Sign in to follow this  
கிருபன்

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1:0 என கைப்பற்றியுள்ளது.

Recommended Posts

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1:0 என கைப்பற்றியுள்ளது.

December 30, 2018

newziland.jpeg?resize=800%2C450

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியினை நியூஸிலாந்து அணி 423 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளதுடன் தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

நியூஸிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் இரண்டாது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி கிறிஸ்ட் சரச்சில் ஆரம்பமானது.

இப் போட்டியில் இன்னிங்சில் நியூஸிலாந்து அணி 178 ஓட்டங்களையும் இலங்கை அணி 104 ஓட்டங்களையும் எடுத்திருந்தன.

இதையடுத்து 74 ஓட்ட முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களை இழந்து 585 ஓட்டங்களை பெற்றநிலையில் துடுப்பாட்டத்தினை நிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 659 ஓட்டங்கள் என்னும் வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இன்றைய ஐந்தாவது நாள் போட்டியின் போது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்துள்ளது.

இதனால் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

http://globaltamilnews.net/2018/108321/

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this