Jump to content

வாழ்க்கையில் முன்னேற..


Recommended Posts

வாழ்க்கையில் முன்னேற.....

-திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியிடு

வாழ்க்கையிலும் ஆன்மீக மார்க்கத்திலும் முன்னேற எளிய வழிகள்

1. உடல் நலம் காப்பது:

அளவாக உண்ணுங்கள். இறைவனுக்குப் படைத்து அதைப் பிரசாதமாக உண்ணுங்கள். சாத்விகமான உணவை உட்கொள்ளுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உண்ணாவிரதத்தைக் கடைப்பிடியுங்கள். அளவாக உடற்பயிற்சி செய்யுங்கள்.

2. சக்தியைக் காப்பது:

கூடியவரை பிரம்மசரியத்தைக் கடைப்பிடியுங்கள். விந்து சக்தியை காப்பாற்றுங்கள். மனப்பக்குவம் பெற்றபின் உடல் உறவைக் கடைப்பிடியுங்கள்.

தினமும் இரண்டு மணி நேரம் மெளன விரதத்தைக் கடைப்பிடியுங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் நான்கு மணி நேரத்திற்குக் குறையாமல் மெளன விரதத்தைக் கடைப்பிடியுங்கள்.

3. பண்புகளைக் காப்பாற்றுங்கள்:

மென்மையாகப் பேசுங்கள். கூடியவரை உண்மையே பேசுங்கள். கோபப்படாமல் பேசுங்கள்.

எண்ணங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். செயலில் நேர்மையைக் காட்டுங்கள். நியாயமற்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். தவறு செய்பவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

4. வைராக்கியத்தை வளருங்கள்:

வாரம் ஒரு முறை உப்பைக் கைவிடுங்கள். மாதம் ஒரு வாரம் சர்க்கரையைக் கைவிடுங்கள்.

மனதைக் கெடுக்கும் பயனற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடாதீர்கள். உங்கள் தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள். உணவு; உடை, பழக்கங்கள் எல்லாவற்றிலும் எளிமையைக் கடைப்பிடியுங்கள்.

5. இதயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்:

பிறருக்கு நன்மை செய்யும் எண்ணங்களை வளருங்கள். அன்பே தெய்வம் என்று உணருங்கள். வேலையைக் கடமை உணர்வுடன் செய்யுங்கள். பிரதி பலன் எதிர்பாராமல் கடமையைச் செய்யுங்கள். அடக்கத்துடனும் பணிவுடனும் செயற்படுங்கள். இவை உங்கள் இதயத்தைத் தூய்மைப்படுத்தும். இறைவனை எல்லா உயிரிடத்தும் உணருங்கள். எல்லா உயிர்களிடத்தும் அன்பும் நேய உணர்வும் காட்டுங்கள். அதுவே உண்மையான பக்தி.

6. நல்லூணர்வுகளை வளர்த்தல்:

தினமும் ஒரு மணி நேரம் நல்ல ஆன்மீக(சைவ நெறி) விஷயங்கள் நிறைந்த நற்போதனைகளையும், நூல்களையும் படியுங்கள். நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும், வளர்க்கும் பிரசங்கங்களில் கலந்து கொள்ளுங்கள், மனதைத் தூய்மைப்படுத்தி நல்லுணர்வுகளை கொடுக்கக் கூடிய பூஜை கூட்டு வழிபாடு, பஜனை ஆகியவற்றில் ஈடுபடுங்கள். பெரியோரிகளின் உறவை நாடி அவர்களின் போதனைகளைப் பெறுங்கள்.

7. ஆன்மீகச் செழுமையைப் பெறுவது:

தினமும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து நீராடுங்கள். அதன்பின் நீறுஆடித் தியானத்தில் அமருங்கள். ஜபம் இறைவனது நாமஸ்மரணை ஆகியவற்றில் மனதை ஈடுபடுத்துங்கள்.

இறைவனின் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள், மீண்டும் மீண்டும் எழுதிப் பழகுங்கள். இறைவனைப் பூஜிக்கும் பாடல்களைக் கேளுங்கள். முடிந்தால் நீங்களே பாடுங்கள். இந்த ஏழு வழிகளையும் கடைப்பிடித்தால், உடலும், உள்ளமும் தூய்மைபெறும்.

ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற வழி கிடைக்கும்.

Link to comment
Share on other sites

மேலே குறிப்பிட்டவற்றில் 60% ஐ நாம் கடைப்பிடித்து வருகின்றோம். அப்படியானால் நமக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் வருமா? இங்கு முன்னேற்றம் என்று எது கூறப்படுகின்றது? பண வருவாயா/ பதவியா/ அல்லது உடல் + உள்ள ஆரோக்கியம் மட்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிப்பிற்குரிய ஐயா,

தாங்கள் அளித்துவரும் அற்புதச் சேவைக்கு தாள் பணிகின்றேன். ஆறுமுக நாவலர் கூறிய கருத்துக்கள் அத்தனையுமே வாழ்க்கையில் உய்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டிகள்.

தங்களின் சேவை தொடரட்டும்.

நன்றிகள் ஐயா.

Link to comment
Share on other sites

மதிப்பிற்குரிய ஐயா,

தாங்கள் அளித்துவரும் அற்புதச் சேவைக்கு தாள் பணிகின்றேன். ஆறுமுக நாவலர் கூறிய கருத்துக்கள் அத்தனையுமே வாழ்க்கையில் உய்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டிகள்.

தங்களின் சேவை தொடரட்டும்.

நன்றிகள் ஐயா.

நன்றி தங்கையே!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிட்டவற்றில் 60% ஐ நாம் கடைப்பிடித்து வருகின்றோம். அப்படியானால் நமக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் வருமா? இங்கு முன்னேற்றம் என்று எது கூறப்படுகின்றது? பண வருவாயா/ பதவியா/ அல்லது உடல் + உள்ள ஆரோக்கியம் மட்டுமா?

கலைஞனே ஒன்றும் கிடையாது

காலம் காலமாக எமகுள்,எமது மன குகை இருட்டினில் நாமே வரந்து விட்ட நிழல் உறுவங்களை புணைந்துவிட்டு பொய்மைகளை கண்டுகொள்வதாயின்" நாமே எமக்கு ஒளியாக வேண்டும்" என்கின்றார் கிருஷ்ணமூர்த்தி என்பவர்.

எமது மனவரங்க போராட்டத்தில் எனது விடுதலைகான ஆயுதம் எனது விழிபுணர்வு தான்.எமது பழைய மனம் பயிற்றபட்ட மணம் இறக்கவேண்டும் அந்த சாவில் இருந்து புதிய மணம் புறட்சிகரமான மணம் பிறக்கமுடியும் அந்த புரட்சிகர மணமே முழு மனித விடுதலைக்கும்,சமுதாய விடுதலைக்கும் வழி வகுக்கும் என்று கிருஷ்ணமூர்த்தி போதிகிறார்.

இந்த புராதன மனதால்,மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போன மனதால்,கருத்துலக கோட்பாடுகளில் கண்டுண்ட மனதால் உண்மையைக் கண்டு கொள்ள முடியாது.நாம் ஒரு குருவை வரித்துக் கொண்டோ,ஒரு ஆன்மீக வழிகாட்டியை பின் தொடர்ந்தோ,ஆச்சிரமத்தில் தவமிருந்தோ,மந்திரங்கள் ஓதி,பிரார்தனை செய்து அழுது புரண்டு ஆண்டவனை வேண்டியோ உண்மைப் பொருளை கண்டு கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன்,

நீங்கள் குறிப்பிட்டவற்றையே முன்பு இங்கு பதிய எண்ணியிருந்தேன் - ஆனால் எந்தவித பயனும் இருக்கப்போவதில்லை என்று நிறுத்திவிட்டேன். ஏனெனில் "சேர்ந்து" சிந்திக்கும் ஆற்றல் எம்மிடம் இல்லை. தான் அறிந்து கொண்டவை தான் 100% உண்மை - தான் சொல்பவற்றை எப்பாடுபட்டாவது நியாயப்படுத்த வேண்டும் - அப்படி குறிப்பிடுவதன் நம்பகத்தன்மையில் கேள்வியெழுப்பினால் "வெறுப்பு" பதிலாக கிடைப்பதும் - தம்மை கேலிக்குள்ளாக்கத்தான் கேள்விகள் வருகின்றன என்று நொந்து கொள்வதும் மிக இலகுவாக அவதானிக்க கூடியவை. அந்தளவிற்கு 'மனம்' ஒழுகிவிட்டது (கெண்டிஷன்ட்).

நீங்கள் கூறியது போல,

இப்பிடி செய், இப்பிடி செய்யாதே என்பதெல்லாம் ஒரு படிமுறைக்கு (பட்டேர்ன்) மனதை பழக்கிக்கொள்வது - மனதை இயந்திரமயமாக்குவது. அதை விடுத்து இப்ப "நான்" யாராக இருக்கிறேன் - மிகுந்த வன்முறையாளன். எனக்கு தெரிகிறது, இதனால் வரும் பாதிப்புக்கள், ஆகவே நான் சபதம் எடுத்துக் கொள்கிறேன் - இதை எப்படியாவது கைவிட்டு நல்லவனாகிவிட வேண்டும் என்று. ஆனால் முடியாது! 'கெட்ட'தன் எதிர்ப்பதம் அல்ல 'நல்லது'. அப்ப எப்படி நல்லவனாவது, எப்படி மீள்வது? "அவதானிப்பது"!!!..இப்ப நான் எப்படி இருக்கிறேனோ அதை ஒரு எண்ணோட்டமின்றி அவதானிப்பது (ஒப்சேர்விங்). கோபம், தீய உணர்வுகள் வரும்போது நினைவுகள் ஊடுருவாமல் அதை அவதானிப்பது - அப்போது எது 'கெட்டதோ' அது இல்லாமல் போகும். அதை விடுத்து கெட்டதில் இருந்து கொண்டு 'நல்லாதை' நாடுவதவால் நாடும் நல்லது, 'கெட்டதில்' இருந்து பிறப்பதால் அதுவும் 'கெட்டதே'.

"வாழ்கையில் முன்னேற வேண்டும்" - என்று 'முன்னேறாத' மனம் தானே கேட்கிறது. மனம் நினைக்குது, 'நீ இப்ப சரியான மோசமான நிலைல இருக்கிற - ஆகவே எப்பாடு பட்டாவது முன்னேர்ற வழியப்பார்' என்று. 'கெட்டதில்' இருந்து 'நல்லா' வரவேண்டும் என்று நினைச்சால், ஒரு வழிமுறையை தொடர்ந்து ஒழுகினால் நிச்சயம் 'நல்லது' பிறக்காது என்பது போல தற்போதைய என் கேடுகெட்ட வாழ்க்கையில் இருந்து கொண்டு வழிமுறைகளை பின்பற்றி முன்னேறிடலாம் என்றால் அது முன்னேற்றமல்ல!...உண்மையாக தற்போதை 'கேடுகெட்ட' வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டுமென்றால், 'ஒவ்வொன்றையும் அவதானிப்பது' மூலமே.

...Mankind throughout the world has suffered a great deal and still goes on suffering. In their desire to be free from suffering they have accepted all kinds of illusions. They have been trapped in various beliefs, dogmas, rituals and concepts, and yet fear remains as one of the major factors of our life....

மேலும் அறிய இங்கே அழுத்தவும்.

Link to comment
Share on other sites

புத்தன், நீங்கள் குருவை சொல்வதை பின்பற்றி ஆன்ம விடுதலையை அடையமுடியாது என்று கூறுகின்றீர்கள். ஆனால், கடைசில் கிருஷ்ணமூர்த்தி இப்படி கூறுகின்றார் என்றும் அவர் சொல்வது சரி என்ற மாதிரியும் கூறுகின்றீர்கள்.. விளங்கவில்லை.... கிருஷ்ண மூர்த்தி கூறியுள்ளவைகள் மட்டும் உண்மை வார்த்தைகள்,மற்றவர்கள் சொன்னதெல்லாம் பொய்யும் .. பசப்பு வார்த்தைகளா?

நான் மேலுள்ளவற்றை வாசித்துவிட்டு குறிப்பிட்ட கருத்தை இணைத்த ஆறுமுகநாவலரிடம் விளக்கம் கேட்ட்டேன்... அதற்காக... நான் ஆன்மவிடுதலையை குறிப்பிட்ட வழிமுறை மூலமே தேடுகின்றேன் என நினைக்கக்கூடாது.

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் தனித்தனிப்பட்ட தரிசனங்கள். ஒருவனுக்கு சரியாக பொருந்தும் கொள்கை இன்னொருவனுக்கு சரிப்பட்டு வராது... எமக்கு, எமக்குத்தான் தெரியும் நமக்குள் என்ன நடைபெறுகின்றது... நமது நிலமை என்ன என்பது... இதை மற்றவர்களிற்கு உணர்த்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், நீங்கள் குருவை சொல்வதை பின்பற்றி ஆன்ம விடுதலையை அடையமுடியாது என்று கூறுகின்றீர்கள். ஆனால், கடைசில் கிருஷ்ணமூர்த்தி இப்படி கூறுகின்றார் என்றும் அவர் சொல்வது சரி என்ற மாதிரியும் கூறுகின்றீர்கள்.. விளங்கவில்லை.... கிருஷ்ண மூர்த்தி கூறியுள்ளவைகள் மட்டும் உண்மை வார்த்தைகள்,மற்றவர்கள் சொன்னதெல்லாம் பொய்யும் .. பசப்பு வார்த்தைகளா?

மற்றவர்கள் கூறியதை நான் பசப்பு வார்த்தை என்று கூறவில்லை அவர்கள் கூறியவற்றிலும் நல்ல கருத்துகள் உண்டு.ஜே.கிட்டு போதித்தார் என்று நான் எழுதினது தப்பு அப்படி எழுதியதன் மூலம் நான் அவருக்கு ஆத்மீகவாதி,சாமியார்,குரு,மகா

Link to comment
Share on other sites

உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால், கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை படிக்கின்ற ஆர்வம் அல்லது அவரது தத்துவங்களின் அறிமுகம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை கூறமுடியுமா?

Link to comment
Share on other sites

மாப்பி நான் இதற்கு விடை சொல்லவா வயசு போக போக புத்துவுகு ஞானம் வருகிறது................

:( :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால், கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை படிக்கின்ற ஆர்வம் அல்லது அவரது தத்துவங்களின் அறிமுகம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை கூறமுடியுமா?

புத்தகங்கள் படிப்பதன் மூலம் தான் அதிகம் கிடைத்தது.........கூட அதில் ஆர்வம் வர காரணம் தேசத்தின்குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்கள் விடுதலை என்ற கட்டுரை தொகுப்பில் பல அறிஞர்களின் கட்டுரைகளை பிரசுரித்துள்ளார் அதில் இவரின் கட்டுரையும் ஒன்று.

கட்டுரை தொகுப்பில் உள்ள சகல கட்டுரைகளும் தரமானவை அவற்றை படிக்க படிக்க மீண்டும் படிக்க தோன்றும்..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புராதன மனதால்,மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போன மனதால்,கருத்துலக கோட்பாடுகளில் கண்டுண்ட மனதால் உண்மையைக் கண்டு கொள்ள முடியாது.நாம் ஒரு குருவை வரித்துக் கொண்டோ,ஒரு ஆன்மீக வழிகாட்டியை பின் தொடர்ந்தோ,ஆச்சிரமத்தில் தவமிருந்தோ,மந்திரங்கள் ஓதி,பிரார்தனை செய்து அழுது புரண்டு ஆண்டவனை வேண்டியோ உண்மைப் பொருளை கண்டு கொள்ள முடியாது.

நல்லது. இவ்வாறன பெறுபேற்றைப் பெறுவதற்கு நீங்கள் அல்லது யாராவது முழுமனத்தோடு மேற்குறித்த விதிப்படி நடந்து கொண்டிருந்தீர்களா? மந்திரம் ஓதுதல் என்பதைப் பயபக்தியோடு செய்தால் கிடைக்கலாம் என்று சொல்லுகின்றபோது, அதன் படி நடந்து கொண்டவர்கள் எத்தனை பேர்?

எனவே எந்தவொரு முடிவிற்கும் நீங்கள் முயலாமல் முடியவில்லை என்பது உங்களின் இயலாமையாகத் தான் இருக்குமே தவிர, இல்லை என்று ஆகிவிடாது.

எனவே இல்லையென்று ஆக்குவதற்கு நீங்கள் அதன்படி நடந்த பின்னர், உங்களின் பதிலை நோக்கலாம்.

Link to comment
Share on other sites

புத்தன் வணக்கம்!

உங்கள் தகவலிற்கு நன்றி!

நானும் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் யாழ் நூல்நிலையம் சென்று பல தத்துவ நூல்களை வாசித்துளேன். ஆனால் அப்போது புத்தகத்தை வாசித்த போது அதில் கூறப்படும் கருத்துக்கள் சரியானவை போலவும், அவற்றை வாழ்வில் பின்பற்ற வேண்டும் போலவும் இருந்தது. எனினும், நடைமுறை வாழ்வுடன் ஒத்துவராத எவ்விதமான தத்துவங்களையும் பின்னர் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல நூல்கள் வாசிப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நூல்களில் உளவியல் நூல்கள் முக்கியமானவை. பலர் உளவியல் என்றதும் ஆ வென்று விழுந்தடிச்சு வாசிக்கின்றார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவற்றினுள் இருப்பது வெறும் வார்த்தை ஜாலங்கள் மற்றும் பிரமை. பலருக்கு உள்மனம், வெளிமனம், ஆழ்மனம் என்றெல்லாம் விசயங்கள் தெரிகின்றது, ஆனால், அடிப்படை வாழ்வு பற்றிய நடைமுறை அனுபவம் இல்லாமல் இருக்கின்றது. எனது அனுபவத்தில் இருந்து நான் கண்டது புத்தங்கங்கள் படிக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கண்ட தத்துவ, மற்றும் உளவியல் குப்பைகளை வாசித்தால் கடைசியில் மேல்வீடு கழன்று விடும்..

Link to comment
Share on other sites

... ஆனால் அப்போது புத்தகத்தை வாசித்த போது அதில் கூறப்படும் கருத்துக்கள் சரியானவை போலவும், அவற்றை வாழ்வில் பின்பற்ற வேண்டும் போலவும் இருந்தது. எனினும், நடைமுறை வாழ்வுடன் ஒத்துவராத எவ்விதமான தத்துவங்களையும் பின்னர் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

இதே கருத்துத்தான் என்னுடையதும். காஞ்சிப் பெரியவரின் தெய்வத்தின் குரல் போன்ற புத்தகங்களை வாசித்து, விரதம், கோயில் என்று அலைந்தேன். இவை யாவும் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக ஆக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் கற்பனைகளும் போலியும் நிறைந்த ஆன்மீக கட்டமைப்புகள் அறிவியல் ரீதியான சிந்தனையையும் முன்னேற்றத்தையும் மழுங்கடிக்கக் கூடியவை.

எனக்குள் மிச்சம் மீதியிருந்த கடவுள் நம்பிக்கையயும் சுனாமி அடித்துச் சென்றுவிட்டது.

Link to comment
Share on other sites

லீசண் அண்ணா அது தான் இப்படியான புத்தகம் எல்லாம் வாசிகிறதில்லை பாருங்கோ..........நான் வாசிகிறது இன்னும் சின்ன பிள்ளைகளுக்கான கதை புத்தகம் தான் சொன்னா நம்பமாட்டீங்க ஆனா நம்மளுக்கு அது தான் விருப்பம் அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை.....சுனாமி உங்களை திருந்தி இருகிறது என்றா இப்படி எத்தனை சுனாமி வரவேண்டும் எல்லாரையும் திருத்தா.............. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரம் ஓதுதல் என்பதைப் பயபக்தியோடு செய்தால் கிடைக்கலாம் என்று சொல்லுகின்றபோது, அதன் படி நடந்து கொண்டவர்கள் எத்தனை பேர்?

எனவே எந்தவொரு முடிவிற்கும் நீங்கள் முயலாமல் முடியவில்லை என்பது உங்களின் இயலாமையாகத் தான் இருக்குமே தவிர, இல்லை என்று ஆகிவிடாது.

எனவே இல்லையென்று ஆக்குவதற்கு நீங்கள் அதன்படி நடந்த பின்னர், உங்களின் பதிலை நோக்கலாம்.

உங்கள் கருத்தின் படி இதுவரை மந்திரத்தை ஒருத்தரும் ஒழுங்காக சொல்லவில்லை போல் தெறிகிறது அது தான் உலகம் பூராகவும் இன்னும் பிரச்சினைகளாக இருகின்றது,மந்திரத்தால் எல்லாம் நடக்கும் என்றால் நாம் இன்று 19,000 இளைஞர்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது 100 இளைஞரர்களுக்கு ஒழுங்காக மந்திரத்தை போதித்து எமது பிரச்சினையை தீர்திருக்கலாம்.

அது போக தனி நபர் பிரச்சினை என்று வரும் போது அதிலும் வசதி படைத்தவர்கள் மந்திரத்தை ஓதி தாங்கள் பாதுக்காப்பான ஒரு சூழலில் இருக்கலாம் என்று நினைக்கலாம் ஆனால் ஒரு சமூகத்தின் பிரச்சினையை மந்திரத்தால் தீர்ந்ததாக சரித்திரம் இல்லை.

:unsure::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.