Sign in to follow this  
nunavilan

நுண்மாண் நுழைபுலம் அற்றுப்போகும் தமிழினத்தின் கல்விமுறைமை

Recommended Posts

நுண்மாண் நுழைபுலம் அற்றுப்போகும் தமிழினத்தின் கல்விமுறைமை -தழலி-

 

Kalvi5-678x381.jpg

தேசிய இனமொன்று தொடர்ச்சியான தனது இயங்கியலை நிலைநிறுத்துவதற்கு பல காரணிகள் இருப்பினும் அச்சமூகத்தின் அறிவுடைமையும் முதன்மைக் காரணிகளிலொன்றாக இருக்கின்றது. அந்த இனத்தின் அறிவு, பண்பாடு, மொழி, இலக்கியம், வாழ்வியல் முறைமை என அனைத்தையும் தலைமுறைகளுக்கு கடத்தி, இனத்தின் இருப்பைக் கொண்டு செல்வதில் கல்வியும் முதன்மையானது. இனத்தின் அறிவு வளர்ச்சியும் அதன் சிந்தனை மரபும் அந்த இனத்தின் கல்வியின்  தரத்திலேயே தங்கியிருக்கின்றன எனலாம். தமிழர்களைப் பொறுத்தவரையில் அறிவுமரபு என்பது, வரலாற்றினைக் கூறுவதாக இருக்கும் அதேவேளை வரலாற்றைக் காவுகின்ற காவியாகவும் தொழிற்படுகின்றது. எழுமைக்கும் ஏமாப்புடைத்து வரும் கல்வி இன்றுமட்டுமல்லாது, அன்றைய காலத்திலும் மிகச் சிறந்துவிளங்கியது என்பதற்கு தமிழ்மொழியில் இருக்கும் இலக்கியங்கள் சான்றுகளாகின்றன. இலக்கியங்கள் இலக்கியங்களாகவும் அதேவேளை அவற்றின் உள்ளடக்கங்களில் பேசப்பட்ட கல்விமரபின் சான்றுகளாகவும் மொழியின் செழுமைக்கான சான்றுகளாகவும் நிற்கின்றன. பழங்கதை பேசி, பழங்கணக்கு பார்ப்பதல்ல இப்பத்தியின் நோக்கம். மாறாக, மரபுத்தொடர்ச்சியொன்றின் வரலாற்றினை நோக்குவதனூடாக, சமூகத்தின் இன்றைய நிலைப்பாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கான வழிவகைகளை நோக்குவதேயாகும்.

அறிவு, பகுத்தறிவு, கல்வி என பல சொற்களாலும் விபரிக்கப்படும் அறிவுடைமையானது, தமிழ் வரலாற்றில் தலைமுறை தலைமுறையாக எவ்வாறு தொடர்ந்திருக்கின்றது என்பதை இலக்கியங்களினூடே அறிந்துகொள்ளலாம்.

கல்வி என்பது நூல்களைக் கற்பதனால் வந்துவிடுவதில்லை, அது தன் அன்றாடவாழ்வில் தன்னைச் சுற்றி நிகழ்பவற்றை காரண காரியத் தொடர்புகளுடன் கற்பதன்மூலம் பெறும் அறிவே என்று சுமேரிய தொல் தமிழில், “நிகழ்நம் கல் கல்லின் மிகவே மெய் கல்கல்” என்று கூறப்பட்டிருக்கின்றது.

கல்வி என்பது அறியாமையைப் போக்குவது என்ற பொருளில்,

கற்பக் கழிமடம் அஃகும்

என்பதை நான்மணிக்கடிகை கூறுகின்றது.

எப்பொருள் யார் யார்வாய்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு என அறிவுக்கு வள்ளுவம் கூறும் விளக்கமும் இதனை ஒட்டியே அமைகின்றதைக் காணலாம். அறிவு என்பது வாழ்வியலோடு இணைத்தே நோக்கப்பட்டது.

அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார்

அஃதறி கல்லாதவர்

என்கிறார் வள்ளுவர். அதாவது, குறிப்பிட்ட செயலுக்கான விளைவு எவ்வாறிருக்குமெனச் சிந்திப்பவன் அறிவுடையவன் என்கிறார். அவ்வாறு விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தெரியாதவன் அறிவற்றவன் ஆகிவிடுகிறான்.

 அன்றைய தமிழர்கள் தம் வாழ்க்கையினூடாகப் பார்த்ததையும் கேட்டலையும் கற்றுக்கொண்டதை, இன்றைய தமிழர்கள் கற்றுக்கொள்ள எளிதாக்கியது முறைமைப்படுத்தப்பட்ட கல்விமுறைமை.

 “நிற்க அதற்குத் தக” என வள்ளுவம் சொல்வது போல ஒருவன் கல்வி பெற்றுவிட்டால் அதற்குத் தக ஒழுகவேண்டும் என்பதையே இச்சமூகம் எதிர்பார்க்கின்றது. கல்வி புகட்டுபவனும் மாணவனும் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற வரையறையையும் தொல்காப்பியம்,

ஈவோன் தன்மை யீதலியற்கை

கொள்வோன் தன்மை கோடன மரபென

ஈரிரண்டென்ப பொதுவின் தொகையே என்ற அடியினூடாகச் சுட்டுகிறார். இங்கே ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள், பாடம் கூறும் முறைகள், ஆசிரியரல்லாதோர் யார்? மாணவர்கள் அல்லாதோர் யார் என்பனவெல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு விடயம் மிகவுயர்ந்த நிலையில் இருக்கும்போதே அதற்குரிய கட்டமைப்புக்களைப் பற்றிப் பேச முடியும்.

வாழ்க்கையிலிருந்து கற்ற பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் முறைமை இருந்ததை,

கால்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து

மேல்தூய் மையில்லாத வெங்களிறுஞ்  சீறிக்

கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளி இம்மூன்றும்

குறுகார் அறிவுடை யார்

என்று திரிகடுகத்தில் குறிப்பிடப்படுகின்றது. அதாவது ஒருவன் தன் தாய் தந்தையிடம் முதன்முதலில் கற்கிறான். அதன் பிறகு உற்றார் உறவினர்களிடமும் கற்கிறான். அத்தகைய கல்வியறிவானது அவரவர் குடும்பச் சூழ்நிலையைப் பொறுத்து அமைகிறது. இந்த வாழ்வியல் கல்வியால் அவன் முழு அறிவையும் பெற்றுவிட முடியாது என உணர்ந்த பெற்றோர்கள் வாழ்க்கையின் பட்டறிவோடு உலகியல் அறிவையும் இலக்கண இலக்கிய அறிவையும் பெற பள்ளிக்கு அனுப்பிவைக்கின்றனர் என்று பொருள்படுகின்றது.

தமிழர்கள் வரலாற்றில் பல கல்விச்சாலைகளுக்கு மன்னர்கள் நிலங்களை ஒதுக்கியிருந்தனர் என்று பல சாசனங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறான ஒரு தொடர்ச்சியான கல்விப்பாரம்பரியத்தில் காலனிய ஆட்சிக்கு பின்னர் பாரிய மாற்றமொன்று நிகழ்கின்றது. இன்னமும் காலனிய நாடுகளால் தான் நல்ல கல்விபெற்றோம் என்னும் கூற்றை நம்பும் எம்மவர்களுக்கு இப்பத்தி ஒரு நல்ல பதிவாக இருக்கும்.

Kalvi2-490x312.jpgகாலனியத்தின் கல்வி முறைமையானதுதனக்கான நிருவாகங்களிற்கானகைக்கூலிகளைஉருவாக்குவதற்கானதாகவேஇருந்திருக்கிறது. காலனியநோக்கங்கள் சிதறாமல் அதற்காகஉழைக்கக்கூடிய எழுதுவினைஞர்கள், ஊழியர்கள் என காலனியஎசமானர்களின் அடிமைகளின்உருவாக்கத்திற்கான கல்விமுறைமைஅறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்த்துக்கேள்வி கேட்க முடியாத கீழ்ப்படிவுள்ள அடிமை மனநிலை உருவாக்கத்தின்அடிப்படையில் இந்தக் காலனிய கல்விமுறைமை கொண்டுவரப்பட்டிருந்தது.

காலனித்துவ காலத்தில் தமிழ் மொழிசார்ந்த ஆளுமைகளை ஆங்கில மொழியின்வருகையும் நிருவாகம் சார்ந்த வேலைகளில் ஆங்கில மொழியின் ஆதிக்கமும்அதிகாரம் செய்யத் தொடங்கியது. தன்னையும் தன் மொழியையும் குறைவாகஎண்ணத்தொடங்கும் அடிமை மனநிலையை ஆங்கிலம் தமிழர்களுக்குள் சிறிது சிறிதாக புகட்டத் தொடங்கியது. பதவி மோகமும் அதிகாரங்களைக் கைப்பற்றும்மனநிலையும் கொண்ட சில தமிழர்களால் ஆங்கிலேயனுக்கு அது இலகுவாகவும்முடிந்தது. வெள்ளைத்தோல் அழகென்ற மாயையும் வேலை என்டு வந்திட்டாவெள்ளைக்காரன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்றமுட்டாள்தனமான சமூகக் கதையாடல்களும் உருவாகின.

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல் என்று கேள்வி கேட்பதையும் கேட்ட கேள்விக்குதெளிவாக விடையிறுப்பதையும் கூறும் தொல்காப்பியர் வழி வந்த தமிழினம், அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் மரபிலிருந்து விலக்கப்படுகின்றது. “பணிவான, உண்மையுள்ள, கீழ்ப்படிவுள்ள என்ற சொற்களின் கீழ் ஒப்பமிட்டு, காலனியத்திற்குதங்களை முற்றாக ஒப்புக்கொடுத்து அடிமைகளாக்கும் ஆங்கிலக்கல்விமுதன்மைப்படுத்தப்படுகின்றது. காலனியமும் பணி அடிமைகளையும் தொழிற்சாலைஉற்பத்திற்கான மனித இயந்திரங்களையுமே உற்பத்தி செய்தது. பணமீட்டக்கூடிய மருத்துவம், பொறியியல் போன்ற துறைகள் முதன்மை பெற, இலக்கியங்களும் சமூகவியல்களும் மானிடவியல்களும் வலுக்குன்றின. கலைப்பீடத்தில் படிப்பவன் வேலைக்கான ஆர்ப்பாட்டத்தைச் செய்யவேண்டிய நிலையிலிருக்கும் மிக மோசமான கல்விமுறையை காலனியம் எமக்குத் தந்திருக்கின்றது.

காலனிய எசமானவர்கள் தாங்கள் வெளியேறிய பின்னரும் தங்களது ஆட்சிமுறைமை இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டன. தமது ஆட்சியின் கீழிருந்த நாடுகளை, தமது முகவர் நாடுகளாக மாற்றின (Agent States of Colonial Masters). இலங்கையும் காலனித்துவ எசமானர்களின் முகவர்களில் ஒன்றாக மாற்றப்பட்டது. யே.ஆர்.செயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் காலனியத்தின் அடியாளாகவே எழுதப்பட்டது. தமிழீழ நிழலரசால் நிகழ்த்திக்காட்டப்பட்ட அரச கட்டமைப்பின் சிறிய விழுக்காடு கூட இலங்கையின் அரசகட்டமைப்பில் இல்லை என்றே கூறவேண்டும்.

சங்கத் தமிழர்களின் அரசு கூடிவாழும் சமூக வாழ்விலிருந்தே கட்டமைக்கப்பட்டது. மக்கள் கூட்டத்தினின்றும் தலைமை முகிழ்த்து, தலைமையின் வல்லாண்மையால் அரசு தோன்றுகிறது. வலிமை குன்றுமாயின் அரசும் அழிந்துவிடும். எனவே, அரசுக்கு முதல் அடிப்படை வலிமை வாய்ந்த மக்கள் குழுவாகும். இரண்டாவதாக, வரையறுக்கப்பெற்ற நிலப்பரப்பு இருக்க வேண்டும். மக்கள் வாழிடம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். நான்காவதாக, இறைமை என்பது மக்களுக்கும், நிலப்பரப்புக்கும் ஏற்ற வகையில் மேலான அதிகாரங்கள் பெற்றுத் தனித்தன்மையுடன் இயங்குவதாகும். இந்நான்கும் நிறைவுபெற்றிருப்பதே அரசு” என முனைவர்.அ.ஆறுமுகம்; அவர்கள் சங்க இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரது அந்த வரைவிலக்கணத்திலிருந்து, தனி ஒரு ஆளுமையினால் அரசொன்றினை உருவாக்கிநடத்திவிட முடியாது என்று புரிகிறது. அங்கே இருந்த கூட்டு சமூக ஆளுமை தான்இன்னமும் சங்ககாலம் பொற்காலம் என்று சொல்வதற்குக் காரணம். நிறைந்தஆட்சிக்கு அடிப்படையாக இருந்தது கல்வி அறிவே என,

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே

கோடியாத்து நாடு பெரிதநந்தும்

என்ற புறப்பாடல் சுட்டிநிற்கின்றது.

அன்றைய காலத்தில் அரசன் ஆட்சிசெய்தால் கூட, அங்கே அவனது தனித்த ஆளுமை மட்டும் மக்களை ஆளவில்லை. “அறிகொன்றறியானெனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்” என்று வள்ளுவம் கூறுவதற்கிணங்க, அரசன் நன்னெறியை அறியாத போதும் அவனுக்கு உதவி பயக்கும் அறநெறிகளை வலியுறுத்திக் கூறுவது அமைச்சின்கடமையாகும். தலைமை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு குறியீடு. அந்தக் குறியீட்டினை வலுவூட்டுவது சமூக ஆளுமையே.

பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,

நால் வேத நெறி திரியினும்

திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி

நடுக்கின்றி நிலியரோ என்று புறநானூற்றில் குறிப்பிடப்படுவது போல புலவர் ஒருவரால் சேரமான்பெருஞ்சோற்றுஉதியஞ் சேரலாதனிடம் கூறப்பட்ட கூற்றிலிருந்து, அரசு என்பதற்கு சுற்றம் என்பது முதன்மையானது என அறியலாம். சுற்றமென்பது அமைச்சர்களைக் குறிக்கும் சொல் என பேராசிரியர்.வித்தியானந்தன் மூலம் அறியலாம்.

சங்கத்தமிழனின் அரச கட்டமைப்பில் கற்றறிந்த ஆளுமைகளுக்கும் இடம் வழங்கப்பட்டிருந்தது என்பதனை,

ஐம்பெரும் குழுவில் ஒருவன் ஆசான் என அரசனுக்கு கருத்துரை வழங்கும் குழு அரசியலுக்குப் பற்றுக்கோடாக இருந்ததென சிலம்பு கூறுகின்றது.

தொடர்ந்த தமிழர் ஆட்சியிலும் சரி, தமிழீழத்திலும் சரி அரச அமைப்பில் கல்வியாளர்களும் பங்காளிகளாகவிருந்தனர். பழம்பெருமைகளைத் தேடும் அதேநேரம் இன்று நாம் இருக்கும் இழிநிலை பற்றிய புரிதலும் நமக்கு இருக்கவேண்டும். இன்றை வடக்குமாகாணசபையின் வினைத்திறனற்ற அவையை நாம் சுட்டவேண்டும். கல்வியாளர்கள் என்று கூறப்படுபவர்களால் கட்டமைக்கப்பட்ட அவையின் இழிநிலைக்கு, கல்வித்துறையைக் குற்றம் சுமத்தமுடியுமா,?

பிரித்தானிய காலனியத்தின் பின் வந்த சிங்களப் பேரினவாதத்தினால் எண்ணிக்கையளவில் சிறுபான்மையினராக இருந்ததனால் இன ஒடுக்குமுறைக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது தமிழர் என்ற தனித்த தேசிய இனம். சிங்களக் காலனியத்தினால் பௌத்த சிங்கள அரச அதிகாரத்தின் கையிலிருந்த சிறீலங்காவின் அரச சாசனத்தினூடாக தமிழினத்தின் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டன. தனிச்சிங்களச் சட்டம், தரப்படுத்தல் என்று தொடர்ந்த சிங்களத்தின் அடக்குமுறையின் வடிவங்களைத் தமிழர்களின் கல்வி ஆளுமையும் அரசியல்ரீதியான போராட்டங்களும் எதிர்கொண்டன. ஆனாலும் தமிழர்கள் அடிக்குமேல் அடிவாங்கியும் ஒப்பந்தங்கள் கிழித்து வீசப்பட்டும் ஓடி ஒளிந்தபோது, விடுதலைக்கான போராட்டம் மறப்போராட்ட ஆளுமைகளால் இழைக்கப்பட்டது. தமிழர் என்ற ஒற்றைக் காரணத்தினால் பல மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு முடக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாய் எழுந்த மாணவர்களின் எழுச்சி, பின்னாளில் தமிழர்களின் புரட்சிகர விடுதலைப்போராட்டமாகி சிங்கள பேரினவாதத்தையும் உலக வல்லாதிக்கங்களையும் எதிர்த்து தனித்த தேசிய இனமாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது. காலனிய அடிமை மனநிலையில் இருந்தபோதும் இன்று மாற்றான் மீதும் மாற்றானின் மொழி மீதும் கொண்ட மோகங்களின் அறிவிலித்தனம் புரிந்துகொள்ளப்படுகின்றது.

பொதுவுடைமையாளர்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் அரசஅதிகாரவர்க்கத்திற்கெதிராகவும், ஏகாதிபத்திய அடிமை விலங்குகளைஉடைக்கவேண்டும் எனவும் போராடுகின்றனர். ஆனால் இவர்களும் அரசஅதிகாரத்துடன் ஒத்தோடுவதால் அல்ல, மாற்றான் சொல்வது தான் வேதவாக்கு எனகார்ல் மாக்சையும் ஏங்கல்சையும் மேற்கோள்காட்டி, அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என பேசுகிறார்கள். “யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போன்ற எம்மவரின்சொற்களைக் கேட்பது ஒவ்வாமை போலவும், அது தமது முற்போக்குச் சிந்தனைக்குஇழுக்கெனவும் நினைக்கிறார்கள் போலும். ஆயினும் இதுவும் காலனியஅடிமைப்புத்தியின் எச்சமாகவே கொள்ளப்படவேண்டும். ஒருவன் தனது மண்சார்ந்து, வரலாறு சார்ந்து, தொடர்ந்தேச்சியான இயங்கியல் சார்ந்து தனது கொள்கைகளைகருத்திற்கொள்ளாது விடின், அது எமக்கான கோட்பாடாக தகவமையாது.

இன்றைய சூழலில் 1991 இற்குப் பின்னர் ஒரு துருவ ஒழுங்கில் உலகம் வந்தபிறகுதாராளமயம், தனியார் மயம், உலகமயம் என உலகம் கட்டற்ற சந்தைமூலதனக்குவிப்பில் மூழ்கியிருக்கின்றது. கல்வியையும் சந்தைப்பொருளாக்கிவிட்டஉலக ஒழுங்கிற்குள் இலங்கையின் கல்விக்கொள்கையும் உள்ளடக்கப்பட்டுவிட்டது.தன்னுடைய தகுதிக்கு மீறி, தமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தினை முடக்குவதற்கு சிறீலங்கா அரசு உலக வல்லாதிக்கங்களிடம் வாங்கிய கடன்பொறிக்குள் சிக்கி, தற்கொலை செய்துகொண்டிருக்கிறது. கடன் என்ற போர்வையில் உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன, தமது முதலீடுகளை இலங்கையில் செய்துகொண்டிருக்கிறார்கள். கடன்களுக்கு மாற்றாக, நிபந்தனைகளின்அடிப்படையில் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் துறைகளைத் தனியார்மயமாக்கும் ஒப்பந்தங்கள் இலங்கை அரசால்கைச்சாத்திடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

Kalvi3-490x315.jpgஇலங்கையின் கல்விமுறையானது, தேர்வுகளைக் கடக்கும் போட்டிக்கான தடைதாண்டலாக மாறிவிட்டது. ஐந்தாம் தரத் தேர்வில் ஆரம்பிக்கும் பல்கலைக்கான மரதன் ஓட்டம் உயர்தரத் தேர்வில் வந்து இளைப்பாறுகின்றது. ஆசிரியர்கள் அந்த மரதன்ஓட்டங்களில் கிடைக்கும் வரவுகளில் மட்டும் பங்குதாரர்களாகின்றனர். வெளிப்பார்வைக்கு இலங்கையில் இலவசக்கல்வி என்பது துருத்தினாலும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் உயர்கல்விக்கூடங்கள் வல்வளைப்புச்செய்யத் தொடங்கிவிட்டன எனலாம். அந்த தனியார் கூடங்களும் சமூகத்திற்குத் தேவையான தகமையுடையோரை உருவாக்குவதில்லை. அங்கே உருவாக்கப்படும் மனித இயந்திரங்கள் வெறுமனே வேலை செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரமனிதர்களாக வெளியேறுகிறார்கள். வெறுமனே பன்னாட்டுக் குழுமங்களுக்கான திறன்களை மட்டுமே கற்றல் என்பது, அறிவுடைமைச் சமூகத்தின் அறிவியல் கூர்ப்பை நசுக்கும் அரசியலா? இந்தக் கல்விமுறைமை மூலம் மாணவர்கள் தன்னிலை, விடுதலை, சுதந்திரம் குறித்த கேள்விகளை கேட்கமுடியாதவர்களாக, வெறும்பிண்டங்களாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட சிலவேலைகளைச் செய்வதற்கான இயந்திரங்களாக மட்டும் வடிவமைக்கப்படுவதால், அவர்களால் சமூகத்திற்குரியவர்களாக இருக்கமுடிவதில்லை. அதற்காக, அரசபல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் சமூகத்தகமையுடையோர்களாகவெளியேறுகிறார்களா என்று கேட்டால், அதுவும் இல்லை. அவர்கள்இரண்டுங்கெட்டான்களாக பட்டம் பெறுகிறார்கள். காலை 8மணிக்கு கையொப்பமிட்டு, நமோ மாதா பாடும் அரச ஊழியர்கள் தான் 6ந் திருத்தச் சட்டத்தின் கீழ் கையொப்பமிட்டபாராளுமன்ற உறுப்பினர்களை எள்ளிநகையாடுகிறார்கள் என்பது தான் முரண்நகை. அரச ஊழியர்களாகப் பதவியேற்கும் போதே அரை அடிமைகளாக தங்களை அரசுக்குஎழுதி வைப்போரால் என்ன சமூகத்தாக்கம் வந்துவிடும்?

மக்களின் வரிப்பணத்தில் இலவசமாகப் படிக்கும் மாணவர்கள் தான் படித்துப்பட்டதாரிகளாகி, அரச இயந்திரத்தின் அடியாட்களாகிவிட்ட பின்பு, மக்களை மேய்க்கும்மேய்ப்பர்களாக தங்களை உருவகித்துக்கொள்கிறார்கள். சிறுபிள்ளையின் பால்மாவின்வரியில் படித்த படிப்பில், மக்களுக்காக என்ன செய்தீர்கள் என அரச ஊழியர்களைக்கேட்டால், ராசகாரிய என்று கூறிவிட்டு, தடைதாண்டலுக்காக சிங்களத்தையும்அதையும் இதையும் படித்து, தன்தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

தன் காசில் படிக்கவைத்துவிட்டு, மக்கள் வாய்கட்டி, கைபொத்தி நிற்கவேண்டியநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நிருவாகம் சார்ந்த அடிமைப்படுத்தல்தொடர்கின்ற கிராம அலுவலரின் அலுவலகம் முதல் கடவுச்சீட்டு அலுவலகம் வரைமக்களுக்கு தங்களது உரிமைகள் எவை எனச் சொல்லப்படுவதில்லை. ஐயாவையோஅம்மாவையோ எதிர்த்து கதைத்தால் எமக்கு வேலை நடக்காது என்ற பயம்ஏற்படுத்திவைக்கப்பட்டுள்ளது. நிருவாக உரிமைகள் கட்டாயம் மக்களுக்குதெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் கடப்பாடுகள் பற்றியும்தெரிந்துகொள்வார்கள். தமிழர்களைப் பொறுத்தளவில் சிங்கள காலனியத்தின்மனநிலையில் இராணுவம் காவல்துறை ஆகியவற்றினைக் கண்டாலேபயப்படுமளவிற்கு அவர்களது ஆளுமை சிதைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகள் சார்ந்த குரல்கொடுக்கும் பண்பும், காவல்துறையிடம் அவர்கள் தமது நியாயங்களைத் தெரிவிக்கும் பாங்கும்ஈழத்தமிழர்களிடத்தில் இல்லை. சிங்கள காலனியத்தின் மொழியும் அதற்கானகாரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

பல்கலைக்கலைக்கழகம், பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்கள், மருத்துவமனைகள் என எங்குமே மக்களுக்கு அவர்களது உரிமைகள் குறித்த தெளிவுகள் இல்லை. பாடசாலையில் “கீழ்ப்படிய”க் கற்றுக்கொண்ட மாணவனை இன்னமும் படியவைத்து முதுகெலும்பில்லாதவனாக்கும் வேலையே பல்கலையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தனி ஆளுமைகளைக் கூட்டு ஆளுமைகளாக சமூகத்திற்கு அனுப்பிவைக்கவேண்டிய பல்கலைக்கழகம் இன்று சமூக ஆளுமையைச் சிதைக்கும் கேவலமான அரசியலைச் செய்துவருகின்றது.

பிறப்பால் மட்டுமே மூத்தவர்களாகிவிட்டவர்களுக்கு இளையவர்கள் கீழ்ப்படிய வேண்டும், பெரியாரைக் கனம் பண்ண வேண்டும் என்று தொடங்கும் பள்ளிக்கூடப் பாடநூல்கள் யார் பெரியவர்கள் என சொல்லிக்கொடுக்கத் தவறிவிடுகின்றன. இவ்வண்ணம் தங்கள் கீழ்ப்படிவுள்ள என்று எழுதி ஒப்பமிடப் பழக்கியவர்கள்ஒப்பத்தின் பெறுமதியை மாணவனுக்கு உணர்த்துவதில்லை.

சமூக அறிவில்லாதவர்களை மதிக்காத சமூகமொன்று உருவாகினால் தான் சமூகம்சார்ந்த கல்வியாளர் சமூகம் உருவாகும். அத்தோடு கல்விச்சமூகம் தன்னைப் படிக்கவைத்த மக்களை நோக்குகின்ற ஏளனப்பார்வையை நீக்கவேண்டும். சமூகம் சார்ந்தஉரையாடல்களை நிகழ்த்துபவர்களாக கல்விச்சமூகம் மாறவேண்டும். இதற்கானமுழுப்பொறுப்பையும் ஆசிரியர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும்எடுத்துக்கொள்ள வேண்டும்.

புலன் நன்குணர்ந்த புலமையோரே ஆசிரியர்கள் என தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

மேலும்,

மலை நிலம் பூவே துலாக்கோ லென்றின்னர்

உலைவி லுணர்வுடையார்

என ஆசிரியர்கள் மலை, நிலம் போன்றவை போல மேன்மையும் உலகியலறிவும் பொருந்தியிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஈத வியல்யே யியல்புறக் கிளப்பின்

பொழிப்பே யகலம் நுட்ப மெச்சமெனப்….”

எனத் தொல்காப்பியம் கூறுகிறது. அதாவது ஆசிரியர் தெளிவான அறிவுள்ளவராக இருக்கவேண்டுமென்கிறது.  அத்தோடு, ஆசிரியர்களாக இருக்கத் தகுதியற்றவர்களையும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

கழற்பெய் கடமே மடற்பனை முடத்தெங்கு

குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப

அதாவது முன்பின் முரணாகக் கற்பிக்கும் ஆசிரியர் ஆசிரியராகார் என்கிறார்கள்.

Kalvi4-490x315.jpgஇன்று எமது கல்விக்கூடங்களில்கற்பிக்கும் ஆசிரியர்களில்எத்தனைபேர் தங்களைத் தாங்களேஅறிவுசார்ந்துவளர்த்துக்கொள்கிறார்கள். தங்களதுதன்னிலை வளர்ச்சிக்காகப்பட்டங்களின் மேல் பட்டங்களைப்பெறுகிறார்களேயொழிய, சிந்தனைவளர்ச்சி சார்ந்து எந்த முயற்சியையும்பெரும்பாலான ஆசிரியர்கள்எடுப்பதில்லை. கல்விச்சமூகத்தின்இத்தகைய மேம்போக்கானமனநிலையால், இன்றைய சமூகமும் பாதிப்புக்குள்ளாகுவது மட்டுமல்லாது, நாளையதலைமுறையின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகிறார்கள். கல்வியாளர்கள்தன்துறைசார்ந்த அறிவை ஆழப்படுத்துவதிலும் பல்துறை சார்ந்த அறிவைஅகலப்படுத்துவதிலும் அக்கறை செலுத்தவேண்டும். தங்கள் வருமானத்தில்5விழுக்காட்டையேனும் சிந்தனை வளர்ச்சிக்கான நூல்களாகவோ அல்லது வேறுகற்றல் வடிவங்களாகவோ மாற்ற வேண்டும்.

குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

…….

உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்

அமைபவன் நூலுரை யாசிரி யன்னே

என்று நன்னூல் கூறுவதற்கிணங்க ஆசிரியர்கள் சிந்தனைத் தெளிவுள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

நல்ல ஆளுமை மிக்க ஆசிரியர் ஒருவரால் நல்ல ஆளுமையான சமூகத்தை உருவாக்கமுடியும். ஆசிரியம் என்பது பணி என்பதிலிருந்து விலகி, இன்று தொழிலாகிவிட்டது. இயந்திர மனிதர்களை உருவாக்கும் இயந்திரங்களாகிவிட்ட ஆசிரியர்களின் பணி, மதியத்துடன் வீட்டுக்கு செல்வதில் மட்டும் முனைப்பாக இருக்கின்றது.

மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பையும்

அழுக்காறு அவாவஞ்சம் அச்சம் ஆடலும்…..

…..

உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே என நன்னூல் கூறுவதற்கிணங்க எல்லோராலும் ஆசிரயராகிவிட முடியாது. எமது இன்றைய கல்விமுறைமையில், ஆசிரியத் தெரிவென்பது இறுதித்தெரிவாக இருப்பது வேதனை தரும் விடயம். கல்வித்துறைக்கு பாதீட்டில் கணிசமான அளவு ஒதுக்கப்பட்டால் மட்டுமே இந்நிலை மாறும். பின்லாந்து, தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கல்விமுறைமைக்கு அரச கட்டமைப்பிலேயே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிடலாம்.

காலனிய மனநிலையின் எச்சங்களின் காவிகளாக இருக்கும் சில தனியன்கள் தேசியம்சார்ந்த கருத்தியல் தளத்தில் நின்று எதையும் நோக்குவதில்லை. பேய்க்கதைகளைக்கூறி பிள்ளைகளை வெருள வைப்பதில் ஆரம்பிக்கும் ஆளுமைச் சிதைவு, ஆசிரியர்களின் ஆதிக்க மனநிலையால் முழுமையாகச் சிதைக்கப்படுகின்றது. ஆசிரியர்கள் தங்களைத் தாங்களே மாணவர்களை உய்விக்க வந்த பரமபிதாக்களாகஎண்ணிக்கொண்டு, உச்ச அதிகாரத்தை மாணவர்கள் மீது திணிக்கிறார்கள். அறிவியலாக, தர்க்கரீதியாகச் சிந்திக்கத் தெரிந்தவனும், வினாக்களை எழுப்புபவனும்மொக்கர்களாக சித்திரிக்கப்பட்டு, கைகட்டி வாய்பொத்தி நிற்பவர்கள்தூக்கிவிடப்படுகின்றனர். ஆசிரியர்களின் அறிவிலித்தனத்தால் நிகழும் இந்நிகழ்வே, பிற்பாடு பதவிகளுக்காகவும் பட்டங்களுக்காகவும் கைகட்டி, வாய்பொத்தி, காட்டிக்கொடுத்து பதவிகளைத் தக்கவைக்கும் மனநிலையின் அடிப்படையாகஇருக்கின்றது. தன் ஆளுமையால் ஆள வேண்டிய பதவிநிலைகளை, தன் ஆளுமையைஇழப்பதன் மூலம் ஆளுகின்ற கேவலமான நிலைக்கு தள்ளப்படுகின்றான்.

சிந்தனை வளர்ச்சியென்பதில் திறனாய்வு என்பது முதன்மையானது. ஆனால் இப்போதுதிறனாய்வு என்பது சேறடிப்பு என்னும் குறுகிய வட்டத்தினுள் குறுகிப்போயுள்ளது. சமூக அரசியலினை அறிவார்ந்து திறனாய்வு செய்யவேண்டிய கல்விப்புலம்சார்ந்தோரின் திறனாய்வுகள் சமூக வலைத்தளங்களுக்குள் முடங்கிப்போயுள்ளன. மாற்றாரின் கருத்தியல்களுக்குள் இலகுவில் செல்லக்கூடியவர்களாகவும்கருத்தூட்டங்களுக்குள் மயங்கிவிடுபவர்களாகவுமே கல்வியாளர்கள் இருக்கின்றனர். எனவே இங்கே கல்வியாளர்கள் மீது மட்டுமல்லாது கல்விமுறைமை சார்ந்தும்சிக்கல்கள் இருக்கின்றன என்பது புலனாகின்றது.  

ஏழு பிறவிக்கும் வரக்கூடியது என்று சொல்லப்படுகின்ற கல்வியைக் கற்றவன் தன்பிறப்பிலே கூட அதனைப் பயன்படுத்தவில்லை என்பது வேதனைக்குரிய விடயம். தான்கற்ற கல்வியை, அதன் பலனை சமூகத்திற்குக்கொடுப்பவர்களாக இருந்தால் இன்றுசுன்னாக நீர் சிக்கல் முதல், வடமாகாணத்தை நிருவகித்த முறை, யாழ்ப்பாண குடிநீர், இரணைமடு என எல்லாவற்றிற்குமான அறிவார்ந்த முடிவினைப் பெற்றிருப்போம். சமூகம் முடக்கப்பட்டிருக்கும்போது கூட தன் கல்வியை சமூகத்திற்காகப்பயன்படுத்தாதவர்கள் கல்வியாளர்களா?

தொல்காப்பியம் கற்பதற்குத் தகுதியற்றோர் என சிலரைக் கூறுகின்றது.

மடிமானிபொச்சாப்பன் காமுகன் கள்வன்….

தடுமாறு நெஞ்சத்தவனுள்ளிட்டென்மர்

நெடுநூலைக் கற்கலாகாதார் என்னும் அந்தப் பாடலில் எந்தச் செயலிலும் சரியான முடிவைக் காணாது தடுமாற்றமுடையவர்கள் கற்கக் கூடாது என்கிறார் தொல்காப்பியர்.

Kalvi1-490x315.jpgசமூகத்தின் சிக்கல்களிற்குமுடிவுகளைத் தேடாதகல்விமுறைமையும் கல்விகுறித்தபார்வையும் மாறவேண்டும். முள்ளிவாய்க்காலில்முடங்கிப்போயுள்ள இனமொன்றின்மீள எழுச்சிக்கான குரல்கல்விச்சமூகத்திடமிருந்துஒலிக்கவேண்டும். சமூகத்தின்ஒவ்வொரு கட்டமைப்பையும் சரியானஇயங்குநிலைக்கு கொண்டுவருவதில்கல்விச்சமூகம் பங்காற்றல் வேண்டும். ஆனால் முன்னர் கூறியதுபோலவே, எமக்கான மீட்டுருவாக்கங்கள் எதையும்செய்யாமல், அரச இயந்திரத்தின் கூலிகளாக மாறிப்போன சமூகத்தைமீட்டெடுக்கவேண்டிய தேவை சமூகத்திற்கு இருக்கின்றது. எங்களுக்கான தேசஉருவாக்கத்தில் கல்விச்சமூகத்தின் பங்கு அளப்பரியதாய் இருத்தல் வேண்டும். அதற்காக, சமூக நிறுவனங்கள் பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்குவெளியேயும் முடிந்தால் அவற்றிற்கு உள்ளேயும் பொறிமுறைகளை உருவாக்கி, சமூகத்திற்கும் அறிவுச் சமூகத்திற்குமான ஊடாட்டத்தை அதிகரிக்க வேண்டும். கற்றகல்விக்கும் சமூகத்திற்குமான ஊடாட்டம் அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்டஅறிக்கைகளுக்குள் மட்டும் முடங்கிப்போகாது, மக்களுக்கானதாக இருத்தல்கட்டாயமானது.

சமூகத் தேவைகளுக்கான ஆய்வுகள் நிகழ்த்தப்படுமிடத்து, விடுதலையை அவாவிநிற்கும் இந்த இனத்திற்கு மீட்பரோ மேய்ப்பரோ தேவையற்றுப்போய்விடும். சமூகமாக மக்கள் மீண்டெழுவார்கள். குளிரூட்டப்பட்ட அறைகளினுள்ளே ஒலிக்கும் தட்டச்சு ஒலிகளைவிட, மக்களோடு நின்று உழைக்கும் கல்விச்சமூகத்தின் ஒலிகளே இனத்தின் இன்றையதேவை. சமூகத்திலிருந்து விலகிய புறநடைகளிற்கு அரசியல் சமூக பொருண்மியத்தளங்களில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது தெரிய வராது. ஆயின் கல்வியாளர்கள் அதற்கான பொதுவெளி உரையாடல்களை உருவாக்கல்வேண்டும். நான்கு வெள்ளைக்காரர்களைக் கூட்டிவந்து, கேட்போர் கூடங்களின்வெற்றுக்கதிரைகளுடன் புரியாத மொழியில் உரையாடல் நிகழ்த்துவதால் எமதுசமூகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. அது காலனியஅடிமைத்தனத்தின் எச்சங்களின் விளைவுகளாக நோக்கப்பட வேண்டியவை.

அதிகாரம், அதிகாரத்தின் கரங்களின் நீட்சி, வன்முறை, வன்முறைக்கெதிரான குரல், ஒடுக்குமுறைகள், தேசியம், தன்னாட்சி என எதையுமே தெரியாதவர்களாக, செயற்கை முறைக் கோழிகள் போல உருவாக்கப்படும் கல்விச் சமூகத்தால் என்ன மாற்றத்தை நிகழ்த்த முடியும்? தொலைநோக்கில் பன்னாட்டுக் குழுமங்களால் தனக்கான முகவர்களை உலகெங்கும் கட்டமைக்கும் பொறிக்குள் நாங்களும் சிக்கிக்கொண்டிருக்கிறோம். அதிலிருந்து மீண்டு எமக்கிருக்கும் மிகப்பெரிய சமூகப்பொறுப்பை நாம் சுமக்கவேண்டியவர்கள். எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்று எப்போதோ சொல்லிவைத்துவிட்டது தமிழ். இப்போதுதான் கணிதம் தெரியாதவன் கலை படிக்காதே என தத்துவம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற தத்துவத்திற்கு விளக்கம் தேடுபவர்கள் பொருளறிதல், இடனறிதல், காலமறிதல் என்ற திருக்குறளின் அதிகாரங்களை மறந்துவிடாது எமக்கான தேடலை ஆழப்படுத்தி, எம் பெருமைகளைக் கண்டறிதல் வேண்டும். பல்கலைக்கழகத்திலிருந்து வெளிக்கிளம்பும் குரல்கள் இனத்திற்கானவிடுதலையை அடைவதற்கான வெளியை உருவாக்குவதற்கானதாகஇருக்கவேண்டும். பல்கலைக்கழகங்கள் பட்டம் பெறுவதற்கான தொழிற்சாலைகளாகஅல்லாது, அறிவிற்கான ஊற்றுகளாக இருப்பதை சமூகமாக இணைந்து உறுதிப்படுத்தவேண்டும்.

விடுதலைக்காக போராடிய இனம் இன்று தன் போராட்ட வலுவைப் புறவயமாக இழந்துநிற்கும் வேளையில் இனத்தின் சமூக ஆளுமை உணர்வைக் கட்டியெழுப்பவேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கான கருத்தியல் தளங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அந்தக் கருத்தியல் தளங்களில் சமூக ஆளுமைகளை வளர்த்தெடுக்கும் பாரிய பொறுப்பினை முள்ளிவாய்க்கால் எமக்கு விட்டுச்சென்றிருக்கின்றது. அந்தப் பொறுப்பினை கல்விச்சமூகம் தன் கைகளில் எடுக்கவேண்டும்.  மரபார்ந்த வரலாற்றுநோக்கில் பார்த்தால் போராட்டகுணத்தின் அடையாளங்களாகவும் அறிவியலின் மொழிக்குச் சொந்தக்காரர்களாகவும்நோக்கப்பட்ட தமிழர்கள் இன்று என்னவாக நிற்கிறோம்.? தன் ஆளுமைகளையும் சமூகஆளுமைகளையும் இழந்து வலிதற்றவர்களாகியிருக்கிறோம். ஆனாலும் மரபும் தேசியஉணர்வும் தேசிய இனத்தின் சமூக ஆளுமையை உருவாக்கியே தீரும் என்றவரலாறுசார்ந்த நம்பிக்கையுடன் இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறோம்.

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்களன் அஞ்சிக்

கற்றசெலச்சொல்லா தார்

தழலி-

http://www.kaakam.com/?p=1400

Share this post


Link to post
Share on other sites

இது யாழ் பல்கலைக் கழகக் கல்விக் கலாச்சாரத்தை நியாயமாகச் சாடும் கட்டுரையெனக் கருதுகிறேன். நாட்டின் ஏனைய பகுதிகளில்  பல்கலைகள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கனகாலம்! சுன்னாகம் நீர்ப் பிரச்சினை சரியான உதாரணம்! யாழ் பல்கலையில் புவியியல் பீடமும் கிளிநொச்சி வளாகத்தில் பேரா. துரைராஜாவின் முயற்சியின் பயனாக எந்திரவியல் பீடமும் இருந்தும் சுன்னாகத்தில் என்ன நடந்தது என ஒருவருக்கும் தெரியாது!  

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, nunavilan said:

இன்றைய சூழலில் 1991 இற்குப் பின்னர் ஒரு துருவ ஒழுங்கில் உலகம் வந்தபிறகுதாராளமயம், தனியார் மயம், உலகமயம் என உலகம் கட்டற்ற சந்தைமூலதனக்குவிப்பில் மூழ்கியிருக்கின்றது. கல்வியையும் சந்தைப்பொருளாக்கிவிட்டஉலக ஒழுங்கிற்குள் இலங்கையின் கல்விக்கொள்கையும் உள்ளடக்கப்பட்டுவிட்டது.தன்னுடைய தகுதிக்கு மீறி, தமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தினை முடக்குவதற்கு சிறீலங்கா அரசு உலக வல்லாதிக்கங்களிடம் வாங்கிய கடன்பொறிக்குள் சிக்கி, தற்கொலை செய்துகொண்டிருக்கிறது. கடன் என்ற போர்வையில் உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன, தமது முதலீடுகளை இலங்கையில் செய்துகொண்டிருக்கிறார்கள். கடன்களுக்கு மாற்றாக, நிபந்தனைகளின்அடிப்படையில் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் துறைகளைத் தனியார்மயமாக்கும் ஒப்பந்தங்கள் இலங்கை அரசால்கைச்சாத்திடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

 

2 hours ago, nunavilan said:

Kalvi5-678x381.jpg

2 hours ago, nunavilan said:

அதிகாரம், அதிகாரத்தின் கரங்களின் நீட்சி, வன்முறை, வன்முறைக்கெதிரான குரல், ஒடுக்குமுறைகள், தேசியம், தன்னாட்சி என எதையுமே தெரியாதவர்களாக, செயற்கை முறைக் கோழிகள் போல உருவாக்கப்படும் கல்விச் சமூகத்தால் என்ன மாற்றத்தை நிகழ்த்த முடியும்?

மிக நல்ல கட்டுரை இணைப்பிற்கு நன்றிகள் 

ஈழத்தில் மட்டுமில்லை தமிழகத்திலும் இதே நிலைதான். கல்விகற்றால் வாழ்வில் மேன்நிலைக்கு வந்துவிடலாம் என்று தமிழர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்ட கல்வி மேலே உள்ள படத்தில் உள்ள கல்வியைத்தான். இந்த கல்வி முறை தனக்கான சுய உரிமையை இழக்கவைத்துள்ளது. சமூக உறவில் இருந்து அந்நியப்படவைத்துள்ளது, தனது நீர் நில வளங்களை பாதுகாக்கும் கடமையில் இருந்து விலக வைத்துள்ளது. தனது நிலத்திற்கான அரசியல் மற்றும் அரசியல் தலமையை உருவாக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு இனத்தை படிப்படியாக தற்கொலைக்கு கொண்டு செல்லும் கல்விமுறை. இயற்கையோடும் சமூகத்தோடும் இருக்கும் அறம் சார்ந்த தொடர்புகள் உணர்வுகளை அழிதது மனிதனை எந்திரமாக்கும் முதலாளிகளின் தொழிற்சாலைகளாக கல்விக்கூடங்கள் மாறிவிட்டது. 

 

என்னுமொரு திரியில் பதிவிட்ட தமிழ்நாடு குறித்த இந்த காணொளிக் கருத்து இங்கு பொருந்தும். படித்து வேலைக்குப் போவதை குறிக்கோளாகக் கொண்ட ஒரு சமூகம் எப்படி அடிமைநிலைக்கு உட்படுகின்றது. சிறு முதலாளிகள் பெருமுதலாளிகள் நாளை அவர்களே அரசிலையும் தீர்மானிப்பார்கள். இதுவே தமிழகத்தில் நடக்கின்றது. 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this