Jump to content

ஜெனீவா தீர்மானம் குறித்து சிறிசேன அதிரடி நடவடிக்கை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா தீர்மானம் குறித்து சிறிசேன அதிரடி நடவடிக்கை?

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய இணை அணுசரணையை விலக்கிக்கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

மார்ச் மாதம் ஐநா அமர்வு இடம்பெறவுள்ள நிலையிலேயே சிறிசேன இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தனது இணை அனுசரனையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டினை  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது

இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கவேண்டாம் என அவ்வேளை ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியாக பணியாற்றிய தற்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசின்ஹ கேட்டுக்கொண்டதாகவும்  எனினும் அவ்வேளை வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட மங்கள சமரவீர இந்த ஆலோசனையை புறக்கணித்து தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கினார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

srisena_de_1.jpg

இதனை உறுதிசெய்வதற்காக மங்கள சமரவீரவை தொடர்புகொள்ளமுயன்றவேளை அது பலனளிக்கவில்லை என  அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

 

http://www.virakesari.lk/article/48046

 

Link to comment
Share on other sites

"ஒப்பரேசன் ஜெனீவா" வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு விட்டது, மைத்திரி/ரணில்/சுமந்திரன் கூட்டால் ...

1.  தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தமிழ் மக்களின் பிரட்சனைகளுக்கான நிரந்தர தீர்வுப்பொதி இ லங்கை ஜனநாயக பாரளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2. வடக்கு/கிழக்கில் தமிழ் பேசும் ஆளுனர்கள்!

... ஜெனீவாவிற்கு இவை போதாதா???

... மேலும்... . வடக்கில் ஜனநாயக தேர்தல் மிக விரைவில்!  ... நாளை தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை எனும் பேரத்தில் "யுத்த குற்றச்சாட்டுக்கள்" இரு தரப்பாலும் இளைக்கப்பட்டது என்றும், இலங்கை தீவிலுள்ள இனங்களின் நலினக்கத்திற்காக பழையவைகளை மறப்போம்/மன்னிப்போம் என எமது பிரதிநிதிகள் சொல்லத்தான் போகிறார்கள்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.