Jump to content

மீண்­டும் அர­சி­யல் சூழ்ச்சி -மகிந்த இர­க­சி­யத் திட்­டம்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘‘நாம் எதிர்­பார்த்த வகையில் மைத்­திரி –- மகிந்த கூட்­ட­ணிக்­குள் மோதல் வெடித்­துள்­ளது. இதை­ய­டுத்து எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான அணி­யி­னர் தனி­வ­ழி­யில் சென்று மீண்­டும் ஓர் அர­சி­யல் சூழ்ச்சி ஊடாக அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற இர­க­சி­யத் திட்­டம் வகுக்­கின்­ற­னர். இந்­தத் தக­வல் வெளி­யில் கசிந்­துள்­ளது. எனி­னும் இந்த அர­சி­யல் சூழ்ச்­சி­யை­யும் நாம் வெற்­றி­க­ர­மாக முறி­ய­டிப்­போம்.’’

-இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிர­தித் தலை­வ­ரும் வீட­மைப்பு மற்­றும் கலா­சார அலு­வல்­கள் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

‘சர்­வா­தி­கா­ரப் போக்­கு­டைய ராஜ­பக்ச அணி­யி­னர் மீண்­டும் ஆட்­சிப்­பீ­டம் ஏற நாம் ஒரு­போ­தும் இட­ம­ளி­யோம். அவர்­க­ளின் திட்­டங்­களை முளை­யி­லேயே கிள்­ளி­வி­டு­வோம். அதி­கார வெறி பிடித்­த­வர்­கள் – பதவி ஆசை பிடித்­த­வர்­கள் வெட்­கம் இன்றி ஜன­நா­ய­கத் தீர்ப்­புக்கு முர­ணாக – குறுக்கு வழி­யில் – திருட்­டுத்­த­ன­மாக ஆட்­சி­யைப் பிடிக்க முயல்­வது வழமை. அவர்­க­ளுக்கு தோல்வி என்­பது சக­ஜ­ய­மா­கி­வி­டும்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் இந்த ஆட்சி, தடை­க­ளைத் தகர்த்­தெ­றிந்து தொட­ரும். எமது ஆட்­சியை எவ­ரும் இனி­மேல் கவிழ்க்க முடி­யாது. நாடா­ளு­மன்­றத் தேர்­தலோ அல்­லது அரச தலை­வர் தேர்­தலோ எந்­தத் தேர்­த­லை­யும் அர­ச­மைப்பு விதி­மு­றை­க­ளுக்­க­மைய எதிர்­கொள்ள நாம் தயா­ராக இருக்­கின்­றோம். அனைத்­துத் தேர்­தல்­க­ளி­லும் நாமே வெற்­றி­வாகை சூடு­வோம். நாட்டு மக்­கள் உண்மை நிலை­யைப் புரிந்­து­விட்­டார்­கள். அவர்­கள் எமது பக்­கமே நிற்­கின்­றார்­கள்.

‘ஒக்­டோ­பர் 26 அர­சி­யல் சூழ்ச்சி’ மாதிரி மீண்­டும் ஒரு அர­சி­யல் சூழ்ச்சி அரங்­கே­றி­னால் நாம் மட்­டு­மல்ல நாட்டு மக்­களே அணி­தி­ரண்டு முறி­ய­டிப்­பார்­கள். ஒக்­டோ­பர் 26 அர­சி­யல் சூழ்ச்­சியை முறி­ய­டித்­த­தில் நாட்டு மக்­க­ளுக்­கும் பெரும் பங்கு உண்டு – என்­றார்.

https://newuthayan.com/story/17/மீண்­டும்-அர­சி­யல்-சூழ்ச்சி-மகிந்த-இர­க­சி­யத்-திட்­டம்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.