Jump to content

87 பில்லியனை மீளப்பெற அமெரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

US-SL.jpg

87 பில்லியனை மீளப்பெற அமெரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு!

நாட்டில் கடந்த வரும் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை அடுத்து இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் நிதியுதவியை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக, 480 மில்லியன் டொலர் ( 87 பில்லியன் ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்கா கடந்த செப்டெம்பர் மாதம் அறிவித்திருந்தது. இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் கையெழுத்திடப்படவிருந்தது.

எனினும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, இந்த உதவித் திட்டத்தை இடைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்தநிலையில், மிலேனியம் சவால் நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு உயர்மட்டக் குழு ஒன்றை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதியமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரைக் கொண்ட குழு, இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு செல்லவுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், இந்த நிதியுதவியை மீளப்பெற முடியும் என நம்பப்படுகின்றது.

http://athavannews.com/87-பில்லியனை-மீளப்பெற-அமெர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுப்பது பிச்சை ...அதற்குள் எகத்தாளம் 
ஊரில சொல்லுவினம் பின்னுக்கு சொறிய நகமில்லைஎன்றாலும் வாய்க்கொழுப்பு குறையாது என்று 
இலங்கை அரசியல் வாதிகளுக்கு இது நன்றாகவே பொருந்தும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

480 மில்லியன் டொலர் தொகை  சிறிலங்காவுக்கு கடனா அல்லது கொடையா?  

கடனென்றால் அடுத்த தேர்தலின் பின் வரும் அரசாங்கத்திற்கு ஆப்புதான்?

Link to comment
Share on other sites

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

எடுப்பது பிச்சை ...அதற்குள் எகத்தாளம் 
ஊரில சொல்லுவினம் பின்னுக்கு சொறிய நகமில்லைஎன்றாலும் வாய்க்கொழுப்பு குறையாது என்று 
இலங்கை அரசியல் வாதிகளுக்கு இது நன்றாகவே பொருந்தும் 

ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
Jump to navigationJump to search

அமெரிக்க அரசு கடன் தருவோருக்கு கொடுக்க வேண்டிய தொகையே ஐக்கிய அமெரிக்க அரசின் கடனாகும். ஐக்கிய அமெரிக்க நடுவண் அரசினால் மாநிலங்கள், நிறுவனங்கள் (Corporations), தனிநபர்கள், வெளிநாட்டு அரசுகள் ஆகியவற்றிடம் இருந்து பெற்ற கடனே ஐக்கிய அமெரிக்க அரசின் கடனாகும். இவை Treasury Bills, Notes, Bonds, TIPS, United States Savings Bonds, and State and Local Government Series securities ஆகிய வடிவங்களில் ஐக்கிய அமெரிக்காவுக்கு கடன் தந்திருக்கலாம்.

மார்ச் 16, 2009 இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், 65% (மொ.உ.உ)) ஆகும்.[1] இது ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் $36,314 கடனாகும். இந்தத் தொகையில் 25% மேலாக வெளிநாட்டு அரசுகளிடம், குறிப்பாக சீனாவிடம் பெறப்பட்டது.

https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_அமெரிக்காவின்_தேசிய_கடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Jude said:

தலைவர் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்ர்கள். அமெரிக்கா ஆகப்பெரிய பெக்கர்  என்றா ....?
அப்படி ஆகப்பெரிய பெக்கர் இடமே  திருவோடு ஏந்தும் இலங்கை திருவாளர்கள் எவ்வளவு மாகா மட்டமான பெக்கர்ஸ் ஆ இருப்பினம்.
அதுசரி நீங்கள் ஒருகாலத்தில் அமெரிக்காவை தமிழர்கள் கிஸ் அடித்திருந்தால் தீர்வு ஜம்மென்று குதித்திருக்கும் என்று அடிச்சு விட்ட ஆள் எலுவா .....?
இந்த அமெரிக்காவையா தமிழர்களை கிஸ் அடிக்க சொன்னீங்கோ ....நல்லவேளை தமிழர்கள் செய்யவில்லை இல்லாட்டில் உதட்டில் குஷ்டம் தான் வந்திருக்கும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிங்க என்னதான்ன் சொன்னாலும் அந்த கடன் சுமை இறங்கப்போவது சாதரண பொது மக்கள் மீதுதான் பாருங்கோ அதில நானும் அடக்கம் இப்ப இங்க எடுக்கிற சம்ம்பளம் எங்க போகிறது என்று மட்டும் திரும்பி பார்க்கவே நேரம் சரியா இருக்கு:27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நிங்க என்னதான்ன் சொன்னாலும் அந்த கடன் சுமை இறங்கப்போவது சாதரண பொது மக்கள் மீதுதான் பாருங்கோ அதில நானும் அடக்கம் இப்ப இங்க எடுக்கிற சம்ம்பளம் எங்க போகிறது என்று மட்டும் திரும்பி பார்க்கவே நேரம் சரியா இருக்கு:27_sunglasses:

அது ப்ளடி ஸ்ரிலங்கன்ஸ் இனது பூர்வ ஜென்ம புண்ணியம் ...
அதுதான் நாமளும் ஓடுறம் நாட்டை விட்டு ....விட்டா கோவணத்தையும் உருவாமல் விடமாட்டாங்கள்  போல இருக்கு 
பெப் 11 பறப்பு .... 

Link to comment
Share on other sites

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

தலைவர் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்ர்கள். அமெரிக்கா ஆகப்பெரிய பெக்கர்  என்றா ....?
அப்படி ஆகப்பெரிய பெக்கர் இடமே  திருவோடு ஏந்தும் இலங்கை திருவாளர்கள் எவ்வளவு மாகா மட்டமான பெக்கர்ஸ் ஆ இருப்பினம்.
அதுசரி நீங்கள் ஒருகாலத்தில் அமெரிக்காவை தமிழர்கள் கிஸ் அடித்திருந்தால் தீர்வு ஜம்மென்று குதித்திருக்கும் என்று அடிச்சு விட்ட ஆள் எலுவா .....?
இந்த அமெரிக்காவையா தமிழர்களை கிஸ் அடிக்க சொன்னீங்கோ ....நல்லவேளை தமிழர்கள் செய்யவில்லை இல்லாட்டில் உதட்டில் குஷ்டம் தான் வந்திருக்கும்   

... ம்  ...

அமேரிக்கா தான் உலகின் பெரிய பணக்கார நாடு. அதனால் தான் நான் இந்த நாட்டை தெரிவு செய்து இங்கு நன்றாக இருக்கிறேன்.

******

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அது ப்ளடி ஸ்ரிலங்கன்ஸ் இனது பூர்வ ஜென்ம புண்ணியம் ...
அதுதான் நாமளும் ஓடுறம் நாட்டை விட்டு ....விட்டா கோவணத்தையும் உருவாமல் விடமாட்டாங்கள்  போல இருக்கு 
பெப் 11 பறப்பு .... 

அட நீங்கள் என்ன இப்படி சொல்கிறீர்கள்?...முனி சொல்கிறார் அங்கே இப்போ வேலை  எடுப்பது,வசிப்பது இலகு என்று😞 ...அரசியலை தவிர்த்து விட்டு உண்மையை எழுதுங்கள் 

உங்கள் படிப்பிற்கு ஏற்ற அதிக வருமானம் கிடைத்ததால் வேறு நாட்டுக்கு செல்கிறீர்களா அல்லது உண்மையிலேயே அங்கு வசிக்க  முடியாதா?

சந்தர்ப்பம் கிடைத்தால் முனியும் வெளி நாட்டுக்குப் போவாரா?
 
Link to comment
Share on other sites

16 hours ago, அக்னியஷ்த்ரா said:

அது ப்ளடி ஸ்ரிலங்கன்ஸ் இனது பூர்வ ஜென்ம புண்ணியம் ...
அதுதான் நாமளும் ஓடுறம் நாட்டை விட்டு ....விட்டா கோவணத்தையும் உருவாமல் விடமாட்டாங்கள்  போல இருக்கு 
பெப் 11 பறப்பு .... 

பிறந்த தாய் மண்ணை விட்டு தப்பி ஓடுவதற்கு ஒவ்வொருவரும் ஏதாவது 'நியாயமான' காரணங்களைக்  கண்டுபிடித்து வைத்திருப்பர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நிங்க என்னதான்ன் சொன்னாலும் அந்த கடன் சுமை இறங்கப்போவது சாதரண பொது மக்கள் மீதுதான் பாருங்கோ அதில நானும் அடக்கம் இப்ப இங்க எடுக்கிற சம்ம்பளம் எங்க போகிறது என்று மட்டும் திரும்பி பார்க்கவே நேரம் சரியா இருக்கு:27_sunglasses:

பிறகென்னத்துக்கு புலம்பெயர் தமிழரை ஒரு நக்கலாய் பாக்கிறீங்கள்?

அவங்களுக்கும் உதே நிலமைதான்.....

என்ன ஒண்டு  விடியப்பறம் 6 மணிக்கு வேலைக்கு வெளிக்கிட்டாங்கள் எண்டால் இரவு 12 மணிக்குத்தான் வீடு வந்து சேருவாங்கள்.

ராசன்! உங்கை எப்பிடி?????? :cool:

Link to comment
Share on other sites

22 hours ago, Jude said:

... ம்  ...

அமேரிக்கா தான் உலகின் பெரிய பணக்கார நாடு. அதனால் தான் நான் இந்த நாட்டை தெரிவு செய்து இங்கு நன்றாக இருக்கிறேன்.

******

On 1/3/2019 at 6:48 AM, Jude said:

ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
Jump to navigationJump to search

அமெரிக்க அரசு கடன் தருவோருக்கு கொடுக்க வேண்டிய தொகையே ஐக்கிய அமெரிக்க அரசின் கடனாகும். ஐக்கிய அமெரிக்க நடுவண் அரசினால் மாநிலங்கள், நிறுவனங்கள் (Corporations), தனிநபர்கள், வெளிநாட்டு அரசுகள் ஆகியவற்றிடம் இருந்து பெற்ற கடனே ஐக்கிய அமெரிக்க அரசின் கடனாகும். இவை Treasury Bills, Notes, Bonds, TIPS, United States Savings Bonds, and State and Local Government Series securities ஆகிய வடிவங்களில் ஐக்கிய அமெரிக்காவுக்கு கடன் தந்திருக்கலாம்.

மார்ச் 16, 2009 இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், 65% (மொ.உ.உ)) ஆகும்.[1] இது ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் $36,314 கடனாகும். இந்தத் தொகையில் 25% மேலாக வெளிநாட்டு அரசுகளிடம், குறிப்பாக சீனாவிடம் பெறப்பட்டது.

https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_அமெரிக்காவின்_தேசிய_கடன்

22 hours ago, அக்னியஷ்த்ரா said:

தலைவர் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்ர்கள். அமெரிக்கா ஆகப்பெரிய பெக்கர்  என்றா ....?
அப்படி ஆகப்பெரிய பெக்கர் இடமே  திருவோடு ஏந்தும் இலங்கை திருவாளர்கள் எவ்வளவு மாகா மட்டமான பெக்கர்ஸ் ஆ இருப்பினம்.
அதுசரி நீங்கள் ஒருகாலத்தில் அமெரிக்காவை தமிழர்கள் கிஸ் அடித்திருந்தால் தீர்வு ஜம்மென்று குதித்திருக்கும் என்று அடிச்சு விட்ட ஆள் எலுவா .....?
இந்த அமெரிக்காவையா தமிழர்களை கிஸ் அடிக்க சொன்னீங்கோ ....நல்லவேளை தமிழர்கள் செய்யவில்லை இல்லாட்டில் உதட்டில் குஷ்டம் தான் வந்திருக்கும்   

நியாயினி,

மேலே உள்ளதை படியுங்கள்.

இவ்வளவு  தானா யாழ் களத்தின் தரம்?

இவரை போலவே தானா, நான் உட்பட மற்றவர்களும் எழுத வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

நான் இணைத்த அறிவுக்கு உரிய விடயத்துக்கு இவர் இப்படி பதில் வழங்கி இருக்கிறார். பொருளாதாரம், வணிகவியல் போன்ற துறைகளில் அறிவுள்ளவர்கள் எனது இணைப்பின் நோக்கத்தை அறிவார்கள். நான் மேலே உள்ளதை இணைத்தது நாடுகளுக்கு இடையேயான பண பரிமாற்றங்கள், அவற்றின் பின்னணியிலான சர்வதேச பொருளாதாரம் பற்றிய ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலை ஆரம்பிப்பதே. இவரது கருத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. நீங்கள் மட்டுறுத்துனர் என்ற அளவில் இந்த கருத்தை அனுமதித்து எனது பதிலை   அகற்றியது  இந்த யாழ் களம் அறிவார்ந்த கருத்தாடலுக்கு உகந்த இடமல்ல என்ற முடிவுக்கே வரவைக்கிறது.

ஆகவே, இனிமேல் அறிவார்ந்த விடயங்களை இந்த களத்தில் தவிர்த்து கொள்ள போகிறேன்.

அதற்கு பதிலாக இவ்வாறான தரக்குறைவான கருத்து பதிவுகளை உங்கள் கவனத்துக்கு கொண்டு வரும் பதிவுகளை செய்யலாம் என்று இருக்கிறேன். களத்தில் இவற்றை உங்களை விளித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவது மட்டுமன்றி தனி மடலிலும் அதன் பிரதியை அனுப்பலாம் என்று கருதுகிறேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

அட நீங்கள் என்ன இப்படி சொல்கிறீர்கள்?...முனி சொல்கிறார் அங்கே இப்போ வேலை  எடுப்பது,வசிப்பது இலகு என்று😞 ...அரசியலை தவிர்த்து விட்டு உண்மையை எழுதுங்கள் 

உங்கள் படிப்பிற்கு ஏற்ற அதிக வருமானம் கிடைத்ததால் வேறு நாட்டுக்கு செல்கிறீர்களா அல்லது உண்மையிலேயே அங்கு வசிக்க  முடியாதா?

சந்தர்ப்பம் கிடைத்தால் முனியும் வெளி நாட்டுக்குப் போவாரா?
 
இதே அக்கினி தான் வெளி நாடு போற வசதி இருந்தும் போகாமல் இருக்கிறேன் என்று சொன்னவர்.அவரவருக்கு என்ன பிரச்னையோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இதே அக்கினி தான் வெளி நாடு போற வசதி இருந்தும் போகாமல் இருக்கிறேன் என்று சொன்னவர்.அவரவருக்கு என்ன பிரச்னையோ.

எனக்கும் மிகப் பெரிய அதிர்ச்ச்சியாய் இருந்தது நன்றாகப் படித்திருக்கிறார்...நல்ல வேலையில் இருக்கிறார்...எதற்காக நாட்டை விட்டுப் போறாரோ தெரியவில்லை?...படிப்பிற்கு ஏத்த உத்தியோகம் எடுத்துப் போனால் ஓரளவிற்கு பரவாயில்லை...எது,எப்படி இருந்தாலும் இவரைப் போல  படித்த,நல்ல வேலையில் இருப்பவர்கள்,தமிழர்கள்,இப்பவும் நாட்டை விட்டுப் போவது கவலை தரக் கூடிய விசயம்😟
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2019 at 5:43 PM, ரதி said:

அட நீங்கள் என்ன இப்படி சொல்கிறீர்கள்?...முனி சொல்கிறார் அங்கே இப்போ வேலை  எடுப்பது,வசிப்பது இலகு என்று😞 ...அரசியலை தவிர்த்து விட்டு உண்மையை எழுதுங்கள் 

உங்கள் படிப்பிற்கு ஏற்ற அதிக வருமானம் கிடைத்ததால் வேறு நாட்டுக்கு செல்கிறீர்களா அல்லது உண்மையிலேயே அங்கு வசிக்க  முடியாதா?

சந்தர்ப்பம் கிடைத்தால் முனியும் வெளி நாட்டுக்குப் போவாரா?
 
ஊரிலை கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு கலியாண பேச்சுக்கால் வெற்றிகரமாய் நடந்து முடிஞ்சிருக்கு.
மாப்பிளை டாக்குத்தர்
பொம்பிளை இன்னும் கம்பசிலை படிக்கிறா

மாப்பிளைக்கு சீதனம் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய்
மாமரம் பிலாமரம் தென்னை கருவேப்பிலை மரங்கள் நிறைஞ்ச 2 கல்வீடு

இதை ஈரோ கணக்கிலை கணக்கு பாத்தன்.......நெஞ்சு விறைச்சுப்போச்சுது.

இதிலை வெளிநாட்டு காசு ஒருசதமும் சம்பந்தப்படேல்லை எண்டதை கவனத்தில் எடுக்கவும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

அம்மாடியோ...அதிஷ்டக்காரப் பொண்ணு☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அம்மாடியோ...அதிஷ்டக்காரப் பொண்ணு☺️

அட நாங்கள் இப்படி தாரை வார்த்த தகப்பன் தாய்  பாவம் என்று சிந்திக்க இதுகள் வேறை மாதிரி சிந்திக்குதுகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அம்மாடியோ...அதிஷ்டக்காரப் பொண்ணு☺️

பொண்ணுவின்ரை அதிஷ்டம் வாறவனை பொறுத்து இருக்கு தங்கச்சி.....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2019 at 9:41 AM, Jude said:

நியாயினி,

மேலே உள்ளதை படியுங்கள்.

இவ்வளவு  தானா யாழ் களத்தின் தரம்?

இவரை போலவே தானா, நான் உட்பட மற்றவர்களும் எழுத வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

நான் இணைத்த அறிவுக்கு உரிய விடயத்துக்கு இவர் இப்படி பதில் வழங்கி இருக்கிறார். பொருளாதாரம், வணிகவியல் போன்ற துறைகளில் அறிவுள்ளவர்கள் எனது இணைப்பின் நோக்கத்தை அறிவார்கள். நான் மேலே உள்ளதை இணைத்தது நாடுகளுக்கு இடையேயான பண பரிமாற்றங்கள், அவற்றின் பின்னணியிலான சர்வதேச பொருளாதாரம் பற்றிய ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலை ஆரம்பிப்பதே. இவரது கருத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. நீங்கள் மட்டுறுத்துனர் என்ற அளவில் இந்த கருத்தை அனுமதித்து எனது பதிலை   அகற்றியது  இந்த யாழ் களம் அறிவார்ந்த கருத்தாடலுக்கு உகந்த இடமல்ல என்ற முடிவுக்கே வரவைக்கிறது.

ஆகவே, இனிமேல் அறிவார்ந்த விடயங்களை இந்த களத்தில் தவிர்த்து கொள்ள போகிறேன்.

அதற்கு பதிலாக இவ்வாறான தரக்குறைவான கருத்து பதிவுகளை உங்கள் கவனத்துக்கு கொண்டு வரும் பதிவுகளை செய்யலாம் என்று இருக்கிறேன். களத்தில் இவற்றை உங்களை விளித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவது மட்டுமன்றி தனி மடலிலும் அதன் பிரதியை அனுப்பலாம் என்று கருதுகிறேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

தலைவர் ஜூட்  
நக்கல் ,நளினம் கலந்து ஊர் பேச்சுவழக்கில் எழுதுவதை கூட கண்டுபிடிக்க முடியாமல் அறிவுக்கொள்ளளவு வரை போனது நீங்கள் ,
ஐக்கிய அமெரிக்க வரை கடன்வாங்க போன திரியில் ஐக்கிய அமெரிக்காவே எவ்வளவு பெரிய கடன்காரன் என்று வெட்டி ஓட்டிவிட்டு இண்டர்நேசனல் பாலிடிக்ஸ் , வேர்ல்ட் லெவல் எகோநோமிக்ஸ் , பினான்சியல் பார்காஸ்டிங்  என்று வாயில் நுழையாத வார்த்தைகளை எல்லாம் துணைக்கு கூப்பிடுகிறீர்கள். எனக்கு நிர்வாகத்தின் முடிவில் எந்த கருத்துவேறுபாடுமில்லை எனது கருத்து நீக்கப்பட்டிருந்தாலும் அதனை அப்படியே அசால்ட்டாக கடந்து தான் சென்றிருப்பேன் 

On 1/4/2019 at 10:13 PM, ரதி said:

அட நீங்கள் என்ன இப்படி சொல்கிறீர்கள்?...முனி சொல்கிறார் அங்கே இப்போ வேலை  எடுப்பது,வசிப்பது இலகு என்று😞 ...அரசியலை தவிர்த்து விட்டு உண்மையை எழுதுங்கள் 

உங்கள் படிப்பிற்கு ஏற்ற அதிக வருமானம் கிடைத்ததால் வேறு நாட்டுக்கு செல்கிறீர்களா அல்லது உண்மையிலேயே அங்கு வசிக்க  முடியாதா?

சந்தர்ப்பம் கிடைத்தால் முனியும் வெளி நாட்டுக்குப் போவாரா?

On 1/5/2019 at 5:09 PM, சுவைப்பிரியன் said:

இதே அக்கினி தான் வெளி நாடு போற வசதி இருந்தும் போகாமல் இருக்கிறேன் என்று சொன்னவர்.அவரவருக்கு என்ன பிரச்னையோ.

On 1/5/2019 at 11:33 PM, ரதி said:

எனக்கும் மிகப் பெரிய அதிர்ச்ச்சியாய் இருந்தது நன்றாகப் படித்திருக்கிறார்...நல்ல வேலையில் இருக்கிறார்...எதற்காக நாட்டை விட்டுப் போறாரோ தெரியவில்லை?...படிப்பிற்கு ஏத்த உத்தியோகம் எடுத்துப் போனால் ஓரளவிற்கு பரவாயில்லை...எது,எப்படி இருந்தாலும் இவரைப் போல  படித்த,நல்ல வேலையில் இருப்பவர்கள்,தமிழர்கள்,இப்பவும் நாட்டை விட்டுப் போவது கவலை தரக் கூடிய விசயம்😟

உறவுகளுக்கு 
முதலில் எனது தொழிலை நன்றாக அறியத்தந்தால் அதன்பிறகு அதன் தொடர்பான எமது சமூகத்தின் பிற்போக்குத்தனத்தின் பாதிப்பையும் குறிப்பிட்டால் தெளிவாக விளங்கும் என்று நினைக்கிறேன் . நான் சிங்கையில் உள்ள ஒரு நிறுவனத்த்தில் முழுநேர மென்பொருள் பொறியியலாளர் ஆக இருந்தேன் அவர்களுடன் தொழில் செய்த காலத்தில் எனது நேர்த்தியும் ,நேர முகாமைத்துவமும் ,வருவிளைவு (Out put) உம் பிடித்து போனதால் 
இந்தியாவில் புதிய காரியாலயம்  துவங்க இருந்த நோக்கத்தை மாற்றி இலங்கையை நோக்கி அவர்களது கவனத்தை திருப்பினர், எனவே புதிய காரியாலயத்துக்குரிய திறமைகளை அடையாளம் காண அதுவும் கிழக்கு மாகாணத்தை முன்னேற்றும் நோக்கத்துடன் சிங்கையில் இருந்து வந்து வீட்டிலிருந்தவாறே remote அக அவர்களுடன் பணிபுரிந்து வந்தேன். இந்தகாலத்தில் தான் ஒரு சில freshers ஐ இணைத்துக்கொண்டு ,கொழும்பில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனம் இவர்களை போன்றவர்களுக்கு வழங்கும் சம்பளத்தை போல் இரு மடங்கு சம்பளமும் வழங்கி கொஞ்சம் , கொஞ்சமாக வளரத்தொடங்கினோம். ஆனால் இந்த freshers இற்கு இலகுவாக கிடைத்த வாய்ப்பு என்பதாலோ என்னவோ அவர்களுக்கு அதன் தார்ப்பரியம் புரியவில்லை , நேரத்தை வீணடிக்க தொடங்கினர் விளைவு Out Put இல்லை, வேலையை விட்டு தூக்க வேண்டி வந்தது , இதற்குள் நான் தொடர்ந்து இவ்வாறு வேலை செய்துகொண்டிருந்தது மூலம்  இன்னும் பிற்படுத்தப்பட்ட ,கிணற்று தவளைகளான எமது சமூகத்தின்  அடுத்த விளைவை நான் சந்திக்க நேர்ந்தது. திருமண பேச்சுக்கள்  தள்ளிப்போக  தொடங்கின ,சில ஆரம்பக்கட்டத்திலே உடையத்தொடங்கின ஏன் என்று நான் தேடியபோது 
பையனுக்கு வேலை இல்லையாம் ....

வீட்டிலிருந்து கொண்டு தான் வேலை என்று சொல்லுகிறார்கள் ...அதெப்படி வீட்டிலிருந்து வேலை செய்வது ...?

பையனுக்கு நிறைய சொந்தங்கள் வெளிநாட்டிலிருப்பதாலும் அம்மா வேற டபிள் பென்ஷன் என்பதாலும் பந்தாவாக ஒரு காரை வச்சு சமாளிக்கிறான் 
 மற்றப்படிக்கு வேறொன்றுமில்லை .
இப்படி பலவிடையங்கள் பெண் வீட்டாரின் காதுகளுக்கு  போய் சேர்ந்தால் அவர்கள் என்ன செய்வார்கள், 

இப்படி தடுமாறிக்கொண்டு இருக்கும் போது இலங்கை அரசாங்கமும் அவர்களுடைய பங்கிற்கு (அதுதான் திறைசேரி எப்போதோ  காலியாகிவிட்டதே)   
நிறுவனங்கள் மீதான புதிய வரிகளை (new tax slabs and with holding tax for small and medium industries ) என்று ஆரம்பித்து சிங்கையில் உள்ள எனது தாய் நிறுவனத்திற்கு B.P எகிற வைத்தனர். போதாக்குறைக்கு மகிந்த மாமாவின் வருகை எல்லா புதிய முதலீட்டாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்ததா....? எனது நிறுவனமும் சிவாஜி நீங்கள் இலங்கையில் கிழித்தது போதும் திரும்ப சிங்கைக்கே  வந்திருங்க என்று மீள அழைத்து விட்டார்கள். விளைவு சிவாஜி காயிங் பேக் டு சிங்கை ...அம்புட்டுதான்     
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறைசேரி காலியாகின்றதினாலோ, மகிந்த வருவதினாலோ, அல்லது இவரை போன்றவர்கள் வெளிநாடு போவதினாலோ இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. என்னதான் அப்படி கவலைப்பட வேண்டியுள்ளது என எனக்கு தெரியவில்லை?

70, 80 களில் வெளிநாடு வந்த உழைத்த சிங்கை / மலேசிய பென்சன்காரர்கள் இன்னும் ஊரில் வாழ்கின்றார்கள். 
போறசனம் போகும், வாறசனம் வரும். இது ஒவ்வோருவரின் தனிப்ப்ட்ட சூழ்நிலைகளை பொறுத்தது.

இலங்கையில் மக்கள் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, colomban said:

திறைசேரி காலியாகின்றதினாலோ, மகிந்த வருவதினாலோ, அல்லது இவரை போன்றவர்கள் வெளிநாடு போவதினாலோ இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. என்னதான் அப்படி கவலைப்பட வேண்டியுள்ளது என எனக்கு தெரியவில்லை?

கொழும்பான் அண்ணை 
இலங்கை தன்னிறைவு கண்ட நாடல்ல ...அமெரிக்க டாலர் அங்கே  உயர்ந்தால் இங்கே கதறி ஒப்பாரி ஓலம் வைக்கும் அளவுக்கு மற்றைய நாடுகளில் தங்கியிருக்கும் நாடு, கிரீசும் இப்படித்தான் எதை பற்றியும் யோசிக்காமல் இருந்து தற்போது ஒரு சாண்ட்விட்ச் இற்கு விபச்சாரம் செய்யும் நிலையில் இருக்கிறது. இலங்கையில் சனம் வாழத்தான் போகிறது அதை மறுக்க வில்லை ஆனால் இன்னும் சில வருடங்களில் அவர்களது வாழ்க்கைத்தரம், செலவு  எந்தளவில் இருக்கும் என்பதே முன்னுள்ள கேள்வி. ஏற்க்கனவே இலங்கையின் credit rating படு பாதாளத்தில் இன்னும் சில வருடங்களுக்கு பெரிய மாற்றம் வர வழியில்லை .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

உண்மை தான். நியாயினி போன்றவர்களால் இந்த களம் நக்கல் , நளினங்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிவார்ந்த விடயங்களுக்கு மற்ற நாட்டு மக்களும் பங்களிக்கும் பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில் அறிவார்ந்த விடயங்களையும் நக்கல் நளினங்களை இங்கும் உங்களை போல வைத்து கொள்ளலாம் என இருக்கிறேன்.

இதோ ஒரு ஆரம்பம்.

என்ன ஆத்தா நியாயினி,  உண்மை இல்லையா? அவர் தலைவர் என்றால் நான் ஆத்தா என்று உங்களை எழுதலாம் தானே? 

திருவாளர் யூட் அவர்களே 
அநேகமாக உங்களுக்கு வேறேதோ பிரச்சினை நியானியுடன்  இருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களுக்கு கருத்தெழுதியது நான் எனக்கு பதிலெழுவதை விடுத்து நியானியை ஏன் நோண்டுகிறீர்கள். நீங்கள் நடந்துகொள்வதை  பார்த்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் டீச்சர் இவன் என்னை கிள்ளுறான் ...டீச்சர் இவன் எனக்கு அடிக்கிறான் என்று ஒரே காம்ப்ளயின்ட் பண்ணும் சிறுவன் ஞாபகம் தான் வருகிறது. நீங்கள் நியானியுடன் தனிப்பட்ட விடயமாக பேசவேண்டியிருந்தால் அதற்க்கு தனி மடலை உபயோகப்படுத்தவும் 

Link to comment
Share on other sites

9 hours ago, அக்னியஷ்த்ரா said:

உறவுகளுக்கு 
முதலில் எனது தொழிலை நன்றாக அறியத்தந்தால் அதன்பிறகு அதன் தொடர்பான எமது சமூகத்தின் பிற்போக்குத்தனத்தின் பாதிப்பையும் குறிப்பிட்டால் தெளிவாக விளங்கும் என்று நினைக்கிறேன் . நான் சிங்கையில் உள்ள ஒரு நிறுவனத்த்தில் முழுநேர மென்பொருள் பொறியியலாளர் ஆக இருந்தேன் அவர்களுடன் தொழில் செய்த காலத்தில் எனது நேர்த்தியும் ,நேர முகாமைத்துவமும் ,வருவிளைவு (Out put) உம் பிடித்து போனதால் 
இந்தியாவில் புதிய காரியாலயம்  துவங்க இருந்த நோக்கத்தை மாற்றி இலங்கையை நோக்கி அவர்களது கவனத்தை திருப்பினர், எனவே புதிய காரியாலயத்துக்குரிய திறமைகளை அடையாளம் காண அதுவும் கிழக்கு மாகாணத்தை முன்னேற்றும் நோக்கத்துடன் சிங்கையில் இருந்து வந்து வீட்டிலிருந்தவாறே remote அக அவர்களுடன் பணிபுரிந்து வந்தேன். இந்தகாலத்தில் தான் ஒரு சில freshers ஐ இணைத்துக்கொண்டு ,கொழும்பில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனம் இவர்களை போன்றவர்களுக்கு வழங்கும் சம்பளத்தை போல் இரு மடங்கு சம்பளமும் வழங்கி கொஞ்சம் , கொஞ்சமாக வளரத்தொடங்கினோம். ஆனால் இந்த freshers இற்கு இலகுவாக கிடைத்த வாய்ப்பு என்பதாலோ என்னவோ அவர்களுக்கு அதன் தார்ப்பரியம் புரியவில்லை , நேரத்தை வீணடிக்க தொடங்கினர் விளைவு Out Put இல்லை, வேலையை விட்டு தூக்க வேண்டி வந்தது , இதற்குள் நான் தொடர்ந்து இவ்வாறு வேலை செய்துகொண்டிருந்தது மூலம்  இன்னும் பிற்படுத்தப்பட்ட ,கிணற்று தவளைகளான எமது சமூகத்தின்  அடுத்த விளைவை நான் சந்திக்க நேர்ந்தது. திருமண பேச்சுக்கள்  தள்ளிப்போக  தொடங்கின ,சில ஆரம்பக்கட்டத்திலே உடையத்தொடங்கின ஏன் என்று நான் தேடியபோது 
பையனுக்கு வேலை இல்லையாம் ....

வீட்டிலிருந்து கொண்டு தான் வேலை என்று சொல்லுகிறார்கள் ...அதெப்படி வீட்டிலிருந்து வேலை செய்வது ...?

பையனுக்கு நிறைய சொந்தங்கள் வெளிநாட்டிலிருப்பதாலும் அம்மா வேற டபிள் பென்ஷன் என்பதாலும் பந்தாவாக ஒரு காரை வச்சு சமாளிக்கிறான் 
 மற்றப்படிக்கு வேறொன்றுமில்லை .
இப்படி பலவிடையங்கள் பெண் வீட்டாரின் காதுகளுக்கு  போய் சேர்ந்தால் அவர்கள் என்ன செய்வார்கள், 

இப்படி தடுமாறிக்கொண்டு இருக்கும் போது இலங்கை அரசாங்கமும் அவர்களுடைய பங்கிற்கு (அதுதான் திறைசேரி எப்போதோ  காலியாகிவிட்டதே)   
நிறுவனங்கள் மீதான புதிய வரிகளை (new tax slabs and with holding tax for small and medium industries ) என்று ஆரம்பித்து சிங்கையில் உள்ள எனது தாய் நிறுவனத்திற்கு B.P எகிற வைத்தனர். போதாக்குறைக்கு மகிந்த மாமாவின் வருகை எல்லா புதிய முதலீட்டாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்ததா....? எனது நிறுவனமும் சிவாஜி நீங்கள் இலங்கையில் கிழித்தது போதும் திரும்ப சிங்கைக்கே  வந்திருங்க என்று மீள அழைத்து விட்டார்கள். விளைவு சிவாஜி காயிங் பேக் டு சிங்கை ...அம்புட்டுதான்     

ஓ! தெரியாமல் போச்சு!

உங்கள் அரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

விரைவில் வெளிநாட்டு மாப்பிள்ளையா கோடி கோடியா சீதனம் கேட்டு இங்கு நாறடித்த பெண்கள் குடும்பத்தினரை ஒருவழி செய்திடுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2019 at 7:39 AM, Jude said:

... ம்  ...

அமேரிக்கா தான் உலகின் பெரிய பணக்கார நாடு. அதனால் தான் நான் இந்த நாட்டை தெரிவு செய்து இங்கு நன்றாக இருக்கிறேன்.

******

முதல் பத்து பணக்கார நாடுகளில் அமெரிக்காவின் பெயரே இல்லையே ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2019 at 11:06 AM, அக்னியஷ்த்ரா said:

அது ப்ளடி ஸ்ரிலங்கன்ஸ் இனது பூர்வ ஜென்ம புண்ணியம் ...
அதுதான் நாமளும் ஓடுறம் நாட்டை விட்டு ....விட்டா கோவணத்தையும் உருவாமல் விடமாட்டாங்கள்  போல இருக்கு 
பெப் 11 பறப்பு .... 

சரி சரி பறங்கோ நாங்கள் இங்கினதான் சுழட்டுவம் சுழலுவம்  வாழ்த்துக்கள்  ஊரில் உள்ள பெண் பிள்ளைகளோ நாங்களும் வெளிநாடு பறக்க போறம் என்று சொல்லிட்டுத்துதானே திரியுதுகள் 

அது போக அவங்க அம்மை அப்பனும் அதைத்தான் சொல்லித்து திரியுதுகள் என்ற பிள்ளையிற அழக்கும் வெள்ளைக்கும் ஒரு **வயசு மதிக்கதக்க ஒருவர் மாட்டாமலா போயிடுவார் மனசுக்க முணுமுணுப்பு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.