Jump to content

தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...!

_18367_1547622902_E38B4BB7-0CCE-4D88-9186-B918D51E602C.jpeg

வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது!

வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது.

கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது! உயிரணைந்து போனாலும் சரணடையாத புலிகள் கட்டளைக்குப் பணிய மறுக்கின்றனர். சரணடையாவிட்டால் கப்பலைத் தாக்கப் போவதாக மீண்டும் ஒரு கட்டளை! புலிகளின் முகங்களில் கேலிப்புன்னகை! கப்பல் வெடித்துச் சிதறுகிறது! விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியையும் தோழர்களையும் உயிருடன் பிடித்துவிடலாம் என்ற பாரதத்தின் நப்பாசை கப்பலுடன் சேர்ந்து சிதறிப்போகிறது!

கிட்டுவும் அவருடன் வந்த 12தோழர்களும் நிலையாமை என்ற பூலோக வாழ்வுக்கு விடை கொடுத்துவிட்டு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நின்று நிலைக்கும் பேரின்ப நிலையை எட்டுகின்றனர்.

ஆம்! கிட்டுவும் தோழர்களும் வங்கக்கடலில் சங்கமமாகி ஒரு மாபெரும் தியாக காவியம் வீர வரிகளால் எழுதி விட்டனர்!

வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும்

அகத்தே நகும் - இது வள்ளுவன் குறள்.

ஆகாய நீர், காற்று, பூமி, நெருப்பு எல்லாமே இந்தியாவை பார்த்து அகத்தை நகைக்கவில்லை! எல்லா மூலைக்கும் கேட்கும் விதமாக எள்ளி நகையாடின. எப்படியிருப்பினும் -

நாம் மூத்த தளபதி கிட்டுவை இழந்தோம்! கிட்டு - எதிரிகளைக் கலங்க வைக்கும் ஒரு ஒப்பற்ற வீரத் தளபதி! கிட்டுவின் அணி வருகிறது என செய்தி கிடைத்தாலே சிங்களப் படை அஞ்சிப் பின்வாங்கும் அளவுக்கு அவனிடம் ஒரு ஆளுமை கொப்பளித்தது! களத்தில் கிட்டு இறங்கவிட்டால் சக போராளிகளிடம் பலம் பன்மடங்கு பெருகிவிடும்.

கிட்டு ஒரு அரசியல் வாதி!

விடுதலையுணர்வை மக்களுக்கு விதைப்பது, போராட்டப் பணிகளில் மக்களை ஈடுபடுத்துவது, தெளிவான அரசியல் பார்வையை தோழர்களுக்கு ஊட்டுவது, எந்நேரமும் மக்களோடு மக்களாக உறவாடுவது - இவையெல்லாம் அவன் அரசியல் ஆளுமை!

கிட்டு ஒரு ராஜதந்திரி!

இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த போது இந்தியாவிலேயே தலைமறைவாக இருந்து கொண்டே எமது போராட்டத் நியாயங்களை வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு விளக்கினான். ஆங்கில வெளியீடுகள் மூலம் பரப்புரை மேற்கொண்டான். இலண்டனில் இருந்து கொண்டு பன்னாட்டு போராட்ட அமைப்புகளுடனும் தொடர்புகளை மேற்கொண்டான்.

கிட்டு ஒரு ஊடகவியலாளன்!

பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி எனப் பல்வேறு ஊடகங்களை ஆரம்பித்து தானே நெறிப்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஊடகப் பலம் சேர்த்தவன் கிட்டு.

கிட்டு ஒரு புகைப்படக் கலைஞன்!

கிட்டுவின் கழுத்தில் என்றுமே இணைபிரியாமல் இருப்பவை இரண்டு. ஒன்று - சயனைட் குப்பி! மற்றது புகைப்படக் கருவி! எந்த நெருக்கடியான சண்டையிலும் அவன் ஒரு கையில் துப்பாகியுடனும் மறுகையில் கமெராவுடனும் நிற்பான். எந்த ஒரு சம்பவத்தையும் அவன் ஆவணப்படுத்த தவறுவதில்லை.

கிட்டு ஒரு ஓவியன்!

அவனின் ஓவியங்களில் கற்பனைகளும் கனவுகளும் சிறகடிக்கும்! ஆத்மார்த்த உணர்வுகள் கொப்புளிக்கும் விடுதலையுணர்வு வீறுகொண்டெழும்" அவனின் ஓவியங்கள் வெறும் படைப்புக்களல்ல! மனிதரை செயல் நோக்கி உந்தித்தள்ளும் விசைகள்!

கிட்டு ஒரு கவிஞன்!

அவனின் கவிதைகளில் மண் மணக்கும்! வல்லை வெளிப் பூவசரசும், உடல் தழுவும் உப்புக்காற்றும் மெல்ல நடை பயிலும். கள்ளிறக்கும் கந்தனும், மீன்பிடிக்கும் மரியானும் சமத்துவம் தேடி அவன் கவிதைகளில் சங்கமிப்பார்கள். காதல் உணர்வு கடல் கடந்தும் சிறகடிக்கும்!

இப்படி இப்படியாக -

கிட்டு ஒரு பன்முக ஆளுமையின் அவதாரம்! ஒரு விடுதலைப் போராட்டத் தளபதியின் தலைசிறந்த முன்னுதாரணம்!

இந்தி அரசே!

அந்த அற்புதத்தை வங்கக்கடலில் வைத்து அழித்தாய்!

இப்போது கேட்கிறோம்!

அவனை உன்னால் எமது நெஞ்சிலிருந்து அழிக்க முடியமா?

எம், இதய நரம்புகளில் இன்றும் விடுதலை உணர்வை மீட்டிக்கொண்டிருக்கும் அவனின் நினைவுகளை அழிக்க முடியுமா?

முடியாது!

உன் இலட்சக்கணக்கான படையினராலும் முடியாது! உன் பலம் வாய்ந்த புலனாய்வு அமைப்புக்களாலும் முடியாது!

ஏனெனில் - கிட்டு எங்கள் மண்ணில் ஒவ்வொரு துகள்களிலும் உயிர் வாழ்கிறான்!

செண்பகப்பெருமாள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த சிறப்பு தளபதியும்,தேசியத் தலைவரின் உற்ற தோழமையுமான தளபதி  கேணல் கிட்டு உட்பட ஏனைய  பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்...!

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 26 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

||தாய்மண்ணின் நினைவுகளுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்……

கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

லெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்)

மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)

கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)

கடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)

கடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை)

கடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

_18367_1547622902_35C3940D-E39F-43B2-A5A

 

_18367_1547622902_F2504C4E-4B57-4560-B16

 

_18367_1547622902_0E120FFC-35D0-4AFC-8DD

_18367_1547622902_85FAD776-C7AE-48E9-A5F

_18367_1547622902_BAF42D43-BC46-4E72-933

 

http://www.battinaatham.net/description.php?art=18367

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசியத் தலைவரின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு அவர்களின் சிந்தனையிலிருந்து...

spacer.png
தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

தமிழீழ தேசியத் தலைவரின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு அவர்களின் சிந்தனையிலிருந்து...

 

 

2rZASSDXM4QUPOBF7xLy.jpg

 

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் அா்த்தம் இருக்கிறது ஆனால் எம்முடைய வாழ்க்கையின் அர்த்தத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும்


Lphp5BCxZWnfdNQDJwYF.jpg

 

உமது படிப்பையும் வேலையும் ஒரு வேலைக்கூரிய கடமையாகச் செய்யாமல் அதற்கு முமு அர்த்தம் கொடுக்கக் கூடிய மாதிரியாக செய்க

 


Jgc2csYBTGtUdYjNJtFQ.jpg

 

நான் உல்லாச விரும்பி அல்ல அது என் இயல்பு அல்ல உல்லாசத்தை விரும்பினால் உல்லாசமாக இருக்கலாம் அஃது என்னால் முடியாது


QQ7zRu1C876LYFooNpNM.jpg

 

அறிவும் வயதும் அனுபவமும் உயர்வும் கிடைக்கும் பொமுது நாம் பணியவேண்டும் பணிவு என்பது உலகையும் மக்களையும் புரிந்துந்துகொண்டு அவர்களுக்காக உழைத்தல் என்பதையே குறிக்கும்.


nAdSnSBEnD3ZqIz3imlr.jpg

சிந்தனையில் எளிமையாக வாழவும் மனித சேவையும் எப்பொமுதும் முக்கியமாகக் கருத வேண்டும்

 

 

 

மூலம் -தமிழீழ ஆவணக்காப்பகம்

 
 
Link to comment
Share on other sites

 

மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் 21.10.1991 அன்று தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து…
அன்பின் டாலிக்கு,
ஜெனிவாவில் ஒரே வேலைதான். பொழுது போகிறது. மிகவும் அழகிய நாடு. வெளியே போவதுமில்லை. உள்ளத்தில் அமைதி இருந்தால்தான் எதையும் ரசிக்கமுடியும். எனது நாட்டையும் மக்களையும் பிரிந்திருப்பதே மிகவும் தாங்கமுடியாத விடயம்………….. இந்நிலையில் எனக்கு அமைதி எங்கே?
உள்ளத்தில் அமைதியாக இருப்பதுதான் பெரிய கொடை. அதுதான் உண்மையான அழகு. ஆனால் வெறும் புற அழகுகள் எப்படி அமைதியைக் கொடுக்கமுடியும்.
ஒவ்வொரு மனிதனும் பிறக்கின்றான், இறக்கின்றான், ஆனால் அவன் மனித குலத்திற்கு ஆற்றும் சேவைதான் நிலைத்திருக்கின்றது. உன்னால் முடிந்தவரை சேவைசெய். பொழுதுகளை வீணே கழிக்காதே.
மேலும், சுயநலமும் குறுகிய பிற்போக்குச் சிந்தனையும் கொண்ட வட்டத்தில்தான் நீர் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர். ஆனால் இவற்றைக்கண்டு இவர்களின் மாயைக்குள் சிக்குண்டு விடாதே. கவனமாயிரு, ஆழ்ந்து சிந்தி. அங்கு பலர் நுனிப்புல் மேயும் ஆடுகளைப் போல் எதையும் ஆழ்ந்து பாராமல், வெறும் சித்தாந்தங்களைப் படித்துவிட்டு வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கின்றனர். “நான்கு குருடர்கள் யானையைப் பார்த்தது போல்”தான் இவர்கள் விடுதலைப் போராட்டத்தை விமர்சிப்பதும்.
எதையும் எல்லோரும் விமர்சிக்கலாம். ஆனால், அந்த விமர்சனங்கள் கூட சில வழிகளைக் காட்டவேண்டுமே ஒழிய, வெறும் மாயையில் வாழமுடியாது. அப்படியானால் அவற்றை வெறும் ஏட்டுச்சுரக்காய் என்று கூறுவதுதான் வழக்கம்.
உலகத்தில் எல்லோருடைய கருத்தையும் கேள்; சிந்தி, நன்றாகச் சிந்தி; நீயாகச் சிந்தி; யாரும் உனக்காகச் சிந்திக்கமாட்டார்கள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். உலகத்தில் நாம் படிக்கவேண்டியவை ஏராளம். நீயும் அப்படியே செய். வெறும் புத்தகத்தை மட்டும் படிக்காமல் உலகத்தையும் வாழ்க்கையையும் படித்துக்கொள்.
ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு மணிப் பொழுதும் எதையோ எமக்குச் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன. அதைச் சரியாகப் புரிந்துகொண்டவனும் படித்துக் கொண்டவனும்தான் ஞானியாகின்றான்.
அதைவிடுத்து வெறும் வரட்டுச் சித்தாந்தங்களைப் பேசும் போலித் தத்துவவாதிகளின் பசப்பில் ஏமாந்து விடாதே. சிந்தனையும் தேடலுமே ஒருவனை உயர்த்தமுடியும். ஆனால் எப்போதும் மனிதனுடைய சிந்தனை மற்றவர்களுக்காகவும் மனித இனத்தை முன்னேற்றுவதற்காகவும் இருக்கவேண்டும், அதைவிடுத்து தமது விற்பன்னத்தைக் காடவும் மற்றவர்களை விமர்சிக்கவும் மட்டும் இருக்கக்கூடாது.
என் வாழ்நாளில் நான் ஒரு போராளியாக, என் மக்களுக்காக, அவர்களின் சுபீட்சத்துக்காகப் போராடும் வாய்ப்புக் கிடைத்ததை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். எனது ஆயுட்காலம் வரை இப்பணியைச் செய்யவேண்டும் என்பதே என் விருப்பம் நாம் எமது மக்களுக்கு அமைதியையும் சுபீட்சத்தையும் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
எமது எதிரியோ எமது தேவையை, கோரிக்கையை ஏற்பதாக இல்லை. தான் கொடுக்கும் சலுகைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறானே ஒழிய, எமது உரிமையைக் கொடுக்கத் தயாராக இல்லை.
நாம் பேராசை பிடித்தவர்களோ, உலகின் நடைமுறை தெரியாதவர்களோ அல்ல, நாம் கேட்கின்ற அடிப்படை உரிமை, எமது மண்ணிலே எமது மக்கள் உயிர்வாழ்வதற்கான உரிமைதான். அதைவிடுத்து மாகான சபையாலோ அல்லது அதைவிடக் கூடிய அதிகாரங்களைக் கொண்ட சபையாலோ எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. எமது மக்களின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்படும் ஒரு வடிவத்தைத்தான் நாம் தேடிக்கொண்டு இருக்கின்றோம்.
அன்புடன்
ச.கிட்டு.
மூலம்: என் இனியவளுக்கு நூலிலிருந்து…
May be an image of 1 person and standing
 
 
 
 
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.