டுக்கு பூசணிக்காயை கட்டி திருஷ்டி கழிப்பது போல் இவாவிண்ட பேட்டியை படத்தின் இறுதியில் போட்டு திருஷ்டி ஏதோ கழிச்சு இருக்கிறாங்கள் போல இருக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா... ;)

கீழே உன்னாலே உன்னாலே பாடல்களை பார்க்கலாம்...

ஜூன் போனா ஜூலை காற்றே!

முதன் முதலாக..

முதல் நாள் இன்று.. [இதுவும் ஒரு சூப்பர் பாடல்..]

ஹலோ மிஸ் இம்சையே..

வைகாசி நிலவே...

சிறு சிறு உறவுகள் பிரிவுகள் ஏன்..

இளமை உள்ளாசம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன.. சீவன் போற வயசில காதல் கதை பேசுது.. இந்தக் கிழம் என்று நினைக்கிறியளோ இல்லையோ நான் ஒன்றைச் சொல்ல முடிவெடுத்திட்டா சொல்லித்தான் தீருவன்.

எனக்கு பிடிச்சது முதலாவது கதாநாயகியைத்தான். அது எப்ப தெரியுமா.. தோழியாகப் பழகிய (இரண்டாவது கதாநாயகி) ஒருத்தியே தன்ர காதலனைக் காதலிக்கிறது தெரிந்து தன் விருப்பத்தை பெறாமையாக்கி பொரியாம.. அவர்களின் விருப்பத்துக்கு தன்னை இசைவாக்கிக் கொண்டு.. தான் தன் வழியே போனாவே.. அந்த இடத்தில...! இது எல்லா மனிதரிலும் இலகுவான சாத்தியமல்ல. அதை இலகுவாக்கிக் கொண்டதுதான் முதலாவது கதாநாயகியைப் பிடிக்கக் காரணம்.

எப்பவும் நாம் எம்மை வழிநடத்தலாம் கட்டுப்படுத்தலாம்.. ஆனால் காதலியோ இல்ல காதலனோ.. அவர்கள் பிற தனி மனிதர்கள். அவர்களை நாங்க கட்டுப்படுத்தவோ வழிநடத்திச் செல்லவோ முயல்வது.. அநாவசியச் சிக்கல்...! அவர்களுக்காக எம்மை வருத்திக்கிறது.. மோசமானது. அவர்களா உணரனும்.. தான் அடுத்தவரை வருத்திறமே என்று.. அப்படி உணர முடியாத நிலைல.. ஒரு காதல்.. என்றால்.. அங்க அநாவசிய மன உழைச்சல்கள் தான் மிஞ்சும்..அதை அந்த முதலாவது நாயகி புரிஞ்சுக்கிறது.. படத்தில் ஸ்ரார் பொயிண்ட்.

இரண்டாவது கதாநாயகி ஒன்றும் புதிசா பண்ணேல்ல...! காதலிச்சாவு.. கை பிடிச்சாவு.. பிள்ளை பெத்துக்கிட்டாவு.. வண்டில வைச்சு தள்ளிக்கிறாவு..! :lol::)

எனக்கும் இந்தப் பாடல்கள் ரெம்பப் பிடிக்கும். ipod இல ஏற்றி வைச்சு கேட்டு மகிழ்வேன். கிழவனுக்கு என்ன ஐபொட் என்று நினைச்சியள்.. அது உங்க தப்பு. ஐபொட் இளசு கிளசு என்று பார்த்து விற்கச் சொல்லேல்ல. யாரு காசு கொடுக்கினமோ அவைக்கு விற்பினம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன.. சீவன் போற வயசில காதல் கதை பேசுது.. இந்தக் கிழம் என்று நினைக்கிறியளோ இல்லையோ நான் ஒன்றைச் சொல்ல முடிவெடுத்திட்டா சொல்லித்தான் தீருவன்."<<<

நெடுக்ஸ் அண்ணை, நீங்களாவது 'அக்கா/தங்கை' என்னாமல் உங்கட வயசைச் சொல்லிப்போட்டீங்கள் ஆனால் எனக்கு 'சீவன் போற வயசு" அப்படி என்றால் என்ன வயசென்று தெரியேல்ல்லை!

சீவன் எத்தனை வயசிலையும் போகும் பாருங்கோ! :lol:

எனக்கு பிடிச்சது முதலாவது கதாநாயகியைத்தான். அது எப்ப தெரியுமா.. தோழியாகப் பழகிய (இரண்டாவது கதாநாயகி) ஒருத்தியே தன்ர காதலனைக் காதலிக்கிறது தெரிந்து தன் விருப்பத்தை பெறாமையாக்கி பொரியாம.. அவர்களின் விருப்பத்துக்கு தன்னை இசைவாக்கிக் கொண்டு.. தான் தன் வழியே போனாவே.. அந்த இடத்தில...! இது எல்லா மனிதரிலும் இலகுவான சாத்தியமல்ல. அதை இலகுவாக்கிக் கொண்டதுதான் முதலாவது கதாநாயகியைப் பிடிக்கக் காரணம்.<<

:lol: உங்களை யார் உந்தப் படங்களைப்பார்க்கச்சொன்னது 'பிள்ளையார், ஔவையார், திருவிளையாடல்' பட்டினத்தார். கர்ணன், தசாவதாரம், மூகாம்பிகை' என்று பார்க்காமல் 'இப்படி உன்னாலே உன்னாலே' என்று பார்த்தால் பின்னாலே பின்னாலே வருத்தப்பட நேரிடலாம்.

ஓஹோ !முதலாவது நாயகி செய்தது பெரிய காரியமோ, தனக்கு அவனின்காதலை ஏற்கத் தகுதி இல்லை என்று கடைசியிலையாவது புரிஞ்சு கொண்டா!. இரண்டாம் கதாநாயகி நாயகனையும்/முதல் நாயகியையும் சேர்த்து வைக்க முயன்றும். அது தோல்விதான்!. வாழ்க்கை என்பது இயல்போடு இருப்பது. தங்கள் இயலாமைகளுக்கெல்லாம் 'தியாகம்' என்று பெயர் சூட்டக்கூடாது பாருங்கோ!.

அவனோடு வாழ முடியாதவை இனி யாரோடும் வாழ் முடியாது என்று ஒரு நல்ல முடிவை எடுத்தா அதுக்காக வேண்டி பாராட்டலாம்!

எனக்கும் இந்தப் பாடல்கள் ரெம்பப் பிடிக்கும். ipod இல ஏற்றி வைச்சு கேட்டு மகிழ்வேன். கிழவனுக்கு என்ன ஐபொட் என்று நினைச்சியள்.. அது உங்க தப்பு. ஐபொட் இளசு கிளசு என்று பார்த்து விற்கச் சொல்லேல்ல. யாரு காசு கொடுக்கினமோ அவைக்கு விற்பினம். :)

நல்ல முன்னெச்சரிக்கையோடு தான் இருக்கிறியள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்னெச்சரிக்கையோடு தான் இருக்கிறியள். :lol:

என்ன பிள்ளை செய்யுறது. இந்தக் காலத்தில ஆபத்து எந்த ரூபத்தில வரும் என்று யாருக்குத் தெரியும்..!

முதுமை என்றாலே மரணம் நெருங்கிட்டு என்றுதான் ஆக்கள் சொல்லுறது. ஆனால் நான் அதை நம்பல்ல. நம்பிறவையை திருப்திப்படுத்தத் தான் சொன்னன். நீங்களும் நம்பல்ல.. மரணம் எப்பவும் வரலாம் என்ற யதார்த்ததைச் சொன்னீங்க பாருங்க.. அங்க நிற்குது உங்கள் அனுபவம்.

முதலாவது நாயகியில தப்புச் சொல்ல ஏலாது. அவாக்கு அவாட காதலன் தன்னைத்தான் தொடனும்.. தன்னத்தான் நேசிக்கனும்.. தன்னோடையே நேரம் செலவு பண்ணனும் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் அவனுக்கோ.. அது சரிப்பட்டு வராது. இரண்டாவது நாயகிக்கும் எவனோடும் பழகலாம் என்ற நிலை. இவன் கிடைக்காட்டில் இன்னொன்று. ஆகவே ஒரு முயற்சி போட்டுப் பார்த்தா... அந்த மீன் சிக்கிட்டுது. கடைசில கறியும் வைச்சுச் சாப்பிட்டா. பாவம்.. மீனைப் பிடிச்சு தொட்டியில விட்டு.. தான் பார்த்துப் பார்த்து தனக்கென்று வளர்க்க நினைச்சவள் ஏமாந்திட்டாள். அவா கறி மீனை வளர்ப்பு மீனாக நினைச்சது தான் தப்பு. அதற்காக அவள் வாழத் தெரியாதவள் அல்ல. அவளின்ர எதிர்பார்ப்பு அதிலதான் பிள்ள தவறாப் போச்சு. அதால அவா தன்னை அறிஞ்சு தன் வழில போகத் தலைப்பட்டிட்டா. அவள் தான் அவனை புரிஞ்சுக்கல்ல என்றால்.. அவனாவது அவளைப் புரிஞ்சிட்டு நடந்திருக்கலாம். அவருக்கு அதற்கும் மனசில்ல..! ஆனால் காதலிக்கிறாராம். இரண்டாவது நாயகிக்கு மழை பெய்தால் என்ன வெயில் அடிச்சால் என்ன.. அதுக்கு எல்லாம் ஒன்றுதான். :)

Link to comment
Share on other sites

எனக்கும் இந்தப் பாடல்கள் ரெம்பப் பிடிக்கும். ipod இல ஏற்றி வைச்சு கேட்டு மகிழ்வேன். கிழவனுக்கு என்ன ஐபொட் என்று நினைச்சியள்.. அது உங்க தப்பு. ஐபொட் இளசு கிளசு என்று பார்த்து விற்கச் சொல்லேல்ல. யாரு காசு கொடுக்கினமோ அவைக்கு விற்பினம்

:lol::):):lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேடூக்கண்ணா தன்னை கிழடு எண்டு சொல்லுரார் ஆனா கிழமில்லை, இவர் எழுதிற கருத்துக்களில இக்காலத்துக்கான இசைவாக்கம் நிறைய தெரியது. பழையதுகளை தூக்கி எறிஞ்சிட்டு புதுசா தொடங்காமல் பழையதுகளையும் ஆராஞ்சு புதுசோட ஒப்பிட்டுபாக்கிற தன்மை நெடூக்கண்ணாட்டதான் இருக்கு. அது இந்த திரியில அவர் எழுதின கருத்துக்களிலயும் வெளிப்படுது. ரெண்டாவது பெண் யாரையும் காதலிக்கக்கூடியவள் எவரையும் கைப்பிடிப்பாள் என்றதையும், முதலாவது பெண் தனக்கு விருப்பமானவனை அவன் விருப்பத்துடன் மாத்திரம் கைபிடிக்க விரும்பினாள் என்பதை நெடுக்கண்ணா சொல்லிய விதமே தனி. B)

Link to comment
Share on other sites

ஐயோ ஐயோ நெடுக்காலபோவான்...

அவள் தோழி ஆரம்பத்தில் கதாநாயகனை காதலிக்க முயற்சிக்கவே இல்லை. இந்த விசறிக்கு பாவம் உதவி செய்யப்போனாள். ஆனால், இவளின் முரட்டு குணம், பிடிவாதம் பற்றி மிக நன்றாக அறிந்ததால் கதாநாயகன் இந்தக் கிறுக்கியை அவனது வாழ்க்கையில் அடையமுடியாது என்பதை யதார்த்தமாகப் புரிந்த்துகொள்கின்றாள். இதனாலேயே தனது தோழிக்கு உதவுவதை நிறுத்திவிட்டு கதாநாயகன் மீது மிகுந்த இரக்கம் கொண்டு அவனை தான் காதலிக்க முயற்சிக்கின்றாள்.

மனதுக்குள் ஒளித்து, ஒளித்து வைத்து நசிந்து கொண்டிராமல் வெளிப்படையாகவே தான் அவனை விரும்புவதை அவனிடம் கூறுகின்றாள்.

இன்னொரு விதத்தில் பார்க்கப்போனால் அவன் கதாநாயகனின் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளாள். அவனுக்கு சேவை செய்து உள்ளாள். தியாகம் செய்து உள்ளாள் என்று கூறவேண்டும். இவள் மாத்திரம் அவனை அந்தப் பொருத்தமான, தக்க சமயத்தில் காதலித்து கலியாணம் செய்து இருக்காவிட்டால் கதாநாயகன் வாழ்வு நாறிப் போயிருக்கும்.. ஆனால், இவள் அவனின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளாள்.

காதலித்துவிட்டு பின் விலகி நின்று ஒரு ஆடவனின் கண்களில் கண்ணீரை வரவழைத்து, அவன் மனதை சித்திரவதை செய்த, துன்புறுத்திய அந்த மிருகத்தனமான பிறப்பை விட, அவன் வாழ்வில் மீண்டும் இன்பத்தை, மகிழ்ச்சியை, உற்சாகத்தை ஏற்படுத்திய இந்த தோழி தான் எனக்கு பெரிதாக தெரிகின்றாள்!!

படத்தின் கதாநாயகி உண்மையாக காதலித்து இருந்தாள் நிச்சயமாக தனது காதலனை நோக அடித்து இருக்கமாட்டாள்.

உண்மையாக காதலிக்கும் தனது காதலனை ஒரு பெண் - காதலி கண்ணீருடன் ஒரு விசரன் போல அலைய வைப்பாளா? நிச்சயம் இல்லை!!

சரி, இப்படியெல்லாம் கூறுகின்றீர்களே, தற்செயலாக இவளின் முரட்டு பிடிவாதம் காரணமாக அவன் காதலின் வலி தாங்க முடியாது தற்கொலை செய்து இருந்தால் அதற்கு யார் பொறுப்பு??

இந்த முரட்டு பிடிவாதக்காரி தனது பிடிவாத குணத்தை நியாயப்படுத்த, தனது முரட்டு போக்கு சரி என்பதை நியாயப்படுத்த தனது காதலனைப் பிரிந்து போனால் ஒழிய, நிச்சயம் அவளது தோழி இவனை காதலிக்கின்றாள் என்பதற்காக பெருந்தன்மையுடன் விலகிச் செல்லவில்லை..

இங்கு கதாநாயகி இசைவாக்கம் அடைந்தது தனது ஒற்றைவழிப் போக்குக்கே ஒழிய, பிறர் மீது கொண்ட அக்கறையினால் அல்ல.

ஓமோம், நீங்கள் சொல்வது சரி!! எல்லாராலும் இப்படி கதாநாயகி செய்வது போல் தமது வாழ்க்கையில் செய்யமுடியாது. புத்திசுயாதீனமற்ற, மற்றும் தமக்குதான் எல்லாம் தெரியும், தாம் தான் எல்லாம் என்று கற்பனை பண்ணி வாழும் ஒரு சிலரால் தான் முடியும்! :lol:

காதலில் மாத்திரமல்ல... எங்குமே நாம் நம்மை வழிநடத்தலாம், கட்டுப்படுத்தலாம்... மற்றவர்களை அவ்வாறு செய்வது கடினமானது. இது குடும்பத்திலும் சரி, பள்ளியிலும் சரி வேலையிலும் சரி... பொருந்தும்.. ஆனால்,

பிரச்சனையை கண்டு ஓடுபவர்கள் காதலிக்க கூடாது. சும்மா எமது போக்கில் வாழ்ந்தாலே ஆயிரம் பிரச்சனைகளை வாழ்க்கையில் சந்திக்கவேண்டிவரும். இந்தநிலையில் காதலும் செய்தால் ஏராளம் பிரச்சனை வரும் என்பது வெளிப்படை. இது எல்லாம் தெரியாமல் பச்சைக் குழந்தையாகவா கதாநாயகி காதல் செய்ய துவங்கினா? இல்லையே! அவ ஆரம்பத்தில் செய்கின்ற லொள்ளுகளை படத்தில் பார்க்கவில்லையா? காதல் மூலம் மன உலைச்சல் ஏற்படும் என்று அவவுக்கு முன்பே தெரியாதா? ஏன் அந்த ஆணுடன் சும்மா தணகுவதற்கு போனவ? பொழுது போகாததாலையா? :angry:

கதாநாயகிக்கு - அவவுக்கு அவளின் - தனது ஒற்றை ரூட் குணம் தெரியாதா? இவ்வளவு தெரிஞ்சவ காதல் விசயத்தில் சற்று நிதானமாக இருந்து இருக்கலாமே? பெற்றோர் மூல அரேஞ் மரீஜை செய்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டு இருக்கலாமே?

நீங்கள் சொல்கின்ற படத்தின் ஸ்ரார் பொயிண்ட்தான் படத்தின் வீக் பொயிண்ட். அதாவது ஒருவனை காதல் செய்துவிட்டு கஸ்டங்கள் வரும்போது, மற்றும் மன உலைச்சல்கள் வரப்போகின்றது என்று அறிந்துவிட்டு அவனை கைவிட்டுவிட்டு ஓடுவது என்பது கோழைத்தனம் மாத்திரம் அல்ல! துரோகத்தனம்!!

இப்படியானவள், நாளை ஒருவனை திருமணம் செய்துவிட்டும் அவனுக்கு - புருசனுக்கு ஏதாவது நடந்துவிட்டால், உதாரணத்திற்கு அவன் அங்கவீனமாகிவிட்டால் அவனை - தனது புருசனை விட்டு ஓடுவிடக்கூடும். :lol:

இவ்வளவு கதைப்பவ, விசயங்கள் தெரிஞ்சவவுக்கு தனது காதலனை திருத்தி எடுப்பது முடியாத காரியம் என்றால் இவா சுத்த வேஸ்ட்! பேசாமல் காதலித்த நேரம் ஒரு துறவியாக வந்து இருக்கலாம். :)

தனது காதலனின் பிறந்ததினமன்று இன்னொரு பெண்ணை திட்டமிட்டு அனுப்பிவைத்து அவனை குழப்புவது, பரிசோதிப்பது இவளது குரூர புத்தியை, குரூர சிந்தனையை, குணத்தை காட்டுகின்றது. :angry:

இரண்டாவது கதாநாயகி ஒன்றும் புதிசா பண்ணேலையோ? ஏனுங்க மனுசன் எண்டா ஏதாவது புதுசு புதுசா பண்னிக்கொண்டு இருக்கவேணுமோ? உயிர்களுடன் பரிசோதனை செய்து விளையாட வேணுமோ? சாதாரண மானவர்களாக வாழக்கூடாதோ? எல்லாரும் ஞானிகளாகவும், அறிஞர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருந்தால் குடும்பம், பிள்ளைகள், மனிதவாழ்க்கை இவையெல்லாம் நடைமுறை சாத்தியம் அற்றவை. :)

இரண்டாவது கதாநாயகி காதலிச்சாவு.. கை பிடிச்சாவு.. பிள்ளை பெத்துக்கிட்டாவு.. வண்டில வைச்சு தள்ளிக்கிறாவு..! இது பாராட்டத் தக்க விடயம்!! இதற்கு ஒரு ஓ போடலாம். நானும் இதையே வாழ்க்கையில் எதிர்பார்க்கின்றேன்.. :lol:

காதலிச்சாவு.. கை பிடிச்சாவு.. பிள்ளை பெத்துக்கிட்டாவு.. வண்டில வைச்சு தள்ளிக்கிறாவு.. நீங்கள் சொன்ன இவ்வளவு விசயமும் என்ன அவ்வளவு சாதாரணமான விசயங்களாக உங்களுக்கு தெரிகின்றதோ? ஆனால், இந்த சாதாரண விசயங்களை முதலாவது கதாநாயகியால் செய்ய முடியவில்லையே!! ;)

மற்றது எங்கள் இரண்டாவது சூப்பர் கதாநாயகியை பற்றி சும்மா நிறைய கிண்டல் செய்து இருக்கிறீங்கள். இவ்வளவும் எழுதி கை நோகிது. மிச்சம் பிறகு வாறன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பாருங்க சிவனே என்று இருந்தவள.. சுத்தி சுத்தி வந்ததும் அவர். முதலாவது கதாநாயகி.. தெளிவாகவே சொல்லிட்டாள்.. இதுதானப்பா என்ற நிலைப்பாடு.. இதற்கு சரி வந்தா வா.. இல்லைப் போ என்று.

அப்புறம் எதுக்கு... அவுஸ்திரேலியா வந்தும் துரத்தனும்..??!

இரண்டாவது.. அதுக்கு சூடு சுரனை எதுவுமே இல்ல. அதுக்கு இவன் இல்லாட்டி இன்னொன்றோடதான் திரிஞ்சிருக்கும். அது அப்படியான ரைப் என்ற படியால் தான்.. முதலாம் கதாநாயகி காதலிக்கிறது என்று தெரிஞ்சும்.. இதுபோய் காதலிக்குது. ஒருவேளை இந்த லூசு வந்திருக்காட்டி அவன் முதலாமவளை புரிஞ்சுக்க முனைஞ்சிருப்பான். அதற்கு சந்தர்ப்பமே அளிக்கல்ல. இப்ப இவா மேயவிட்டிட்டுப் பார்த்திருக்காவு. அவன் ஊர் பூரா மேஞ்சு கொண்டு திரியுறான்.

சிலதுகள் இப்படி இருக்குதுகள். நண்பனுக்கு ஒரு கூல் வாங்கடா என்றா வாங்காதுகள்.. பெட்டையள் என்றால்.. கடன் வாங்கியும் வாங்கிக் கொண்டு.. அதுகளுக்குப் பின்னால காவிட்டுத் திரியுங்கள். உதுகளைக் கட்டிறதுகள் பாவம். வீட்டில ஒன்றிருக்க ஊரில மேஞ்சிட்டு திரியுங்களாக்கும். அதுதான் அவள் போடான்னு விட்டிட்டுப் போட்டாள். உந்த லூசனை காதலிச்ச குற்றத்துக்காக தன்ர வாழ்க்கையையும் இழந்திட்டு நிற்குது பெட்டை. :):lol:

நீங்க அவனின்ர பொயிண்ட் ஒவ் வியுலதான் பார்க்கிறீங்க. அவள் தன்னை மாற்றிக் கொண்டு.. இவர் போற வழிக்கு உறுதுணையா இருந்து இவரை கப்பியா வைச்சிருக்கனும்.. ஆனா அவள் இவரில எதிர்பார்க்கிறது எல்லாத்தையும் விட்டிட்டனும். இவருக்கு ஏற்றாப் போல தன்னை மாற்றிக்கனும். இதில என்னப்பா நியாயம் இருக்கு.

அவள் தான் தெளிவா சொல்லுறாள் இல்ல.. நீ இப்படி இருந்தா... அது சரிப்பட்டு வராது என்று. அப்படிச் சொல்லேக்க ஒன்றில் அவளைப் புரிஞ்சுக்க முயன்றிருக்கனும்.. இல்ல விலகிப் போயிருக்கனும்.

இது இரண்டும் இல்லாம.. இன்னொன்றை..அதுவும் தான் ரோட்டில போறதுகள் வாறதுகளை உரசிட்டு திரியுறதை ரசிக்கிற ஒன்றோட.. லவ்வாம். அது எங்கையடா ஒருத்தன் கிடைக்காதா என்று திரிஞ்சதுக்கு... அல்வா கிடைச்சிட்டுது.. வாங்கி பொட்டிலம் கட்டி.. பிள்ளையும் பெத்திட்டுது. இதெல்லாம் ஒரு வாழ்க்கை..! :):lol:

Link to comment
Share on other sites

நேடூக்கண்ணா தன்னை கிழடு எண்டு சொல்லுரார் ஆனா கிழமில்லை, இவர் எழுதிற கருத்துக்களில இக்காலத்துக்கான இசைவாக்கம் நிறைய தெரியது. பழையதுகளை தூக்கி எறிஞ்சிட்டு புதுசா தொடங்காமல் பழையதுகளையும் ஆராஞ்சு புதுசோட ஒப்பிட்டுபாக்கிற தன்மை நெடூக்கண்ணாட்டதான் இருக்கு. அது இந்த திரியில அவர் எழுதின கருத்துக்களிலயும் வெளிப்படுது. ரெண்டாவது பெண் யாரையும் காதலிக்கக்கூடியவள் எவரையும் கைப்பிடிப்பாள் என்றதையும், முதலாவது பெண் தனக்கு விருப்பமானவனை அவன் விருப்பத்துடன் மாத்திரம் கைபிடிக்க விரும்பினாள் என்பதை நெடுக்கண்ணா சொல்லிய விதமே தனி.

கிழம் எல்லாம் தம்மை இளசு என சொல்லிட்டு திரியுற இக்களத்தில் நெடுக் அண்ணா மட்டும் தன்னை கிழம் என சொல்லிட்டு திரியுறாரே. ஏன் நெடுக் அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.