Jump to content

இலங்கை அணியின் பயிற்சியாளராக ஜோன் ரைட் நியமிக்கப்படலாம்


Recommended Posts

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ஜோன் ரைட் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் பயிற்சியாளரான ரொம் மூடி இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் நிலையில் இலங்கை அணி புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளசொன ஜோன் ரைட்டை புதிய பயிற்சியாளராக நியமிப்பதில் இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகமும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

இது குறித்து ஜோன் ரைட்டுடன் பேசவுள்ளதாகவும் அவர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேநேரம் இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ஜொவ் மார்ஷ், தென் ஆபிரிக்க முன்னாள் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட், அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநில அணிப் பயிற்சியாளர் கிரேக் ஷெப்பெட்டின் பெயர்களும் பரிசீலனையிலுள்ளன.

எனினும், கிரிக்கெட் சபை நிர்வாகமும் இலங்கை அணி வீரர்களும் ஜோன்ரைட்டையே பெரிதும் விரும்புகின்றனர்.

53 வயதான ஜோன் ரைட் 2000-2004 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது அணியின் செயற்பாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததுடன் 2003 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி இறுதியாட்டம் வரை சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

--Thinakkural.com-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.