Jump to content

2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா, பாக், இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது


Recommended Posts

2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா, பாக், இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது

டெல்லி: 10வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி 2011ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன.

9வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த போட்டியை ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.

10வது உலகக் கோப்பைப் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்த முயன்றன. ஆனால் ஆசிய நாடுகள் இதைத் தட்டிச் சென்று விட்டன.

10வது உலக்க கோப்பைப் போட்டியின் தொடக்க விழா வங்கதேசத்தில் நடைபெறும். மொத்தம் 53 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவில் 22 போட்டிகளும், பாகிஸ்தானில் 16, இலங்கையில் 9, வங்கதேசத்தில் 6 போட்டிகளும் நடைபெறும்.

ஒரு அரை இறுதிப் போட்டி கொழும்பிலும், இன்னொரு அரை இறுதிப் போட்டி லாகூரிலும் நடைபெறும். இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறுகிறது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, நாக்பூர், சண்டிகர், அகமபாதாபாத் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்கு முன்பு ஆசிய நாடுகள் இணைந்து (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை) கடந்த 1987ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தியுள்ளன. அப்போது ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது. தற்போது 2வது முறையாக கூடுதலாக வங்கதேசத்தையும் சேர்த்துக் கொண்டு அடுத்த உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது.

thatstamil

Link to comment
Share on other sites

1987 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மட்டும்தான் நடந்தது

1996ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளும் ஆசியாவில்தான் நடந்தது இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தானில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 வது உலக்கிண்ணப்போட்டி 2015ல் அவுஸ்திரெலியா, நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. 2011ல் உலக்கிண்ணப் போட்டியின் தொடக்க விழா பங்காள தேசத்தில் நடைபெறுகிறது. 2019ம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.