Jump to content

பிலிப்பைன்ஸ் அதிபரின் படுகொலை வழியை பின்பற்றப் போகும் சிறிசேன – சர்ச்சையில் சிக்கினார்


Recommended Posts

பிலிப்பைன்ஸ் அதிபரின் படுகொலை வழியை பின்பற்றப் போகும் சிறிசேன – சர்ச்சையில் சிக்கினார்

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் அதிபர்  றொட்றிகோ டுரேர்ரே நடத்தி வரும் போரை வரவேற்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இது உலகிற்கு முன்உதாரணம் என்றும் மெச்சியுள்ளார்.

பிலிப்பைன்சுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு, பிலிப்பைன்ஸ் அதிபர் றொட்றிகோ டுரேர்ரேயுடன் இணைந்து நடத்திய நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, “குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக நீங்கள் முன்னெடுக்கும் போர், உலகிற்கு முன்உதாரணம். தனிப்பட்ட முறையில் நான் அதனை வரவேற்கிறேன்.

போதைப்பொருள் பாவனை எனது நாட்டுக்கும், அச்சுறுத்தலாக உள்ளது. இந்த தீங்கைக் கட்டுப்படுத்த உங்கள் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறியிருந்தார்.

போதைப்பொருளுக்கு எதிராக பிலிப்பைன்சில் அதிபர் றொட்றிகோ டுரேர்ரே ஈவிரக்கமற்ற போரை முன்னெடுத்து வருகிறார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்பாக தேடுதல்கள், சோதனைகள் நடத்துவதற்கும் , கைது செய்வதற்கும், காவல்துறைக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு, போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக 5,000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது 20,000 பேருக்கு அதிகம் என்று மனித உரிமை செயற்பட்டாளர்கள் கூறுகின்றனர்.

பிலிப்பைன்ஸ் காவல்துறை மேற்கொள்ளும் சட்டத்துக்குப் புறம்பான இந்த படுகொலைகள் குறித்து, அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Rodrigo-Duterte-MS.jpg

இந்த நிலையில் பிலிப்பைன்சின் வழிமுறையை தானும் பின்பற்றப் போவதாக சிறிலங்கா அதிபர் கூறியிருப்பது, அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

சிறிலங்காவில் கடுமையான போதைப் பொருள் குற்றச்சாட்டுகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று சிறிலங்கா அதிபர் ஏற்கனவே கூறியிருந்தார்.

அவரது அந்த அறிவிப்புக்கு அனைத்துலக அளவில் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.

பிலிப்பைன்ஸ் அதிபரின் அணுகுமுறை மனித குலத்துக்கு  எதிரான மோசமான குற்றம் என்று விமர்சித்துள்ள அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும், இதனை ஆசிய தலைவர்கள் பின்பற்றக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, உடனடியாக சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பதிலளிக்கவில்லை.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று கிறேம் முகாம் (Camp Crame) என அழைக்கப்படும்  பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தலைமையகத்துக்கு செல்லவுள்ளார்.

இங்கு சிறிலங்கா அதிபருக்கு அரசுமுறை மரியாதை அளிக்கப்படும் என்று பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு அரசுத் தலைவர் ஒருவருக்கு, பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தலைமையகத்தினால் இதுபோன்ற மரியாதை அளிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் கிறேம் முகாமின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இங்கு, சிறிலங்கா அதிபருக்கு போதைப் பொருள் குற்றங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விரிவான விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளன.

போதைப்பொருள் குற்றங்களை தடுக்க பிலிப்பைன்ஸ் அதிபரின் வழியை பின்பற்றப் போவதாக அறிவித்த சிறிலங்கா அதிபர், பிலிப்பைன்சில் போதைப்பொருள் குற்றங்களை தடுப்பதற்கு ஈவிரக்கமற்ற குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படும் பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தலைமையகத்துக்கு செல்வது இன்னும் கடுமையான எதிர்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.