Sign in to follow this  
கிருபன்

இன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது

Recommended Posts

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னத்தை சொல்ல எங்களுக்கு பழகிவிட்டது இதை மொத்தமாக கேட்பவர்களுக்கு கொஞ்சம் கஸ்ரமாக இருக்கும் எங்கள் ஊர் பிரதான வீதியில் இருக்கும் காணிகளும் விற்பனையாகி விட்டது யாருக்கும் தெரியாமல் கோடி கணக்கில்  விற்றவர்கள் பெரிய இடம் அவங்களுக்கு ஒன்றும் கதைக்கமாட்டார்கள் ஆனால் ஒரு ஏழை விற்றால் அவன் குடும்பத்தையும் ஒட்டு மொத்தமாக நாறடித்து விடுவார்கள்

நூற்றுக்கு நூறுவீதம் உண்மை. சாட்சிகளே தேவையில்லாத நடைமுறைகள்  தற்போது அரங்கேறி வருகின்றன.

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

கோயில் காணியை அபகரித்து பள்ளிவாசலுக்குக் கொடுத்தேன் - ஹிஸ்புல்லாஹ்

சவக்காலை (மயானம்) இருந்த காணியை அபகரித்து மர்கஸ் (பள்ளிவாசல்) கட்டினேன். ஓட்டமாவடியில் கோயில் இருந்த காணியை அபகரித்து பள்ளிவாசலுக்குக் கொடுத்தேன்."
- எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர்)
 
முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ்களின் வெறுப்பு, இந்துத்துவா சக்திகளின் ஊடுருவல் மற்றும் சதித் திட்டங்கள் போன்றவை கிழக்கில் ஒருபுறம் இருந்தாலும் கூட, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை ஆளுநராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சாதாரண தமிழர்கள் கூட போராடுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்பதை நீதமாக சிந்திக்கும் எந்த மனிதனும், எந்த முஸ்லிமும் மாற்றுக்கருத்தில்லாமல் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
 
ஹிஸ்புல்லாஹ்வின் வாக்குமூலம்
 
ஹிஸ்புல்லாஹ் மயானத்தை அபகரித்து மார்கஸ் கட்டினார் என்பதும், கோயில் இருந்த காணியை அபகரித்து பள்ளிவாசலுக்குக் கொடுத்தார் என்பதும் அவர் மீது சுமத்தப்படும் வெறும் குற்றச்சட்டுக்களோ, அல்லது யாரோ ஒரு பத்திரிகையாளர் எங்கேயோ எழுதிய செய்திகளோ அல்ல, மாறாக தானே மறுக்க முடியாத படிக்கு ஹிஸ்புல்லாஹ்வே வீடியோ வாக்குமூலம் வழங்கிய ஆதாரமுள்ள விடயங்கள் ஆகும். கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான இரண்டு நிகழ்வுகள் கடந்த ஒரு வார காலத்திற்குள் நடை பெற்று இருப்பது உண்மையாக உள்ள போதும், கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் நியமனம் செய்யப்பட்டிருப்பது என்பது எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்றாகும். ஆகவே ஹிஸ்புல்லாஹ்வின் நியமனத்தை சாதாரண தமிழர்கள் எதிர்ப்பதை முஸ்லிம்களோ, ஏனையவர்களோ பிழையாகப் பார்ப்பதும், சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், அதற்கு வேறு அர்த்தங்கள் கற்பிக்க முயவதும் தவறாகும். மயான, கோயில் காணிகளை திருடி மார்கஸ் கட்டினேன், பள்ளிவாசலுக்குக் கொடுத்தேன் என்று வாக்குமூலம் வழங்குகின்ற ஒருவர் எவ்வகையிலும் ஆளுநராக நியமிக்கப்பட தகுதியற்றவர் ஆவார், அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண சபை செயற்படாத / இல்லாத இந்த காலப்பகுதியில் மாகாண சபையின் அதிகாரம் ஆளுநர் வசம் இருக்கப்போகும் நிலையில், ஹிஸ்புல்லாஹ் போன்ற ஒருவர் ஆளுநராக இருப்பதை ஆபத்தானதாகவே தமிழர்கள் நோக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
 
உடனடியாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பதவி விலகுவதுடன், அல்லது பதவி நீக்கப்படுவதுடன், அபகரிக்கப்பட்ட மயான, கோயில் காணிகள் உடனடியாக திருப்பி ஒப்படைக்கப்படல் வேண்டும். [காணிகளை அபகரிப்பது குறித்து முஹம்மது நபி கூட கடுமையாக எச்சரிக்கை செய்து இருப்பதை முஸ்லிம்கள் அறியாமல் இருக்க முடியாது. யார் ஒருவரது நிலத்தில் இருந்து ஒரு சாண் அளவேனும் அநியாயமாக அபகரிக்கின்றாரோ, மறுமை நாளில் அவரது கழுத்தில் ஏழு பூமிகள் வளையமாக அணிவிக்கப்படும் ஆதாரம் : சஹிஹ் புஹாரி. (ஏழு பூமிகள் கழுத்தில் அணிவிக்கப்படும் என்பதை எப்படி என்று இந்த இடத்தில் ஆராயாமல், குற்றத்தின் கடுமையை குறிக்க பயன்படுத்திய வார்த்தைகளாகக் கருதி கடந்து போகவே விரும்புகின்றேன்.) ] அத்துடன் இரு தரப்புக்களும் தாம் அபகரித்த காணிகள், நிலங்களை தாமாகவே முன்வந்து திருப்பி ஒப்படைப்பதுடன், தம்மால் நடந்த அநீதங்கள் அனைத்திற்கும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுடன், இனங்களுக்கு இடையில் பகைமையை தூண்டும், காணிகளை அபகரிக்க துணை போன, துணை போகின்ற பிரதிநிதிகளை முற்றாகப் புறக்கணித்து தமக்கான புதிய, பொருத்தமான தலைமைகளை, பிரதிநிதிகளை தெரிவு செய்துகொள்ள முயல்வதே கிழக்கில் மனித வாழ்வு மகிழ்ச்சியாக அமைவதற்கான ஆரோக்கியமான முதற்படியாக அமையும்.

-றிஷ்வின் இஸ்மத்

11.01.2019

http://www.allahvin.com/2019/01/hizbullah.html?fbclid=IwAR0w4--GRbYKOq06xCkCFOwQ8RdDdb5tdKtaS5t8Gknv99Z59RU5gm7S4ug

Edited by colomban

Share this post

Link to post
Share on other sites
On 1/8/2019 at 6:33 PM, ரதி said:

இதற்கு தான் நான் அப்பவே சொன்னேன் பிள்ளையான்,கருணா போன்றோர் மட்டுவிற்கு  வேண்டும் 

நிச்சயமாக.

ஆனால், சொறி லங்காவையும் எதிர்க்க கூடிய பின்னணி தேவை. 

இது பிள்ளையான், கருணா ஆல்  முடியாது.
 
சலுகைகளும், தனிப்பட்ட ஆசாபாசங்கள் அரசியலிழும், சமூக சேவையிலும் அவர்களை வளைக்காதிருக்க வேண்டும்  வேண்டும்.

தனிப்பட்ட வாழ்கை எவ்வாறேனும் இருந்துவிட்டு போகட்டும்.

Edited by Kadancha

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, Kadancha said:

நிச்சயமாக.

ஆனால், சொறி லங்காவையும் எதிர்க்க கூடிய பின்னணி தேவை. 

இது பிள்ளையான், கருணா ஆல்  முடியாது.
 
சலுகைகளும், தனிப்பட்ட ஆசாபாசங்கள் அரசியலிழும், சமூக சேவையிலும் அவர்களை வளைக்காதிருக்க வேண்டும்  வேண்டும்.

தனிப்பட்ட வாழ்கை எவ்வாறேனும் இருந்துவிட்டு போகட்டும்.

சிங்களவர்கள் அத்து மீறி தமிழர் நிலத்தில் குடி இருக்கவில்லை, எமது நிலங்களை அடாத்தாக பறிக்கவில்லை...முஸ்லிலிம்கள் அதை செய்கிறார்கள்...முதலில் அவர்களை எதிர்த்து எமது நிலங்களை தக்க வைத்துக் கொண்டு பின்னர் சிங்களவருக்கு எதிராய் போராடலாம்....
இருக்க ஒரு சொட்டு நிலம் இல்லாமல் போன பின் போராடி என்ன பயன்?
 
Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

சிங்களவர்கள் அத்து மீறி தமிழர் நிலத்தில் குடி இருக்கவில்லை, எமது நிலங்களை அடாத்தாக பறிக்கவில்லை...முஸ்லிலிம்கள்
 
ரதி....!

தமிழீழ போராட்டத்துக்கான முக்கிய காரணமே சிங்கள தாயக நிலத்தின் மீதான ஆக்கிரமிப்புதான். இது தான் அடிப்படையே. வடக்கு கிழக்கை இணைக்கும் மணலாறு பகுதி அடங்கலாக தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் அபகரிக்கப்பட்டு முற்றிலும் சிங்கள கிராமங்களாக நகரங்களாக ஆக்கப்பட்டதை இன்னும் அறியவில்லையா நீங்கள்? இன்றும் முல்லையில் பல தமிழ் மீனவக் கிராமங்கள் சிங்களவர்களாலும் பல வரலாற்று தொல்லியல் இடங்கள் தொல்லியல்துறையாலும் அபகரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கு என்று வரும் செய்திகளையாவது வாசிப்பதில்லையா?

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, ரதி said:

சிங்களவர்கள் அத்து மீறி தமிழர் நிலத்தில் குடி இருக்கவில்லை, எமது நிலங்களை அடாத்தாக பறிக்கவில்லை...முஸ்லிலிம்கள் அதை செய்கிறார்கள்...முதலில் அவர்களை எதிர்த்து எமது நிலங்களை தக்க வைத்துக் கொண்டு பின்னர் சிங்களவருக்கு எதிராய் போராடலாம்....
இருக்க ஒரு சொட்டு நிலம் இல்லாமல் போன பின் போராடி என்ன பயன்?
 
உண்மையாகவே நீங்கள் இதை தெரிந்துதான் எழுதுகிறீர்களா அல்லது குத்துமதிப்பாக எழுதுகிறீர்களா?

1950 களிலேயே கிழக்கு மாகாண கல்லோயாத் திட்டம் என்று தொடங்கி அம்பாறை, மன்னம்பிட்டி என்று நீண்டு திருகோணமலை , பதவியா, மணலாறு, கொக்கொத்துடுவாய், தென்னமரவாடி, ஜனகபுர முதல் தெற்கு வவுனியா வரை நீண்டுசெல்லும் சிங்களவர்கள் எப்படி அங்கே கொண்டுவரப்பட்டார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

வடக்கையும் கிழக்கையும் நிலத்தொடர்பறுத்தல் மூலம் துண்டாடியது எந்த முஸ்லிம்   குடியேற்றம் என்று சொன்னால் அறிந்துகொள்ள ஆசை!

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, நிழலி said:

ரதி....!

தமிழீழ போராட்டத்துக்கான முக்கிய காரணமே சிங்கள தாயக நிலத்தின் மீதான ஆக்கிரமிப்புதான். இது தான் அடிப்படையே. வடக்கு கிழக்கை இணைக்கும் மணலாறு பகுதி அடங்கலாக தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் அபகரிக்கப்பட்டு முற்றிலும் சிங்கள கிராமங்களாக நகரங்களாக ஆக்கப்பட்டதை இன்னும் அறியவில்லையா நீங்கள்? இன்றும் முல்லையில் பல தமிழ் மீனவக் கிராமங்கள் சிங்களவர்களாலும் பல வரலாற்று தொல்லியல் இடங்கள் தொல்லியல்துறையாலும் அபகரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கு என்று வரும் செய்திகளையாவது வாசிப்பதில்லையா?

12 hours ago, ragunathan said:

உண்மையாகவே நீங்கள் இதை தெரிந்துதான் எழுதுகிறீர்களா அல்லது குத்துமதிப்பாக எழுதுகிறீர்களா?

1950 களிலேயே கிழக்கு மாகாண கல்லோயாத் திட்டம் என்று தொடங்கி அம்பாறை, மன்னம்பிட்டி என்று நீண்டு திருகோணமலை , பதவியா, மணலாறு, கொக்கொத்துடுவாய், தென்னமரவாடி, ஜனகபுர முதல் தெற்கு வவுனியா வரை நீண்டுசெல்லும் சிங்களவர்கள் எப்படி அங்கே கொண்டுவரப்பட்டார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

வடக்கையும் கிழக்கையும் நிலத்தொடர்பறுத்தல் மூலம் துண்டாடியது எந்த முஸ்லிம்   குடியேற்றம் என்று சொன்னால் அறிந்துகொள்ள ஆசை!

நிழலி,ரகு, நீங்கள் மேலே எழுதியது எல்லாம் எனக்குத் தெரிந்தது,நான் கேள்விப்பட்டதும் தான்...நான் இப்ப முக்கிய பிரச்சனையாக கருதுவது கிழக்கில் அதிகரித்து வரும் முஸ்லீம் மக்களது இனப் பெருக்கமும், தமிழர்களது இடங்களில் அவர்களது ஏழ்மையை பயன் படுத்தி அவர்களது காணி, வீடு வாசல்களை விலைக்கு வாங்கி தமிழர்களுக்கு இடையே குடியேறுவது...கொஞ்சக் காலத்தில் அவர்களது சனத்தொகை அதிகரிக்க முழு கிழக்கு மாகாணமும் முஸ்லீம் வசமாகி விடும் என்று பயப்படுகிறேன் ..இதைத் தான் முதலில் தடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

Share this post

Link to post
Share on other sites
On 1/12/2019 at 7:04 PM, ரதி said:

சொறி சிங்கள லங்காவிற்கு முஸ்லிம்கள் இப்படி இயற்றக்கையான தோற்றப்பாடுடன் இனப் பரம்பலை  கூட்டுவது ஓர் கேந்திர தந்திரோபாயம்.

இதை கருணா, பிள்ளையான்  எதிர்க்க போனால், கருணா வேறு வழியில் தூக்கப்படுவர். 

சிங்களர்வர்களையும் குடியேற்றுவது நாடி பெறுகிறது, தமிழ் இனப் பரம்பலை சுவிஸ் சீஸ் போல ஓட்டைகள் போடுவதற்கு 

அதற்கு  சொறி சிங்கள லங்காவிற்கு சட்ட அதிகாரம் இருக்கிறது. கருணா, பிள்ளையானால் இதையும் எதிர்க்க முடியாது.

கருணா, பிள்ளையான் போன்றவர்கள் என்பது, அவ்வாறு சண்டித்தனமும், அடாவடியும் செய்யக் கூடியவராகவும், அத்ததற்கேற்றப்ப அனுப்பவும், வேறு அனுபபவட்ட ஆட்களையும் திரட்டக்கூடிய ஆற்றலும் கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பதை மனதில் வைத்து சொல்லியது.

ச ட்டப் பிரச்சனைகளை, உள்ளூர் போலீஸ் ஐ வைத்து சன்மானம் சமாளித்து விடலாம்.    

இதெல்லாம், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், நடைமுறை சத்தியத்தை வைத்தே இதை சொல்கிறேன். 

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this