Jump to content

ஐ.தே.முன்­னணி அரசு கூட்­ட­மைப்­பின் கைதி: விமல் வீர­வன்ச


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்­கிய தேசிய முன்­னணி அரசு கூட்­ட­மைப்­பின் பய­ணக் கைதி­யாக மாறி­யுள்­ளது. கூட்­ட­மைப்­பின் இணக்­கப்­பாடு இல்­லா­மல் வடக்­கில் எந்த நட­வ­டிக்­கை­யை­யும் அர­சால் மேற்­கொள்ள முடி­யாது. அத்­து­டன் வடக்கு அபி­வி­ருத்தி அமைச்­சும் கூட்­ட­மைப்­பின் கீழே இருக்­கின்­றது என தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­தார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யால் கத்­த­ர­முல்­லை­யில் அமைந்­துள்ள கட்­சிக் காரி­யா­ல­யத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே வீர­வன்ச இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அரசு இன்று தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பண­யக் கைதி­யாக மாறி­யுள்­ளது. அத­னால் கூட்­ட­மைப்­பின் இணக்­கப்­பாடு இல்­லா­மல் அமைச்­ச­ர­வை­யில் எந்­தத் தீர்­மா­னத்­தை­யும் மேற்­கொள்­ள­வும் முடி­யாது. நிறை­வேற்­ற­வும் முடி­யாது. அதே­போன்று வடக்­கில் எந்த அபி­வி­ருத்­தியை மேற்­கொண்­டா­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அனு­ம­தி­யு­டனே மேற்­கொள்­ள­வேண்­டும். இது­தொ­டர்­பான கூட்­டுப்­பொ­றி­மு­றை­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக மாவை சேனா­தி­ராசா அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

அத்­து­டன் வடக்கு அபி­வி­ருத்தி அமைச்சு தலைமை அமைச்­சர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு கீழே இருக்­கின்­றது. கூட்­ட­மைப்­பு­டன் மேற்­கொள்­ளப்­பட்ட இணக்­கப்­பாட்­டுக்­க­மை­யவே ரணில் விக்­ர­ம­சிங்க இத­னைத் தனக்­குக் கீழ் கொண்­டு­வந்­துள்­ளார். வடக்­கில் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வ­தற்கு கூட்­ட­மைப்­பின் இரண்டு பேர் தலைமை அமைச்­ச­ருக்­குக் கீழ் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். வடக்கு அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக ரணில் விக்­ர­ம­சிங்க இருந்­தா­லும் அமைச்­சுப்­பொ­றுப்பு முற்­றாக தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கீழே இருக்­கின்­றது.

அத்­து­டன் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு தெரி­வித்து நாடா­ளு­மன்­றத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கைத் தீர்­மா­னத்­துக்கு தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­மைக்­கான வெகு­ம­தியே வடக்கு அபி­வ­ருத்தி அமைச்சு.

ஆனால் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யில் பெய­ர­ள­விலே இருக்­கின்­றது. ஆனால் அதுவே இன்று அர­சின் முக்­கிய அதி­கா­ரம் மிக்க அணி­யாக இருக்­கின்­றது.

மேலும் வடக்கு அபி­வி­ருத்தி அமைச்சை அவர்­க­ளுக்­குக் கீழ் வைத்­துக்­கொண்டு இன்று வடக்­கில் கூட்­ட­மைப்பு இன­வாத, பிரி­வி­னை­வாத பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. கூட்­ட­மைப்­பின் முன்­னாள் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் இரு­வர் முல்­லைத்­தீவு நயாரு விகா­ரைக்­குக் வலுக்­கட்­டா­ய­மாக நுழைந்து அங்­கி­ருப்­ப­வர்­களை எச்­ச­ரித்­துள்­ள­னர்.

அத்­து­டன் அங்கு கோயில் கட்­டப்­போ­வ­தா­க­வும் தெரி­வித்­துள்­ள­னர். இவர்­க­ளுக்கு எதி­ராக சட்­டம் நிலை­நாட்­டப்­ப­டு­வ­தில்லை. சுமந்­தி­ர­னின் கட்­ட­ளை­யின் பிர­கா­ரமே வடக்­கில் பொலி­ஸும் செயற்­ப­டு­கின்­றது. அரசு கூட்­ட­மைப்­பின் பண­யக் கைதி­யாக இருக்­கும் வரைக்­கும் இந்த நிலை தொட­ரும் – என்­றார்.

https://newuthayan.com/story/10/ஐ-தே-முன்­னணி-அரசு-கூட்­ட­மைப்­பின்-கைதி.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.