Sign in to follow this  
கிருபன்

விராட் தலைமையிலான படையின் 72 ஆண்டுகால சாதனை

Recommended Posts

விராட் தலைமையிலான படையின் 72 ஆண்டுகால சாதனை

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியதனூடாக 72 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றிபெற்றுள்ளது.

virat1.jpg

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று இருபதுக்கு 20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிய, டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டத்தினாலும், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 146 ஓட்டத்தினாலும், மூன்றாவது போட்டியில் இந்திய அணி 137 ஓட்டத்தினாலும் வெற்றி பெற்றிருந்தது.

இந் நிலையில் இவ் விரு அணிகளுக்கிடையோயான நான்காவதும் இறுதியுமான போட்டி கடந்த 03 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமானது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 622 ஓட்டங்களை குவித்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்த நிலையில் 322 ஓட்டங்கள் என்ற முன்னிலைப் பெற்ற இந்தியா, பலோஒன் வழங்கியது. 

31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா பலோஒன் ஆனாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிக்காக ஆடுகளம் நுழைந்து துடுப்பாட ஆரம்பிக்க நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தின்போது, 2 ஆவது தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மையால் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 6 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது. 

sdniy.jpg

இந் நிலையில் இறுதி நாளான இன்று காலை தொடர்ந்தும் மழை பெய்ய ஆரம்பித்தமையினால், உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், மைதானத்தை சோதித்த நடுவர்கள் போட்டியை கைவிடுமாறு அறிவித்தனர்.

ind.jpg

இதையடுத்து நான்காவது போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று 72 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணியில் இந்திய சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.virakesari.lk/article/47622

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this