Jump to content

விண்வெளியில் மர்ம ரேடியோ சிக்னல்: 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து வந்தது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
விண்வெளிபடத்தின் காப்புரிமை Getty Images

சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர்.

கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிகச்சரியாக அது என்னவிதமான ரேடியோ அலைகள் என்பதோ, மிகச்சரியாக எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ தெரியவில்லை.

13 ரேடியோ வேக அதிர்வுகளில் (Fast Radio Bursts) ஒரு அசாதாரணமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து திரும்பத் திரும்ப வந்தது.

ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒளி பயணிக்கும். இந்த வேகத்தில் ஒளி ஓராண்டு பயணித்தால் அடையும் தூரமே 'ஓர் ஒளி ஆண்டு தூரம்' எனப்படும்.

எனவே, விநாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் செல்லக்கூடிய தூரத்தில் இருந்து இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் இருந்து ரேடியோ வேக அதிர்வுகள் திரும்பத் திரும்ப வரும் நிகழ்வு இதற்கு முன்பு ஒரே ஒருமுறை நடந்துள்ளது. அப்போது வேறொரு டெலஸ்கோப் உதவியுடன் அந்த சிக்னல் கண்டறியப்பட்டது.

கனடாவின் ஒகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் வான் நோக்கியகம்.படத்தின் காப்புரிமை CHIME EXPERIMENT Image caption கனடாவின் ஒகநாகன் பள்ளத்தாக்கில், சைம் வான் நோக்கியகத்தில் உள்ள அரை உருளை வடிவ ஆண்டெனாக்கள்.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், ஒகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் (CHIME) வான் நோக்கியகம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

இந்த வான் நோக்கியகத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 100 மீட்டர் நீள அரை உருளை வடிவ ஆண்டெனாக்கள் உடனடியாக இந்த 13 ரேடியோ வேக அதிர்வுகளைக் கண்டுபிடித்தது. இந்த ஆண்டெனாக்கள் தினமும் வடதிசை வானத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்க்கின்றன.

'நேச்சர்' ஆய்விதழில் இந்த ஆய்வு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சுருக்கமாக FRB என்று அழைக்கப்படும் ரேடியோ வேக அதிர்வுகள் எனப்படுபவை விண்வெளியில் தோன்றும் மில்லிசெகண்ட் நீளமே உள்ள பிரகாசமான ஃப்ளாஷ் போன்ற ஒளி.

இதுவரை, விஞ்ஞானிகள் 60 முறை இத்தகைய ஒற்றை ரேடியோ வேக அதிர்வுகளைக் கண்டுள்ளனர். திரும்பத் திரும்ப ஒளிரும், மீளொளி ரேடியோ வேக அதிர்வுகளை காண்பது இது இரண்டாவது முறை.

இரண்டு முறை கண்டுபிடிக்கப்பட்ட மீளொளி ரேடியோ வேக அதிர்வுகளின் பண்புகளும் ஒத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார் கனடாவின் மெக்கில் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஸ்ரீஹர்ஷ் டெண்டுல்கர். ஒரு குழுவாக இந்த மீளொளி ரேடியோ வேக அதிர்வுகளின் பண்பைப் பற்றி தற்போதைய கண்டுபிடிப்பு நிறைய சொல்கிறது என்கிறார் அவர்.

இத்தகைய ரேடியோ வேக அதிர்வுகள் எதனால் தோன்றுகின்றன என்பதற்குப் பல காரணங்கள் கணிக்கப்படுகின்றன. மிக வலுவான காந்தப் புலம் உடைய, வேகமாக சுழலும் இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றிணைவதால் இத்தகைய வலுவான சமிக்ஞைகள் தோன்றலாம் என்கிறார்கள் பல விஞ்ஞானிகள். ஒரு சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் விண்வெளி ஓடத்தில் இருந்து தோன்றும் சமிக்ஞையாக இருக்கலாம் என்கின்றனர்.

https://www.bbc.com/tamil/science-46819062

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

150 கோடி ஒளி ஆண்டுகள் தூரமென்றால், இந்த சிக்னல்கள் 150 கோடி ஒளி ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி இருக்கும்...

அது ஏற்படும் பொழுது பூமியே இருந்திருக்காது... அதை ஏற்படுத்தியது ஏலியன்ஸ் என்றால், இப்பொழுது அவர்களும் இருப்பார்களா என்பது சந்தேகமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிக்னல்களை நாங்களும் பார்க்க கேட்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மியாவ் said:

150 கோடி ஒளி ஆண்டுகள் தூரமென்றால், இந்த சிக்னல்கள் 150 கோடி ஒளி ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி இருக்கும்...

அது ஏற்படும் பொழுது பூமியே இருந்திருக்காது... அதை ஏற்படுத்தியது ஏலியன்ஸ் என்றால், இப்பொழுது அவர்களும் இருப்பார்களா என்பது சந்தேகமே...

150 கோடி ஆண்டுகள் என்பது எமது பூமியின் ஆயுளின் சுமார் மூன்றில் ஒரு பங்குதான் எனவே மேற்படி சமிக்ஞை  அண்டவெளியில் உருவானபோது பூமி இருந்திருக்கும். ஆனால் சமிக்ஞையை உருவாக்கியவர்கள் அல்லது உருவான இடம் அல்லது கிரகம் இந்தக்காலக்கட்டத்தில் அழிந்துபோயிருக்கலாம் அல்லது இடம் மாறிப்போயிருக்கலாம்.  

Link to comment
Share on other sites

3 hours ago, vanangaamudi said:

150 கோடி ஆண்டுகள் என்பது எமது பூமியின் ஆயுளின் சுமார் மூன்றில் ஒரு பங்குதான் எனவே மேற்படி சமிக்ஞை  அண்டவெளியில் உருவானபோது பூமி இருந்திருக்கும். ஆனால் சமிக்ஞையை உருவாக்கியவர்கள் அல்லது உருவான இடம் அல்லது கிரகம் இந்தக்காலக்கட்டத்தில் அழிந்துபோயிருக்கலாம் அல்லது இடம் மாறிப்போயிருக்கலாம்.  

4.5 பில்லியன் வருடம் ஆகிரது பூமி தோன்றி, தோராயமாக கணக்கு போட்டு இருந்திருக்காது என்று அனுமானத்தில் குறிப்பிட்டிருந்தேன்...

Link to comment
Share on other sites

On 1/20/2019 at 1:45 AM, vanangaamudi said:

150 கோடி ஆண்டுகள் என்பது எமது பூமியின் ஆயுளின் சுமார் மூன்றில் ஒரு பங்குதான் எனவே மேற்படி சமிக்ஞை  அண்டவெளியில் உருவானபோது பூமி இருந்திருக்கும். ஆனால் சமிக்ஞையை உருவாக்கியவர்கள் அல்லது உருவான இடம் அல்லது கிரகம் இந்தக்காலக்கட்டத்தில் அழிந்துபோயிருக்கலாம் அல்லது இடம் மாறிப்போயிருக்கலாம்.  

ஆம். அண்ட வெளியில் என்னாமே அசையாமல் இருந்திருந்தால் மியாவ் சொன்ன கணக்குச் சரி. ஆனால் அண்ட வெளி பரந்து செல்லும் தற்போதைய வேகம் ஒளியின் வேகத்தை அண்டியதாக உள்ளது. ரேடியோ அலைகள் ஏறத்தாளா ஒளியின் வேகத்தை உடையவை. ரேடியோ அலைகளை உருவாக்கிய கிரகத்திலிருந்து பூமி எதிர்த் திசையில் பயணிப்பதாக எடுத்துக் கொண்டால் இந்த அலைகள் வெளிப்பட்டபோது அக் கிரகம் பூமிக்கு அருகில் இருந்திருக்க முடியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.