Jump to content

ஆங்கிலம்+ஆரியத்துடன் ஒரு அக்கப்போர்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-3


Recommended Posts

ஆங்கிலம்+ஆரியத்துடன் ஒரு அக்கப்போர்!

மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-3

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

"என்னப்பா! ஆளையே காணோம்! ஆங்கில - ஐரோப்பிய மொழிகளில் ஒலி எழுத்துக்கள் உருவான கதைய எப்பத்தான் முழுசாச் சொல்லப் போற? தெளிவாச் சொல்லு!", என்று படபடத்தவாறே உள்ளே நுழைந்தார் நண்பர்.

"கண்டிப்பா சொல்லிர்றேன்பா! நூற்றாண்டுகளாகவே இலக்கியம் மற்றும் உரைநடைகளில் vowels தனியாகவும் Consonants தனியாகவும் எழுதியே பழகிய ஆங்கிலேய, ஐரோப்பிய முறையை அடியோடு மாத்தி, புதிய உயிர்மெய் ஒலிஎழுத்துக்களை உருவாக்குவது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்துகொண்டதால், அம்முடிவைக் கைவிட்டது IPA குழு. அதற்கு ஈடாக, "Spoken Language" எனப்படும் பேச்சுமொழியின் தரத்தன்மைகளை வெளிப்படுத்தும் கூறுகளைக் குறியீட்டு ஒலிஎழுத்துக்களாக உருவாக்க முனைந்தது IPA.", என்று சற்றே நிறுத்தினேன்.

பேச்சுமொழியின் தரத்தன்மைகள்

"பேச்சுமொழியின் தரத்தன்மைகள் சிலவற்றைச் சொல்லேன்!', என்றார் நண்பர்.

"தனித்தன்மைகொண்ட பேச்சொலி (அல்லது) சைகைஒலி(phones),

ஒரு சொல்லை மற்ற சொற்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் மொழியின் வேற்றுமை ஒலிக்கூறுகள் (phonemes examples: ch என்ற phoneme வரும் சொற்கள்: church, chin, each; tch என்ற phoneme வரும் சொற்கள்: catch, fetch, pitch),

ஒரு பொருள் அல்லது செயல் குறித்த ஒருவரின் கருத்து அணுகுமுறையை அல்லது உணர்வை வெளிப்படுத்தும் ஏற்ற-இறக்க ஒலிக்கூறுகள்(intonation), தொடராக வெளிப்படும் ஒரு சொல்லின் ஒலிக்கட்டுமானத் தனிக்கூறுகள் (syllables, உதாரணமாக, ignite என்னும் சொல் ig மற்றும் nite என்னும் இரண்டு syllable-களால் உருவாகிறது) போன்றவை பேச்சுமொழியின் தரத்தன்மைகளில் முக்கியமானவை. IPA-வின் நீட்சியாக, சொற்களில், பற்களில் பட்டு ஒலிப்பது, உதடுகள் பொருந்த ஒலிப்பது, அடித்தொண்டை, மேல்தொண்டை ஒலிகள் போன்றவற்றிக்கும் ஒலிக்குறியீடுகள் உருவாக்கப்பட்டன.", என்றேன் நான்.

"இதெல்லாம் தமிழ்-ல இயற்கையா இருக்கு. யானைக்குக் கோமணம் கட்றாப்ல, English-கு ஒலிஎழுத்துன்னுட்டு உருவாக்குறது பெரிய அக்கப்போரால்ல இருக்கும்!", என்று அங்கலாய்த்தார் நண்பர்.

IPA ஒலிக்குறிப்புகளின் அமைப்பு

"உண்மைதான்! IPA ஒலிக்குறிப்புகள் (letter with accent), அதாவது, எழுத்தும், அதைப் பேசும் விதமும் என்றவகையில் அமைக்கப்பட்டுள்ளன. கி.பி.1888ல் IPA அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்குமான உயிர்மெய் ஒலிகளுக்குப் பொருந்திவரும் வகையில் 107 ஒலி எழுத்துக்களையும், இவ்வொலிகளைச் சற்றே மாற்றி ஒலிக்க ஏதுவான ஒலிகளைக் குறிக்க 31 திரிபொலி(diacritics)  எழுத்துக்களையும், ஒலியின் அளவு(length), ஏற்ற-இறக்கம்(tone and intonation), அழுத்தம்(stress) போன்ற தன்மைகளைக் கையாள உருவாக்கிய 19 கூடுதல் ஒலிஎழுத்துக்களையும் சேர்த்து, 157 ஒலி எழுத்துக்களை (உயிர்மெய்) தந்தது IPA. கி.பி. 2005-ல் 107 எழுத்துக்களுடன் (letters) and 52 திரிபொலிகள் (diacritics) இணைந்து 159 ஒலி எழுத்துக்கள் IPA-வால் வெளியிடப்பட்டன.

இவ்வினாடிவரைகூட, இந்தோ-ஐரோப்பிய மேலைஆரிய மொழிகள் முழுமையடையவில்லை என்பதை நடப்பு 2018 ஆண்டில்கூட புதிய மாற்றங்களை உள்ளடக்கிய IPA ஒலிக்குறிப்பு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது உணர்த்துகின்றது.", என்றேன் நான்.

"ஐரோப்பிய மொழிகள் கிடக்கட்டும். இந்த 159 ஒலி எழுத்துக்களில் ஆங்கிலத்துக்கு இப்போது எத்தனை எழுத்துக்கள் என்பதை முதலில் சொல்லப்பா!" என்றார் நண்பர் ஆவலுடன்.

ஆங்கில மொழிக்கு மொத்த எழுத்துக்கள் இப்போது 70க்கும் மேல்!

(கட்டுரை முடிவில் காண்க: (அக்கப்போர்) ஆங்கிலம் 44 ஒலி எழுத்துக்கள் விளக்க அட்டவணை-1)

"வந்துட்டேன். 26 வரிவடிவ எழுத்துக்களுடன், IPA அட்டவணையிலிருந்து 44 ஒலிஎழுத்துக்களை எடுத்துக்கொண்டு, 70 எழுத்துக்களுடன் ஆங்கிலமொழி விரிவாக்கம் கண்டது. ஆங்கிலமொழி அகராதிகளில் (Dictionaries) சொற்களை எப்படி உச்சரிப்பது என்பதை உணர்த்த இவ்வொலியெழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.", என்ற நான்,

"இப்போது 'exaggerate' என்ற சொல்லின் பொருள் என்ன  என்பதைப் பார்க்க, கி.பி.1828ல் வெளியிடப்பட்ட   Webster's Dictionary-யின் தற்காலத் தேடுதளமான http://webstersdictionary1828.com/ஐச் சொடுக்கி, 'exaggerate' என்று தட்டச்சு செய்தால் அச்சொல்லுக்கான பல்வேறு பொருள் விளக்கம் மட்டுமே கிடைக்கும்.

Exaggerate

EXAG'GERATE, verb transitive [Latin exaggero; ex and aggero, to heap, from agger, a heap.]

1. To heap on; to accumulate. In this literal sense, it is seldom used; perhaps never.

2. To heighten; to enlarge beyond the truth; to amplify; to represent as greater than strict truth will warrant. A friend exaggerates a man's virtues; a enemy exaggerates his vices or faults.

3. In painting, to highthen in coloring or design.

Exaggerate என்ற சொல்லுக்கான பலுக்கம்(உச்சரிப்பு) கிடைக்காது.

தற்கால Webster's Dictionary தேடுதளமான - https://www.merriam-webster.com - க்குச் சென்று exaggerrate என்று தட்டச்சு செய்தால் அச்சொல்லை 'ஒலிக்கூறுகளாகப்(syllables) பிரித்து எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதைக் காட்டும்.

exaggerate

 verb

ex·ag·ger·ate | \ig-ˈza-jə-ˌrāt  \

exaggerated; exaggerating

என்பதுடன், பொருள் விளக்கம் உள்ளிட்ட பல விடைகள் IPA ஆங்கில உயிர்மெய் ஒலியெழுத்தில்  கிடைக்கும்." என்றேன் நான்.

"ஆங்கில மொழி இருநூறு ஆண்டுகளாகத்தான் ஒலிவடிவைக் கண்டது என்பதை நம்பவே முடியல!", என்று வியந்தார் நண்பர்.

"அதுமட்டுமா! அமெரிக்க ஆங்கிலத்துக்குத் தனியாகவும், இங்கிலாந்து ஆங்கிலத்துக்குத் தனியாகவும் ஒலிக்குறிப்பு எழுத்துக்கள் உருவாக்கியுள்ளார்கள். இப்போதும்கூட, ஐரோப்பிய ஆங்கில மொழிகளுக்கு முழுமையான ஒலிவடிவம் எழுதும் ஆற்றல் கிடைத்தபாடில்லை. நாலாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே உயிர்மெய் ஒலிவடிவம் அமைத்து முழுமை அடைந்திருந்த தமிழ் மொழியின் மேன்மையை எண்ணிப் பாரேன்!" என்றேன் நான்.

"மற்ற உலக மொழிகளில் உயிர்மெய் உண்டா? இல்லையா?", என்று மீண்டும் கேள்விக்கணை தொடுத்தார் நண்பர்.

உலகில் உயிர்மெய் எழுத்துக்களை முதலில் வடிவமைத்தவர் தமிழரே!

"வரிவடிவங்களில் எவ்வளவுதான் குறைபாடுகள் இருந்தாலும், உலகமொழிகள் அனைத்தும் உயிர்மெய்கள் கலந்துதான் ஒலிக்கின்றன. ஆனால், உயிர்மெய் கூட்டுவடிவ ஒலி எழுத்துக்களை மிகச்சரியாக உலகில் முதன்முதலில் வடிவமைத்தவர் தமிழர்களே! தமிழரைப் பின்பற்றியே வடமொழியிலும், பிற இந்திய மொழிகளிலும் உயிர்மெய் ஒலிவடிவுகள் எழுத்திலேயே அமைந்தன.", என்றேன் நான்.

"தமிழைப்போலவே, வடமொழியும் இயல்பிலேயே உயிர்மெய் கூட்டுவடிவ ஒலி எழுத்துக்களை ஏன் கொண்டிருந்திருக்கக் கூடாது?", என்றார் நண்பர் காட்டமாக.

உலகத் தாய்மொழியான தமிழை அடையாளம் காணத்தவறிய ஐரோப்பிய ஆய்வர்கள்!

"வடமொழிக்கும் மூத்த ஆரிய இனமொழிகளெல்லாம் மொழி முழுமை அடையாமல் இன்றும் திணறிவரும்போது, அவ்வின மொழிகளில் காலத்தால் பிற்பட்ட வேதமொழிக்கு முழுமை எங்கிருந்து கிடைத்திருக்கமுடியும் என்று ஐரோப்பிய ஆய்வாளர்கள் சிந்தித்திருப்பாரேயானால், உலகத் தாய்மொழியான தமிழை எளிதில் அடையாளம் கண்டிருப்பார்கள்.

தன்னைக்காட்டிலும்  சிவப்பான ஐரோப்பிய ஆரியனுக்கே அல்வாக் கொடுத்த நம்மஊரு ஆரியனுக்கு முன்னால, கருப்பா இருக்கிற தமிழனெல்லாம் எம்மாத்திரம்! 'சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்-ற சித்தாந்தத்து-ல மூவாயிரம் ஆண்டுகள் ஊறிய நம்மூரு மட்டைகளைத் திருத்தவே முடியாது!", என்றேன் வெறுப்பாக.,  

"இப்படியெல்லாம் சொல்லி என்கிட்டேருந்து தப்பிக்க முடியாது! எனக்குப் புரியும்படி 'மொழிகளின் இயற்கை' என்னன்னு சொல்லு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி-ங்கறதையும் நிரூபி! அதுவர ஒன்ன விடுறதா இல்ல!", என்றார் நண்பர்!

"இரண்டையும் கட்டாயம் சொல்றேன்!", என்றபடி விடைபெற்றேன் நண்பரிடம்.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

மொழிகளின் இயற்கை அறிவோம்!

 

--------------------------------------------------------------------

(அக்கப்போர்) ஆங்கிலம் 44 ஒலி எழுத்துக்கள் விளக்க அட்டவணை-1

5 - உயிர்க்குறில் ஒலிகள் (Short-Vowel Sounds காட்டாக, short -a- in and, as, after

short -e- in pen, hen, lend, short -i- in it, in, short -o- in top, hop

short -u- in under, cup)

6 - உயிர்நெடில் ஒலிகள் (Long-Vowel Sounds காட்டாக, long -a-() in make(மேக்), take(டேக்)

long -e-( American- I, British-i:)() in sheep beet(பீட்), feet, long -i-() in tie(டை), lie(லை), long -o-() in coat(கோட்), toe(டோ),

long -u-(யூ) (yoo) in rule(ரூல்), long -oo-() in few, blue)

இரண்டுஉயிரெழுத்துக்கள் இணைந்து ஒலிக்கும்  diphthong -ஒலி உள்ளிட்ட சிறப்பொலிகள் 5. (காட்டாக,

-oi- in foil and toy, -ow- in owl and ouch, short- oo in took and pull, -aw- in raw and haul, -zh- in vision.

7 - ஒற்றை ஒலியுடைய ஈரெழுத்துக்கள் (Digraph) (இரண்டு ஆங்கில எழுத்துக்களைச்  சேர்த்து ஒரு தனித்தன்மைபெற்ற ஒற்றை ஒலியைக் குறிப்பது Digraph எனப்படும். காட்டாக,

-ch- in chin, chair and ouch, -sh- in ship and push, -th- in thing, -th- in this, -wh- in when, -ng- in ring, -nk- in rink).

3 - 'r' என்னும் எழுத்தால் கட்டுப்பட்ட /ur/, /ar/, /or/ ஆகிய 3 உயிரெழுத்துக்கள். (r-Controlled Vowels. காட்டாக: /ur/ in fern, her, bird, and hurt. /ar/ in park, bark and dark. /or/ in fork, pork and stork.)

18 - மெய்எழுத்து ஒலிகள் - Consonant Sounds காட்டாக,

-b- in bed, bad, -k- in cat and kick, -d- in dog, -f- in fat, -g- in got, -h- in has, -j- in job, -l- in lid, -m- in mop, -n- in not, -p- in pan, -r- in ran, -s- in sit, -t- in to, -v- in van, -w- in went, -y- in yellow, -z- in zipper; C, Q and X ஆகியன விடுபட்டுள்ளன; ஏனெனில், அவற்றின் ஒலிகளை ஏனைய மெய்யொலிகளில் இருந்து உருவாக்கிக் கொள்ளலாம். (C என்பதன் ஒலியை k என்பதன் ஒலியிலிருந்தும்,  s என்பதன் ஒலி cereal, city and cent  போன்ற சொற்களின் ஒலியிலும், Q என்பதன் ஒலியை 'kw' என்ற ஈரெழுத்துக்கள் இணைந்து ஒலிக்கும் backward(bacQard) மற்றும் Kwanza(Qanza) போன்ற சொற்களில் காணலாம். X என்பதன் ஒலியை 'ks' என்ற ஈரெழுத்துக்கள் இணைந்து ஒலிக்கும் kicks(kix) போன்ற சொற்களில் காணலாம்.))

- ஆக மொத்தம் = 44 ஒலி எழுத்துக்கள்.

இவையல்லாது, இரண்டு அல்லது மூன்று ஆங்கில எழுத்துக்களைச் சேர்த்து பிறக்கும் தனித்துவம் பெற்ற ஒலிகள் Blends என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. காட்டாக,  -bl- in blue and black, -c- in clap and close, -fl- in fly and flip, -gl- in glue and glove, -pl- in play and please, -br- in brown and break, -cr- in cry and crust, -dr- in dry and drag, -fr- in fry and freeze, -gr- in great and grand, -pr- in prize and prank, -tr- in tree and try, -sk- in skate and sky, -sl- in slip and slap, -sp- in spot and speed, -st- in street and stop, -sw- in sweet and sweater, -spr- in spray and spring, -str- in stripe and strap ஆகியன அனைத்தும் Blends என அழைக்கப்படும்.

 

List of British English Phonetics Symbols

Single vowels

ɪ

i:

ʊ

u:

ship

sheep

book

shoot

e

ɜ:

ə

ɔ:

left

her

teacher

door

æ

ʌ

ɒ

ɑ:

hat

up

on

far

Diphthongs (vowels)

ɔɪ

 

wait

coin

like

 

ɪə

ʊə

 

hair

here

tourist

 

əʊ

/

 

show

mouth

 

 

unvoiced consonants

p

f

θ

t

s

ʃ

ʧ

k

pea

free

thing

tree

see

sheep

cheese

coin

voiced consonants

b

v

ð

d

z

ʒ

ʤ

g

boat

video

this

dog

zoo

television

joke

go

m

n

ŋ

h

w

l

r

j

mouse

now

thing

hope

we

love

run

you

.

ˈ

ˌ

:

ʔ

ˑ

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.