Jump to content

'மூவின மக்களும், ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும், சம உரிமையுடனும் வாழ, புதிய அரசமைப்பு தேவை': எம்.ஏ.சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் நகர்வுகள் குறித்து அரசியலமைப்பு சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச தரப்பினருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கும் இடையில் காரசாரமாக வாக்குவாதம் இடம்பெற்றது. 

mahinda-rajapaksa.jpg

புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டுமானால் வாருங்கள் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுபோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கோரிக்கை விடுத்தார். 

அரசியலமைப்புக்கான  நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை முன்வைத்து அரசியல் அமைப்பு சபை இன்று காலை 10 மணிக்கு கூடிய வேளையில்  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது உரையினை ஆரம்பித்தார். 

அதன்போது அரசியல் அமைப்பு குறித்து கருத்துக்களை முன்வைக்கும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப்பர்த்து சில கேள்விகளை எழுப்பிமை  குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/47957

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசமைப்பு உருவாக்கத்திலிருந்து கூட்டமைப்பு பின்வாங்காது'

அரசமைப்பு உருவாக்க் செயற்பாடுகளிலிருந்து, இறுதிவரை பின்வாங்கப் போவதில்லையென, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது.

பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை கூடிய அரசமைப்புப் பேரவையில் உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசமைப்பு உருவாக்கத்தில் உள்ள பிரதான தமிழ்க் கட்சி என்ற அடிப்படையில் கூட்டமைப்பு விளங்குவதாகவும் இந்நாட்டின் அரசமைப்பு, அனைவரது ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற அடிப்படையில், தமது பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இரண்டுப் பிரதான தரப்புகளும், இதனை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் இந்தப் பொன்னான தருணத்தை இழந்துவிடக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, குறித்த அறிக்கைகள், மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும், பேரவையை வலியுறுத்தினார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

image_dcbbcd1882.jpg'வடக்கின் அபிவிருத்திக்காக முழுமையான நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்'

வடக்கு மக்களுக்கு இருப்பது, சாதாரணப் பொருளாதார பிரச்சினையென, தெற்கில் உள்ளவர்கள் மதிப்பிடுவதாகத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், வடக்குக்கு அபிவிருத்தி அவசியமென்றே, வடபகுதி மக்கள் விரும்புகின்றனர் என்றார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர், கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துகொண்டு பார்க்கும்  அரசியல்வாதிகளுக்கு, வடக்கில் எதனை அபிவிருத்தி செய்ய வேண்டும், எங்கு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தெரியாது எனக் கூறியதோடு, எனவே, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை பூரணமாக முன்னெடுக்க, அங்கு முழுமையாக நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அன்று, பண்டாரநாயக்க காலத்தில் அவரால் சமஷ்டி குறித்து பேச்செழுப்பப்பட்ட போது, சமஷ்டியானது அதிக நன்மை பயக்கும் என்பதை கருத்திற்கொண்டே தெற்கு அரசியல்வாதிகள் அதனை எதிர்த்தனர் என்றார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

image_c80fa5871a.jpgஅரசாங்கத்துடன் இணையுமாறு சம்பிக்க அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் அரசாங்கத்துடன் இணைய வேண்டும். அமைச்சுப் பதவிகளைப் பெற்று, வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு சேவையாற்ற முன்வர வேண்டுமென, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இன்று (11) அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று, புதிய அரசமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழ்க் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் இணைவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு, எவ்வித அச்சுறுத்தலும் பாதிப்பும் ஏற்படப் போவதில்லையெனத் தெரிவித்த அவர், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால், மலையகத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தல் – பாதிப்பு ஏற்பட்டதா? இல்லையெனவும், அவர் கூறினார்.

அதேபோல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக அங்கம் வகிப்பதால், முஸ்லிம் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களில் எதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லையெனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், எனவே, எதிர்ப்பு அரசியலைக் கைவிடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்ப, அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டுமெனக் கோரினார்.

கடந்த 50 வருடங்களில், வடக்குப் பகுதியில் பெரிதாக எவ்விதத் தொழிற்சாலையும் உருவாகவில்லை என்றும் வேலையில்லாப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் சம்பிக்க, காலைநிலை மாற்றத்தால், இன்னும் 40ஆண்டுகளில் வடக்குப் பகுதி அரைப் பாலைவனமாக மாறக்கூடுமென்று எதிர்வு கூறியதோடு, அதைச் சமாளிப்பதற்குரிய வழிமுறைகள் பற்றியும் ஆராய வேண்டுமெனக் கூறினார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

image_55494bec35.jpgபுதிய அரசமைப்பு தொடர்பில், மஹிந்தவும் அவரது சகாக்களுமே, விகாரை விகாரையாகச் சென்று, போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனரென்று, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று, புதிய அரசமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், இனவாதத்தைத் தூண்டவேண்டாம் என்றும் குரோதத்தை விதைக்க வேண்டாமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ சற்று நேரத்துக்கு முன்னர் கூறியதை நினைவுபடுத்தியதோடு, ஆனால், மஹிந்தவும் அவரது சகாக்களுமே, விகாரை விகாரையாகச் சென்று, மக்களைக் குழப்பும் வகையில் இனவாதக் கோணத்தில் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனரெனக் குற்றஞ்சாட்டினார்.

ஏப்ரல் மாதத்துக்குள் நாடு பிளவுபடும், சமஷ்டி அரசமைப்பு உருவாகும், 09 பொலிஸ் நிலையங்கள் உருவாகும் என்றெல்லாம், மஹிந்த தரப்பினர் அறிவிப்புகளை விடுத்து வருவதாகக் கூறிய அநுரகுமார எம்.பி, 10 வருடங்கள் ஜனாதிபதிப் பதவியை வகித்த ஒருவர் கூட, புதிய அரசமைப்பு தொடர்பில் போலி கருத்துகளை முன்வைத்து வருகின்றாரெனவும் கூறினார்.

“கிராமமொன்றுக்குச் சென்று பொய்யுரைத்தால் கூட பரவாயில்லை. ஆனால், விகாரை விகாரையாகச் சென்று, வழிபாடுகளில் ஈடுபட்டு – பிரித் நூல்களை கட்டியப்படி, புத்தபெருமானின் முன்னிலையிலேயே பொய்யுரைக்கின்றனர். இது தகுமா? புதிய அரசமைப்பு ஊடாக, நாடு பிளவுபடாது. அதற்கு ஜே.வி.பி. இடமும் அளிக்காது.

“அரசமைப்பு யோசனைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அதன்பிறகு ஓர் அடியேனும் முன்வைக்க முடியாது. எனவே, வீண் பரப்புரைகளை முன்வைக்க வேண்டாம்” என, அவர் மேலும் தெரிவித்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

image_657d5cd881.jpg'அரசமைப்புக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை': சம்பந்தன்  

அரசமைப்பை ஏற்க முடியுமா என்பதை, மூவின மக்களே தீர்மானிக்க வேண்டிய நிலையில், அரசமைப்புக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை. எனவே, பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான அவசியம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்ற அமர்வில், புதிய அரசமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், புதிய அரசமைப்பு, அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்குமென்றார்.

மக்களை ஒன்றிணைத்தல், அதிகாரப் பரவலாக்கல் போன்ற பல நன்மைகள், புதிய அரசமைப்பில் உண்டு. தலைநகரில் அதிகாரம் குவிந்துள்ளதால், அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது. எனவே, மாகாண மற்றும் பிரதேச ரீதியில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென, சம்பந்தன் கூறினார்.

“நாடாளுமன்றத்தில், மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையுடன் அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர், மக்கள் கருத்துக்கணிப்புக்குச் செல்ல வேண்டும். ஆனால், பொதுத் தேர்தல் அவசியமில்லை. அரசமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களும் தீர்மானிக்கட்டும். அதற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை” என, கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு, நாட்டுக்கு ஆபத்தானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில், இது மிகவும் அவசியம். இந்த விவகாரத்தை, தவறான வகையில் தூக்கிப்பிடித்து, சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில், மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர் ஈடுபடுவதை உடன் கைவிட வேண்டுமெனவும், சம்பந்தன் கோரினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர் கூறியதாவது,

“மஹிந்த ராஜபக்‌ஷ அணியினரே, நீங்கள் தேசப்பற்றாளர்களாக நடிக்க வேண்டாம். நீங்கள் போலியான தேசப்பற்றாளர்கள். நீங்கள் படுமோசமானவர்கள். சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டுகின்றீர்கள்.

“தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுக்க பல சர்வதேச நாடுகள் உதவின. இந்தியா உள்ளிட்ட அந்த நாடுகளிடம், புதிய அரசமைப்பைக் கொண்டு வருவோம் எனவும் தேசிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வைக் காண்போம் எனவும், நீங்கள் வாக்குறுதியளித்தீர்கள்.

“தற்போதைய சூழ்நிலையில், புதிய அரசமைப்பு, நாட்டுக்கு மிகவும் அவசியம். இதனூடாக, மூவின மக்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும், சம உரிமையுடனும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடனும் வாழமுடியும். மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையுடன் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும். அதையடுத்து, பொதுமக்களின் கருத்தறிய விட வேண்டும். இதற்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என, அவர் மேலும் கூறினார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

image_72c054f9b5.jpgபுதிய அரசமைப்பொன்றின் ஊடாக, இந்த நாட்டை, ஒருபோதும் காட்டிக்கொடுக்கப் போவதில்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று (11) கூடிய அரசமைப்புப் பேரவைக் கூட்டதொடரின் போது தெரிவித்தார்.

அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழு, பிரதிச் சபாநாயகர் தலைமையில், இன்று முற்பகல் 10 மணிக்குக் கூடியது. இதன்போது, புதிய அரசமைப்புக்கான  நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் முன்வைத்தார்.

அத்துடன், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையையோ அல்லது நாட்டின் ஒருமைப்பாட்டையோ மாற்றும் வகையில், புதிய அரசமைப்பு மேற்கொள்ளப்பட மாட்டாதெனவும், பிரதமர் மேலும் கூறினார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

image_5c78be9ea2.jpg'பொதுத் தேர்தலை வையுங்கள்; அப்போது புதிய அரசமைப்புக்கான யோசனையைச் சொல்கிறோம்': மஹிந்த

நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வோமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற அமர்வுகள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடியது. இதன்போது, புதிய அரசமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “நீங்கள் தேர்தலுக்கு வாருங்கள். நாம் தேர்தலில் சந்திப்போம். அதன்போது, அரசமைப்பு தொடர்பான எமது யோசனையை, நாம் முன்வைக்கிறோம். நீங்கள் உங்கள் யோசனையை முன்வையுங்கள். மக்கள் தீர்மானிக்கட்டும்” என்றார்.

“நாடாளுமன்றத்தையும் மக்களையும் ஏமாற்ற வேண்டாமென்றும் நீங்கள் செய்யப்போவதைக் கூறுங்கள். நாம் மக்கள் முன்னிலையில் சென்று மக்களின் ஆணையைப் பெற்று, அரசமைப்பை நிறைவேற்றுவோம்” என, எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

ஓரினம், மற்றுமோர் இனத்தை அடக்கி ஒடுக்கி மிதித்து, ஆள முற்படக்கூடாதெனவும் நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும், இந்தக் கோட்பாடு பொருந்துமென்றும், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு, இந்த நாடாளுமன்றம் ஏற்புடையதல்ல. அரசமைப்பைக் கொண்டுவரும் தரப்பு, கடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததாகவும் கூறிய அவர், எனவே, இது விடயத்தில், மக்களின் நிலைப்பாடு என்னவென்பது அறியப்பட வேண்டுமென்றும் மாகாணசபைத் தேர்தல் கூட இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியதோடு, புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய சூழ்நிலை இது கிடையாதென்றார்.

http://www.tamilmirror.lk/topnews/227854/மூவின-மக்களும்-ஒற்றுமையுடனும்-நல்லிணக்கத்துடனும்-சம-உரிமையுடனும்-வாழ-புதிய-அரசமைப்பு-தேவை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.