Jump to content

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் -சிறிநேசன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் -சிறிநேசன்

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய சூழலையே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டானில், வீடமைப்பு, நிர்மாணத்துறை, கலாசார அபிவிருத்திகள் அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு உடன்பாட்டுடன் இந்த நிபுணத்துவ அறிக்கையை கொண்டுவந்துள்ளது. அதன் மூலமாக இந்த நாட்டில் சகல மக்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டும், எங்களுக்கு காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் கிடைக்க வேண்டும், எங்களுடைய எல்லைக்குள் எங்களுடைய மக்கள்  சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே எமது விருப்பாகும்.

பிரிக்கப்படாத நாட்டிற்குள் எமது மக்கள் சுயநிர்ணயத்துடன் வாழக்கூடிய ஒரு தீர்வை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அந்த அடிப்படையில்தான் இந்த அரசியல் யாப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுத் தரவேண்டும்.

மக்கள் தீர்ப்பினை நோக்கும் போது ஐம்பது வீதமான மக்கள் அதற்கு ஆதரவு தருகின்றபோதுதான் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இதனை அவர்கள் மறுப்பார்களானால், நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தரவில்லையென்றால் உள்நாட்டு பொறிமுறைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது அத்தோடு சர்வதேச பொறிமுறைகளினூடாகத்தான் இனப்பிரச்சினைக்குரிய தீர்வினை காணவேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவாகும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

IMG_3956.jpgIMG_3962.jpgIMG_3940.jpg

http://athavannews.com/தமிழ்-மக்கள்-சுயநிர்ணய-உ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்தும் இல்லையென்றால் கன வீட்டுத்திட்டங்கள் இல்லை முல்லை , பழமுதிச்சோலை, குறிஞ்சி இப்படி வீட்டுத்திட்டங்களை கொண்டுவந்திருக்கிறார் சஜித் பிரேமதாச அவர்கள் அவர்களுக்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சஜித்தும் இல்லையென்றால் கன வீட்டுத்திட்டங்கள் இல்லை முல்லை , பழமுதிச்சோலை, குறிஞ்சி இப்படி வீட்டுத்திட்டங்களை கொண்டுவந்திருக்கிறார் சஜித் பிரேமதாச அவர்கள் அவர்களுக்கு நன்றிகள் 

உண்மை தான் ,  புலம்பெயர் வெங்காயங்கள் இப்படி எத்தனை வேலைதிட்டங்கள் செய்யலாம் ஆனால் செய்யாதுகள், ஏதாவது கோவிலில சோத்துக்கு கியூவில நிக்கிங்கள், சுரணை கெட்டதுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

உண்மை தான் ,  புலம்பெயர் வெங்காயங்கள் இப்படி எத்தனை வேலைதிட்டங்கள் செய்யலாம் ஆனால் செய்யாதுகள், ஏதாவது கோவிலில சோத்துக்கு கியூவில நிக்கிங்கள், சுரணை கெட்டதுகள்

தேர் இழுக்க ஊருக்கு வருவினும்

செய்கிறவர்கள் செய்திகளில் வருவதில்லை அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்:104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:

உண்மை தான் ,  புலம்பெயர் வெங்காயங்கள் இப்படி எத்தனை வேலைதிட்டங்கள் செய்யலாம் ஆனால் செய்யாதுகள், ஏதாவது கோவிலில சோத்துக்கு கியூவில நிக்கிங்கள், சுரணை கெட்டதுகள்

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தேர் இழுக்க ஊருக்கு வருவினும்

செய்கிறவர்கள் செய்திகளில் வருவதில்லை அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்:104_point_left:

ஊரில் சாதாரண மக்களின் வாழ்க்கையை விட ஒவ்வொரு கோவில்களின் முன்னேற்றம் மிகப்பிரமாதம்.

 80களுக்கு முன் ஆலமரத்துக்கு கீழை தனிய இருந்த வைரவர்...... இப்ப அவருக்கு பெரிய கட்டிடமென்ன...சுத்து மதிலென்ன....பஞ்சவர்ண கோபுரமென்ன....அன்னதான மடமென்ன.....மூண்டு நேர பூசையென்ன....

உபயம் புலம்பெயர் குஞ்சுராசா கொம்பனிகள்

 குஞ்சுராசாவிட்டை.... ஐயா போரிலை பாதிப்படைஞ்ச சனத்துக்கு காசு சேர்க்கிறம் எண்டால்....
உவங்களுக்கோ?????  எண்டொரு   அடிபட்ட தட்டிவான் மாதிரி மூஞ்சையிலை ஒரு ஆக்சன் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் வரணிப்பகுதியில் கோயில் ஒன்றின் தேர் உற்சவத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் பெருமளவு ஊர்மக்கள் பணம் அனுப்பியிருந்தார்கள். தேரும் அமோகமாக அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வரும் நாளும் நெருங்க, அதை இழுப்பதற்கு ஆட்கள் போதவில்லை. அப்ப்குதியிலேயே வதியும் இன்னொரு குல மக்கள் தேர் இழுப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையிலும் கூட அவர்கள் புறக்கணிக்கப்பட்டு மண் அகழும் இயந்திரம் ஒன்றினைக்கொண்டு தேரை இழுத்து முடித்தார்களாம். 

இதை ஏன் சொல்கிறேன் என்றால் மக்களின் வாழ்வை விட தெய்வங்களின் வாழ்வு முக்கியம். அதைவிட முக்கியம் எமதி சாதிகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragunathan said:

ஏன்யா பழசை கிளறுகிறீர்கள்  அது பெரிய இழுவையாச்சே  மெசின சொன்னன்:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.