Jump to content

விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி!

Recommended Posts

விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி!

விடுதலைப் புலிகளை சுமந்திரன் விமர்சிப்பவர். அவர் புலி எதிர்ப்பாலர் என பலரும் சுமந்திரனுக்கு எதிரான பிரசாரத்தில் பபயன்படுத்துகின்றமை வழமை. இதை நன்கு உணர்ந்திருந்த – இதற்கு நேரடியாக அவரிடம் பதிலை எதிர்பார்த்த – மூத்த ஊடகவியலாளரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகை ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் பளீச்சென்று சுமந்திரனைப் பார்த்து விடுதலைப் புலிகள் தொடர்பாக தங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்விக்கணையைப் போட்டுடைத்தார்.

அவரது கேள்விக்கு ஆணித்தரமாகவும் உறுதியாகவும் தெளிவாகவும் பதிலளித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன்.

Untitled3-copy.jpg

நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ”காலைக்கதிர்” பத்திரிகை ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன், கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மீது அபாரமாண கேள்விக்கணைகளை பத்துகளாக வீசினார். அவரால் வீசப்பட்ட ஒவ்வொரு கேள்விக் கணைகளுக்கும் மிகவும் நிதானமாகக் களமாடினார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

அவரது பதிலில் –

விடுதலைப் புலிகளைப் பற்றி நான் ஓர் இடத்திலும் குறைகூறியமை கிடையாது. இன்றைக்கும் குறைகூறப்போவது கிடையாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வோர் அரசியல் தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள். அப்படியானால் தந்தை செல்வாவைக் குறைகூறலாம் ஏமாற்றப்பட்டுவிட்டார் என்று. ஜி.ஜி.பொன்னம்பலத்தைக் குறைகூறலாம், அமிர்தலிங்கத்தைக் குறைகூறலாம். குறைகூறுவதனாலே நாம் எதனையும் அடையப்போவது கிடையாது. அந்தந்த வேளைகளிலே – அந்தந்த நிலைமைகளிலே – அவர்கள் எடுத்த தீர்மானத்தை நாங்கள் பின்னொரு காலத்தில் விமர்சிக்க முடியாது.

1963 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா நீதிமன்றத்தின் முன்நின்று அரசைக் கவிழ்ப்பதற்கான குற்றவாளியாக ஆயுள் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்தநேரத்தில் நீதிபதி அவரிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார்.

அவர் குற்றவாளிக் கூண்டிலே இருந்து சொன்ன பதில்,” 1961 ஆம் ஆண்டு நாங்கள் – ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தலைவர்கள் கூடி ஒரு முடிவை எடுத்தோம். எங்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்ற வன்முறையை எங்களுடைய மக்களாலே தாங்கிக்கொள்ளமுடியாமல் இருக்கின்றது. அiதை எதிர்ப்பதாக இருந்தால் நாங்களும் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுத்தோம். அது அன்று நாங்கள் எடுத்த தீர்மானம் அது.. அதற்கு முதல்வனாக நான் நியமிக்கப்பட்டேன். ஆம், நாங்கள் அந்த வன்முறைகளைச் செய்தோம்” என்று சொல்லிவிட்டு, அவர் நீதிபதிகளிடத்தில் ஒரு விடயத்தைச் சொல்லுகின்றார். ”1961 ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த தீர்மானத்தை நான் இப்போது உங்களுக்குச் சொல்லுகின்றேன். நான்’ சொல்வதை நீங்கள் விளங்கிக்கொள்ளப்போவதில்லை. அது சரியென்று நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அன்றைக்கு இருந்த சூழ்நிலையிலே – அன்றைக்கு நாங்கள் இருந்த மனேனிலையிலே அதுசரியென நாங்கள் அதைச் செய்தோம்” என்று சொல்கின்றார்.

அதேபோன்றுதான் இங்கும். திம்புக் கோட்பாட்டில் இருந்து பின்வாங்கினோம், சந்திரிகா அம்மையாரின் தீர்வுத் திட்டத்தைப் பின்வாங்கினோம், விடுதலைப் புலிகள் தொடர்பான செயற்பாடுகள். இவை அனைத்தும் அந்தந்தச் சூழ்நிலைகளில் அந்தந்தத் தலைவர்களுக்கு சரியாகப் பட்டன. அதை நாங்கள் இன்று விமர்சிக்கக்கூடாது. அதை நாங்கள் இன்று தவறு என்று சொல்லக்கூடாது. அந்தச் சூழ்நிலையில் அது அவ்வாறே. – என்றார்.

http://www.newsuthanthiran.com/2019/01/13/விடுதலைப்-புலிகள்-தொடர்ப/

Link to comment
Share on other sites

அடுத்த தேர்தலுக்கான புலம்பல்கள் ஆரம்பம் ........ 

வடிவேல் பாணியில் கேட்க்கிறன் ... எங்க புலிகள் மீது தப்பு சொல்லித்தான் பாரேன் ....

Link to comment
Share on other sites

22 hours ago, பெருமாள் said:

இதற்கு சம்சும்முகள் பதிலளிக்கப்போவதில்லை! இங்கு யாழில் யாராவது ... ஜஸ்ரின்?? யூட்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nellaiyan said:

இதற்கு சம்சும்முகள் பதிலளிக்கப்போவதில்லை! இங்கு யாழில் யாராவது ... ஜஸ்ரின்?? யூட்????

உண்மையிலேயே சும் பதில் அளிக்கவில்லையா அல்லது நீங்கள் விரும்பிய பதில்களை அளிக்கவில்லையா?😎

நான் தொடர்ந்து கேட்கவில்லை, முழு கேள்வி பதிலையும் பார்த்து விட்டுச் சொல்கிறேன். ஆனால்,பதில் அளிக்கப் படா விட்டால் அது கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல, சும் தனது மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தத் தகுதியற்றவர் எனவும் அர்த்தமாகும்! இதனால், அடுத்த தேர்தலில் சும் மைத் தூக்கியெறிந்து வித்தியரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்! அவர் சும் செய்யாததைச் செய்வார்! (பிறகு முதல் சதுரத்திலிருந்து நாங்கள் ஆரம்பிப்போம் இங்கே!)

ஐயா தாசன், போன தேர்தலில் "புலிகளைப் புகழ்ந்து வாக்குக் கேட்க மாட்டேன்" என்று சொல்லி, அது போலவே விருப்பு வாக்குகள் வென்றும் காட்டினாரே சும்?   இதென்ன புது சலஞ்? "புலிகளைத் திட்டி வாக்குப் கேட்டுப் பாரேன்!" எண்டு? அப்ப, அவருக்குப் புலிகளைத் திட்ட வேண்டிய தேவை இல்லாட்டிலும், திட்டி ஒருக்கா ரெஸ்ற் பண்ணிப் பார்க்க வேணுமோ? அதுக்குப் பிறகும் அவர் வென்றால் அடுத்தது என்ன?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

"புலிகளைப் புகழ்ந்து வாக்குக் கேட்க மாட்டேன்" என்று சொல்லி, அது போலவே விருப்பு வாக்குகள் வென்றும் காட்டினாரே சும்?   இதென்ன புது சலஞ்? "புலிகளைத் திட்டி வாக்குப் கேட்டுப் பாரேன்!" எண்டு?

சுமத்திரன் ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ போல் அதுசரி முன்னொரு திரியில் சுமத்திரன் செய்த தமிழர்களுக்கு நல்ல வேலை என்ன என்று கேட்டு இருந்தன் உங்களிடம் பதில் வரவில்லை வருமா ? வராதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுமத்திரன் ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ போல் அதுசரி முன்னொரு திரியில் சுமத்திரன் செய்த தமிழர்களுக்கு நல்ல வேலை என்ன என்று கேட்டு இருந்தன் உங்களிடம் பதில் வரவில்லை வருமா ? வராதா ?

பெருமாள்!   நீங்கள் சும்மா சின்னப்புள்ளையாட்டம் கேள்வி கேட்டுக்கொண்டு......
பானையில் ஏதாவது இருந்திருந்தால் அகப்பையில் வந்திருக்குமல்லவா? 

Link to comment
Share on other sites

சுமந்திரனின் தற்போதைய மக்களுக்கு நன்மையளிக்கும் செயல் - கஞ்சா காச்சுவோருக்கு ஆதரவாக இருப்பது . அதாவது தமிழ் மக்களை அழிப்பதட்கு சிங்களவருக்கு உதவும் இன்னுமோர் செயல் ...

இவர்தான் justinin கனவான் .....

கூட்ட்டமைப்பு பிழைப்பது தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி .....வாக்கு சேர்ப்பது , சரியான தலைமைகள் இல்லாததால் வென்றார்கள் .

அடுத்த தேர்தலில் விக்கி ஐயா அவர்கள் நின்றாள் சுமந்திரன் துரத்தப்படுவார் ....justin  பார்ப்பம் எப்படி சுமந்திரன் வெல்வார் என்று.

முடிந்தால் விக்கி ஐயாவுடன் நின்று பார்க்கட்டும் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

சுமத்திரன் ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ போல் அதுசரி முன்னொரு திரியில் சுமத்திரன் செய்த தமிழர்களுக்கு நல்ல வேலை என்ன என்று கேட்டு இருந்தன் உங்களிடம் பதில் வரவில்லை வருமா ? வராதா ?

சுமந்திரன் அரசியலமைப்புச் சபையில் இருந்து தீர்வுத் திட்டத்திற்கு வேலை செய்தது, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தெளிவான பேச்சாளராக இருப்பது, சிங்களவர்களின் அனுமதியின்றி மாவட்ட சபை கூட பாசாகாது என்று விளங்கி சிங்களவர்களுக்கு விளக்கமளிக்க முயற்சியாவது செய்வது, இவையே என் சும் தொடர்பான நம்பிக்கைக்குக் காரணங்கள். இதற்கு முன் வந்த தமிழ் எ. பி மார், சம்பந்தன் தவிர, தங்களுக்கு வேண்டியோருக்கு  அரச வேலை வாங்கி கொடுத்து விட்டு ஓய்வு பெறுவதையே நல்ல பணியாகக் கொண்டிருந்த நிலையில், நீண்ட கால நோக்கில் வேலை செய்யும் ஒருவராக, தீர்வுக்காக சும் இருப்பதே அவர் மீதான என் நம்பிக்கையின் காரணம். 

இலுப்பைப் பூ தான், ஆனால் இலுப்பைப் பூவை விட்டால் வெறென்ன அங்கே இப்போது இருப்பது?

8 hours ago, பிரபாதாசன் said:

சுமந்திரனின் தற்போதைய மக்களுக்கு நன்மையளிக்கும் செயல் - கஞ்சா காச்சுவோருக்கு ஆதரவாக இருப்பது . அதாவது தமிழ் மக்களை அழிப்பதட்கு சிங்களவருக்கு உதவும் இன்னுமோர் செயல் ...

இவர்தான் justinin கனவான் .....

கூட்ட்டமைப்பு பிழைப்பது தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி .....வாக்கு சேர்ப்பது , சரியான தலைமைகள் இல்லாததால் வென்றார்கள் .

அடுத்த தேர்தலில் விக்கி ஐயா அவர்கள் நின்றாள் சுமந்திரன் துரத்தப்படுவார் ....justin  பார்ப்பம் எப்படி சுமந்திரன் வெல்வார் என்று.

முடிந்தால் விக்கி ஐயாவுடன் நின்று பார்க்கட்டும் .....

இதை நான் பல தடவை சொல்லி விட்டேனெ? இப்ப தேர்தல்கள் நடக்கின்றன. தாயகத்தில் இருப்போர் நினைத்தால் சும் மை என்ன யாரையும் தூக்கி எறியலாம்! நான் குப்புறப் படுத்து ஓவென்று அழப் போவதில்லை சும் போனால். அடுத்து வருபவர் என்ன செய்வார் என்று பார்ப்பேன். ஆனால், சும் (ஒரு விவாதத்திற்காக) வென்றால், நீங்கள் அதை மக்கள் தீர்ப்பாக ஏற்றுக் கொண்டு சும் எதிர்ப்பை நிதானம் செய்வீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

சுமந்திரன் அரசியலமைப்புச் சபையில் இருந்து தீர்வுத் திட்டத்திற்கு வேலை செய்தது, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தெளிவான பேச்சாளராக இருப்பது, சிங்களவர்களின் அனுமதியின்றி மாவட்ட சபை கூட பாசாகாது என்று விளங்கி சிங்களவர்களுக்கு விளக்கமளிக்க முயற்சியாவது செய்வது, இவையே என் சும் தொடர்பான நம்பிக்கைக்குக் காரணங்கள். இதற்கு முன் வந்த தமிழ் எ. பி மார், சம்பந்தன் தவிர, தங்களுக்கு வேண்டியோருக்கு  அரச வேலை வாங்கி கொடுத்து விட்டு ஓய்வு பெறுவதையே நல்ல பணியாகக் கொண்டிருந்த நிலையில், நீண்ட கால நோக்கில் வேலை செய்யும் ஒருவராக, தீர்வுக்காக சும் இருப்பதே அவர் மீதான என் நம்பிக்கையின் காரணம். 

 பதில் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று வரனும் நீங்களும் சுமத்திரன் போல் குழப்பாமல் பதில் தரவும் இதுவரை காலமும் பதவியில் இருந்த நேரம் சுமத்திரனின் மூலம் தமிழ்மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன ?

தீர்வு இல்லையேல் அரசியலில் இருந்து ஓய்வு என்று சொன்னவர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

 பதில் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று வரனும் நீங்களும் சுமத்திரன் போல் குழப்பாமல் பதில் தரவும் இதுவரை காலமும் பதவியில் இருந்த நேரம் சுமத்திரனின் மூலம் தமிழ்மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன ?

தீர்வு இல்லையேல் அரசியலில் இருந்து ஓய்வு என்று சொன்னவர் ?

சுமந்திரன் அரசியலமைப்புச் சபையில் இருந்து தீர்வுத் திட்டத்திற்கு வேலை செய்தது, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தெளிவான பேச்சாளராக இருப்பது, சிங்களவர்களின் அனுமதியின்றி மாவட்ட சபை கூட பாசாகாது என்று விளங்கி சிங்களவர்களுக்கு விளக்கமளிக்க முயற்சியாவது செய்வது,

இவை நன்மைகள் நோக்கிய படிகள், சில நன்மைகள் கிடைத்தும் விட்டன: வெள்ளை வான் கடத்தல்கள்/கொலைகள் அரும்பொட்டில் ரணிலைச் சார்ந்ததால் தடுக்கப் பட்டன! காணிகள் சில விடுவிப்பு, மக்கள் நிம்மதியான இருப்பு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

விமான தாக்குதல்கள் நிறுத்த பட்டுருக்கு 
ஆட்லறி செல் வீச்சு சுமந்திரன் சம்மந்தரை சந்தித்த 
முதல் நாளில் 2010 கடைசியில் இருந்து நிறுத்த பட்டுருக்கு.

வன்னிக்கு பற்றரி பெட்ரோல் கொண்டு செல்ல இருந்த தடை 
முற்றாக நீக்க பட்டு இருக்கு. 

இன்னும் எவ்ளவோ இருக்கு 
எழுதினா என்ன பைத்தியம் என்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

விமான தாக்குதல்கள் நிறுத்த பட்டுருக்கு 
ஆட்லறி செல் வீச்சு சுமந்திரன் சம்மந்தரை சந்தித்த 
முதல் நாளில் 2010 கடைசியில் இருந்து நிறுத்த பட்டுருக்கு.

வன்னிக்கு பற்றரி பெட்ரோல் கொண்டு செல்ல இருந்த தடை 
முற்றாக நீக்க பட்டு இருக்கு. 

இன்னும் எவ்ளவோ இருக்கு 
எழுதினா என்ன பைத்தியம் என்பார்கள். 

ஏ 9 வீதி வெளிநாட்டு தரத்தில் போடப்பட்டிருக்கு...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

விமான தாக்குதல்கள் நிறுத்த பட்டுருக்கு 
ஆட்லறி செல் வீச்சு சுமந்திரன் சம்மந்தரை சந்தித்த 
முதல் நாளில் 2010 கடைசியில் இருந்து நிறுத்த பட்டுருக்கு.

வன்னிக்கு பற்றரி பெட்ரோல் கொண்டு செல்ல இருந்த தடை 
முற்றாக நீக்க பட்டு இருக்கு. 

இன்னும் எவ்ளவோ இருக்கு 
எழுதினா என்ன பைத்தியம் என்பார்கள். 

சரி, நீங்கள் மிகவும் மன ஆரோக்கியம் மிக்கவர்! சந்தோசமா? இப்போது சீரியசாகப் பேசலாமா?

ஒரு மாறிக்கும் மாறிலிக்கும் இடையேயான தொடர்பு என்னவென்று எனது மற்றப் பதிவில் அடுத்ததாக எழுத இருப்பதால் அதை அங்கே கண்டு கொள்ளுங்கள். நான் சொல்வது, இந்த தீவிர தேசியம் சாராத நடைமுறைகளைக் கையாள்வதால் சுமந்திரனும் சம்பந்தரும் திரும்பவும் வன்முறை நாடும் ராஜபக்ஷக்களின் கைகளில் தென்பகுதி அரசியல் விழுந்து விடாமலிருக்க முயல்கிறார்கள் என்பதால் தான். நீங்கள் மேலே சொன்ன நன்மைகள் சுமந்திரன் வர முதலே வந்து விட்டது. அதெல்லாம் ஒரு காரணி மறைந்தவுடன் வந்தது! என்ன காரணி என்று உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் அந்தக் காலத்திலும் அரசியல் கதைத்தவையல் இளையோர்களை துவக்கை தூக்கசொல்லி போட்டு ஓடிபோய் இந்தியாவில் பதுங்கினவை இப்ப மறுபடியும் .

Link to comment
Share on other sites

625.0.560.320.310.730.053.800.670.160.90.jpg

செய்தி... அண்மையில் யாழ்ப்பாணத்தில், சிறிலங்கா ஐக்கிய தேசிய கட்சிக்கு மிக வேண்டப்படவரான திருவாளர் சுமந்திரன், "உலக நாடுகளில் பல தமது நிலைப்பாட்டை , என்றுமில்லாத அளவிற்கு அங்கீகத்துள்ளன" என்ற கருத்துப்பட உரை நிகழ்த்தியிருந்தார். 

... ஏதோ நாடுகள் எம்மை அங்கீகரித்துள்ளன? எழுத்து மூலமாக சுமந்திரனிடம் கொடுத்திருக்கின்றன? ... என்று தேடினால் ... ம்கூம் .. ஒன்றையும் ...!

பின்புதான் தெரிந்தது, அவர் கூறியதில் சிறிது உண்மை இருக்கின்றது என்பது ... கேரளா எனும் நாடு அங்கீகரித்திருக்க வேண்டும்? வர்த்தகம், வடமராட்சி கிழக்கில் இருந்து நடைபெறுகிறதாம்??

.... சிலவேளை, இனி இவை மேலும் பல நாடுகளுக்கு பன்முகப்படுத்தப்படலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

இப்படித்தான் அந்தக் காலத்திலும் அரசியல் கதைத்தவையல் இளையோர்களை துவக்கை தூக்கசொல்லி போட்டு ஓடிபோய் இந்தியாவில் பதுங்கினவை இப்ப மறுபடியும் .

நாங்கள் சுமந்திரன் பற்றியல்லோ கதைக்கிறோம்? நீங்கள் சொல்வது சைக்கிள் காரரையோ? துவக்கைத் தூக்க வேண்டாம் எண்டு சும் சொன்னால் "ஜனநாயக வழியில் சிங்களவர்கள் எங்கள் உரிமைகளைத் தருவார்கள் என நாம் நம்பவில்லை" என்று சொல்லித் திரிவது சும் எதிர்ப்புக் குழு அல்லவா? அவர்களா உங்கள் பகிடியின் இலக்கு?

13 minutes ago, Nellaiyan said:

625.0.560.320.310.730.053.800.670.160.90.jpg

செய்தி... அண்மையில் யாழ்ப்பாணத்தில், சிறிலங்கா ஐக்கிய தேசிய கட்சிக்கு மிக வேண்டப்படவரான திருவாளர் சுமந்திரன், "உலக நாடுகளில் பல தமது நிலைப்பாட்டை , என்றுமில்லாத அளவிற்கு அங்கீகத்துள்ளன" என்ற கருத்துப்பட உரை நிகழ்த்தியிருந்தார். 

... ஏதோ நாடுகள் எம்மை அங்கீகரித்துள்ளன? எழுத்து மூலமாக சுமந்திரனிடம் கொடுத்திருக்கின்றன? ... என்று தேடினால் ... ம்கூம் .. ஒன்றையும் ...!

பின்புதான் தெரிந்தது, அவர் கூறியதில் சிறிது உண்மை இருக்கின்றது என்பது ... கேரளா எனும் நாடு அங்கீகரித்திருக்க வேண்டும்? வர்த்தகம், வடமராட்சி கிழக்கில் இருந்து நடைபெறுகிறதாம்??

.... சிலவேளை, இனி இவை மேலும் பல நாடுகளுக்கு பன்முகப்படுத்தப்படலாம்?

இலங்கை வரும் வெளிநாட்டுப் பிரதினிதிகள் தமிழர் தரப்பாகத் தங்களைச் சந்திப்பதை அப்படி சொல்லியிருப்பார் போல! அது சரி அந்த அங்கீகாரம் அவ்வளவு முக்கியமானதா உங்களுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

நாங்கள் சுமந்திரன் பற்றியல்லோ கதைக்கிறோம்? நீங்கள் சொல்வது சைக்கிள் காரரையோ? துவக்கைத் தூக்க வேண்டாம் எண்டு சும் சொன்னால் "ஜனநாயக வழியில் சிங்களவர்கள் எங்கள் உரிமைகளைத் தருவார்கள் என நாம் நம்பவில்லை" என்று சொல்லித் திரிவது சும் எதிர்ப்புக் குழு அல்லவா? அவர்களா உங்கள் பகிடியின் இலக்கு?

ஆவ்வ் வாங்க பதில் சொல்லுங்க என்றால் "ஒரு மாறிக்கும் மாறிலிக்கும் இடையேயான தொடர்பு" சொல்லி குழப்புவது அதெப்படி கேள்வி மட்டும் ஒழுங்கா வருது பாஸ்  ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

சரி, நீங்கள் மிகவும் மன ஆரோக்கியம் மிக்கவர்! சந்தோசமா? இப்போது சீரியசாகப் பேசலாமா?

ஒரு மாறிக்கும் மாறிலிக்கும் இடையேயான தொடர்பு என்னவென்று எனது மற்றப் பதிவில் அடுத்ததாக எழுத இருப்பதால் அதை அங்கே கண்டு கொள்ளுங்கள். நான் சொல்வது, இந்த தீவிர தேசியம் சாராத நடைமுறைகளைக் கையாள்வதால் சுமந்திரனும் சம்பந்தரும் திரும்பவும் வன்முறை நாடும் ராஜபக்ஷக்களின் கைகளில் தென்பகுதி அரசியல் விழுந்து விடாமலிருக்க முயல்கிறார்கள் என்பதால் தான். நீங்கள் மேலே சொன்ன நன்மைகள் சுமந்திரன் வர முதலே வந்து விட்டது. அதெல்லாம் ஒரு காரணி மறைந்தவுடன் வந்தது! என்ன காரணி என்று உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்!

ஏமாற்று அரசியல் என்பது அடி  உதையையால் நடைமுறைபடுத்த படுவதில்லை 
கடந்த 10 வருட  பாலஸ்தீன நிலைமையை விட 
எமது நிலைமை என்பது நூறு மடங்கு மேன்மையாக இருக்கிறது 

ஆனால் 2 ஆண்டுகள் முன்பு பாலஸ்தீனம் ஐ நா சபையால் 
அங்கீகாரம் பெற்றது.
நாம் இராணுவம் விட்ட சில துண்டு காணிகளை படம் போட்டு காட்டும் 
அதே காலத்தில் எமது பொருளாதார அடிப்படை நில சொத்துரிமையையும் 
அரசியல் பலத்தையும் முஸ்லிம்களிடம் இழந்து வருகிறோம்.
இது ஒன்று காகம் இருக்க வீழும் பணம்காய்கள் இல்லை 

காஸ்மீர் நிலவரத்தை கொஞ்சம் பார்த்தால் இதன் உள்நோக்கம் புரியும்.
சுமந்திரன் என்ற பச்ச தூரோகியின் துரோகம் இன்னமும் பலரால் சரியாக புரியப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

முதல் பகுதி புரியவேயில்லை!

ஆனால் உங்களுக்குப் புரிந்த சும் மின் பச்சைத் துரோகம் என்னவென்று இங்கே சொன்னால் நான் கேட்கிறேன். சுருக்கமாகச் சொல்லுங்கள், பாரதம் எழுதினால் நான் பேசாமல் போய் விடுகிறேன்!

14 minutes ago, பெருமாள் said:

ஆவ்வ் வாங்க பதில் சொல்லுங்க என்றால் "ஒரு மாறிக்கும் மாறிலிக்கும் இடையேயான தொடர்பு" சொல்லி குழப்புவது அதெப்படி கேள்வி மட்டும் ஒழுங்கா வருது பாஸ்  ?  

1 hour ago, Justin said:

சுமந்திரன் அரசியலமைப்புச் சபையில் இருந்து தீர்வுத் திட்டத்திற்கு வேலை செய்தது, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தெளிவான பேச்சாளராக இருப்பது, சிங்களவர்களின் அனுமதியின்றி மாவட்ட சபை கூட பாசாகாது என்று விளங்கி சிங்களவர்களுக்கு விளக்கமளிக்க முயற்சியாவது செய்வது,

இவை நன்மைகள் நோக்கிய படிகள், சில நன்மைகள் கிடைத்தும் விட்டன: வெள்ளை வான் கடத்தல்கள்/கொலைகள் அரும்பொட்டில் ரணிலைச் சார்ந்ததால் தடுக்கப் பட்டன! காணிகள் சில விடுவிப்பு, மக்கள் நிம்மதியான இருப்பு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

முதல் பகுதி புரியவேயில்லை!

ஆனால் உங்களுக்குப் புரிந்த சும் மின் பச்சைத் துரோகம் என்னவென்று இங்கே சொன்னால் நான் கேட்கிறேன். சுருக்கமாகச் சொல்லுங்கள், பாரதம் எழுதினால் நான் பேசாமல் போய் விடுகிறேன்!

அது சுமந்திரனுக்காக தூக்கிய காவடியை 
இறக்குமட்டும் புரிந்தாலும் காட்டி கொடுக்க்க கூடாது.

இத்தனை வருட காலத்தில் அமெரிக்காவில் 2018இல் நடந்த தேர்தலில்தான் 
முதல் முறையாக இந்த மண்ணின் சொந்த காரர்களான ஒரு சிகப்பு இந்தியர் 
ஒருவர் அமேரிக்க காங்கிரசுக்கு தேர்வாகி இருக்கிறார்.
கடந்த 50-60 வருடமாக எந்த வெள்ளைவான் கெடுபிடியும் அவர்களுக்கு இல்லை 
அவர்கள் அரசியல் உரிமை எவ்வாறு நிராகரிக்க பட்டது? எவ்வாறு ஏமாற்ற பட்டார்கள் ?
ஏன் அவர்கள் குரல் இதுவரை அமரிக்க செனட்டிலோ காங்கிரஸிலோ இல்லாது பார்த்து கொண்டார்கள் 
என்பது எல்லாம் புரிந்தால்.
சுமந்திரனின் துரோகமும் புரியும்.

கனடா சவூதி பெண்ணுக்கு விசா கொடுத்து முகத்துக்கு 
வர்ணம் அடிக்கும் இதே காலத்திலேயே .... எட்மின்டன் பகுதியில் 
பூர்விக குடிகள் இராணுவ உதவியுடன் வெளியேற்ற படுகிறார்கள் 
அவர்கள் குடிகள்  சிதறடிக்க படுகிறது ..... ஓரிடத்தில் அவர்கள் 
குழுமமாக வாழுதல் என்பதை திட்டம் தீட்டி விரட்ட படுகிறார்கள்.

நோர்த் சவுத் டக்கோட்டா அமெரிக்க மாநிலங்களில் நடக்கும் 
தேர்தல் வன்முறைகள் .... வாக்கு மறுப்புரிமை போன்றவை பற்றி கொஞ்சம் 
இணையத்தில் வாசியுங்கள்.
சிங்கள பேரினவாதம் எதை நோக்கி நகர்கிறது என்பதும் 
அதற்கு சுமந்திரனை எப்படி பாவிக்கிறது என்பதும் புரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

சரி, உங்கள் அமெரிக்க கனேடிய பூர்வ குடிகள் அறிவு உச்சம்! இப்போது சொல்லுங்கள், எங்கே சும் பச்சைத் துரோகம் செய்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

சரி, உங்கள் அமெரிக்க கனேடிய பூர்வ குடிகள் அறிவு உச்சம்! இப்போது சொல்லுங்கள், எங்கே சும் பச்சைத் துரோகம் செய்தார்?

இன்னும் 10-15 வருடம் கழிச்சும் நீங்கள் இதே கேள்வியோடு இருக்கலாம் 
தமிழர்களுக்கான அரசியல் உரிமை மட்டும் அங்கு இருக்காது. 

Link to comment
Share on other sites

7 hours ago, Justin said:

சரி, உங்கள் அமெரிக்க கனேடிய பூர்வ குடிகள் அறிவு உச்சம்! இப்போது சொல்லுங்கள், எங்கே சும் பச்சைத் துரோகம் செய்தார்?

சுமந்திரன் செய்வது எல்லாமே பச்ச துரோகம் , இதில உங்களுக்கு பிரித்து சொல்ல நீங்கள் குழந்தை அல்ல .
தமிழரின் நிலையை 1956 கு கொண்டு செல்லும் சுமந்திரன் , வேறென்ன வேண்டும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.