Jump to content

நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வெற்றி

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ள நிலையில், பிரெக்ஸிட் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் தெரேசா மேயினால் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், தெரேசா மேயின் 2 வருட கால ஆட்சி தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்து எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பைன், தெரேசா மீது நம்பிக்கையில்லா தீர்மானமொன்றைக் கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதமும் வாக்கெடுப்பும் நேற்று நடைபெற்றது.

Theresa.jpg

வாக்கெடுப்பின் நிறைவில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மேயிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 306 பேரும் எதிராக 325 பேரும் வாக்களித்திருந்தனர்.

வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதையடுத்து, பிரெக்ஸிட் நடவடிக்கையை முன்னெடுக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பணியாற்ற வேண்டுமென தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மார்ச் மாதம் 29 ஆம் திகதி, பிரித்தானியா விலகுவது தொடர்பிலான தீர்மானமிக்க இறுதி வாக்கெடுப்பு அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்டது.

இதன்போது, 432 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒப்பந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 202 வாக்குகளும் எதிராக 230 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/48188

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையாரை விட்டால் பொறுப்பை எடுப்பதற்கு ஒருத்தரும் தயார் இல்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.