Jump to content

3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

à®à®±à¯à®à®¾à® à®à¯à®£à¯à®à®¾à®à¯à®à®®à¯

3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்.

பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் விற்பனை அதிகம் ஆகும்.

அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன.

தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இந்த பொங்கல் பண்டிகையின் போது தீபாவளி பண்டிகையை விட கூடுதலாக ரூ.175 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் விழாவை சிறப்பித்து கொள்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், பொழுபோக்குகாக திரைப்படங்களுக்கு செல்பவர்களை விட, டாஸ்மாக் கடைகளுக்கு செல்பவர்களே அதிகமாக உள்ளது தெரிகிறது.

இந்தாண்டு புத்தாண்டின் போது எதிர்பார்க்கப்பட்டதை விட விற்பனை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.750 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்தது. இருப்பினும், கடந்தாண்டை காட்டிலும் இந்த பொங்கலுக்கு மது விற்பனை அதிகரித்துள்ளது.

பொங்கல் தினத்தன்று 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ந்தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், காணும் பொங்கல் தினமான 17-ந்தேதி மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் 500 கோடியை தாண்டியிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், பலர் கடந்த வெள்ளிக்கிழமை அன்றே தங்களின் சொந்த ஊர்களுக்கு படை எடுத்தனர். திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய நாட்களிலேயே குடிமகன்கள் அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி இருப்பில் வைத்துக்கொண்டனர். இதுவும் விற்பனை அதிகரிக்க ஒரு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/pongal-liquor-sales-3-days-exceeding-rs-500-crore-339051.html

மிகவும்  கவலையான செய்தி. 
வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக மட்டுமே, இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக எதற்கு நீங்கள் கவைப்படுகின்றீர்கள். விற்பனை இன்னும் அதிகரித்தால்தான்  சீனாவின் கடனை அடைக்க ஸ்ரீலங்காவுக்கு உதவ முடியும்......!  😕

Link to comment
Share on other sites

எதிர் காலத்தில் தமிழ் நாட்டடில் இப்படி பொங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

Ãberquellen Bier : Stock-Foto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

எதிர் காலத்தில் தமிழ் நாட்டடில் இப்படி பொங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

Ãberquellen Bier : Stock-Foto

புலம்பெயர்ந்த நாங்கள் எல்லோரும்  வாழும் நாடுகளில் நுரை பொங்கும் மதுபானகடைகள் நிறையவே உள்ளது.

கனடாவை தவிர ஏனைய புலம்பெயர் நாடுகளில் மதுபானங்கள் எங்கும் எப்போதும் வாங்கலாமென நினைக்கின்றேன்.

ஜேர்மனியில் அப்படித்தான்.ஆனால் இப்படியான நாடுகளில் மக்கள் மதுபான கடைகளுக்கெதிராக எதுவுமே சொல்வதில்லை.

ஏனெனில் மது மற்றும் புகைத்தல்  விடயமாக  பூரண சுகாதார அறிவுறுத்தல்களை அரசு வழங்கிக்கொண்டேயிருக்கும். மதுபானங்களின் தரம் அரச கட்டுப்பாட்டில் இருக்கும்.உடல் நலக்கேடான மதுபானஙளுக்கு தடை விதிப்பார்கள்.

இதற்குமேல் அவர் குடிச்சு சீரழிஞ்சால் அது அவரின் சொந்தப்பிரச்சனை.

நிற்க..
தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுபானங்களை விட நுரை பொங்கும் பியர்கள் அதிக கேடு விளைவிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

பிரான்சிலும் இவை தாராளமாக கிடைக்கும். அவர்கள் சந்தோஷத்துக்கு அருந்துகின்றார்கள்.நாங்கள் சண்டைக்காகவே முழுங்குகின்றோம்......!  😕

Link to comment
Share on other sites

On 1/20/2019 at 4:28 AM, குமாரசாமி said:

கனடாவை தவிர ஏனைய புலம்பெயர் நாடுகளில் மதுபானங்கள் எங்கும் எப்போதும் வாங்கலாமென நினைக்கின்றேன்.

ஆமா நோர்டிக் நாடுகளும் உங்களுக்கு அருகிலேதான் இருக்குதே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/18/2019 at 10:09 AM, தமிழ் சிறி said:

அரசுக்குதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன

இந்தாங்க சார் பில் .!.🙂

ம் .. என்னடா இதுல கருவேப்பிலை , கொத்தமல்லி, பால் பொக்கற் பேர் எல்லாம் எழுதியிருக்கு .? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா நோர்டிக் நாடுகளும் உங்களுக்கு அருகிலேதான் இருக்குதே 

அந்தப்பக்கம் நான் போனதுமில்லை....வந்ததுமில்லை கண்டியளோ....தெரியாத விசயத்தை தெரிஞ்ச மாதிரி எழுதிப்போட்டு.....பிறகு அடி,கடி வாங்கேலாது பாருங்கோ...
அது சரி உந்தப்பக்கம் என்னமாதிரி? ஜேர்மனியை மாதிரி நினைச்ச நேரத்திலை எங்கையும் எப்பவும் வாங்கலாமோ? 😅

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.