Sign in to follow this  
விசுகு

காலத்தின் தேவை கருதி France வாழ் புங்குடுதீவு மக்களுக்கு France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் விடுத்த அழைப்பு

Recommended Posts

அன்பான France வாழ் புங்குடுதீவு மக்களே

வணக்கம்

அண்மையில் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்
காலத்தின் தேவை கருதி ஒரு அவசர வேண்டுகோளை France வாழ் புங்குடுதீவு மக்களை நோக்கி விடுத்திருந்தது.

அவ்வேண்டுகோள் France வாழ் புங்குடுதீவு மக்களை சென்றடைய அவர்கள் சார்ந்த விழாக்கள் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரப்படுத்துதல் ஊடாக முயற்ச்சித்தது. அதனைத்தொடர்ந்து எம்மிடம் பதிவிலுள்ள 300 க்கு மேற்பட்ட அங்கத்தவர்களின் விலாசங்கள் மீண்டும் தொலைபேசி அழைப்பினுடாக சரி பார்க்கப்பட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 27-01-2019 இல் ஒரு விசேச கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு அதன் நிகழ்சி நிரலும் இதனுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் France வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் உள்வாங்குவதும் அவர்களின் ஆலோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் சேர்த்து ஊரின் தேவைகளை பூர்த்தி செய்வதும் ஒன்றியத்தை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதுமாகும்.

இந்த கூட்டத்துக்கு France வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளமுடியும் கருத்துக்களை தரமுடியும். எனவே நிர்வாகம் உறுப்பினர்கள் வர்த்தகர்கள் சந்தாக்காரர்கள் என்றில்லாமல் அனைவரையும் அழைக்கின்றோம். கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் ஊரிலிருந்து தமது கருத்துக்களை சொல்ல முயல்வோரும் தமது உறவுகளை இக்கூட்டத்துக்கு அனுப்பி கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வைப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். இதுவரை வெளியில் நின்று எம்மை விமர்சித்தோர்களுக்கும் இக்கூட்டம் நேரத்தை ஒதுக்கி காத்திருக்கிறது

உலகெங்கும் புங்குடுதீவு மக்கள் பரவி கல்வி வர்த்தகம் பொருளாதாரம் கலை பண்பாடுகள் ஒற்றுமை ஒன்றியங்களின் வளர்ச்சி அதனூடாக தாயகத்துக்கான உதவிகள் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்கின்ற போதும் நாம் புங்குடுதீவைச்சேர்ந்தவர்கள் என பெருமை பேசும் அதேநேரம் எமது ஊரை சென்று பார்க்கின்ற போது அது முற்றுமுழுதாக இவற்றை மறுதலித்து தாய் நிலத்தை கைவிட்டவர்கள் எனும் பழியையே எம் கண் முன் காட்டி நிற்கிறது. இதனால் ஊர் சென்று திரும்புகின்ற எமது ஏனைய கிராமத்து மக்கள் கூட எம்மை ஒரு மண்ணை மறந்த நன்றி கெட்டவர்களாக பார்ப்பதும் அதனூடாக எம்மை கேலிக்குள்ளாக்குவதும் தான் தொடர்கிறது. இதை ஒவ்வொரு புங்குடுதீவு மக்களும் ஏற்றுக்கொண்டாலும் அமைப்புக்களில் வந்து ஒரு சில மணித்துளிகளைக்கூட ஒதுக்க விரும்பாதவர்களாக இருப்பதையும் அதை தொடர்வதையும் நாம் பராமுகமாக கடந்து செல்லமுடியாது. அவ்வாறு கடந்து செல்வது ஊருக்கு மீளமுடியாத பெரும் அழிவையும் தவறான முன்னுதாரணத்தையும் எமக்கு மட்டுமல்ல அடுத்த சந்ததிக்கும் விதைத்த பழியைத்தரும்.

எனவே எம்மண்ணை காக்க வளம் படுத்த
எம்மிடமுள்ள பலத்தை சரியாகப்பயன்படுத்தி இந்த சந்ததி முன்னுதாரணமாக செய்வதனூடகத்தான் அடுத்த சந்ததியையும் ஓட்டத்தை தொடர வழி அமைக்க முடியும். எனவே எமது பொறுப்பை உணர்ந்து இந்த அவசர வேண்டுகோளை மிகவும் கரிசனையோடு பரிசீலித்து கூட்டத்தில் கலந்து கொள்வீர்கள் என்ற அவாவுடன் உங்களது வருகைக்காக காத்திருக்கின்றோம்.

நன்றி
நிர்வாகம்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - France

 

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this