Jump to content

கற்பு என்னும் திண்மை


Recommended Posts

கற்பு என்னும் திண்மை

eswaramoorthypillaimount.jpg

பதிப்புரை

உயிர்கள் பல. அவையனைத்திற்கும் பரமசிவன் பல உடல்களைக் கொடுத்தருளினார். அவ்வாறு படைக்கப்பட்ட உயிர்களில் மனிதன் ஒருவன் மட்டுமே குடும்பமென ஒன்றை அமைத்து ஒழுக்க நெறியில் வாழ்கிறான். நம் முன்னோர் காலத்தில் குடும்பவாழ்வுக்கெனச் சில நியதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. அவற்றுள் "கற்பு" என்பது பெண்பாலாருக்கு மட்டில் விதிக்கப்பட்ட ஒன்று. பண்டைக்கால வழக்கில் மனைவியை "அனுசாரிணி" (பின்பற்றுபவள்) எனக் குறிப்பிட்டு வந்தனர். ஆசிரியர் திருவள்ளுவ தேவநாயனாரும் "கொழுநற்றொழுதெழுவாள்" என்று குறிப்பிட்டார். இருபாலாரும் ஒருவரையொருவர் தொழவேண்டுமெனக்கூறினாரில்லை. அவ்வாறு ஆணுக்கு முதன்மையும், பெண்ணுக்கு அடங்கிய நிலையுமே பண்டைக்காலச் சைவத் தமிழரது கொள்கையாயிருந்தது என்பது

"கற்பெனப்படுவது கரணமொடு புணரக்

கொளற்குரிமரபிற் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொளலே"

என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தானும் பெறப்படும்.

இவ்வாறு கொடைப் பொருளாகப் பெண்ணைவைத்த பெருநோக்கம் அவள் அபலை; ஆண்துணையின்றி வாழ இயலாதவள்; இயற்கையிலேயே அவ்வாறமைக்கப்பட்டிருக்கிறா

Link to comment
Share on other sites

ஈசுரனை விசுவசியாத பெண்ணின் கற்புக்கு ஆபத்து இன்ன நேரத்திற்றான் என்பதில்லை. தாருவனத்து ரிஷிபத்தினிகள் சரித்திரம் அதற்குச் சான்று. அகலிகையின் கற்புப் பங்கப்படுத்தப்பட்டது. அவள் கணவர் ஆசிரமத்திலிருந்தும் அச்சமயம் அவளுக்கு உதவாமற் போயினர். அவளிடம் ஈசுரபக்தி அவ்வளவிற் குறைவென்பதையே அது காட்டுகிறது. சவுபரி முனிவருக்கு மனைவி மனோமயையென்பவள்: அம்முனிவர் ஆசிரமத்தில் இல்லாத வேளையில் கிரெளஞ்சன் என்பவன் அவளைக் கெடுக்க நெருங்கினான், அப்போது தன்னியல்பாற் சவுபரியும் வந்துவிட்டார் அவள் கற்புக் காக்கப்பட்டது. விநாயகர் புராணம், விக்கினராசர் திருவவதாரப் படலம் காண்க. அவள் ஈசுர விசுவாசமொன்றே பெண்ணின் கற்பை எந்த ஆபத்திலும் காத்துத்தா வல்லது.

பதியின்பால் உள்ளார்ந்த பக்தியுடையவள் அவளைத் தொழவே செய்வாள். அவன் இறந்தானெனக் கேட்ட மாத்திரத்தில் அவளுயிரும் போம்.

'காவன் மன்னவன் இறந்தான்

எனுமுரை கன்னத்துள்

மேவும் எல்லையின் அசனியே

றுண்டவெம் பணியேபோல்

தேவி யாகிய பதுமகோ

மளையெனுந் திருமங்கை

யாவி நீத்தனள் தலையளி

யாகிய ததுவன்றோ'

(கந்தபுராணம்) என்றது சூரபதுமனின் மனைவி பதும கோமளை என்பாளின் சரித்திரம்.

"Sati was forbidden by law, but the sati spirit among the women of Bharat is undying. The tribute of the nation goes to Srimathi Darbari who, on her husband Promod Darbari's death by accident...leapt to her death after displaying calmness in the Sion Hospital where the young man's body was brought' May our young men by their character and their love try to deserve the girsl who are entrusted to their care by marriage. It is not the suicide but the intensive love and devotion and heroic purity behind it that will ever stand guard on our civilization" (25-7-1964 Swaraja) என ராஜாஜி தந்த செய்தி அப்பக்தியை இன்றும் பாரத தேசத்தில் உள்ளதெனக் காட்டுகிறது. விபத்து காரணமாக இறந்த தன் கணவனது சடலத்தை ஆஸ்பத்திரியில் கண்ட மாத்திரத்தில் அன்பால் உத்தமியாகிய அவன் மனைவி தர்பாரா என்பவள் உயிர் நீத்த பெருமை அவ்வாங்கிலத்தின் விஷயமாகும்,

'தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெயயெனப் பெய்யு மழை' என்றார் வள்ளுவர்'

பெய்யெனப் பெய்யு மழை யென்பது பொதுவாகக் கற்பின் ஆற்றலை விளக்குவது.

'தீக்கட் புலிதொடரச் செல்லுஞ் சிறுமான்போல்

ஆக்கை தளர அலமந்தாள் - போக்கற்றுச்

சீறா விழித்தாள் சிலைவேடன் அவ்வளவில்

நீறாய் விழுந்தான் நிலத்து'

என்றார் புகழேந்தியார். அ·து அவ்வாற்றலுக்குச் சரித்திரச் சான்று. சிலைவேடன் சாம்ப வரலாறு சீறிய கற்பரசியாகிய தமயந்தியின் உள்ளம் அருளுள்ள்மாகவும் மாறப்படாதோ? மாறி அவள் பெய்யென்றால் மழை பெய்யாதோ? நிச்சயம் பெய்யும். கற்பு அவ்வாற்றலை அவளுக்கு எதனால் தந்தது? கொழுநனைத் தொழுவதால் என்றார் வள்ளுவர்.

இப்போதும் கற்புநெறிப் பெண் கணவனைத் தொழுகிறாள், ஆனால் அவள் சொல்லி மழை பெய்யவில்லை எனக் கூறி அவ்வாசிரியரைப் பரிகசிக்கிறார் பலர், கற்பும் பரிகசிக்கப்படுகிறது. அது சரியன்று. ஏன்? மணிமேகலையிலுள்ள மருதி என்ற கற்பினளது வரலாறு அதற்கு விடையாகும். அவள் கற்பினள்தான், ஆயினும் பொய்க்ககைகளை, வேடிக்கைக் கதைகளை அதிகம் படிப்பான், கேட்பாள். விழாக் காலங்களில் வாத்திய இசை, வாய்ப்பாட்டு முதலியவைகளில் ஆசைக்கொண்டு அவற்றைக் கேட்பதற்காகத் தெய்வ வணக்கத்துக்குச் செல்வாள் போல் வெளியிற் செல்வாள். இப்படித் தரக்கேடான காரியங்கள் பல அவளிடம் இருந்தன. அதனை அப்புத்தகத்திற் காண்க. அதனால் அவள் கற்பின் ஆற்றல் குறையலாயிற்று. பூத சதுக்கத்துத் தெய்வம் அவள்முன் தோன்றி

'மடவரல் ஏவ மழையும் பெய்யாது

நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப்

பிறர்நெஞ்சு சுடுஉம் பெற்றியு மில்லை

யாங்கவை யொழிகுவை யாயி னாயிழை

யோங்கிரு வானத்து மழையுநின் மொழியது'

என்றதாக அப்புத்தகம் சொன்னது.

ஆடையணிவது மானங் காக்கவே யாம். அவ்வாடை அலங்காரமாயிருக்க வேண்டுமென்பது அடுத்தபடிதான். இக்காலத்துக் கற்புடைப் பெண்களுள் மிகப் பெரும்பாலார்க்கு அவ்வடுத்தபடியே பெரிதும் விருப்பந்தரத் தொடங்கிற்று. இல்லாள் என்பதற்கு வீட்டில் இருத்தற் குரியாள் என்பது பொருள். ஆனால் வீட்டில் இல்லாதவள் என அவர் பொருள் பண்ணிக் கொண்டனர் போலும், அவர் ஆடல்களைப்பார்க்கவும், பாடல்களைக் கேட்கவும் ஆசை மிகுந்தவராய்த் தமமைப் பலபடச் சிங்காரித்துக் கொண்டு அடிக்கடி வீட்டை விட்டு இரவு பகலென்றும் பாராமல் வெளியிடங்களுக்குச் செல்கின்றனர். கற்பின் ஆற்றல் எல்லையற்றது. அது நன்கு உரனேற்றப்பட வேண்டும். கிருஹஸ்க தருமத்தையறிந்து கடைப்பிடிப்பதே அதற்கு வாயில். அதனை விட்டு அம்மருதி போல் அவர் இருந்து வருகின்றனர். அதனால் அவர் பல ஆண்களின் நெஞ்சிற் புகுதற்குச் சந்தர்ப்பம் நேருகிறது. அவர் பெய்யென்றால் மழை யெப்படிப் பெய்யும்?

கணவன் மனிதனே, ஈசுரன் அல்லன். ஈசுரனே மழையைப் பெய்விக்கவல்லான். கணவனால் அது சாத்தியமன்று அவனை மனைவி தொழுது மழை பெய்விப்ப தெப்படி? ஆகலின் வள்ளுவர் கூற்றுச் சரியன்று என்பார் சிலர். சைவ சமயத்தில் சரியை யாதி நாலு பாதங்கள் உள. சரியையாவது தாத மார்க்கம். சிவாலயங்களிலுள்ள சிவ மூர்த்தி செம்பும் சிலையுமாக இருக்கும். அவற்றைச் சிவனெனவே கண்டு வழிபடுவது அம்மார்க்கம் அதற்குப் பலன் சாலோகம். அச்செம்பும் சிலையுமாக இருப்பான் ஒரு கணவன். தனனை விதிப்படி கைப்பிடித்த தொடர்புபற்றி அவனைத் தெய்வமென மனைவி தொழுகிறாள். அத்தொழுகைக்கும் பலன் ஓரளவிலுண்டு. 'பொன்னிக் கரையில்மணல்பாவை நின், கணவன் ஆம் என்று, உரைசெய்த மாதரொட்டும் போகாள் திரைவந்து, அழியாது சூழ்போக, ஆங்கு உந்தி நின்ற, வரிஆர் அகல் அல்குல் மாதர்.....' என்ற சிலப்பதிகாரமும் காண்க. மனிதன் அறிவுடையவன். ஈசுரபக்தி அவ்வறிவுடைமைக்கு அடையாளம். தன் மனைவியின் கற்புக் காக்கப்படவேண்டும், அற்புதங்கள் நிகழ்த்த வல்லதாயிருக்கவேண்டும் என்ற எண்ணம் அவனிடம் இருத்தற்குரியது. அவன் வேதாகமம் வல்லனாய்ச் சாதனத்தில் நின்று ஈசுரன் தன் உள்ளத்திற் பிரகாசிக்குமாறு அவ்வுள்ளத்தைத் தூய்மை செய்துகொள்ளவேண்டும். அவனை அவன் மனைவி தொழுக. அவன் அத்தொழுகையைத் தன்பால் விளங்குகிற ஈசுரனிடம் சமர்ப்பிப்பான் அவ்வீசுரன் அதனை ஏற்று எந்த ஆபத்திலும் அவள் கற்பைக் காத்துத் தருவதோடு அவளைக் கொண்டு பல அற்புதங்களையும் நிகழ்த்துவிப்பான். அவள் பெய்யென மழை பெய்வது சத்தியம்.

மனைவியின் கற்பாற்றலை அவன் எப்படிக் குலைக்கிறான்? செம்புஞ் சிலையும் அசேதனங்கள். மனிதன் அறிவு போல் அடர்ந்தெழும் தன் அறியாமையின் வலியால் அவற்றினுங் கீழாதலுண்டு. அதனால் அவன் நாத்திகனாயிருப்பான். கயவனாய் அயோக்கியனாய் மூடனாய்க் கொலை செய்வதற்கும் அஞ்சாத பரம துஷ்டனாயிருப்பான். சுரனாவான் இவனெனத் தெளிய மாட்டாதவனாயிருப்பான் எதிர்ப்பட்ட உருவங்கள் சமாதிகள் முதலியவற்றின் முன் வியவஸ்தையின்றிக் கைகுவிப்பான். விதித்தன இவை விலக்கியன இவை என்பதை ஓரான். வாழ்க்கைத் துணைவி என்பதற்குப் பொருள் தெரியாமல் மனைவியை மூர்க்கத்தனமாய் நடத்துவான், பொய்க்கதை, வேடிக்கைக் கதை, ஊர்கதை, மடமையையே விஷயமாகக் கொண்ட பல வர்ண மெட்டுப்பாடல் முதலியவற்றைப் படித்துப் பாடிக் களித்து போது போக்கு மளவிற்கே மனைவியைப் படிப்பிப்பான். அவளை ஸினிமா ஆடல் பாடல் அரங்கு முதலிய தகாத விடமெல்லாங் கூட்டிப் போவான். தனியே போக விடுவான், ஆண்களின் நடுவில் மேடை மேல் உட்காரவைத்து அவர் நெஞ்சிற் புகுமாறு வசதி செய்து கொடுப்பான். இவைபோல்வன இன்னும் பல செய்வான், அவையே அவளது கற்பாற்றலைக் குலைப்பன. செயற்கருஞ் செயல் அவளாற் செய்ய முடியவில்லை அதுகொண்டு அவன் வள்ளுவரைக் குறைகூறுவானேன்? அது மடமை அவர் பொய்யில் புலவர், தெய்வப் புலவர். அவருரை பொருளுரை, கணவனைத் தெய்வமெனத் தொழுக என்பது பெண்ணுக்கு ஈசுரனின் ஆஞ்ஞை. அதனையே அப்புலவருஞ் சொன்னார். ஆகலின் கற்பு ஈசுரசம்பந்தமுடைய தாதல் அறியப்படும்.

குடும்பம் என்பது பல உறவின் முறைகளையுடையதாய் மனித வர்க்கத்தில் மாத்திரம் இருந்து வருகிற ஒரு தொகுதி. அ·தொரு முழுப்பொருள், கெளரவத்துக்குரியது. அவ்வுறவின் முறையாரெல்லாம் அதன் உறுப்புக்கள். உடம்பைவிட்டு ஓர் உறுப்புத் தனிக்குமானால் அவ்வுறுப்பு உருப்படாது. அதுபோலக் குடும்பப்பெண்களுமாவர். அவர் வீட்டிலேயே இருக்க வேண்டும். குடும்ப மேற்பார்வையிலேயே இருக்க வேண்டும். பெண்ணியலின் நிலை பேற்றிற்குப் புத்தகப் படிப்புக்கூடத் தேவையில்லை. குடும்பத்தின் அன்பும், அணைப்பும், கண்காணிப்பும், சூழ்நிலையுமே போதும். விபரீத சிந்தனைக்கு அங்கு இடமேயிராது. தற்காத்துத் தற்கொண்டாற்பேண அதுவே வாய்ப்பான இடம். குடும்பச் சூழலில் கற்புக்கெட ஏதுவில்லை. போகூழால் தவறியவள் கண்டு கொள்ளப்படுவாள். அவளைக் குடும்பத்திலிருந்து விலக்கிவிட வேண்டும். அ·து இரக்கமின்மை யாகாது அவளுக்கு இரக்கங் காட்டுவது மதியீனம். அவளைத் திருத்திச் சேர்த்துக் கொள்வதென்பது ஆகாது. அவளை நாய் வாய்வைத்த சட்டியென்பர் பழம் பெரியோர் கற்புநெறி தவறியவள் குடும்பத்திலிருந்து பஹிஷ்கரிக்கப்படுவள் என்ற அச்சம் பெண்ணினுள்ளத்தில் இருத்தப்படவேண்டும். தவறியவளிடங் காட்டும் இரக்கம் குடும்பத்திலுள்ள மற்றப் பெண்களின் உள்ளத்திட்பத்திலும் தளர்ச்சியை யுண்டாக்கும் 'தீயாரை' என்று தொடங்குஞ் செய்யுளில் 'அவரோ டிணங்கியிருப்பதுவுந் தீது' என்றார் ஒளவையார். 'தலையின் இழிந்த மயிரனையர்' என்ற தொடரில் அத்தீயபெண் முதலிடம் வகிப்பாள் அழுகிய வுறுப்பை அறுவை வைத்தியத்தால் அப்புறப்படுத்தினாற்றான் மற்றையுறுப்புக்கள் பிழைக்கும்.

Link to comment
Share on other sites

கற்புடையன எனச் சொல்லப்படுகிற வேறு சில பிராணிகளிடம் பகுத்தறிவில்லை ஆகலின் அக்கற்புடைமையை அவற்றின் இயற்கையெனச் சொல்லிவிடலாம். ஆனால் மனித வர்க்கத்து நாத்திகப்பெண் தன் பகுத்தறிவால் கற்பு வேண்டுமா? வேண்டாமா? என ஆராயக் கூடியவள். கற்பு வேண்டாமென்றே அந்நாத்திகக் கொள்கைகேற்ப அவள் பகுத்தறிவிற்படும் கற்பு வேண்டாமையும் நாத்திகமுங் கைகோத்து நடப்பன ஆகலின் கற்பைக் காத்தல் அவளுக்கு வீண்சுமை. கற்புக்குப் பயன் தருவார் உலகில்யாருமிலர். அது சொல்லப்பட்டது. பயன் தரக்கூடிய ஒரே சாட்சியாகிய ஈசுரனையோ அவள் சூனியமென்பாள். கற்பை மதியாத பெண்ணுக்கு அதனை யிழப்பது பற்றிக் கவலையிராது. கற்பிழந்தவளும் பெண்தானே என அவளிடம் உத்தமி மதிமயக்கங் கொள்ளப்படாது. 'மக்களே போல்வர் கயவர்' என்றார் வள்ளுவர். அப்படியே பெண்ணே போல்வாள் கற்புக் கெட்டவளும். அவள் உத்தமியின் நலத்துக்குக் காவலாகாள், பிரதிநிதியாகாள். அவளிடம் படிப்பு, பட்டம், பதவி, பணம் முதலியன இருக்கலாம். அவைகொண்டு அவளை வரவேற்று மதிப்பது சமூகத்துரோகம் அவற்றையும், அவளையும் உத்தமி துச்சமெனக் கருதித்தள்ளவேண்டும். அவற்றைக்கண்டு அவள் பின் செல்கிற ஆடவரும் உளர் அவரையும் துச்சமென அவ்வுத்தமி தள்ளுக.

கலைகள் பல. அவை உலககலை. தெய்வ கலையென இரண்டு வகையுள் அடங்கும். கல்விக்குப்பயன் அறிவும், அறிவுக்குப் பயன் ஒழுக்கமும் ஆகும். உலகில் உலககலை வல்லார் எத்தனைபேர்? அவருள் எத்தனைபேர் அவ்வொழுக்கமுடையராயிருந்தனர

Link to comment
Share on other sites

'மேலை நாடுகளை இதற்கு உதாரணமாகக் காட்டுவது பொருளற்றது....இச்சூழ் நிலையில் அங்கு காரித்துப்புவது எல்லாம் இங்கு நம்மில் பொறுப்புள்ள சிலருக்கு சிலாக்கியமாகத் தென்படுவதும் இந்ததேசத்தின் துரதிருஷ்டமே. (19-5-1962 தினமணி) என்றார் ஆசிரியர். 'சிலாக்கியமாகத் தென்படும்' பகுதி அந்நடையுடை பாவனையில் இல்லையா? கற்புப் பிறநாடுகளிலும் இருக்கலாம். ஆனால் பாரத நாட்டவருள் எத்தனைபேர் அந்நிலையை வற்புறுத்தப் போராடுகின்றனர்? அப்பண்பாட்டை யறியவும், வியந்து மகிழவும், மேலை நாட்டிற்கொண்டுபோய் விளம்பரஞ் செய்து பெருமிதங் கொள்ளவும் சுதந்திரம் வேண்டும். அதனை அவர் இன்னும் பெற்றிலர்.

'நமக்கு என்று தேசிய நலன்கள் உண்டு. அவற்றை கவனித்துக் கொள்வது தான் நமது பிரதான அயல்நாட்டுக் கொள்கையின் நோக்கமாக இருக்கமுடியும் என்ற பிரக்ஞையே அவரது (நேருவினது) சர்க்காருக்கு எப்பொழுதுமே இருந்ததில்லை. ஆகையால் தான் எல்லாநாடுகளிலும் நம் நாட்டவர் உதைபந்துகளாகி வருகின்றனர்' (19-5-1964 தினமணி) என்ற ஆசிரியப்பகுதி கொண்டும் நம் தேசியப் பண்பாடு அவராற் கருதப்படுவதில்லை யென்பதைத் தெரியலாம்.

'நம் நாட்டினர் வெளிநாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு வருவதால் நாட்டிற்கு நன்மை கிடைக்காது என்பதே எனது கருத்து' என்றார் (14-1-1964 தினமணி) ராஜாஜி.

அது முற்றிலுஞ் சரியென்றே சொல்ல வேண்டும். ஏன்? சுதந்திர புருஷர் நாடுவிட்டு நாடு செல்வதிற்றான் பயனுண்டு. பாரத நாட்டினரின் உள்ளமும் ஒழுக்கமும் இன்னுஞ் சுதந்திரத்துக்கு மீண்டில. அவராலேயே இந்நாட்டுப் பெண்கள் சிறிது சிறிதாக மேலை நாட்டுப் பெண்களாகி வருகின்றனர். அது மாற வேண்டும். கற்புநெறி காக்கப்படும் விதத்தில் உலகந் திருத்தியமைக்கப்படவேண்டும். அதனைச் செய்தற்குரியார் யார்? எல்லா ஆண்களும் அது செய்ய முன்வரமாட்டார். கற்பு நெறிப் பெண்கள் பெற்றெடுத்த ஆண்மக்களே அதற்குரியார். அவர் இன்றே முன் வருக. இன்னே ஒருப்பட்டெழுக.

ஆணுக்கும் அக்கற்பு வேண்டாமா என வினவுவர் சிலர். ஆணுக்கு ஒழுக்கமே வேண்டும், கற்பு வேண்டாம். பெண்ணுக்கே கற்பு வேண்டும். 'சுயமரியாதை யியக்கச் சூறாவளி' முதலிய நூற்களில் அவ்விவரங் காண்க.

ஆணுக்குப் பெண் அடிமை என்பதன் சின்னமே பெண்ணின் கற்பு என்பது சிலர். அப்பேச்சை அவர் தம் வீட்டிற்கே உபதேசமாக்கி உபகாரிகளாகுக. அவர் முகத்திலும் வள்ளுவர்கண்ட பெண்விழியாள் கற்பு நெறிப்பெண் கணவனுக்கு மாத்திரம் அடிமை. அந்நெறி தவறியவள் சுதந்திரம் என்னும் பெயரால் பலருக்கு அடிமையாவாள். உலகில் பெண்களே ஆண்களாற் கொள்ளப்படுஞ் சரக்காகவுள்ள விடுதிகளன்றி, ஆண்கள் பெண்களாற் கொள்ளப்படுஞ் சரக்காகவுள்ள விடுதிகள் கிடையா. மக்கள் நாடுவிட்டு நாடு துரத்தப்படுகின்றனர். அப்போது குண்டர் பலர் தலைப்படுகின்றனர். அவரெல்லாம் ஆண்கள்; அவர்கள் பெண்களைப் படுத்தும் அவமானம் கொஞ்சமா? குண்டர் என்ற சொல்லுக்குப் பெண்பாலுண்டா? பெண் குண்டர் ஆண்களைத் தூக்கிச் சென்றனர், அவமானப்படுத்தினர் என்ற செய்தி யொன்றேனும் பத்திரிகையில் வந்திருக்கிறதா? ஆணுக்குப் பெண் அடிமையென்பது உடற்கூறு பற்றிய இயற்கையாகும்.

பல நாடுகளில், பல காலங்களில், பல சமுகங்களில் கற்புக் கையாளப்படும் விதம் இதுவெனச் சொன்ன 'தமிழகத்தில் குறிஞ்சி வளம்' என்ற புத்தகம் 146 ஆம் பக்கத்தில்

'படியாத மக்கள் பாவத்திற்கஞ்சி, இழி செயல் ( கற்புத்தவறல்) புரிவதில்லை...ஆனால் மிகவும் படித்த மக்களுக்குப் பாவத்தில் நம்பிக்கை கிடையாது. கற்பை இழப்பதைக் குற்றமாகவும் அவர்கள் கருதுவதில்லை. எதிர்காலத்தில் தனிமனைவியுரிமை என்றநிலை மாறி, அதிலும் பொதுவுடைமைக் கொள்கை ஏற்படலாம் என்பது உலகப் பேரறிஞரான இரஸ்ஸலின் கருத்தாகும்'

என முடிக்கின்றது. தீய செயலே பாவம் எனப்படும். அதற்குப் பயன் துன்பமனுபவித்தல், மிகவும் படித்தவர் அவ்விரண்டிலும் நம்பிக்கை கொள்ளாரென்றால் அவரைப் படித்தவரென்பது படிப்பு என்ற சொல்லின் பொருளையே இழிவுபடுத்துவதாகும். அப்படிப்புக்காக உலகிற் செலவாகும் பணம் எத்தனை கோடி? அத்தனையும் கடலிற் கொண்டுபோய்க் கொட்டிவிடலாம். கற்பிழப்பதைக் குற்றமாகக் கருதாத படிப்பையுடைய ஆண் பெண்கள் படிப்போடு கூடிய மிருகங்களா காரா? படியாமலே கற்பின்றி வாழ்கிறது மிருகம். வாசனையை யறியாமலே வாசனைத் திரவியப் பொதியை ஒரு பிராணி சுமக்கிறது. அதுபோல் அவ்வாண் பெண்களும் படிப்பின் பயனறியாமல் படிப்பை வீணிற் சுமக்கின்றனர் எனக்கூறி அவரை அம்மிருகம் நகையாதா?

உடையானின்றி உடைமையும், உடைமையின்றி உடையானுமில்லை, நிலமோ, ஆடுமாடுகளோ, அவைபோன்ற பிறவோ பொதுவுடைமையாகலாம் யாருக்கு? மனிதருக்கு. அவை மனிதரைத் தமக்குப் பொதுவுடைமை யாக்கிக் கொள்ளுமா? உடைமையின் நிலையில் இருக்க அவர் இசையார். பெண்ணுலகு பொதுவுடைமை யாவதாயிருந்தால் அதுவும் அந்நிலம், மிருகம் ஆகியவற்றின் நிலையைத்தானே யெய்தும்? அதனை அங்ஙனம் பொதுவுடைமை ஸ்தானத்தில் தள்ளித்தாமே உலக சர்வாதிகாரிகளாயிருந்து அதனையும் முறைகெட்டுத் தம்மிஷ்டம்போற் பயன்படுத்திக் கொள்ளவே மிகவும் படித்த் மக்கள் என்பாருள் ஆண்கள் திட்டமிடுகின்றனர் போலும். பெண்கள் அதற்கு இரையாக இசையலாமா? ஒரு பெண் அதற்கு இசைந்தால் தன் வாழ்நாளில் எத்தனை ஆண்களுக்கு அடிமையாக நேரும்? அப்போது அவள்கதி யாதாகும்? அதனை அவள் எண்ணுக. ஆகவே பெண்ணியலுடையாள் ஒருவனுக்கே ஆட்பட்ட உத்தமியாய் வாழ்வதே அவளுக்கு ஆக்கமாகும் என்க.

பாக்கியம் என்பாள் 36-வயதுள்ள விதவை. அவளது கற்பைக்கெடுக்க வந்தான் ஒருவன். அவனை அவள் வெட்டிக் கொன்று தன் கற்பைக் காத்துக்கொண்டாள். தென்னார்க்காடு ஜில்லா ஜட்ஜ் ராமையாப் பிள்ளை அக்கொலை வழக்கை விசாரித்து அவளை விடுதலை செய்தார்.

'இது ஒரு அபூர்வமான வழக்கு. இதில் குற்றம் சாட்டப்பட்ட பெண் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வீரச்செயல் புரிந்து இருக்கிறாள். பாக்கியத்திடம் கொலை செய்யப்பட்ட ஆள் மிருகத்தனமாக நடந்து இருக்கிறார். அந்த நிலையில் கற்பை காப்பாற்றிக் கொள்ள அவள் கொலை செய்து இருக்கிறாள். கற்பை காப்பாற்றிக்கொள்ள அவன் செய்த வீரச்செயல் பாராட்டுக்குரியது. எனவே அவள் குற்றவாளி அல்ல. அவளை விடுதலை செய்கிறேன். (21-8-1964 தினத்தந்தி)'.

என்று தீர்ப்பில் அந்நீதிபதி கூறியுள்ளார். மிகவும் படித்த மக்கள் என்ற தொடருக்கு இலக்கியமாவார் அந்நீதிபதியும் அவர்போன்றாருமா? கற்பை யிழப்பதைக் குற்றமாகக் கொள்ளாதவரா?

பெண்ணுக்கேயென வற்புறுத்தப்படுகிற அக்கற்பால் உளதாகும் பயன்றான் யாது? அதனைச் சிறிதேகண்டு இந்த நூலைப் பூர்த்தி செய்யலாம். ஒருவனுக்கு மனைவியர் இருவர். ஒவ்வொருத்தி ஒவ்வொரு பிள்ளையைப் பெற்றாள். அவ்விரு பிள்ளைகளுக்கும் தாய் வயிறு வேறு வேறு. ஆயினும் அவர் சகோதரர் எனப் படுகிறார். சகோதரர் உடன் பிறந்தவர், ஒருவயிற்றிலுதித்தவர். தாய் வயிறு வெவ்வேறாயிருந்தும் அப்பிள்ளைகள் சகோதரரானது எப்படி? தம்மைப் பெற்ற தந்தைவயிறு ஒன்றாயிருப்பதானாலேயே அவர் சகோதராயினர். பிள்ளைகள் தம்மைப்பெற்ற தந்தையையும், தந்தை தான் பெற்ற பிள்ளைகளையும் அறியவேண்டும். அறிவிக்கும் உரிமை தாய்க்கேயுண்டு. அவளுங் கற்புடையளாயிருந்தாற்றான் அது முடியும். அவள் கற்புக்குலைந்தவளாய்விட்டால

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.