Jump to content

எதிர்பார்ப்புகளுடன் 2019!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்ப்புகளுடன் 2019!!

பதிவேற்றிய காலம்: Jan 6, 2019

பெப்­ர­வரி 4ஆம் திகதிக்கு முன்­பாக முன்­வைக்்கப்­ப­ட­வுள்­ள­தா­கக் கூறப்­ப­டும் அர­ச­மைப்பு வரைவு பற்­றிய பரப்புரை கூட மக்­களை ஏதோ ஒரு விதத்­தில் ஏமாற்­றும் நட­ வ­டிக்­கை­யாக இருக்­குமோ? என்ற சந்­தே­கம் எழுகிறது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பி­ன­ ரும், பொது­சன மக்­கள் முன்­னணியும் மேற்­கொண்ட ஆட்சி மாற்­றத்­துக்­கான முயற்­சி­கள், ஐக்­கிய­ தேசி­யக் கட்­சி­யி­னர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர், மக்­கள் விடு­த­லைக் கட்­சி­யி­னர் ஆகிய தரப்­பி­னர் எடுத்த எதிர்­ந­ட­வ­டிக்­கை­க­ள், அவற்­றின் கார­ண­மாக ஏற்­பட்ட முரண்­பா­டு­க­ள், மோதல்­கள் என அனைத்தும் இறு­தி­யில் நீதி­மன்­றத் தீர்ப்­பின் மூலம் முடி­வுக்கு வந்­து, ஐக்­கி­ய­தே­சிய முன்­னணி ஆட்­சிப் பொறுப்பை ஏற்­றுள்ள நிலை­யில் 2019ஆம் ஆண்டு பிறந்துள்­ளது.

ஒவ்­வொரு புது­வ­ரு­டம் பிறக்­கும் போதும் ஆட்­சி­யா­ளர்­கள் புதிய வரு­டத்­தின் பிறப்­பு­டன் நாட்­டைப் புதிய வீச்­சு­டன் முன்­கொண்டு செல்­லப்­போ­வ­தா­க­வும், மக்­க­ளுக்கு வரப்­பி­ர­சா­தங்­களை வழங்­கப்­போ­வ­தா­க­வும் வாக்­கு­றுதி வழங்­கு­வ­தைப் போலவே இந்த வ­ரு­ட­மும் அரச தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரும் தங்­கள் புது­வ­ருட வாழ்த்­துச் செய்­தி­யில் நம்­பிக்­கை­யூட்­டும் கருத்துக்­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

அதே­வே­ளை­யில் மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சே­னவை அரச தலை­வ­ராக ஆட்­சிப்­பீ­ட­மேற்­ற­வும் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வைத் தலைமை அமைச்­ச­ரா­க்க­வும் முழு­மை­யான பங்­க­ளிப்பை வழங்­கிய தமிழ்­மக்­கள் இந்த இரண்டு த­ரப்­பி­ன­ரும் முன்னெடுத்த கடந்த மூன்­றரை ஆண்டு ஆட்­சிக் காலப் பகு­தி­யில் எதிர்­பார்ப்­பு­கள் எது­வும் நிறை­ வேற்­றப்­ப­டாத நிலை­யி­லேயே உள்­ள­னர்.

கூட்டமைப்பால் எதையும் சாதிக்க முடியவில்லை
தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யாக இருந்து கொண்டு சகல விட­யங்­க­ளி­லும் அர­சுக்கு ஆத­ரவு வழங்­கி­ய­போ­தும் காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­கள் விடு­தலை, காணா­மல் ஆக்கப்பட்டோர் விவ­கா­ரம் போன்ற விட­யங்­க­ளில் மக்­கள் வீதி­க­ளில் இறங்­கித் தொடர் போராட்­டங்­களை நடத்த வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

அதே­வே­ளை­யில் தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்­பி­னரோ தமது பலத்தை முன்­வைத்து அர­ச­த­ரப்­பு­டன் மேலும் பேச வேண்­டும். ஆனா் தமக்கான வாய்ப்­புக்­க­ளைப் பயன்­ப­டுத்­தா­மல் அரச தரப்பை நியா­யப்­ப­டுத்­துவ திலேயே அக்கறை காட்டி வந்­த­னர். தாங்­கள் அர­சுக்­குக் கூடு­த­லான அழுத்­தங்­க­ளைக் கொடுத்­தால் அதைப் பாவித்து மகிந்த தரப்­பி­னர் புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ரான முட்­டுக்­கட்­டை­ க­ளை அதிகப்­ப­டுத்தி விடு­வார்­கள் என­வும் கூறினார்கள். எப்­ப­டி­யி­ருப்­பி­னும் கடந்த மூன்­றரை வரு­டங்­கள் காற்­றில் பறந்த வாக்­கு­று­தி­க­ளு­டன் தமிழ்­மக்­க­ளின் காலம் கடத்­தப்­பட்­டு­விட்­டது.

இப்­ப­டி­யான ஒரு நிலை­யில் 2019ஆம் ஆண்டு பிற­க்கும் போதே தமிழ்­மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்­டும் வாக்­கு­றுதிகள் வழங்­கப்­பட்டுள்ளன. அதா­வது எதிர்­வ­ரும் பெப்­ர­வரி 4ஆம் திகதிக்கு முன்­பா­கப் புதிய அர­ச­மைப்­புக்­கான வரைவு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­ப­ டும் எனத் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அதன் பேச்­சா­ள­ரு­மா­கிய எம்.ஏ.சுமந்­தி­ரன் யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

சாத்தியமற்றதைப் பேசும் சுமந்திரன்
1972ஆம் ஆண்டு சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்கா காலத்­தி­லும் 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெய­வர்த்­தனா ஆட்­சிக் காலத்­தி­லு­ம் அர­ச­மைப்­பு­க­ள் முன்­வைக்­கப்­பட்டு ஒன்­றி­ரண்டு மாதங்­க­ளி­லேயே அவை நிறை­வேற்­றப்­பட்­டன. கடந்த மூன்­றரை வரு­ட­கா­லத்­தில் ஐக்­கிய­ தேசி­யக் கட்­சி­யும் ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பும் இணைந்து நடத்­திய ஆட்­சி­யில் புதிய அர­ச­மைப்பு மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை வாக்­கு­க­ளால் நிறை­வேற்­றப்­பட்ட வாய்ப்­பு­கள் இருந்­தது.

ஆனால் இழுத்­துப்­ப­றித்து அந்தக் கா­லப்­ப­கு­தி­யில் இறு­தி­வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. தற்­ச­ம­யம் ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்பு அர­சை­விட்டு வெளி­யே­றி­விட்ட நிலை­யில் மூன்­றில் இரண்டு பொரும்­பான்­மை­யைப் பெற முடி­யாத நிலை­யில் அந்த வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. ஆனால் இது நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டுப் பின்னர் மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை வாக்­கு­க­ளால் நிறை­வேற்­றப்­பட வேண்­டும்.

பின்பு பொது­மக்­கள் கருத்­துக்­க­ணிப்­பி்ன்­மூ­லம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்பே இது அர­சி­யல் யாப்­பாக அங்­கீ­கா­ரம்­பெ­றும். இலங்­கை­யின் தலை­சி­றந்த சட்­டத்­த­ர­ணி­க­ளில் ஒரு­வ­ராகக் கருதப்படும் சுமந்­தி­ரன் இந்த விட­யத்தை அறி­யா­த­வ­ராக இருக்க முடி­யாது. ஆனா­லும் அவர் பெப்­ர­வரி 4ஆம் திகதிக்கு முன்­பாக தமிழ்­மக்­க­ளுக்கு ஏதோ கிடைத்­த­தற்­க­ரிய வரம் ஒன்று கிடைக்­கப்­போ­வ­ தைப்­போன்று ஊட­க­வி­ய­லா­ள­ரி­டம் மட்­டு­மின்றிப் பல இடங்­க­ளி­லும் கருத்்து வெளி­யிட்டு வரு­கின்­றார்.

நீடிக்கும் முரண்பாடுகள்
இந்த அர­ச­மைப்பு முன்­வ­ரை­வில் உள்ள பெளத்­தத்­துக்கு முதன்மை இடம், ஒரே­நாடு, ஒன்­று­பட்ட நாடு என்­பன தொடர்­பா­கக் கருத்­து­வே­று­பா­டு­க­ளும் சர்ச்­சை­க­ளும் தமிழ்­மக்­க­ளி­டம் உண்டு என்ற போதி­லும் தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு அவற்றை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது மட்­டு­மன்றி அவற்றை நியா­ யப்­ப­டுத்­தி­யும் வரு­கி­றது.

அது ஒரு­பு­ற­மி­ருக்க இந்த அர­ச­மைப்பு வரைவு இப்­போது நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­டு­வது தமிழ்­மக்­க­ளின் நலன்­க­ளின் அடிப்­ப­டை­யிலா? அல்­லது தமிழ்­மக்­க ளின் கோரிக்­கை­களை விலி­யு­றுத்­தக் கிடைக்­கும் வாய்ப்­பைத் திசை­தி­ருப்பி மழுங்­க­டிக்­கவா? என்ற கேள்­வி­ யைச் சில அர­சி­யல் அவ­தா னி­கள் எழுப்­பி­யுள்­ள­னர். அவர்­க­ளின் கேள்­வி­யில் அர்த்­த­மில்­லை­ யென்று சொல்­லி­விட முடி­யாது.

இரா­ணு­வத்­தி­னர் வச­முள்ள பொது­மக்­க­ளின் காணி­களை 2018 டிசெம்­பர் மாதத்­து­டன் விடு­விக்­கப்­போ­வ­தா­க அரச தலைவர் அண்மை யில் தெரி­வித்­தி­ருந்­தார். இந்த அறி­விப்பு ஊட­கங்­க­ளி­லும் அரச அதி­கா­ரி­க­ளா­லும் பெரு­ம­ள­வில் பரப்பப்பட்­டது.

அது மட்­டு­மின்றி இரா­ணு­வத் தள­ப­தி், பிராந்தி யக் கட்­ட­டத் தள­ப­தி­க­ளும் அரச அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டல்­க­ளை­யும நடத்தி ஏதோ ஒரு பெரும் மாற்­றத்தை ஏற்­படுத்தி விடப்­போ­வ­தாக ஒரு தோற்­றப் பாட்டை உரு­வாக்­கி­னர். அவர்­கள் ஊட­க சந்­திப்­புக்­க­ளை­யும் அறிக்­கை­களை விடும் காணி விடு­விப்­புத் தொடர்­பாக பரப்புரையை மேற்­கொண்­ட­னர்.

ஆனால், நடப்­பதோ வேறு­வி­த­மா­கவே உள்­ளது. கேப்­பாப்­பு­லவு மக்­கள் தங்­கள் காணி­களை விடு­விக்­கும்­படி கோரி 680 நாள்களைக் கடந்­தும் தொடர்­போ­ராட்­டத்தை நடத்தி வருகின்றனர். அது தொடர்­பாகச் சாத­க­மான பதில் எது­வும் கிடைக்­க­வில்லை. அது­மட்­டு­மின்றி அவர்­க­ளின் காணி­வி­டு­விப்பு அறி­விப்­பின் பின் ஆயி­ரத்து 99 ஏக்­கர் காணி­கள் மட்­டுமே விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன.

ஆனால், இன்­ன­மும் 17ஆயி­ரத்து800 ஏக்­கர் பொது­மக்­க­ளின் காணி­கள் படை­யினர் வசமே உள்­ளன. இதி­லி­ருந்தே அரச தலை­வ­ரின் காணி விடு­விப்பு அறி­வித்­தல் என்­பது எத்­த­கைய கண்­து­டைப்பு என்­ப­தைப் புரிந்­து­ கொள்ள முடி­யும்.

இவ்­வாறே பெப்­ர­வரி 4ஆம் திகதிக்கு முன்­பாக முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கக் கூறப்­ப­டும் அர­ச­மைப்பு வரைவு பற்­றிய பரப்புரை கூட மக்­களை ஏதோ ஒரு விதத்­தில் ஏமாற்­றும் நட­வ­டிக்­கை­யாக இருக்­குமோ? என்ற சந்­தே­கம் எழு­கிறது.

அதே­போன்று குற்­றம் நிரூ­பிக்­கப்­பட முடி­யா­மல் விடு­தலை செய்­யப்­பட்ட அர­சி­யல் கைதி­க­ளின் பட்­டி­யலை முன்­வைத்தே தாங்­கள் அர­சி­யல் கைதி­க­ளைப் படிப்­ப­டி­யாக விடு­வித்து வரு­வ­தா­க­வும் கூறப்­ப­டக் கூடும். மேலும் மன்­னார் புதை­கு­ழி­கள் தோண்­டப்­ப­டும் நட­வ­டிக்­கை­க­ளுக்குக் காணா­மற்­போ­னோர் தொடர்­பான அலு­வ­ல­கம் நீதி வழங்­கப்­போ­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளது. அதன்­மூ­லம் காணா­மற்­போ­னோர் தொடர்­பாக அந்த அலு­வ­ல­கம் அக்கறையுடன் செயற்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­படலாம்.

நெருக்கடியை தவிர்க்கும் அரசின் உத்தி இது
எதிர்­வ­ரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யின் கூட்­டத்­தொ­டர் இடம்­பெ­ற­வுள்­ளது. 2018ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வழங்­கப்­பட்ட கால அவ­கா­சம் எதிர்­வ­ரும் மார்ச் மாதத்­து­டன் நிறை­வு­பெ­று­கி­றது. இலங்­கை­யால் ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட பிரச்­சி­னை­கள் எது­வும் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டாத நிலை­யில் இலங்கை அரசு மனித உரி­மை­கள் பேர­வை­யில் நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுக்­க­வேண்டி வர­லாம்.

எனவே அந்த நெருக்­க­டி­க­ளை­கச் சமா­ளிப்­ப­தற்­கான தற்­காப்புக் கவ­சங்­க­ளாக அர­ச­மைப்பு வரைவு, காணி விடு­விப்பு அறி­விப்பு, வழக்­கு­க­ளில் விடு­விக்­கப்­பட்ட அர­சி­யல் கைதி­க­ளில் பட்­டி­யல், காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கத்­தின் செயற்பாடு என்­பன முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன என்றே நம்­ப­வேண்­டி­யுள்­ளது. கடந்த காலத்­தின் இலங்­கை­யின் ஆட்­சி­யா­ளர்­கள் பன்னாட்­டையும் தமி­ழர் தரப்­பை­யும் ஏமாற்ற மேற்­கொண்ட தந்­தி­ரங்­கள் அப்­ப­டி­யான கருத்­தையே ஏற்­ப­டுத்­து­கின்­றன. இந்த முறை அர­ச­மைப்பு வர­வுக்கு தமி­ழர் தரப்பு ஆத­ர­வ­ளிக்­கி­றது என்­பது அர­சுக்­குள்ள மேல­திக வாய்ப்­பா­கும்.

எனவே 2019 தமிழ் மக்­க­ளுக்குச் சில சாத­க­மான நிலை­மை­கள் உரு­வாக்­கப்­ப­டும் என்ற மாயையை ஏற்­ப­டுத்­திய போதும் ஏமாற்­றமே மிஞ்­சும் என்­பதை உணர்ந்து விழிப்­பு­டன் இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

https://newuthayan.com/story/11/140245.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.