Jump to content

ஒருநாள் போட்டியில் உலக சாதனை சர்ரே அணி 496 ஓட்டங்களை குவித்தது


Recommended Posts

லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் `சர்ரே' அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 496 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.

உள்நாட்டு அணியான கிளெசெஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ரே அணி இந்தச் சாதனையைப் படைத்தது.

இப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அலி பிரௌன் 97 பந்துகளில் 176 ஓட்டங்களைக் குவித்தார். இவர் ஜேம்ஸ் பென்னிங்குடன் (152 ஓட்டங்கள்) ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 296 ஓட்டங்களைக் குவித்தார்.

ரிக்கி கிளார்க் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.

ஆட்டத்தின் முடிவில் கிளெசெஸ்டர்ஷயர் அணியை 239 ஓட்டங்களில் சுருட்டி 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சர்ரே அணி வென்றது.

இதற்கு முன் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்து சாதனை புரிந்தது இலங்கை அணியே. கடந்த ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இப்போது உலக சாதனையை நிகழ்த்தியுள்ள சர்ரே அணி 5 ஆண்டுகளுக்கு முன்பும் கிளமோர்கன் அணிக்கு எதிராக 438 ஓட்டங்களை விளாசி சாதனை புரிந்தது. அப்போது பிரௌன் 268 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

--thinakkural---

Link to comment
Share on other sites

ஆனால் இது சர்வதேச ஒருநாள் போட்டி அல்லவே? இருவேறு லோக்கல் டீம்களிற்கிடையில் அல்லவா இந்த ஆட்டம் நடைபெற்றுள்ளது?

Link to comment
Share on other sites

ஆனால் இது சர்வதேச ஒருநாள் போட்டி அல்லவே? இருவேறு லோக்கல் டீம்களிற்கிடையில் அல்லவா இந்த ஆட்டம் நடைபெற்றுள்ளது?

ஆம். அது ஒரு நாள் சர்வதேச போட்டி (ODI) இல்லை, அது Club இடையேயான ஒரு நாள் போட்டி. இலங்கை - நெதர்லாந்து இடையேயான போட்டியில் 443 ஓட்டங்கள் பெறப்பட்டது அது சர்வதேச ஒரு நாள் போட்டி (ODI). அதற்கும் "Surrey" அணி பெற்ற 496 ஓட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Link to comment
Share on other sites

ஆனால் இது சர்வதேச ஒருநாள் போட்டி அல்லவே? இருவேறு லோக்கல் டீம்களிற்கிடையில் அல்லவா இந்த ஆட்டம் நடைபெற்றுள்ளது?

அவர்கள் அடித்ததை பாராட்டாம என்ன கதை வேண்டிக் இடக்கு மாப்பி

:angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.