Sign in to follow this  
colomban

ரோஹிங்ய மக்களை நாடு கடத்துகிறது சவூதி அரேபியா

Recommended Posts

49644332_2060553480697640_2361357011997687808_n.jpg?_nc_cat=108&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb3-1.fna&oh=3b9b9dcc1cc0dd7f7a8206139faeb6cd&oe=5C8BD43E

டசின்­க­ணக்­கான ரோஹிங்ய மக்கள் சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தினால் பங்­க­ளா­தே­ஷுக்கு

நாடு கடத்­தப்­பட்டு வரு­கின்­றனர்.

 
ஜித்­தா­வி­லுள்ள ஷுமைசி தடுப்பு முகா­மி­லி­ருந்து நாடு­க­டத்­தப்­ப­டு­வ­தற்­காக கைவி­லங்­கி­டப்­பட்ட ஆண்கள் வரி­சையில் நிற்கும் காணொ­லி­யொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ‘மிடில் ஈஸ்ட் ஐ’ இணையத் தளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.
 
பங்­க­ளா­தே­ஷுக்கு நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்த ரோஹிங்ய ஆண்­க­ளுக்கு கைவி­லங்­கி­டப்­பட்­ட­தாக அந்த இணை­யத்­த­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்ட குரல் பதிவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  
 
சவூதி அரே­பிய தடுப்பு முகாம்­களில் சுமார் ஆறு மாதங்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததோடு நாடு கடத்­தப்­பட்டு வரு­வ­தாக காணொ­லியைப் பதிவு செய்த ரோஹிங்ய நபர் தெரி­வித்­துள்ளார்.
 
கடந்த ஐந்து அல்­லது ஆறு வரு­டங்­க­ளாக நான் இங்கு இருக்­கின்றேன். தற்­போது என்னை பங்­க­ளா­தே­ஷுக்கு அனுப்­பு­கின்­றார்கள். எனக்­காக பிரார்த்­தி­யுங்கள் என காணொ­­லியில் காணப்­பட்ட நப­ரொ­ருவர் தெரி­வித்தார்.
 
மிடில் ஈஸ்ட் ஐ இணையத் தளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்ட மற்­று­மொரு காணொ­லியில் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற பல­வந்த வெளி­யேற்­றத்­திற்கு பின்­ன­ணி­யாக அமைந்த கார­ணங்கள் விப­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.
 
நள்­ளி­ரவு பன்­னி­ரெண்டு மணி­ய­ளவில் எமது சிறைக் கூடத்­தினுள் அவர்கள் வந்­தார்கள். பங்­க­ளா­தே­ஷுக்கு செல்­வ­தற்கு எமது பொதி­களை தயார் செய்­யு­மாறு அவர்கள் கூறினர் என தனது பெயரை வெளி­யிட விரும்­பாத ரோஹிங்ய கைதி­யொ­ருவர் தெரி­வித்தார்.
 
எனக்கு தற்­போது கைவி­லங்­கி­டப்­பட்­டுள்­ளது. எனது நாடல்­லாத ஒரு நாட்­டுக்கு நான் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்றேன். நான் ரோஹிங்யா, எனது நாடு பங்­க­ளாதேஷ் அல்ல எனவும் அவர் தெரி­வித்தார்.
 
புனித யாத்­தி­ரைக்­கான விசா­வி­லேயே பெரும்­பா­லா­ன­வர்கள் சவூதி ஆரே­பி­யா­வுக்கு வந்­துள்­ளனர், எனினும் தொழில் புரி­வ­தற்­காக அனு­ம­தித்த காலத்தை விட அதிக காலம் தங்­கி­யி­ருந்­துள்­ளனர்.
 
நாம் வாழ்நாள் முழு­வதும் சவூதி அரே­பி­யா­வி­லேயே வாழ்ந்­தி­ருக்க முடியும். ஆனால் உரிய ஆவ­ணங்கள் இல்­லா­ததை சவூதி பொலிஸார் கண்­டு­பி­டித்­ததால் நாம் தடுப்பு முகா­முக்கு அனுப்பி வைக்­கப்­பட்டோம் என ஷுமைசி தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சில கைதிகள் தெரி­வித்­தனர்.
 
ராக்கைன் மாநி­லத்தில் வன்­மு­றைகள் ஆரம்­ப­மா­னதைத் தொடர்ந்து பெரும்­பா­லான ரோஹிங்ய மக்கள் நல்ல வாழ்க்­கை­யினைத் தேடி சவூதி அரே­பி­யா­வினுள் நுழைந்­த­தாக ஜேர்­ம­னியின் பிரங்­போர்­டி­லுள்ள ரோஹிங்ய செயற்­பாட்­டா­ள­ரான நே சான் ல்வின் தெரி­வித்தார்.
 
அப்­போ­தி­ருந்து பங்­க­ளாதேஷ் அகதி முகாம்­களில் உள்­ள­வர்கள் தமது குடும்­பத்­தி­ன­ருக்கு ஆத­ர­வாக இருந்­தனர். அவர்கள் டாக்­காவைச் சென்­ற­டைந்­ததும், அவர்கள் அக­தி­க­ளாக மாறு­வ­தோடு கொக்ஸ் பஸா­ரி­லுள்ள அகதி முகாம்­க­ளுக்கு கொண்டு சென்று விடப்­ப­டு­வார்கள் எனவும் அவர் தெரி­வித்தார்.
 
ரோஹிங்ய அடை­யாளம் ஏற்றுக் கொள்­ளப்­ப­டா­ததால் அவர்கள் சவூதி அரே­பி­யா­வுக்கு வந்­த­போது இந்­தி­யர்கள், பாகிஸ்­தா­னி­யர்கள், பங்­க­ளாதேஷ் நாட்­ட­வர்கள், நேபாள நாட்­ட­வர்கள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே விரல் பதி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன எனவும் நே சான் ல்வின் விப­ரித்தார்.
 
சவூதி அரே­பிய சட்­டத்தின் பிர­காரம், வேறொரு நாட்டுப் பிர­ஜை­யாகப் பதிவு செய்­யப்­படும் பட்­சத்தில் சட்­ட­ரீ­தி­யான உதவி என்ற வகையில் எம்மால் எவ்­வித உத­வி­க­ளையும் செய்ய முடி­யாது என நே சான் ல்வின் தெரி­வித்தார்.
 
சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் நான்கு நாடு­களின் தூத­ரக அதி­கா­ரி­களை அழைத்து வந்­தனர். அவர்­களுள் மூன்று நாடு­களின் தூத­ரக அதி­கா­ரிகள் பொறுப்­பேற்க மறுத்த அதே­வேளை பங்­க­ளாதேஷ் அதி­காரி மாத்­தி­ரமே ஏற்­றுக்­கொள்ள இணக்கம் தெரி­வித்தார்.
 
மியன்­மாரைச் சேர்ந்த ரோஹிங்ய சிறு­பான்மை முஸ்­லிம்­களே உலகில் மிகவும் குற்­ற­மி­ழைக்­கப்­பட்­ட­வர்கள் என விப­ரிக்­கப்­ப­டு­கின்­றது.
 
ஆயுதக் குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு மியன்­மாரின் மேற்கு மாநி­லத்தில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக மியன்மார் இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடூரத் தாக்­குதல் நட­வ­டிக்கை கார­ண­மாக சுமார் ஒரு மில்­லியன் மக்கள் பங்­க­ளா­தேஷில் அடைக்­கலம் புகுந்­தனர்.
 
பல தசாப்­தங்­க­ளாக மியன்­மாரில் ரோஹிங்ய மக்­க­ளுக்கு கெதி­ரான குற்றச் செயல்கள் தொடர்ந்து இடம்­பெற்று வந்­தன. 1962 ஆம் ஆண்டு புரட்­சிக்குப் பின்னர் ஆட்­சிக்கு வந்த இரா­ணுவ அர­சாங்கம் 1982 ஆம் ஆண்டு ரோஹிங்ய மக்­களின் குடி­யு­ரி­மை­யினைப் பறித்­தது.
 
2012 ஆம் ஆண்டு தொடக்கம் ராக்கைன் பொளத்­தர்­க­ளுக்கும் ரோஹிங்யர்­க­ளுக்கும் இடையே ஏற்­பட்ட கொலை­வெறி வன்­மு­றை­களைத் தொடர்ந்து இலட்­சக்­க­ணக்­கான சிறு­பான்மை ரோஹிங்ய மக்கள் அழுக்கு நிறைந்த தடுப்பு முகாம்­க­ளுக்குள் வாழ நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர்.
 
பல தசாப்­தங்­க­ளாக அவர்கள் திறந்­த­வெளி முகாம்­களில் அடைக்­கப்­பட்­டி­ருந்­தனர் எனத் தெரி­வித்த நே சான், படு­கொ­லைகள் அங்கு இடம்­பெற்று வந்­தன. அவர்கள் எவ­ரி­டமும் வேறு நாடு­க­ளுக்குச் செல்­வ­தற்­கான கட­வுச்­சீட்­டுக்கள் இருக்­க­வில்லை எனவும் தெரிவித்தார்.
 
அவர் ராக்கைன் மாநிலத்திலுள்ள ஒரு நகரிலிருந்து மற்றுமொரு நகரத்திற்குச் செல்வதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. தற்போது சவூதி அரேபியாவிலிருந்து வெளியெற்றப்படும் இவர்கள் கடத்தல்காரர்களூடாக தமது கடவுச்சீட்டுக்களைப் பெற்றிருந்தனர்.
 
மனித உரிமைக் குழுக்கள் சவூதி அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளும், கடந்த இரண்டு ஆண்டுகளாக சவூதி அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளும் பயனற்றுப்போயுள்ளன. யாரும் உதவுவதற்கு தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Share this post


Link to post
Share on other sites

ஒரு முஸ்லிம் அகதிகளுக்கே இரக்கம்காட்டாத இஸ்லாமிய நாடுகள் உலகம் முழுவதும் தமது மத தாபனங்களையும் மதபோதனைகளையும் வினியோகிற்பதில் மும்முரமாக இருக்கிறார்கள் உன்னிடம் மனிதம் இல்லையெனின் நீ ஒரு ஜடம்தான் 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, புலோலியூரான் ரவீ..ன் said:

ஒரு முஸ்லிம் அகதிகளுக்கே இரக்கம்காட்டாத இஸ்லாமிய நாடுகள் உலகம் முழுவதும் தமது மத தாபனங்களையும் மதபோதனைகளையும் வினியோகிற்பதில் மும்முரமாக இருக்கிறார்கள் உன்னிடம் மனிதம் இல்லையெனின் நீ ஒரு ஜடம்தான் 

சவூதி அரேபியா ஒழுங்காய் இருந்தால் ஏன் சிரியா அகதிகள் இவ்வளவு அல்லோலப்படப்போகின்றார்கள்?

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this