Sign in to follow this  
nunavilan

தேசிய சீனியர் கைப்பந்து - தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி

Recommended Posts

தேசிய சீனியர் கைப்பந்து - தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி

 

சென்னையில் நடைபெற்ற 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

 
தேசிய சீனியர் கைப்பந்து - தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி
தமிழ்நாடு-சர்வீசஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு காட்சி.

சென்னை:

67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25-14, 25-17, 25-23 என்ற நேர்செட்டில் ஆந்திரா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்னொரு காலிறுதியில் தமிழக அணி 25-20, 23-25, 25-20, 25-20 என்ற செட் கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

 

பெண்கள் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரெயில்வே அணி 25-13, 25-15, 25-11 என்ற நேர்செட்டில் டெல்லி அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. மற்றொரு காலிறுதியில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25-12, 25-16, 25-12 என்ற நேர்செட்டில் அரியானாவை சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தது. 

https://www.maalaimalar.com/News/Sports/2019/01/08100819/1221797/National-Senior-volleyball-TN-team-qualify-semi-finals.vpf

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this