Jump to content

கரவெட்டி விக்னேஸ்வரா பழைய மாணவன்

Recommended Posts

பழைய மாணவனுக்கு வாழ்த்துக்கள்! வடமராட்சி வரும்போது நான் அடிக்கடி இந்த பாடசாலை வழியாக முன்பு போய் வந்துள்ளேன். :lol: இங்கு படித்த சில பழைய மாணவர்களுடனும் பழக்கம் உண்டு..

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

சொறி நான் போன பின் பாடுங்கள் இப்படி பாடி பாடி தானே பள்ளிக்கு போறதையே விட்டேன்

பிறகு யாழுக்கு வரம பன்னுற ப்ளனா?

என்ன இருந்தாலும் இராமசாமி மாதிரி வரதுங்கோ :P

தம்பி வினித் 90 பச் என்று திருவாளர் ஈழவன் சொன்னார் அது எப்படி எப்பவுமே தப்பு தப்பா கனக்கு பார்க்கிறிங்கள்?

பரணீ எப்படி உங்களால் சரியாக கனிக்க முடிகிறது :lol: எனக்கு தெரிந்த வரை வினித்தும் நானும் ஒரே கிளாஸ் தான் ஆனா ஒருவரை ஒருவர் பாத்து கொள்ள மாட்டோம்( ரீச்சரின் இடுப்பை பார்த்தாலும் பார்ப்பொமே ஒழிய எங்களை பார்த்து கொள்ள மாட்டோம்)

வடிவேலுக்கு அநியன் படத்தில வாற மல்ரிபிள் பேர்சனல் டிஸோடர் இருக்கு போலகிடக்கு பேசாம அந்நியன் படத்தில் வடிவேலையே ஹீரோவாக போட்டு இருக்கலாம்.இம்சை அரசன் மாதிரி இருந்திருக்கும் சீ சங்கர் அருமமையான நடிகனை மிஸ்பண்ணீட்டார் என்ன வடிவு நான் சொல்லுறது சரிதானே :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜிக்கு எனது சிரம் தாழ்த்தி வாழ்த்துக்கள்

ரொம்ப பெருமையாக இருக்குது..

என் தகப்பனார் கூட அதே பள்ளியில் படித்து விளையாட்டிலேயே கவனம் செலுத்தி படிப்பைக்கோட்டை விட்டவர்!!! :lol::lol:

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு டவு வடிவேல் அண்ணா பாடசாலைக்கு எல்லாம் போனவரா நம்பவே முடியவில்லை

:P :rolleyes:

Link to comment
Share on other sites

பிரியசகி உங்கள் ஆட்டோகிராப்பை திறந்தால் "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே":என்று பாடுவீர்கள். தயவு செய்து உங்கள் நினைவுகளை எங்களோடு பங்கிட்டுக்கொள்ளுங்கள்.

நான் பாடவெல்லாம் இல்லை...வடிவுக்கா எரிச்சல் பட வேண்டாம் சரியா :P

ஆனால் ஞாபகங்களை இடைக்கிட மீட்டி பார்ப்பதில் ஒரு சந்தோசம் தானே.

சரி அதை விடுவம். இங்க பலர் பள்ளியில் படிச்சும்..பள்ளியை அறிஞ்சும் வைச்சிருக்கம்.

ஏன் அவற்றை பகிர்ந்து கொள்ளாமல்..படிச்சம்..என்று மட்டும் சொல்லி விட்டு இருக்கீங்கள்.

சரி இவா மட்டும் சொல்லயில்லை என்று முணுமுணுக்கிறீங்க..சொல்றேன்..

எல்லோரும் உங்க அனுபவங்களை..நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நான் இல்லங்களை பற்றி கொஞ்சம் சொன்னேன்.

அதை விட நான் படிச்சப்போ...படிப்பித்த வாத்திமார்..என்றால்..

அதிபர்: அம்பலவாணர்

வைஸ் பிரின்சிப்பல்:செல்வராஜா

அப்புறம்..கருணேஸ்வரன் சார். எனக்கு படிப்பிக்கவில்லை பெரியவர்களுக்கு படிப்பித்தார்.

சங்கரப்பிள்ளை சார்..கணிதம் படிப்பிச்சார்..செல்வரட்ணம் வாத்தி கூட கணிதம் தான்.

(எப்பவும் அடி வாங்கியவை தான் ஞாபகத்தில் நிக்குமாம். சங்கரப்பிள்ளைசாரிடம் நல்லா வாங்கி இருக்கேன்..

வெயிலில் கூட பிடிச்சு விட்டிருக்கார் என்னை :( ஏன் எதுக்கென்றால் கேட்க கூடாது!)

மாப்பு எங்கையோ சங்கரப்பிள்ளை சார் பற்றி கேட்ட ஞாபகம் இருக்கு :rolleyes:

விளையாட்டு வாத்தியின் பெயர் ஞாபகம் வருதில்லை.. :unsure:

அதை விட டீச்சர் மார் என்றால்..

ரோகிணி டீச்சர் & நளினி டீச்சர் & யமுனா டீச்சர்: ஏ/ல் க்கு படிப்பித்தவர்கள்

சாந்தி டீச்சர், மஞ்சுளா டீச்சர்: தமிழ் & சமயம் படிப்பித்தார்கள்

லோகசகாயன் டீச்சர்: நம்ம வகுப்பாசிரியை :lol:

சுசீல டீச்சர்: விஞ்ஞானம்

அதை விட வதனா டீச்சர். டான்ஸ் டீச்சர்

இவரை நான் கொலண்ட் தேர் திருவிழாவில் கண்டேன்.

அவரோடு கதைத்ததில் ரொம்ப சந்தோசமாக இருந்தது. தற்போது லண்டன் போய் விட்டார்.

வேறு சொல்ல என்ன இருக்கு...சிறிது காலம் பள்ளி வகுப்போடு கடித தொடர்பு இருந்திச்சு.

காலப்போக்கில் இல்லாமல் போய் விட்டது. :( சிலவேளை நான் படிக்கும் காலத்தில் நீங்களும்

படித்திருந்தால் இவர்களை தெரிஞ்சிருக்கும். இல்லை என்றால் :lol:

சரி இனி உங்கள் ஞாபகங்களையும் சொல்லுங்கள் கேட்போம்.

என்ன இருந்தாலும் இராமசாமி மாதிரி வரதுங்கோ

அபூர்வமா வெல்லும் இராமசாமிக்கே இவ்ளோ என்றால்..

அடிக்கடி வெல்லும் கிருஷ்ணபிள்ளை எப்பிடியாம் ஹிஹி..

நான் சும்மா சொன்னேன் வடிவு..அப்புறம் சண்டைக்கு வராதீர்கள்.

என்னதான் நண்பர்களா இருந்தாலும் வேறு வேறு இல்லம் என்றால்..சண்டை வந்து விடும்.

எனக்கு நல்ல அனுபவம் இருக்கு. நம்ம இல்லமா..உன் இல்லமா என்று தொடங்கி..

கடைசியில் உன் வீடு..என் வீடு என்று பெருக்கும்....

எதுக்கு வம்பு?? :P

Link to comment
Share on other sites

சின்ன வயதிலை சுத்தி நிறைய அடி வேண்டின அனுபவம் இருக்கிற படியால் வேண்டாம்

வெளிப்படையாவே சொல்லுங்கள்

பரணி நானும் ஈழவன் போல கொழும்பு இந்துவிட மைந்தந்தான் 7இலிருந்து உயர்தரம் பரீட்சை மட்டும் அங்கேதான் படிச்சேன், அதுக்கு மேல இந்த ஈழவன போல சில பேர் பிடிச்சு வெளியே தள்ளிட்டாங்கள்

நானும் வடமராச்சில ஒரு கல்லூரிலதான் படிச்சன் மிகவும் பிரபல்யமான கல்லூரி கண்டுபிடியுங்கோ பாக்கலாம் :rolleyes:

Link to comment
Share on other sites

பரணி நானும் ஈழவன் போல கொழும்பு இந்துவிட மைந்தந்தான் 7இலிருந்து உயர்தரம் பரீட்சை மட்டும் அங்கேதான் படிச்சேன், அதுக்கு மேல இந்த ஈழவன போல சில பேர் பிடிச்சு வெளியே தள்ளிட்டாங்கள்

நானும் வடமராச்சில ஒரு கல்லூரிலதான் படிச்சன் மிகவும் பிரபல்யமான கல்லூரி கண்டுபிடியுங்கோ பாக்கலாம் :rolleyes:

ஹாட்லியால திரத்துப்பட்டவன்தானே :P

Link to comment
Share on other sites

ஹாட்லியால திரத்துப்பட்டவன்தானே :P

அனுபவம் பேசுதாக்கும் குட்டிக்கு :P

இந்த வீணாப்போன ஆமிக்காரண்ட இம்சை தாங்காம கொழும்புக்கு ஓடீட்டேன் 1995ல :P

Link to comment
Share on other sites

பரணி நானும் ஈழவன் போல கொழும்பு இந்துவிட மைந்தந்தான் 7இலிருந்து உயர்தரம் பரீட்சை மட்டும் அங்கேதான் படிச்சேன், அதுக்கு மேல இந்த ஈழவன போல சில பேர் பிடிச்சு வெளியே தள்ளிட்டாங்கள்

:rolleyes::unsure::lol::lol:

Link to comment
Share on other sites

6000 :rolleyes:

குட்டி உமக்கு தெறியாது அதை பற்றி எனக்கும் வான்வில்லுக்கும் மட்டும் தான் தெரியும்

:angry:

Link to comment
Share on other sites

அதை விட டீச்சர் மார் என்றால்..

ரோகிணி டீச்சர் & நளினி டீச்சர் & யமுனா டீச்சர்: ஏ/ல் க்கு படிப்பித்தவர்கள்

சாந்தி டீச்சர், மஞ்சுளா டீச்சர்: தமிழ் & சமயம் படிப்பித்தார்கள்

லோகசகாயன் டீச்சர்: நம்ம வகுப்பாசிரியை

சுசீல டீச்சர்: விஞ்ஞானம்

அதை விட வதனா டீச்சர். டான்ஸ் டீச்சர்

ஆமா இவர்கள் எல்லாம் பென்சனில் போய் 25 வருசம் இருக்குமே?

:P இவர்களிடமா படித்திர்கள்? அப்போ உங்கள் வயது :rolleyes::unsure:

எனக்கு ஒரு டவு வடிவேல் அண்ணா பாடசாலைக்கு எல்லாம் போனவரா நம்பவே முடியவில்லை

:P :lol:

பள்ளிகூடம் தான் போனேன் என்று சொன்னேன் புத்தகத்தை திறந்து படித்தேன் என்று சொன்னேனா? :angry:

Link to comment
Share on other sites

ஆமா இவர்கள் எல்லாம் பென்சனில் போய் 25 வருசம் இருக்குமே?

:P இவர்களிடமா படித்திர்கள்? அப்போ உங்கள் வயது :rolleyes::unsure:

பள்ளிகூடம் தான் போனேன் என்று சொன்னேன் புத்தகத்தை திறந்து படித்தேன் என்று சொன்னேனா? :angry:

அவங்க பென்சனில போய் 25 வருசமாச்சு, ஆனால் நீங்க அவங்ககூடத்தானே படிச்சீங்கள் வடிவு மாமா

அதுதானே எப்போ படிச்சிருக்கிறீங்கள்

Link to comment
Share on other sites

பள்ளிகூடம் தான் போனேன் என்று சொன்னேன் புத்தகத்தை திறந்து படித்தேன் என்று சொன்னேனா? :angry:

அப்ப எதுக்கு பள்ளிகூடத்துக்கு போனனீங்க வடிவேல் அண்ணா

:rolleyes:

Link to comment
Share on other sites

அப்ப எதுக்கு பள்ளிகூடத்துக்கு போனனீங்க வடிவேல் அண்ணா

:rolleyes:

வேற என்னத்துக்கு டீச்சர்மார பாக்கத்தான். அதுவும் கலவன் பாடசாலை என்றால் சொல்லவே தேவையில்லை

Link to comment
Share on other sites

வேற என்னத்துக்கு டீச்சர்மார பாக்கத்தான். அதுவும் கலவன் பாடசாலை என்றால் சொல்லவே தேவையில்லை

அட வடிவேல் அண்ணா அந்த காலத்தில இருந்து இன்று மட்டும் ஆளை மாற்றினாலும் கரக்டர மாற்ற இல்லை என்று சொல்லுங்கோ

:rolleyes:

Link to comment
Share on other sites

நான் பாடவெல்லாம் இல்லை...வடிவுக்கா எரிச்சல் பட வேண்டாம் சரியா :P

ஆனால் ஞாபகங்களை இடைக்கிட மீட்டி பார்ப்பதில் ஒரு சந்தோசம் தானே.

சரி அதை விடுவம். இங்க பலர் பள்ளியில் படிச்சும்..பள்ளியை அறிஞ்சும் வைச்சிருக்கம்.

ஏன் அவற்றை பகிர்ந்து கொள்ளாமல்..படிச்சம்..என்று மட்டும் சொல்லி விட்டு இருக்கீங்கள்.

சரி இவா மட்டும் சொல்லயில்லை என்று முணுமுணுக்கிறீங்க..சொல்றேன்..

எல்லோரும் உங்க அனுபவங்களை..நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நான் இல்லங்களை பற்றி கொஞ்சம் சொன்னேன்.

அதை விட நான் படிச்சப்போ...படிப்பித்த வாத்திமார்..என்றால்..

அதிபர்: அம்பலவாணர்

வைஸ் பிரின்சிப்பல்:செல்வராஜா

அப்புறம்..கருணேஸ்வரன் சார். எனக்கு படிப்பிக்கவில்லை பெரியவர்களுக்கு படிப்பித்தார்.

சங்கரப்பிள்ளை சார்..கணிதம் படிப்பிச்சார்..செல்வரட்ணம் வாத்தி கூட கணிதம் தான்.

(எப்பவும் அடி வாங்கியவை தான் ஞாபகத்தில் நிக்குமாம். சங்கரப்பிள்ளைசாரிடம் நல்லா வாங்கி இருக்கேன்..

வெயிலில் கூட பிடிச்சு விட்டிருக்கார் என்னை :( ஏன் எதுக்கென்றால் கேட்க கூடாது!)

மாப்பு எங்கையோ சங்கரப்பிள்ளை சார் பற்றி கேட்ட ஞாபகம் இருக்கு :rolleyes:

விளையாட்டு வாத்தியின் பெயர் ஞாபகம் வருதில்லை.. :unsure:

அதை விட டீச்சர் மார் என்றால்..

ரோகிணி டீச்சர் & நளினி டீச்சர் & யமுனா டீச்சர்: ஏ/ல் க்கு படிப்பித்தவர்கள்

சாந்தி டீச்சர், மஞ்சுளா டீச்சர்: தமிழ் & சமயம் படிப்பித்தார்கள்

லோகசகாயன் டீச்சர்: நம்ம வகுப்பாசிரியை :lol:

சுசீல டீச்சர்: விஞ்ஞானம்

அதை விட வதனா டீச்சர். டான்ஸ் டீச்சர்

இவரை நான் கொலண்ட் தேர் திருவிழாவில் கண்டேன்.

அவரோடு கதைத்ததில் ரொம்ப சந்தோசமாக இருந்தது. தற்போது லண்டன் போய் விட்டார்.

வேறு சொல்ல என்ன இருக்கு...சிறிது காலம் பள்ளி வகுப்போடு கடித தொடர்பு இருந்திச்சு.

காலப்போக்கில் இல்லாமல் போய் விட்டது. :( சிலவேளை நான் படிக்கும் காலத்தில் நீங்களும்

படித்திருந்தால் இவர்களை தெரிஞ்சிருக்கும். இல்லை என்றால் :lol:

சரி இனி உங்கள் ஞாபகங்களையும் சொல்லுங்கள் கேட்போம்.

அபூர்வமா வெல்லும் இராமசாமிக்கே இவ்ளோ என்றால்..

அடிக்கடி வெல்லும் கிருஷ்ணபிள்ளை எப்பிடியாம் ஹிஹி..

நான் சும்மா சொன்னேன் வடிவு..அப்புறம் சண்டைக்கு வராதீர்கள்.

என்னதான் நண்பர்களா இருந்தாலும் வேறு வேறு இல்லம் என்றால்..சண்டை வந்து விடும்.

எனக்கு நல்ல அனுபவம் இருக்கு. நம்ம இல்லமா..உன் இல்லமா என்று தொடங்கி..

கடைசியில் உன் வீடு..என் வீடு என்று பெருக்கும்....

எதுக்கு வம்பு?? :P

நன்றி..பிரியசகி.. நீங்கள் சொன்ன ஆசிரியர்கள் ஒருவரையும் எனக்குத் தெரியாது. காரணம் நான் படிக்கும் காலத்தில் சிலர் பிறந்திருக்கவும் மாட்டார்கள். எங்கள் காலத்தில் அதிபர் சிவப்பிரகாசம் (புலோலி) துணை அதிபர் சோமசுந்தரம்(துன்னாலை) - ஆசிரியர்கள் மகேசன் (ஆங்கிலம்) , ஐ.சிற்றம்பலம்(தமிழ்), சின்னத்தம்பி(sports), Art சுப்பிரமணியம், கணேசமூர்த்தி(chemistry), கணேசன்(geography), திருமதி ஜோதிரவி(english), மங்களம் ரீச்சர்(biology), குணரத்தினம்(biology) இப்படி பலர்.

எங்கள் காலத்திலும் மஞ்சள் இல்லம்தான் அனேகமாக முதலாவதாக வரும். இல்லங்களுக்கிடையிலான அலங்காரப் போட்டி ஒன்றும் நடக்கும். அதில் ஒவ்வொரு முறையும் பச்சை இல்லம்தான் வெல்லும். நாங்கள் வர்ண கடதாசிகளால் அலங்கரிக்க அவர்கள் உள்ள இலை, குழைகளால் (பச்சை) அலங்கரித்து சுகமாக முதல் இடம் பெற்று விடுவார்கள்

:(

Link to comment
Share on other sites

நான் பாடவெல்லாம் இல்லை...வடிவுக்கா எரிச்சல் பட வேண்டாம் சரியா :P

ஆனால் ஞாபகங்களை இடைக்கிட மீட்டி பார்ப்பதில் ஒரு சந்தோசம் தானே.

அதை விட நான் படிச்சப்போ...படிப்பித்த வாத்திமார்..என்றால்..

அதிபர்: அம்பலவாணர்

வைஸ் பிரின்சிப்பல்:செல்வராஜா

அப்புறம்..கருணேஸ்வரன் சார். எனக்கு படிப்பிக்கவில்லை பெரியவர்களுக்கு படிப்பித்தார்.

சங்கரப்பிள்ளை சார்..கணிதம் படிப்பிச்சார்..செல்வரட்ணம் வாத்தி கூட கணிதம் தான்.

(எப்பவும் அடி வாங்கியவை தான் ஞாபகத்தில் நிக்குமாம். சங்கரப்பிள்ளைசாரிடம் நல்லா வாங்கி இருக்கேன்..

வெயிலில் கூட பிடிச்சு விட்டிருக்கார் என்னை :( ஏன் எதுக்கென்றால் கேட்க கூடாது!)

மாப்பு எங்கையோ சங்கரப்பிள்ளை சார் பற்றி கேட்ட ஞாபகம் இருக்கு :rolleyes:

விளையாட்டு வாத்தியின் பெயர் ஞாபகம் வருதில்லை.. :unsure:

அதை விட டீச்சர் மார் என்றால்..

ரோகிணி டீச்சர் & நளினி டீச்சர் & யமுனா டீச்சர்: ஏ/ல் க்கு படிப்பித்தவர்கள்

சாந்தி டீச்சர், மஞ்சுளா டீச்சர்: தமிழ் & சமயம் படிப்பித்தார்கள்

லோகசகாயன் டீச்சர்: நம்ம வகுப்பாசிரியை :lol:

சுசீல டீச்சர்: விஞ்ஞானம்

அதை விட வதனா டீச்சர். டான்ஸ் டீச்சர்

இவரை நான் கொலண்ட் தேர் திருவிழாவில் கண்டேன்.

அவரோடு கதைத்ததில் ரொம்ப சந்தோசமாக இருந்தது. தற்போது லண்டன் போய் விட்டார்.

.

அபூர்வமா வெல்லும் இராமசாமிக்கே இவ்ளோ என்றால்..

அடிக்கடி வெல்லும் கிருஷ்ணபிள்ளை எப்பிடியாம் ஹிஹி..

நான் சும்மா சொன்னேன் வடிவு..அப்புறம் சண்டைக்கு வராதீர்கள்.

என்னதான் நண்பர்களா இருந்தாலும் வேறு வேறு இல்லம் என்றால்..சண்டை வந்து விடும்.

எனக்கு நல்ல அனுபவம் இருக்கு. நம்ம இல்லமா..உன் இல்லமா என்று தொடங்கி..

கடைசியில் உன் வீடு..என் வீடு என்று பெருக்கும்....

எதுக்கு வம்பு?? :P

வடிவுக்கா அப்படித்தான் எல்லார் மேலையும் ரொம்பப் பொறாமை

நீங்க சொல்லுங்கோ சகி ஆண்டி

அட இவளவு ரீச்சர் மாற ஞாபகம் வைச்சிருக்கிறீங்களா........? நமக்கென்றா இல்லை, ஆனால் டீச்சர்மார் வாட்த்திமார் எங்களை நினைவு வச்சிருப்பினம், ஏனென்றால் அவிஅயளுக்கு செஞ்ச அட்டூழியத்தை வாழ்க்கையிலும் மறக்கமாட்டாங்கள் :(

அதெல்லாம் சரி நீங்க இருந்தும் கிருஷ்ணப்பிள்ளை வெண்டிச்சா..........? அதேப்படி? :lol:

Link to comment
Share on other sites

ம் நினைவெல்லாம் தேன் மழைபொழிந்த உணர்வு நன்றி நண்பர்களே

இத்தனை யாழ்உறவுகள் நான் படித்த பாடசாலையில் படித்திருக்கின்றார்கள் என நினைக்கும்போது பெருமையாக இருக்கின்றது.

நான் 1997 இல் படித்தேன். (ம் எங்கை படித்தேன் பட்டாம்பூச்சிக்கு பின்னால் பறந்தேன். படிப்பை கோட்டை விட்டேன்). கிருஸ்ணபிள்ளை மஞ்சள் இல்லம்தான் நானும் ஆனாலும் எந்த ஓரு விளையாட்டிலும் பங்குகொள்வதில்லை. எப்ப வீட்டை போய் சேருவன் என்று ஓடியே விடுவேன். இப்ப நினைக்க நிறைய கவலை. எனக்கு பிடித்த ஆசிரியர் சங்கரப்பிள்ள ஆசிரியர். தமிழ் படிப்பித்தவர். அன்றைய அவரின் அக்கறை இக்கரையிலும் என்னால் தமிழ் கற்பிக்க முடிகின்றது. பசுமரத்தாணிபோல் அவருடைய ஓவ்வொரு கற்கையும் என்னுள் முளைவிட்டு விருட்சங்களாய் வருகின்றது. நன்றி சொல்ல வாhத்தை இல்லை. அவரை நான் கொழும்பில் ஓரு தடவை சந்தித்தேன். விழிகளில் நீர் வார்த்தைகள் பேச வரவில்லை. எத்தனை நாள் அடி வாங்கி இருப்பேன்.

ஒரு நாள் அடி தாங்கமால் மயங்கியே விழுந்துவிட்டேன். பின்பு தேனீர் வடை எல்லாம் வாங்கி தந்து அதன்பின் முதுகில் அடிப்பதே இல்லை. கையில்தான். அவரால்தான் என்னால் தமிழ் என்னும் கடலினுள் துணிந்து நீந்த முடிகின்றது. நளாயினி ரீச்சர் யமுனா ரீச்சர் வனஜா ரீச்சர் சிவராஜா மாஸ்ரர் குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டனர். அதிபர் அம்பலவாணர் மிக அருமையாண ஒரு அதிபர். அன்று படிக்கும்போது அவரை கிண்டலடித்து நிறைய சேட்டைகள் செய்தோம் இன்று நினைத்தாலும் கவலைதான். மகேஸ்வரி ரீச்சர் இன்று எனக்கு ஒரு வகையில் மாமியார் ஆகிவிட்டார். வடிவேலு சொல்வதுபோல் இடுப்பை பார்த்த நாட்களும் இருக்கின்றது பாவம் கணக்கியல் படிப்பித்த ஆசிரியை (பெயர் சொல்ல விருப்பமில்லை) என்னோடு இடுப்பை பார்த்தவர்களிற்கு புரியும்.

ம் நிறைய ஆசிரியர்கள் எல்லோரையும் 2004 இல் மகேஸ்வரி ரீச்சரின் மகளின் திருமணத்தில் சந்தித்தேன் எனது திருவிளையாடல்கள் சொல்லி என்னோடு ஆசிரியர் மாணவர் வேறுபாடின்றி உரையாடினார்கள். என்றுமே தாய் தந்தைக்கு பின் எமக்கெல்லாம் அவர்கள்தான். என்றுமே அவர்களை மறக்க முடியாது. நெஞ்சிருக்கும்வரை அவர்களின் நினைவும் இருக்கும்.

வருந்தத்தக்க விடயம்

ஆசியர் லோகசிங்கம் காலமாகிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அவரும் ஓரு அரிய பொக்கிஸம்தான்.

Link to comment
Share on other sites

செல்வன் என்று சொல்லுறீங்க ஆதி அப்ப அவர் தான் மாப்பியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருத்தற்ரை கதையை பாக்கேக்கில்லை எல்லாரும் வடமராச்சிக்காரர் போலை இருக்கு :huh:

Link to comment
Share on other sites

ஒவ்வொருத்தற்ரை கதையை பாக்கேக்கில்லை எல்லாரும் வடமராச்சிக்காரர் போலை இருக்கு :huh:

அப்ப யாழ் களத்தை, வடமராட்சி களம் என்று மாத்தலாம் போல :P

Link to comment
Share on other sites

அப்ப யாழ் களத்தை, வடமராட்சி களம் என்று மாத்தலாம் போல :P

இலங்கையின் தலை யாழ்ப்பாணம் என்றால், மூளை வடமராட்சி என்பார்கள். ( தேசப்படத்தில் அப்படித்தான் இருக்கும்). எங்கள் மண் இயற்கையாக வலிகாமம் போன்ற பகுதிகளைப்போல செழிப்பான பகுதிகள் அல்ல. படித்து உத்தியோகம் பார்ப்பதே இலட்சியம். வேறு வழி இல்லை. அதுதான் ரகசியம்.

:huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.