Jump to content

ஆண்-பெண் நட்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று கூடச் சொல்லலாம்.

முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் வாழ்கிறார்கள்.

இதே நேரம், பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ..! ` என்று அச்சப் பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள்.

இது தப்பு என்பதுதான் எனது கருத்து.

நான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா? தவறுகள் அங்கு நடக்கவில்லையா? என்பதைப் பெற்றோர் நன்றாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வீட்டுக்குள் வளர்க்கப்படும் பெண் பிள்ளைகள், வெளி உலகத்தை நன்கு தெரியாமல் வளர்கின்ற போதுதான் தவறுகள் கூடுதலாக அரங்கேறுகின்றன என்பதை, ஏனோ பெற்றோர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.

உதாரணமாக , வீடு மட்டுமே உலகமாக்கப்பட்டு வளரும் பெண் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து போகும் அண்ணனின் நண்பனையோ அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரியும் வாலிபனையோ காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

இதிலிருந்தாவது பெற்றோர்கள், பிள்ளைகளைக் கட்டி வைப்பதால், அவர்கள் மனதையோ உணர்வுகளையோ கட்டிவைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு இப்படி வளர்க்கப்படும் பெண்பிள்ளைகள் உலகத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள். மனிதர்களின் நியமான குணங்களைப் புரிந்து கொள்ள முடியாமற் போய் விடுகிறார்கள். தமது வட்டத்துக்குள் தாம் சந்திக்கும் யாராவது ஒரு ஆண்மகனை (அவன் அண்ணனின் நண்பனோ, அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரிபவனாகவோ இருக்கலாம்) அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமானவனா என்று தெரியாமலே கண் மூடித்தனமாய் காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள். எந்த வித முன் யோசனையுமின்றி கல்யாணத்துக்குத் தயாராகியும் விடுகிறார்கள். ஆனால் வெளியில் போய் ஆண், பெண் என்ற பேதமின்றி எல்வோருடனும் நட்புடன் பழகும் ஒரு பெண், யாராவது ஒருவனைக் கண்டவுடன் காதலிக்க மாட்டாள். நட்புடன்தான் பழகுவாள்.

இப்படிப் பலருடன் நட்புடன் பழகும் போது யாராவது ஒருவரின் குண இயல்புகள், பழக்க வழக்கங்கள் அவளுக்குப் பிடிக்கும் போது, அங்கு அது காதலாகவும் மலரலாம். இந்தக் காதல் தப்பு என்று கருதவேண்டிய அவசியம் இல்லை. இந்தக் காதல் ஒருவகையில் நல்லதும் கூட. ஒருவரையொருவர் ஓரளவு முதலே தெரிந்து கொண்ட இவர்களின் மணவாழ்வு பெரும்பாலும் புரிந்துணர்வும், ஒற்றுமையும் மிகுந்ததாகவே இருக்கும்.

"எங்கடை பெடியள் சரியில்லை." இது பெண்ணைப் பெற்றவர்கள் பலரின் வாய்ப்பாடமும் மனக்கருத்தும். இது மிக மிகத் தப்பானதொரு கருத்து.

ஆண்கள் கெட்டவர்கள், பெண்கள் நல்லவர்கள் என்றில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் இருபகுதியிலும் உள்ளார்கள். அந்தக் கெட்டவர்கள் ஏன் உருவானார்கள் என்பதைத்தான் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இங்கு நாம் எடுத்துக் கொண்ட விடயத்துடன் பார்த்தால், ஆண் பெண் என்ற பாகுபாடின்றி வளரும் போது பெண் பிள்ளைகளுடன் கதைப்பதை, ஒரு சாதனையாக ஆண் பிள்ளைகள் கருதவே மாட்டார்கள். கதைப்பதற்கென்றே அலையவும் மாட்டார்கள். எமது வாழ்க்கை முறையின் தவறினால்தான் இந்தத் தப்புகள் எல்லாம்.

சின்ன வயதிலிருந்தே பால் பாகுபாடின்றி ஒன்றாக நட்புடன் வளரும் பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் தவறுகளைவிட, "நீ ஆண், நீ பெண்" என்று பிரித்து தனிமைப் படுத்தப்பட்டு வளர்க்கப்படும் பிள்ளைகளின் மத்தியில்தான் தவறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

12, 13 வயதுகளின் பின், ஒரு பெண் பிள்ளைக்கு பெண் நண்பிகளைத் தவிர, வேறு ஆண் நண்பர்களே இல்லாத போது அவளுக்கு யாராவது ஒரு ஆணுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டால், உடனேயே அவனில்

இப்படியான காதலின் போது, இவனுடனான என் வாழ்வு இனிமையாக அமையுமா? இவன் போக்கும் என் போக்கும் பொருந்திப் போகுமா....?, என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் இல்லாது போய் விடுகிறது. இதே போலத்தான் ஆண் பிள்ளைகளின் நிலையும்.

ஆனால் ஆண் பெண் என்ற பாகு பாடின்றி நட்புடன் பழகும் பிள்ளைகளிடம், இவன் அல்லது இவள் எனக்குப் பொருத்தமானவளா? இவன் அல்லது இவளுடன் காலம் பூராக வாழ முடியுமா..?, என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் தாராளமாக இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

ஆதலால் ஆண்-பெண் பால் பாகுபாடின்றிய நட்பு அவசியம். பெண் பிள்ளைகளும் உலகத்தைப் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.

தவறுகள் நடவாதிருக்க உரிய வயதிலேயே உடல் ரீதியான, உணர்வுகள் சம்பந்தமான சில முக்கிய விடயங்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்கள் மனதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து பெண் பிள்ளைகளை ஆண்களுடன் பழகவிடாது வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதுதான் சரியென நினைத்து பிள்ளைகளையும் மனரீதியாக வதைத்து, பெற்றோர்கள் தம்மையும் தாமே வதைத்துக் கொண்டு, ஏதோ, "நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றோம்." என்று சொல்வது அனாவசியச் செயலே.

நன்றி:www.pennkal.blogspot.com

Link to comment
Share on other sites

உதாரணமாக , வீடு மட்டுமே உலகமாக்கப்பட்டு வளரும் பெண் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து போகும் அண்ணனின் நண்பனையோ அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரியும் வாலிபனையோ காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

நானும் இவ்வாறான சம்பவங்களை அவதானித்துள்ளேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் சுதந்திரமாகத் திரிகின்ற ஆண்கள் வீதியில் எந்தப் பெண் மாட்டுப்படாலும் விட்டு வைப்பதில்லையே ஏன்? எனவே இது காரணமானதாகத் தெரியவில்லை. சுதந்திரமாக விட்டால், இணையத்தில் கூட முகம் தெரியாமல் காதலிக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். B) B)

Link to comment
Share on other sites

சரி, அப்ப என்ன செய்யலாம்?

இப்படி எழுதினால் சரியாக இருக்குமோ?

உதாரணமாக , வீடு மட்டுமே உலகமாக்கப்பட்டு வளரும் ஆண் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து போகும் தங்கச்சியின் நண்பியையோ அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரியும் யுவதியையோ காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள். :P

Link to comment
Share on other sites

ஜரோப்பா நாடுகளிள...............மற்றும் அவுஸ்ரெலியாவில ஆண்,பெண் நட்பு............இளம் வயதினர் நன்கு புரிந்து கொண்டு நடக்கிறார்கள் என்றே சொல்கிறோம் அதாவது.........இங்கே பிறந்து வளர்ந்த பிள்ளைகள்........ஆனால் அரைவாசியில வந்தவை பாருங்கோ அவையின்பாடு தான் பெரிய பாடு........அதற்கு காரணம் இலங்கையில அநேகமான இளம் சமூகத்தில் ஆண்,பெண் கதைப்பது......பெரிய விசயம் பாருங்கோ ஒரு ஆண் போய் பெண்ணிடம் கதைத்தா அது என்னவோ அமெரிக்கா ஜனாதிபதியான சந்தோசம்(நம்மையும் உட்படதான்).............அந்த மனநிலையில் இருகிறவர்களாள் பல பிரச்சினைகள் என்றே சொல்லாம்......அதாவது பெரிய உத்தியோகங்களிற்கு சென்று பெண்களிடம் முகம் கொடுக்க கூச்சபடுதல் என்று பல பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள்.................ஆகவே ஆண்,பெண் நட்பை சந்தேக கண்ணோட்டதில் பார்க்காம இருந்தாலே அரைவாசி பிரச்சினைகள் வரமாட்டாது என்றே சொல்லாம்...........இங்கே புலத்தில் உள்ள இளைஞர்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று நன்றாகவே தெறியும்..........ஆகவே பெற்றோரிடம் கேட்பது என்னவென்றா.............ஆண்,பெண் நட்பை பிழையான கண்ணோடத்தில் பார்க்க வேண்டாம் என்று...................

அப்ப வரட்டா...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படிப் பார்த்தால் சுதந்திரமாகத் திரிகின்ற ஆண்கள் வீதியில் எந்தப் பெண் மாட்டுப்படாலும் விட்டு வைப்பதில்லையே ஏன்? எனவே இது காரணமானதாகத் தெரியவில்லை. சுதந்திரமாக விட்டால், இணையத்தில் கூட முகம் தெரியாமல் காதலிக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். B) B)

அப்ப கட்டுப்பாடோட இருக்கிற குடும்பத்து பெண்கள் காதலிக்கிறேலை என்று சொல்லுறீங்களா?

ம்ம் இணையத்தில முகம் தெரியாமல் காதலிக்கிறாங்க தான். அங்க யாரும் முகத்தை பார்க்கலை. மனசைதான் பார்க்கிறாங்க.

Link to comment
Share on other sites

அப்ப கட்டுப்பாடோட இருக்கிற குடும்பத்து பெண்கள் காதலிக்கிறேலை என்று சொல்லுறீங்களா?

ம்ம் இணையத்தில முகம் தெரியாமல் காதலிக்கிறாங்க தான். அங்க யாரும் முகத்தை பார்க்கலை. மனசைதான் பார்க்கிறாங்க.

ஜன்னி அக்கா இணையத்தில் மனசு எல்லாம் தெறியுமோ..............எனக்கு தெறியாம போச்சு.....உந்த டயலக் எல்லாம் சொல்ல நல்லா இருக்கும் பாருங்கோ............பிறகு பார்த்த பிறகு நடக்கிறது என்னவென்று எத்தனை பேரை பார்திருகிறேன்...........

அப்ப வரட்டா :P

Link to comment
Share on other sites

ஜனனி இக்கட்டுரையை சந்திரவதனா அக்கா 2005 இல் சொல்லி இருக்கிறாங்க. இப்போ 2007 ஆகிட்டு. இன்னுமா நம்ம சமூகம் ஆண் பெண் நட்பை ஏற்க மறுக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

ஜனனி இக்கட்டுரையை சந்திரவதனா அக்கா 2005 இல் சொல்லி இருக்கிறாங்க. இப்போ 2007 ஆகிட்டு. இன்னுமா நம்ம சமூகம் ஆண் பெண் நட்பை ஏற்க மறுக்கிறார்கள்?

பாவம் நிலா அக்கா அவாவும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி...........நட்புகாண்டி குரல் கொடுத்து கொண்டு தான் இருக்கா.........ஆனால் ஒருத்தரும் புரிந்து கொள்ளுறமாதிரி தெறியவில்லை.............சரி சரி கவலைபடவேண்டாம்............யார் என்ன சொன்னாலும்..............மனிதன் உணர்ந்து கொள்ள மனித நட்பு அல்ல அதையும் விட புனிதமானது.......... :P

அப்ப நான் வரட்டா :P

:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜன்னி அக்கா இணையத்தில் மனசு எல்லாம் தெறியுமோ..............எனக்கு தெறியாம போச்சு.....உந்த டயலக் எல்லாம் சொல்ல நல்லா இருக்கும் பாருங்கோ............பிறகு பார்த்த பிறகு நடக்கிறது என்னவென்று எத்தனை பேரை பார்திருகிறேன்...........

அப்ப வரட்டா :P

அப்ப நேரில பார்த்து பழகேக்க மட்டும் மனசு தெரியுதா?

தெரிஞ்சா சொல்லுங்கோ நானும் வந்து பார்கிறன்.

Link to comment
Share on other sites

ஜன்னி அக்கா இணையத்தில் மனசு எல்லாம் தெறியுமோ..............எனக்கு தெறியாம போச்சு.....உந்த டயலக் எல்லாம் சொல்ல நல்லா இருக்கும் பாருங்கோ............பிறகு பார்த்த பிறகு நடக்கிறது என்னவென்று எத்தனை பேரை பார்திருகிறேன்...........அப்ப வரட்டா :P
:angry: :angry: :angry:
அப்ப நேரில பார்த்து பழகேக்க மட்டும் மனசு தெரியுதா? தெரிஞ்சா சொல்லுங்கோ நானும் வந்து பார்கிறன்.
ஜனனி என்னைப்பொறுத்தளவில் நேரில் ஒருவருடன் பேசும் போது அவர்களின் பேச்சு அவர்களின் கண்பார்வை மொத்தத்தில் அவர்களின் முக உணர்வை வைத்தே அவர்களின் மனசை அறியலாம் என நினைக்கின்றேன். வேணும்னா ஜனனி ஒருதடவை றை பண்ணிப்பாருங்கோ. :)
Link to comment
Share on other sites

ஜன்னி அக்கா இணையத்தில் மனசு எல்லாம் தெறியுமோ..............எனக்கு தெறியாம போச்சு.....உந்த டயலக் எல்லாம் சொல்ல நல்லா இருக்கும் பாருங்கோ............பிறகு பார்த்த பிறகு நடக்கிறது என்னவென்று எத்தனை பேரை பார்திருகிறேன்...........

அப்ப வரட்டா :P

இணையத்தில மனசை பார்க்க முடியாது தான் ஆனால் உங்கட நண்பி உங்களுக்கு ஆசையாக வரைகின்ற மடலை (E Mail) வாசிக்கும் போது அந்த மடலில் நண்பியோட மனசு தெரிகின்றது தானே அது போதும் தானே. :)

Link to comment
Share on other sites

அப்ப நேரில பார்த்து பழகேக்க மட்டும் மனசு தெரியுதா?

தெரிஞ்சா சொல்லுங்கோ நானும் வந்து பார்கிறன்.

நேரில பார்க்கும் போதே மனசு தெரியவில்லை என்றால் அந்த ஆள் உங்கள் மீது உண்மையான நட்பு வைக்கவில்லை, நீங்களும் அவர் மீது உண்மையான நட்பு வைக்கவில்லை பேசாமல் விட்டுப்போட்டு மனசு மனசு தெரியக்கூடிய ஒரு ஆளை பாருங்கோ. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பெண் நட்பினர் புலம்பெயர் வாழ்வில் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் தான் வாழ்கிறார்கள்.

பெற்றோர் தம் பிள்ளைகளின் வளர்ப்புமுறையில் ஆண் பெண் நட்பை புரிந்து கொண்ட போதும் மிக மிக மனம் வருந்தத்தக்க செயல் என்ன தெரியுமா?

அயலவர்களின் சந்தேகப்பார்வைகளும், தீர விசாரிக்காமல் நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல், வாய்க்கு வந்ததை எல்லாம் வீட்டுக்கு வீடு காவிக் கொண்டு செல்லும் தன்மை.

ஆண் பெண் நட்பினை புரிந்து கொள்பவர்களால் தான் அதன் தன்மை தெரியும்.

வீட்ட நிறையத்திட்டிட்டாங்களோ......

இல்ல பழைய அனுபவமோ..

Link to comment
Share on other sites

அப்ப நேரில பார்த்து பழகேக்க மட்டும் மனசு தெரியுதா?

தெரிஞ்சா சொல்லுங்கோ நானும் வந்து பார்கிறன்.

ஒரு சின்ன பிள்ளையிட்ட கேட்கிற கேள்வியா இது :lol: ................சரி சரி என்றாலும் விடை சொல்லுறேன்..........ஆமா ஜன்னி அக்கா நேரா பார்த்து கதைக்கும் போது ஒருவரின் மனசை நன்கு புரிந்து கொள்ளலாம்.. :) ..............அதற்காக நேர்முக தேர்வு எல்லாம் வைக்கீனம் வேலையில...........ஒருவன் மற்றவனின்ட கண்ணை பார்த்து நேரா கதைத்தார் என்றா அதில கூட அர்த்தம் இருக்கு பாருங்கோ...........குனிந்து கதைத்தா அதில கூட அர்த்தம் இருக்கு என்றா பாருங்கோ B) ...............எனக்க்கு எஸ்பீரியன்ஸ் இல்லை நீங்க ஒருக்கா....................டிரை பண்ணி பாருங்கோ...............பயப்பிட வேண்டாம் கண்டிப்பா நான் வந்து சேர்ந்த்து வைக்கிறேன்......... ;)

வரட்டா................ :P

Link to comment
Share on other sites

:angry: :angry: :angry:

திருப்பி பிழை விட்டு போட்டேனோ டீச்சர் அக்கா................பிழை விடக்க கூடா சும்மா அடிருதிலலலல................சரி......சரி நாளைக்கு பிழை திருத்தம் செய்து காட்டுறன்..............நிலா அக்கா கோபம் உங்களுக்கு வடிவா வருதில்லை கரக்டருக்கு...............பேசாம சிரித்து கொண்டே இருங்கோ.......

அப்ப வரட்டா......... :P

Link to comment
Share on other sites

இணையத்தில மனசை பார்க்க முடியாது தான் ஆனால் உங்கட நண்பி உங்களுக்கு ஆசையாக வரைகின்ற மடலை (E Mail) வாசிக்கும் போது அந்த மடலில் நண்பியோட மனசு தெரிகின்றது தானே அது போதும் தானே. :)

உண்மையாவோ............அண்ணா எனக்கு இவ்வளவு நாளும் தெறியாம போச்சு..................எனி கவனமா ஒவ்வொரு மடலையும் பார்கிறேன்.................மனசு தெரிந்தா உங்களுக்கு சொல்கிறேன்...........

அப்ப வரட்டா......... :P

Link to comment
Share on other sites

திருப்பி பிழை விட்டு போட்டேனோ டீச்சர் அக்கா................பிழை விடக்க கூடா சும்மா அடிருதிலலலல................சரி......சரி நாளைக்கு பிழை திருத்தம் செய்து காட்டுறன்..............நிலா அக்கா கோபம் உங்களுக்கு வடிவா வருதில்லை கரக்டருக்கு...............பேசாம சிரித்து கொண்டே இருங்கோ.......

அப்ப வரட்டா.........:P

:P :P சரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:angry: :angry: :angry: ஜனனி என்னைப்பொறுத்தளவில் நேரில் ஒருவருடன் பேசும் போது அவர்களின் பேச்சு அவர்களின் கண்பார்வை மொத்தத்தில் அவர்களின் முக உணர்வை வைத்தே அவர்களின் மனசை அறியலாம் என நினைக்கின்றேன். வேணும்னா ஜனனி ஒருதடவை றை பண்ணிப்பாருங்கோ. :lol:

அனுபவசாலிங்க சொல்லுறீங்க. நம்பிதானே ஆக வேணும். :P

Link to comment
Share on other sites

அனுபவசாலிங்க சொல்லுறீங்க. நம்பிதானே ஆக வேணும். :P

;) என்ன யாரையாவது ரெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சின்ன பிள்ளையிட்ட கேட்கிற கேள்வியா இது :D ................சரி சரி என்றாலும் விடை சொல்லுறேன்..........ஆமா ஜன்னி அக்கா நேரா பார்த்து கதைக்கும் போது ஒருவரின் மனசை நன்கு புரிந்து கொள்ளலாம்.. :lol: ..............அதற்காக நேர்முக தேர்வு எல்லாம் வைக்கீனம் வேலையில...........ஒருவன் மற்றவனின்ட கண்ணை பார்த்து நேரா கதைத்தார் என்றா அதில கூட அர்த்தம் இருக்கு பாருங்கோ...........குனிந்து கதைத்தா அதில கூட அர்த்தம் இருக்கு என்றா பாருங்கோ B)

வரட்டா................ :P

அப்பிடியோ...அப்ப இணையித்தில நட்பு, காதல் எல்லாம் மனசை பாக்காமலா வருது?????? :D

எனக்க்கு எஸ்பீரியன்ஸ் இல்லை நீங்க ஒருக்கா....................டிரை பண்ணி பாருங்கோ...............பயப்பிட வேண்டாம் கண்டிப்பா நான் வந்து சேர்ந்த்து வைக்கிறேன்......... ;)

எதுக்கும் முதல் நீங்க செய்து பாருங்கோ. :D

Link to comment
Share on other sites

ஆண் பெண் நட்பை திருமணத்திற்கு முதல் திருமணத்திற்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். நாங்கள் இங்கு பெரும்பாலும் திருமணத்திற்கு முதல் ஏற்படும் நட்பும் அது திருமணத்திற்கு பின் தொடர்பது பற்றியே பேசுகிறோம். திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்னை நண்பியாக வைத்திருக்க முடியாது( அது எனது சொந்த அநுபவம் கூட). திருமணத்தின் பின் எத்தனை பெண்களால் ஆண்களை நண்பர்களாக வைத்திருக்க முடியும்?

சரி இதை விடுங்கோ...

பெண்-ஆண் நட்பு. வாசகன் பார்வை:

ஆண் பெண் நட்புகளுக்கிடையில் காமமும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

ஆனால் நட்புக்காக காமமும் காமத்துக்காக நட்பும் இருப்பதுதான் தப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.