Jump to content

இறுதிக் கட்ட தமிழர் முஸ்லிம்கள் பெரும் கருத்தாடல். - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

FINAL STAGE OF THE TAMIL MUSLIM DISCOURSE.
இறுதிக் கட்ட தமிழர் முஸ்லிம்கள் பெரும் கருத்தாடல்.
.
நன்பன் சித்திக் அவர்களுக்கு.
.
M YM Siddeek மச்சான் நான் என்ன நினைக்கிறேன் நீ என்ன நினைக்கிறாய் என்பது கருத்துகள்தான். அவற்றுக்கு சம்பந்த பட்ட மக்கள் ஆதரவு தராவிட்டால் அவை செயல்படுவதில்லை. வடகிழக்கு விவகாரத்தில் தமிழர் முஸ்லிம்கள் என மொழியால் ஒன்றுபட்ட இனத்தால் வேறுபட்ட இரு இனங்கள் செயல் படுகின்றன. அவை வெவ்வேறு அரசியல் தலைமைகளை கட்டி எழுப்பியுள்ளன. அவற்றின் தேசிய சர்வதேசிய நடவடிக்கைகளின் வரலாறும் வெற்று பட்டவை. இதைவிட சிங்கள பிரதேசங்களும் உள்ளன. இந்த நிலையில்தான் 1987ல் தமிழ்ப் போராளிகளது மிக குறைந்த பட்ச்சக் கோரிக்கையாக இந்திய அழுத்தத்தால் மாகாண சபைகளும் வடகிழக்கு இணைப்பும் நடை முறைப் படுத்தப் பட்டது. பின்னர் தமிழ் போராளிகளும் இந்தியாவும் மோதியதால் மட்டுமே இந்திய படைகள் வெளியேற்றமும் வடகிழக்கு இணைப்பு ரத்தாகும் சூழலும் ஏற்பட்டது. அன்றைய சூழல் வேறு. அன்று இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கும் அமரிக்க அணிக்கும் இடையில் நானா நீயா என்கிற போட்டி இருந்தது. அது அன்றைய இலங்கை அரசு போரளிகளின் தீர்மானங்களில் கணிசமான செல்வாக்கை செலுத்தியது. ஆனல் இன்று இந்தியாவும் மேற்குலகுக்குமிடையில் இந்து சமுத்திரக் கொள்கையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் எதிர்காலத்தை 1987 போல இனங்களின் ஒற்றுமையும் அவற்றின் அமைப்பு ரீதியான ஆற்றலும் இந்து சமுத்திரத்தில் செல்வாக்குச் செலுத்தும் சர்வதேச நாடுகளின் நிலைபாடும்தான் தீர்மானிக்கும். 1983 போல இன்னொரு இனக்கலவர நிலை உருவாகினால் இலங்கை பிழபடும் என்பதில் எனது சிங்கள நண்பர்களுக்குக்கூட எள்ளவும் சந்தேகம் இல்லை. இலங்கை தமிழர்களின் உள்வாரி அரசியலில் கூட்டமைப்பும் சர்வதேச அரசியலில் 
புலம்பெயர்ந்த தமிழர்களும் கூட்டமைப்பும் முக்கிய செயற்பாட்டாளர்களாக உள்ளனர். இரு தரப்புக்களுக்கு மிடையில் வெளிப்படையான கருத்து வேறுபாடுகளும் மறைமுகத் தொடர்புகளும் உள்ளன. 
.
இந்தபின்னணியில்தான் உங்கள் பின்வரும் கூற்றை ஆராய வேண்டும். உங்கள் கூற்று இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒன்று ‘’புலம்பெயர் தமிழர்கள் பற்றி கூறவந்து தொடர்பு அற்ற வகையில் முஸ்லிம்கள் பற்றியும் கூறவந்து முழு பூசனிக்காயையும் சோற்றுக்குள மறைக்க தேவை ஒன்றில்லை என்று தான் நினைக்கிறேன்’’ இரண்டு ‘’சிங்கள அரசாங்கம் எதனையும் தரப்போவதில்லை. இது தமிழ் அரசியல் வாதிகட்கும் நன்கு தெரியும். ஆனால் அவர்கள் சமஷ்டி பற்றி பேசுவது அவர்களது தமது வயிற்றுப்பிழைப்பிற்காக என்று தான் நான் நினைக்கிறேன்.’’

இன்று முஸ்லிம்களுக்கும் வட கிழக்கு தமிழருக்குமிடையில் தீர்க்க முடியாத ஒரே பிரச்சினை வடகிழக்கு இணைப்பா பிரிப்பா என்பதுதான். அதைதாண்டிவந்து தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தைக் கட்டமுடியாத வேதனையை என்போன்றவர்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளோம். கூட்டமைப்பு மட்டுமல்ல கருணா பிள்ளையான்போல சிங்கள கட்சிகளோடு வேலை செய்கிற தமிழ் தலைவர்கள் கூட வடகிழக்கு இணைப்பில் உறுதியாக நிற்கின்றனர். எனவே முஸ்லிம்கள் பற்றிய புலம் பெஅர்ந்த தமிழரின் சிக்கலும் வடகிழக்கை இணைப்புப் பற்றியதுதான். ஊர் பிரதேச எல்லைகலைக் கடந்து தேசிய சர்வதேசிய ரீதியாக தமிழர் வடகிழக்கு இணைப்பில் உறுதியாக நிற்கிறார்கள். அதுபோல முஸ்லிம்கள் இணைப்புக்கு எதிராக உள்ளனர். இதை உணர்ந்துதான்மன்சூர், தோழர் அஸ்ரப் போன்ற முஸ்லிம் அறிஞர்களும் தலைவர்களும் முஸ்லிம் மாகாணம் தென்கிழக்கு மாகாணமென மாற்று தீர்வை வைத்தார்கள். அம்பாறை மாவட்ட தமிழர்களின் உறுதியான நிலைபாடு வடகிழக்கு இணைப்பாக இருப்பதுதான் தென்கிழக்கு மாகாணக் கோரிக்கையை முஸ்லிம் தலைமை கைவிட்டதற்கான காரணமாகும். இந்தச் சூழல்தான் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் தமிழ் மாகாணங்கள் தொடர்பான சிந்தனைக்கு வழி வகுத்தது. எனவே இன்று இலங்கை தமிழர் புலம்பெயர்ந்த தமிழருக்கு இருக்கிற ஒரே சிக்கல் தமிழ் முஸ்லிம் அலகுகளின் எதிர்காலம் பற்றியதாகும். தமிழர் மத்தியில் முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமை கருத்தை முன்னெடுத்துச் சென்றவன் என்கிற வகையில் எனக்கு இது முக்கியமான கருத்தாகும்.

இன்று தமிழர் முஸ்லிம்களுக்கு இடையில் இருக்கிற தீர்க்க முடியாத ஒரே பிரச்சினை வடகிழக்கு மீழ் இணைப்புப் பற்றியதாகும். அதுதான் தமிழர் முஸ்லிம்கள் விடையளிக்க வேண்டிய பெரும் கேழ்வியும் ஆகும். நீங்கள் சொல்லுவதுபோல சிங்களவர் இணைக்கப் போவதில்லை என்கிற நம்பிக்கையுடம் வாளாதிருத்தல் முஸ்லிம்களுக்கு ஆபத்தானது. 1987லும் சிங்களவர் நிலைபாட்டு மட்டும்தான் தீர்மானிக்கும் சக்தி என்றிருந்து முஸ்லிம்கள் ஏற்கனவே இத்தகைய ஆபத்தை முஸ்லிம்கள் எதிர் நோக்கினார்கள். எனவே மாற்றுத் திட்டங்களையும் மாற்று அணிகளையும் முஸ்லிம்கள் உருவாக்கி வைத்திருக்க வேண்டும். இது உங்களுக்கு தெரியும். முழுபூசனிக்காயை சோற்றுள் மறைப்பது நானல்ல நண்பா.

உங்கள் இரண்டாவது கூற்று சிங்கள அரசு எதனையும் தரபோவதில்லை என்பது அரசியல் வாதிகளுக்குத் தெரியும் என்கிறீர்கள். முதலில் 1987ல் எப்படி இணைந்த வடகிழக்கு மாகணமும் மாகான சபைகளும் உருவானது? சிங்கள அரசினை 13ம் திருத்த சட்டத்தை நிறைவேற்ற வைத்த அரசியல் எது? அந்த அரசியல் இன்றும் தொடர்கிறது. இன்று கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இந்து சமுத்திரத்தின் பலமான அணிகளோடு 1987ல் இருந்ததைவிட உச்ச நட்போடு இருக்கிறார்கள். சிங்களவர் தரபோகும் சலுகைகளின் வெளிகளுக்கு வெளியிலேயே தமிழர் அரசியல் எப்போது இயங்கி வருகிறது. அப்படி இயங்கித்தான் இணைந்த மாகாணசபையை சிங்கள அரசுகலிடமிருந்து பெற்றார்கள். இங்கும் முஸ்லிம் அரசியல் சிந்தனைகள் வேறுபடுகிறது.. உங்கள் இரண்டாவது கூற்றின் இறுதிப்பகுதி தமிழர் சஸ்ட்டி கோருவது வயிற்றுப் பிழைப்புக்காக என்கிறீர்கள். இதனை கேட்டு முஸ்லிம்களே நகைப்பார்கள். பண்டார நாயக்காவின் காலத்தில் இருந்து இன்றுவரை பிரதமர் பதவியை தவிர வேறு எந்தப்பதவியானாலும் கேழுங்கள் தருகிறோம் என சிங்கள கட்சிகள் தங்கத்தம்பாளத்தில் வைத்து மந்திரிப் பதவிகளை நீட்டும் பிண்ணணியிலேயே கண்ணீரும் இரத்தமும் கொடுஞ்சிறையுமான சமஸ்டிக் கோரிக்கையை முன் வைத்துப் போராடுகிறார்கள். ஏற்கனவே மாகாண சபையை பெற்றிருக்கிறார்கள். தயவு செய்து 70பது வருட தமிழர்கலின் போராட்டங்களை கொச்சைபடுத்துகிற வயிற்றுப் பிழைப்புக்காக என்கிர சொல்லை வாபஸ்பெறுமாறு வேண்டுகிறேன். 
.
2

நிலத்தொடர்பற்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மாகாணங்கள் தொடர்பாக நான் வைத்த மாற்றுத்திட்டங்கள் முஸ்லிம்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் அடிப்படையிலான அதிகாரமுள்ள மாவட்ட அல்லது மாநில அலகுகளைக் கொண்ட வடகிழக்கு மாகாணசபையாகும். அதனை முஸ்லிம்கள் தரப்பில் யாரும் ஆதரிக்கவில்லை. இறுதித்தீர்வு சமயத்தில் தமிழர் தரப்புகள் இணைகிறபோது முஸ்லிம் அலகுகளின் நிலை என்ன என்பது பற்றிக்கூட முஸ்லிம்கள் மத்தியில் விவாதிக்கப் படவில்லை. இதுபற்றி முஸ்லிம்கள் இலங்கை அரசுடனும் தங்கள் சர்வதேச ஆதரவு நாடுகளோடும் பேச வேண்டும். ஏனேனில் 1987ல் மாகாணசபை வந்தபோது இருந்ததுபோல எவ்வித ஏற்பாடுகளுமற்ற சூழலில் முஸ்லிம்கள் இருப்பது ஆபதானதாகும்.
.

இன்று இலங்கைத்தீவில் தீவில் சீனாவுக்கும் இந்தியா மேற்கு மற்றும் ஜப்பான் அணிக்கும் பனிப்போர் நிகழ்வது ஒன்றும் இரகசியமல்ல. நாளைய வரலாற்றின் அடிப்படையை பெரும்பாலான தமிழ் முஸ்லிம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் சிங்கள மலையக மக்கள் என்ன நினைக்கிறார்கள் அவர்கள் சம்பாதித்துள்ள தேசிய சர்வதேசிய பலம் என்ன என்பதுதான் தீர்மானிக்கப் போகிறது. ஏனென்றால் வடகிழக்கு இணைப்பும் மாகாண சபையும் போராடும் தமிழர்களின் குறைந்த பட்ச்சக் கோரிக்கையாக இந்தியா தீர்மானித்து இலங்கை ஏற்றுக்கொண்டு உருவானதல்லவா? இந்தியாவுக்கும் போராளிகளுக்கும் மோதல் வந்திராவிட்டால் இன்றும் இணைந்த வடகிழக்கு மாகாணம் இணைப்பாட்சியாகி நிலைத்திருக்கும் அல்லவா? அப்பவே நான் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுத்திருக்கிறேன். என் முஸ்லிம் நட்ப்பு நிரந்தரமானது. அதுபற்றி சந்தேகம் கொள்ளாதீர்கள்.

வடகிழக்கு இணைப்பு பிரிப்பு பிரச்சினை பொறுத்து முஸ்லிம் மக்கள் என்ன முடிவெடுக்க வேண்டுமென்பதை தமிழன் தீர்மானிக்க முடியும் என்று நினைக்கிற தமிழர்களுக்கு எதிராக போராடி வருகிறேன். நம் இருவர் நிலைபாடும் இதுவல்லவா? இதற்காக பலதடவை நான் உயிரையே பணயம் வைதிருக்கிறேன் என்பதையும் நீ அறிவாய். இதே தர்கம்தானே முஸ்லிம்களுக்கும் நண்பா. வடகிழக்கு இணைப்பு பிரிப்புப் பற்றி தமிழர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என முஸ்லிம்கள் தீர்மானிக்க முடியாதல்லவா? இது பற்றி முஸ்லிம் தலைவர்களும் தமிழ்தலைவர்களும் பேசி ஒரு இணக்கப் பாட்டுக்கு வந்தால் நம்மைவிட மகிழ்ச்சி அடைகிறவர்கள் யாருமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.