Jump to content

இந்தி பேசத் தெரியாவிடில் ஏன்  இங்கே வந்தாய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இந்திய குடிவரவு அதிகாரிகளுக்கு, திமிர், அராஜகம் அதிகம்.

27 வயதான தமிழக மாணவர் ஆபிரகாம், அமெரிக்காவில் தனது Phd கல்வியினை முடித்துக் கொண்டு நியூயோர்க்கில் இருந்து மும்பை ஊடாக சென்னை செல்ல, மும்பையில் வந்து இறங்கி இருக்கிறார்.

33ம் இலக்க கவுண்டரில், லைனில் நின்று இருக்கிறார்.

அவருக்கு முன்னால் நின்றிருந்த வெள்ளையர் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசி கிளியர் பண்ணிய அதிகாரி இவருடன் இந்தியில் பேசினார். இந்தி தெரியாது என்று சொல்லி ஆங்கிலத்தில் பேசமுயன்ற போது,  இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா. அப்படீன்னா தமிழ்நாட்டுக்குப் போயிரு என்று திமிராக பேசிய மும்பை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரி கிளியர் பண்ண மறுத்தார்.

நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த பயணி, உயர் அதிகாரிகளிடம் முறையீடு செய்தார். உயர் அதிகாரிகள் அந்த அதிகாரியிடம் பேசிய போது அவர் அதே போலவே சொல்லி தனது கடமையினை செய்யவில்லை. ஆகவே வேறு கவுண்ட ருக்கு அனுப்பி அவரை கிளியர் பண்ணி அனுப்பி வைத்திருக்கிறார்கள் உயர் அதிகாரிகள்.

விசயம் அத்துடன் முடியும் என்று பார்த்தால் ஆபிரகாம், சோசியல் மீடியா பக்கமாக போய், ட்விட்டர் மூலமாக சம்பவத்தினை பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும், ராகுல் காந்திக்கும், ஸ்டாலினுக்கும் அனுப்பி வைக்க, விசயம் இந்தியா முழுக்க பரவியத்துடன், இன்று இந்திய பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

சோசியல் மீடியா பவர் குறித்து அறியாத, தன் மொழி வெறியரான, சம்பந்தப் பட்ட அதிகாரி பதவியில் இருந்து இடை நிறுத்தப் பட்டுள்ளதுடன் போலீஸ் விசாரணைக்கும் உத்தரவு  இடப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், மும்பை இருக்கும் மகாராஷ்ட்டிரா மாநிலத்தின் மொழி மராத்தி. 

Mumbai Airport officials asks TN student to return to Tamil Nadu if not speak in Hindi

மும்பை: இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா. அப்படீன்னா தமிழ்நாட்டுக்குப் போயிரு என்று திமிராக பேசிய மும்பை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் அதிகாரியின் இந்த அடாவடி செயல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சசி தரூர் உள்ளிட்டோருக்கு டிவிட்டரில் டேக் செய்து புகார் கூறியுள்ளார்.

மாணவரிடம் திமிராகப் பேசி அவமரியாதை செய்த அந்த அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த அவரது பெயர் ஆப்ரகாம் சாமுவேல். பிஎச்டி ஆய்வு மாணவர். இன்று அதிகாலை 1 மணியளவில் நியூயார்க் செல்வதற்காக விமானத்தைப் பிடிக்க மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார் சாமுவேல். அங்கு குடியுரிமைப் பிரிவில் இமிகிரேஷனுக்காக அணுகியபோது அங்கிருந்த அதிகாரி இந்தியில் பேசியுள்ளார். ஆனால் தனக்கு ஆங்கிலம், தமிழ் மட்டுமே தெரியும் என்று கூறி ஆங்கிலத்தில் பேசியுள்ளார் சாமுவேல். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத அந்த அதிகாரி இந்தியிலேயே பேசியுள்ளார். சாமுவேல் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தபோது இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா. அப்படின்னா தமிழ்நாட்டுக்கே போயிரு என்று கூறி இமிகிரேஷன் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவர் சாமுவேல் குடியுரிமைப் பிரிவு உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினார். இதையடுத்து விரைந்து வந்த உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரியை கேட்டபோது அவர்களிடமும் இந்தி தெரியாவிட்டால் தமிழ்நாட்டுக்குப் போகுமாறு திரும்பவும் திமிராக பேசியுள்ளார் அந்த அதிகாரி. இதையடுத்து உயர் அதிகாரிகள் சாமுவேலுக்கு வேறு அதிகாரி மூலம் இமிகிரேஷன் கொடுத்து அவரை அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். [என்ன 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்!] சாமுவேல் உடனடியாக விமானத்தை பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் பிரச்சினை செய்யாமல், புகார் ஏதும் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். ஆனால் டிவிட்டரில் போட்டு அந்த அதிகாரியைக் கிழித்தெடுத்து விட்டார்.

மும்பை விமான நிலையத்தின் 33வது கவுண்டரில் இருந்த அதிகாரி எனக்கு இந்தி தெரியாத காரணத்தால் இமிகிரேஷன் கொடுக்க மறுத்தார். அவர் குறித்து புகார் கூறியுள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.

நான் உடனடியாக விமானம் ஏற வேண்டியிருந்ததால் புகார் ஏதும் தரவில்லை. இல்லாவிட்டால் அங்கேயே தங்கியிருந்து அந்த அதிகாரியை ஒரு வழி செய்திருப்பேன். இவரைப் போன்ற முட்டாள்கள் எப்படி இந்திய அரசில் பணியாற்றுகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. இவர் ஒரு அவமானம்.

ஒரு இந்தியரின் அடிப்படை உரிமையான இமிகிரேஷனை தர மறுத்துள்ள அந்த அதிகாரி குறித்து குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எது அவரது வேலை என்பதை அவருக்குப் புரிய வைக்க வேண்டும்

நான் ஒரு இந்தியன். நான் இந்தி பேசுவதில்லை. அவ்வளவுதான். தங்களது சொந்த, அழகிய மொழியைப் பேசும் இந்தியர்களை அவமதிக்காதீர்கள்.

நான் அவரிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினேன். தமிழில் கூட பேசவில்லை. எனக்கு இந்தி தெரியாது என்று கூறியதை குற்றமாக கருதிய அவர் அந்தப் பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத முட்டாள் என்றுதான் கூற வேண்டும். அதே அதிகாரி, ஆங்கிலத்தில் பேசிய வெளிநாட்டுக்காரரை கிளியர் செய்து என் கண் முன்பாகவே அனுப்பி வைத்தார்.

இந்தி தெரியாத ஒரே காரணத்திற்காக எந்த இந்தியருக்கும் இமிகிரேஷன் மறுக்கப்படக் கூடாது. இதுபோன்ற அராஜகமான அதிகாரியால் நாட்டுக்கே அவமானம். இதுவே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்.

உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியபோது அவர்கள் வந்து அந்த அதிகாரியிடம் விசாரித்தபோது, அவர்களிடமும் அவர் அவதூறாகவே பேசினார். இதுதொடர்பான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தால் உண்மை தெரிய வரும். என்னிடம் தகவல் கேட்டால் தருவதற்கு நானும் தயாராக உள்ளேன்.

தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு அங்கம்தான் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். உரிய அதிகாரிகள் இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இதுபோன்ற காரணங்களால்தான் எந்த தேசிய கட்சியும், தமிழகத்தில் காலூன்ற முடியாமல் உள்ளது. அந்த அதிகாரி என்னிடம் இந்தி பேசுமாறு மட்டும் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, தமிழ் இமிகிரேஷன் கவுண்டர் இருந்தால் அங்கு போகுமாறும் அவதூறாகப் பேசினார்.

Read more at: https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-airport-officials-asks-tn-student-return-tamil-nadu-if-speak-in-hindi-338609.html?utm_source=vuukle&utm_medium=talk_of_town

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நான் இந்தியாவின் எதிர்ப்பாளரும் அல்ல, தமிழ் வெறியனும் அல்ல" - ஆபிரகாம் சாமுவேல் பிரத்யேக பேட்டி

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ்
  •  
"மும்பை விமான நிலையத்தில் நடந்தது என்ன?" - ஆபிரகாம் சாமுவேல் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமை Twitter/ Getty Images

"முயன்று பார்த்து தோற்றுவிட்ட இந்தி திணிப்பை மத்தியிலுள்ள அரசுகள் மீண்டும், மீண்டும் செய்தால் அது நாட்டில் பிளவுகளையே ஏற்படுத்தும்" என்று இந்தி மொழி தெரியாததால் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்ற ஒப்புதல் மறுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஆபிரகாம் சாமுவேல் பிபிசி தமிழுடனான பிரத்யேக பேட்டியின்போது தெரிவித்தார்.

 

கடந்த ஜனவரி 8ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த ஆபிரகாம் சாமுவேல் என்ற இளைஞர், "எனக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும், இந்தி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காக மும்பை சர்வதேச விமான நிலையத்தில் எனக்கு குடியேற்ற ஒப்புதல் வழங்குவதற்கு அதிகாரி ஒருவர் மறுப்புத் தெரிவித்துவிட்டார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்டோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த தொடர் ட்விட்டுகளுக்கு ஆதரவாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்ததோடு, இது போன்று தாங்கள் சந்தித்த சம்பவங்களை நினைவுகூர்ந்தது வைரலானது.

 

அதே சூழ்நிலையில், ஆபிரகாம் சாமுவேல் வேண்டுமென்றே இது போன்று பிரச்சனையை கிளப்புவதாகவும், அவரை யாரோ இயக்குவதாகவும், அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் டேக் செய்வதற்கு என்ன காரணம் போன்ற கேள்விகளை பலர் சமூக ஊடங்கங்களில் எழுப்பி வருகின்றனர்.

எனவே, மும்பை விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து அறிவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முனைவர் பட்ட ஆய்வு செய்துவரும் ஆபிரகாம் சாமுவேலை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

"நினைத்துக்கூட பார்க்கவில்லை"

"அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். ஒரு மாத விடுப்பில் தமிழகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக சென்னை வழியாக மும்பை விமான நிலையத்திற்கு சென்றேன். இந்தியாவின் எல்லையிலிருந்து நான் வெளியேறும் கடைசி விமான நிலையம் என்பதால் குடியேற்ற ஒப்புதல் சோதனைக்காக வழக்கம்போல் வரிசையில் நின்றிருந்தேன்" என்று கூறிய ஆபிரகாம், “அதன் பிறகு நடந்ததை ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்கிறார்.

"33வது கவுண்டருக்கு சென்றதும், அங்கிருந்த குடியேற்றத்துறை அதிகாரி என்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை பார்த்துவிட்டு தொடர்ந்து இந்தியில் பேசியபடி இருந்தார். அவர் பேசியதில் எனக்கு ஒரு வார்த்தைக்கூட புரியாததால், நிதானமாக 'சார் எனக்கு இந்தி தெரியாது; தமிழ், ஆங்கிலம்தான் தெரியும்' என்று கூறியவுடனேயே 'என்னது இந்தி தெரியாதா? நீ அப்போ தமிழ்நாட்டுக்கே போக வேண்டியதுதானே? என்னால் உனக்கு ஒப்புதல் கொடுக்க முடியாது. தமிழ் தெரிஞ்ச அதிகாரி இருக்குற கவுண்டருக்கு போயிக்கோ' என்று நக்கலாக கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று ஆபிரகாம் விவரிக்கிறார்.

"மும்பை விமான நிலையத்தில் நடந்தது என்ன?" - ஆபிரகாம் சாமுவேல் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமை Getty Images

தனது விமானத்துக்கு நேரமானதால் அப்போது தனக்கு ஏற்பட்ட கோபமும், விரக்தியும் கலந்த மனநிலையை கட்டுப்படுத்தி கொண்டதாக கூறும் ஆபிரகாம், தனக்கு முன்பாக வெளிநாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அதே அதிகாரி ஆங்கிலத்தில் உரையாடி பரிசோதனை செய்தததை எண்ணி மொழி ரீதியிலான பாகுபாட்டை உணர்ந்ததாக கூறுகிறார்.

"அருகிலிருந்த 32வது கவுண்டருக்கு சென்றபோது அங்கிருந்த அதிகாரி ஆங்கிலத்தில் உரையாடி அடுத்த 2-3 நிமிடங்களில் எனக்கு ஒப்புதல் வழங்கிவிட்டார். அதற்கடுத்து உடனடியாக விமான நிலையத்துக்குளேயே இருந்த குடியேற்றத்துறை அலுவலக அதிகாரிகளிடம் நடந்ததை கூற, அந்த குறிப்பிட்ட அதிகாரியை நேரிலேயே வரவழைத்துவிட்டனர்.

அப்போதும்கூட தனது தவறுக்கு மன்னிப்பு கேட்காத அவர், தொடர்ந்து முன்பு கூறியவற்றை அப்படியே திரும்ப திரும்ப கூற, பதற்றமடைந்த அதிகாரிகள், உயரதிகாரிகளை நேரில் அழைக்க, 'அவர் இன்று நீண்டநேரமாக பணிபுரிவதால் ஏற்பட்ட களைப்பின் காரணமாக இப்படி செய்திருப்பார்' என்று கூறி என்னை சமாதானப்படுத்த பார்த்தனர். அதை ஏற்றுக்கொள்ள மறுத்த நான் விமான புறப்பாட்டுக்கு நேரமானதால் அங்கிருந்து சென்றுவிட்டேன்" என்கிறார்.

"சீமானை கூட டேக் செய்திருப்பேன்"

நான் தமிழகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், இந்தியன் என்று கூறிக்கொள்வதிலும் பெருமையடைவதாக கூறும் ஆபிரகாம், "இந்தியாவின் அரசமைப்பு சட்டம் எனக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மறுத்ததாலும், மனதை புண்படுத்தியதுடன் எனது நேரத்தை வீணடித்ததற்காகவும், இதுபோன்ற நிலை மற்றொரு இந்தியல்லாத மொழியை தாய்மொழியாக கொண்டவருக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த விவகாரத்தை ட்விட்டருக்கு எடுத்து சென்றேன்" என்று கூறுகிறார்.

குறிப்பிட்ட அரசியல் கட்சி மற்றும் தலைவர்களை மட்டும் டேக் செய்ததால் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, "நான் ஒரு சாதாரண ட்விட்டர் பயன்பாட்டாளர். ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் பிரதமர் நரேந்திர மோதி, வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தமிழ் மொழி சார்ந்த விவகாரங்களில் காலங்காலமாக குரல் கொடுத்து வரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி போன்றோரை அந்த பரபரப்பான சமயத்தில் டேக் செய்தேன். பொறுமையாக இருந்திருந்தால் சீமானை கூட டேக் செய்திருப்பேன்." என்றார்.

ஆபிரகாம் சாமுவேல்படத்தின் காப்புரிமை TWITTER Image caption ஆபிரகாம் சாமுவேல்

அதுமட்டுமின்றி, தனக்கும் எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும், அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறுகிறார்.

"லண்டன், பாரீசில் தமிழிலில் பேசுகிறார்கள்"

"நான் பலமுறை லண்டன், பாரிஸ் நகரங்களின் விமான நிலையங்களுக்கு செல்லும்போது, அங்கிருக்கும் அதிகாரிகள் தமிழில் இயல்பாக உரையாடுகிறார்கள். அந்த நிலையில், இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும் தமிழகத்தில் பேசப்படும் மொழிக்கு அதே நாட்டிலேயே இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை.

"மும்பை விமான நிலையத்தில் நடந்தது என்ன?" - ஆபிரகாம் சாமுவேல் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமை Getty Images

ஆங்கிலம் தெரிந்த எனக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் தமிழ் போன்ற தாய்மொழிகளை மட்டுமே தெரிந்தவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று நினைத்துப்பார்த்ததன் காரணமாகவே முற்றிலும் தவறாக நடந்து கொண்ட குடியேற்றத்துறை அதிகாரி மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதற்காக நான் மும்பை விமான நிலையத்தின் குடியேற்றத்துறை அலுவலகத்துக்கு முறைப்படி மின்னஞ்சல் அனுப்பியுள்ளளேன்.

அந்த அதிகாரியை நான் மன ரீதியாக மன்னித்துவிட்டேன் என்றாலும், இந்த சம்பவம் இது போன்று மொழியை திணிக்கும் அதிகாரிகளுக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து போராடி வருகிறேன்" என்று விவரிக்கிறார்.

"இந்தியாவின் எதிர்பாளரும் அல்ல, தமிழ் வெறியனும் அல்ல"

ஒரு தமிழனாக இருப்பதில் எந்த அளவிற்கு பெருமை அடைகிறேனோ அதே அளவுக்கு இந்தியனாக இருப்பதிலும் பெருமையடைகிறேன். ஆபிரகாம் சாமுவேல், .

"வெளிநாட்டில் வசித்துக்கொண்டு இந்தியாவில் நான் பிரச்சனையை கிளப்புவதாக சிலர் கூறி வருகின்றனர். முன்னதாக பிரிட்டனிலும், தற்போது அமெரிக்காவிலும் கல்வி பயின்ற நான் இந்த நாடுகளில் நிரந்தரமாக வசிப்பதற்கு ஒருபோதும் விரும்பியதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தமிழகத்திற்கு திரும்பி அங்கு சொந்தமாக ஸ்டாட்அப் நிறுவனம் தொடங்குவதற்கே திட்டமிட்டுள்ளேன்" என்று ஆபிரகாம் சாமுவேல் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், "இந்தியா அடிப்படையில் பல்வேறு மொழிகளையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. நான் இந்தியாவின் எதிர்பாளரும் அல்ல, தமிழ் வெறியனும் அல்ல. ஆனால், ஏற்கனவே முயன்று பார்த்து தோற்றுவிட்ட இந்தி திணிப்பை மத்தியிலுள்ள அரசுகள் மீண்டும், மீண்டும் செய்தால் அது நாட்டில் பிளவுகளையே ஏற்படுத்தும். அதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. ஒரு தமிழனாக இருப்பதில் எந்த அளவிற்கு பெருமை அடைகிறேனோ அதே அளவுக்கு இந்தியனாக இருப்பதிலும் பெருமையடைகிறேன்" என்று கூறினார்.

சமூகத்தில் ஊடகத்தில் வலுக்கும் ஆதரவு

ஆபிரகாம் சாமுவேலுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, மேற்குவங்கத்தை சேர்ந்த மொழியியல் உரிமை செயற்பாட்டாளரான கார்கா சாட்டர்ஜி, "தமிழகத்தை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு இந்தி தெரியாது என்ற காரணத்தில் மும்பை விமான நிலையத்திலுள்ள இந்தி மொழிவெறி கொண்ட அதிகாரி குடியேற்ற அனுமதி வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். நானும் இதே போன்றதொரு சூழ்நிலையை கொல்கத்தா விமான நிலையத்தில் எதிர்கொண்டபோது அந்த அதிகாரிக்கு தக்க பதிலடி கொடுத்தேன்" என்று காணொளியுடன் கூடிய பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

"இதேபோன்றதொரு சூழ்நிலையை கடந்தாண்டு இறுதியில் சென்னை விமான நிலையத்திலேயே எனக்கு ஏற்பட்டது. அப்போது, எனக்கு ஏன் இந்தி தெரியாது என்று கேள்வியெழுப்பிய விமான நிலைய அதிகாரி, எனக்கு மிரட்டலும் விடுத்தார்" என்று வினோத் பாபு என்பவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிவதற்காக மும்பை சர்வதேச விமான நிலைய குடியேற்றத்துறை அலுவலகத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, பதிலளிப்பதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

https://www.bbc.com/tamil/india-46848482

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்ல போனால் தமிழ்நாட்டிலிருப்பவர்கள் வெளிநாடு வந்தால் கூட ஹிந்தி அவர்களுக்கு பேச வருவதில்லை ஆனால் சிங்களவர்கள் இலகுவாகவ்வும் நம்ம ஈழத்தமிழர்களும் கற்றுக்கொள்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உண்மையை சொல்ல போனால் தமிழ்நாட்டிலிருப்பவர்கள் வெளிநாடு வந்தால் கூட ஹிந்தி அவர்களுக்கு பேச வருவதில்லை ஆனால் சிங்களவர்கள் இலகுவாகவ்வும் நம்ம ஈழத்தமிழர்களும் கற்றுக்கொள்கிறார்கள் 

ஹிந்திப் படங்கள் இலங்கையில் வருடக் கணக்காக ஓடி இருக்கு. அன்றைய ஷர்மிளா தாகூர் ,வைஜந்திமாலாவில்  இருந்து  இன்று ஐஸ்வர்யா ராய் வரை  சொல்லும்  வசன கவிதைகளை அப்படியே புரிந்து கொள்ள ஹிந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்படி நமக்கு பைசா பிரயோசனமில்லை ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2019 at 10:53 PM, suvy said:

ஹிந்திப் படங்கள் இலங்கையில் வருடக் கணக்காக ஓடி இருக்கு. அன்றைய ஷர்மிளா தாகூர் ,வைஜந்திமாலாவில்  இருந்து  இன்று ஐஸ்வர்யா ராய் வரை  சொல்லும்  வசன கவிதைகளை அப்படியே புரிந்து கொள்ள ஹிந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்படி நமக்கு பைசா பிரயோசனமில்லை ......!   😁

இப்ப வரைக்கும் கிந்திப்படங்கள் திரையில் ஓடுகிறது சிங்கள மக்கள் பார்க்கிறார்கள் அப்படியே சிங்கள தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிறது  இலங்கையில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.