Jump to content

சத்தியமங்கலத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Image may contain: one or more people

போதும். இனியாவது அகதி வாழ்வுக்கு முடிவு கட்டுங்கள்!

தமிழ்நாட்டில் தற்போது சுமார் ஒரு லட்சம் ஈழ அகதிகள் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 35 வருடங்களாக அகதிகளாகவே இருக்கின்றனர்.

ஜரோப்பா மற்றும் கனடா அவுஸ்ரேலியா நாடுகளுக்கு சென்ற ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் கல்வி கற்க வேலை செய்ய என அனைத்து வசதிகளும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கு மட்டும் உயர் கல்வி கற்கும் வாய்ப்புகூட மறுக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள தீபெத் மற்றும் அகதிகள் எல்லாம் சுதந்திரமாக திரிய அனுமதித்த இந்தியஅரசு ஈழ அகதிகளை மட்டும் கைதிகள் போல் நடத்துகின்றது.

இதுபோதாதென்று பாவானிசாகரில் கம்யுனிஸ் கட்சி தலைவர் ஒருவர் ஈழ அகதிகளை வெளியேற்ற வேண்டும் அல்லது அடைத்து வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

கடந்த 35 வருடமாக மௌனமாக இருந்த தலைவர் அதுவும் கம்யுனிஸ்ட் தலைவர் இப்போது அகதிகளுக்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.

அதேவேளை தம்மை தரக்குறைவாக ஏசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி பவாணிசாகர் அகதிமுகாமில் இருக்கும் அகதிகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர் வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே லட்சக்கணக்கான மலையாளிகள் , கன்னடர், தெலுங்கர்கள் தமிழகத்தில் வாழுகின்றனர்.

இவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காத கம்யுனிஸ்ட் தலைவர் ஈழ அகதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது ஏன்? 

இவர்களால் பறிபோகாத தமிழக வளம் ஈழ அகதிகளால் பறிபோவதாக காட்டுவதன் மர்மம் என்ன?

போதும். இந்த நிலை தமிழகம் முழுவதும் பரவுவதற்கு முன்னரே முடிவு காண வேண்டும்.

தமிழகத்தில் தொடர்ந்து வாழ விரும்பும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குங்கள். தாயகம் திரும்ப விரும்புவோரை உடனே அனுப்பி வையுங்கள்.

மாறாக உருவாகிவரும் ஈழத் தமிழர் மற்றும் தமிழக தமிழர்களின் ஒற்றுமையை குழப்புவதற்காக அகதிகள் மீது தமிழக தமிழர்களை தூண்டிவிட வேண்டாம்.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

' கொடுமை ! கொடுமை ! ' என்று கோயிலுக்குச் சென்றால், அங்கு ஒரு கொடுமை தலைவிரித்து ஆடியதாம். சிங்கள இனவெறியிலிருந்து தப்பி வந்தால், தமிழகத்திலும் வஞ்சிக்கப்படும் கொடூரம் ஈழத்தமிழருக்கு. அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி ஆதரிக்க வேண்டிய முதல் கடமை உலகிலேயே தமிழகத் தமிழனுக்குத்தான் உண்டு. தமிழ் மண்ணில் பிறந்ததற்காய் வெட்கப்படுகிறேன். அதுமட்டுமல்ல. இடதுசாரி சிந்தனையுள்ள நான், ரஷியாவையும் சீனாவையும் கேட்டு இலங்கைப் பிரச்சினையில் தம் நிலைப்பாட்டை வகுக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்காகவும் வெட்கப்படுகிறேன். பீஷ்மாச்சாரியார் போன்றோரே எதிரணியில் இருந்த போதிலும், பாண்டவர் வென்றதைப் போல் தருமத்தின் துணைக் கொண்டு ஈழத்தமிழர் வென்று நிற்பார் என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது (இது கையாலாகாத்தனம் என்ற போதிலும்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

கடந்த 35 வருடமாக மௌனமாக இருந்த தலைவர் அதுவும் கம்யுனிஸ்ட் தலைவர் இப்போது அகதிகளுக்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.

கம்னியூஸ்டுக் கூட்டம்.. எப்பவுமே.. மக்கள் விரோத வன்மப் போக்குள்ளவர்களாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அது இன்று சமூக ஊடகங்களிலும்... பிரதிபலிக்கக் காண்கிறோம். 

இந்தக் கூட்டம்.. ஈழத்தில்.. தமிழீழம்.. கிடைப்பதையும் எதிர்த்தது.. சாதி இல்லை.. ஆண் பெண் சமத்துவம் என்று பேசிக் கொண்டு சாதி வளர்ப்பையும்.. பெண்களை சொந்தப் பாலியல் இச்சைக்கு தீனியாக்குவதையும் செய்து வரும் இந்தக் கூட்டம்.. இப்போ.. இந்த வன்மத்தை கக்கி இருப்பது ஒன்றும் அதிர்ச்சியோ ஆச்சரியமோ அல்ல.

தொடர்ந்து இந்தக் கம்னியூட்டு வெங்காயங்களின் நடவடிக்கைகளை அவதானித்து வந்தால்.. இது அதிர்ச்சி அல்ல. இதுவே அவர்களின் வழமை என்பது புலனாகும்.

இது அறவே இல்லாதொழிக்கப்பட வேண்டிய ஒரு சமூகப் புரை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அகதி முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு,அவமானப்படுவதை விட ஊரில் போய் கஞ்சி குடிக்கலாம் 

Link to comment
Share on other sites

30 வருடங்களுக்கு மேல் எளிய வாழ்வு ... எங்கே எங்கள் சம்பந்தசுமந்திரர்கள்? ... அழைத்து வந்து மீள் குடியேற்றினாலும் அவல/அடிமை வாழ்வகன்று சொந்தக்காலின் நின்றிருப்பார்கள்!

... மீண்டும் அதே திமுக/காங்கரஸ்/கம்யூனிஸ்ட் கூட்டு ... ஈழத்தமிழினத்துக்கு எதிராக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இப்படி அகதி முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு,அவமானப்படுவதை விட ஊரில் போய் கஞ்சி குடிக்கலாம் 

இப்பவெல்லாம்  கஞ்சி கூட லேசுப்பட்டதில்லை தங்கச்சி! எதுவுமே  வாயாலை சொல்லுறது சுகம்....சம்பந்தப்பட்ட உறவுகளுக்குத்தான் தெரியும் அதன் வேதனையும் வலியும்....பின்னே வரப்போகும் சோதனைகளும்... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இப்படி அகதி முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு,அவமானப்படுவதை விட ஊரில் போய் கஞ்சி குடிக்கலாம் 

சொல்வது இலகு எவ்ளவு சாத்தியம் ?
30 வருடம் வாழ்ந்தவர்கள் .... 
பிள்ளைகளின் படிப்பு 
எதோ சிறு வருமானம் கிடைக்க கொடிய தொழில் என்று 
ஒன்றுடன் இருக்கபோது 
திரும்பவும் அகதியாகி அங்கு சென்றால் 
எப்படி வாழ்வை கட்டமைப்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎30‎/‎2018 at 11:51 PM, குமாரசாமி said:

இப்பவெல்லாம்  கஞ்சி கூட லேசுப்பட்டதில்லை தங்கச்சி! எதுவுமே  வாயாலை சொல்லுறது சுகம்....சம்பந்தப்பட்ட உறவுகளுக்குத்தான் தெரியும் அதன் வேதனையும் வலியும்....பின்னே வரப்போகும் சோதனைகளும்... :(

கஸ்டப் படாமல் இந்த உலகத்தில் எதுவும் கிடைக்காது அண்ணா...அப்படி இலகுவாய் எல்லாம் கிடைத்தால் நேர்மையான வழியில் வந்ததாய் இருக்காது 

On ‎12‎/‎31‎/‎2018 at 1:36 AM, Maruthankerny said:

சொல்வது இலகு எவ்ளவு சாத்தியம் ?
30 வருடம் வாழ்ந்தவர்கள் .... 
பிள்ளைகளின் படிப்பு 
எதோ சிறு வருமானம் கிடைக்க கொடிய தொழில் என்று 
ஒன்றுடன் இருக்கபோது 
திரும்பவும் அகதியாகி அங்கு சென்றால் 
எப்படி வாழ்வை கட்டமைப்பது ?

உண்மை தான் அச் சகோதரி பேசும் தமிழ் கூட தமிழகத்து தமிழ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சண்டமாருதன் said:

 

 

 

 

அப்படியாங்களோ.. அப்படி என்றால்.. எதற்கு மேற்கு நாடுகளில் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் ஓடி வருகிறீர்கள்.. சினிமாவையும்.. உங்கள் உழுத்துப்போன அரசியலையும் கொண்டு.. இதற்கு என்ன பதில் உண்டு தி மு க.. மற்றும்.. கம்னிஸ்டு முட்டாள்களிடம். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அப்படியாங்களோ.. அப்படி என்றால்.. எதற்கு மேற்கு நாடுகளில் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் ஓடி வருகிறீர்கள்.. சினிமாவையும்.. உங்கள் உழுத்துப்போன அரசியலையும் கொண்டு.. இதற்கு என்ன பதில் உண்டு தி மு க.. மற்றும்.. கம்னிஸ்டு முட்டாள்களிடம். 😊

உண்மையில் இவர்கள் இலங்கைக்கு வருவதே நல்லது. அல்லது கனடா போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இவர்களை  அரசாங்கத்துடன் பேசி குடியமர்த்த முயற்சிக்கலாம். 

எம்மவர்களும் அங்கு செல்கின்றார்களே நெடுக்ஸ். சுபர் ஸ்டார் பாடகர், நடிக/நடிகைக‌ளை கூட்டிவந்து ஆட்டம் போடுதல். இவற்றிற்கு என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2019 at 6:46 PM, ரதி said:

கஸ்டப் படாமல் இந்த உலகத்தில் எதுவும் கிடைக்காது அண்ணா...அப்படி இலகுவாய் எல்லாம் கிடைத்தால் நேர்மையான வழியில் வந்ததாய் இருக்காது 

உண்மை தான் அச் சகோதரி பேசும் தமிழ் கூட தமிழகத்து தமிழ் 

தினாவெட்டுக்காரன்! ஒடிப்போனவையள் திரும்பி வந்திட்டினம் எண்டு ரணகளமே பண்ணிப்போடுவாங்கள்.

இருந்த வீட்டிலையே இருக்கிற சனம் சும்மா விடாது.

Link to comment
Share on other sites

முதலில் இவன் செந்த்தமிழனா அல்லது சுந்தரதெலுங்கனா என் ஆராய வேண்டும்.

ஈழத் தமிழனை அடியோடு வெறுப்பவர்கள் இந்த திராவிட தெலுங்கர் தான்...!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.