Jump to content

கொண்டாட்டம், மரபணு மாற்றப்பட்ட உணவு, எல்லாரும் குருவாண்டி மற்றும் ஆன்மிகம்


Recommended Posts

கொண்டாட்டம்

உயர்வுகளைத் தொடுவது கட்டாயம் என்று பிறந்தநாள் முதல் திணிக்கப்பட்டுவிட்ட நிலையில், நினைவு தெரிந்தவரை ஒட்டம் இருந்து கொண்டேயிருக்கின்றது. அருவரி தொட்டு வெற்றிகளைக் குறிவைத்த முயற்சியும் வெற்றியைக் கொண்டாடுவதும் நடக்கிறது. இருப்பினும், காலப்போக்கில் ஒட்டம் மட்டும் தொடர, வெற்றிகளைக் கொண்டாடுவதற்குத் தெரியாமல் போய் விடுகிறது.

வெற்றிகைளத் கொண்டாடத் தெரியாமல் போவதற்கான அடிப்படைக் காரணம், வெற்றிகளை அடையாளங் காண்பது மறந்துபோகின்றது. ஓட்டம் மட்டும் வாழ்வாகி, ஓட்டம் நிற்காது தொடர்வதற்கான அடிப்படையாக வெற்றி என்பது எதிர்காலத்தில் எங்கோ ஒரு பொழுதில் பிறக்கவிருக்கும் வரைவிலக்கணப்படுத்தப்படாத ஒன்றாகிப்போகின்றது. ஓட்டமே மதமாக மொழியாக மூச்சாக பிணைப்பாக ஆகிக்கொள்கிறது. வெற்றி மறந்து போகிறது. கொண்டாடத் தெரியாமல் போய் விடுகிறது. வெறுமனே ஓட்டந் தொடர்கிறது.

சிறுவயதில் பள்ளியில் படிப்பில் ஏதேனும் சந்தேகமிருப்பின், அப்பா அம்மா ஆசிரியர் ரியூஷன் என்பனவெல்லாம் தாண்டி சந்தேகம் கேட்பதற்குப் பக்கத்தில் இன்னுமொரு மாணவன் இருப்பான். எமக்குப் புரியும் மொழியில் எமது சந்தேகத்தை அந்தச் சகபாடி தீர்த்துவைப்பான். நாம் வளர்ந்து வருகையில், இந்த பொருள்முதல் சமூகத்தில், எப்படியோ அந்தச் சகபாடியினைத் தொலைத்து விடுகின்றோம். எமது சந்தேகங்களைக் கேட்பதற்கு எமையொத்தவர்கள் யாரையும் காணக் கிடைக்காது, எமது சந்தேகங்களை முன்வைப்பதற்கு மொழியின் போதாமையுணர்ந்து, புலம்பெயர் தேசத்தின் வேற்றின வைத்தியரிடம் போன தமிழ் முதியவரைப் போல அனைவரும் ஆகிப்போகின்றோம். பிறரிடம் மட்டுமல்ல, எமக்கே எமது பிரச்சினைகளைப் புரியவைக்க எம்மால் முடிவதில்லை.

எமது பெறுமதி என்று ஒன்று இருந்து, அந்தப் பெறுமதி கைப்படும்போது கொண்டாட்டம் தானாகத் தலைப்படும். ஏதேதோ பெறுமதிகளை எம்முடையதாக நாம் ஒவ்வொரு பொழுதில் நம்பிக்கொள்கின்றபோதும், இது எனது பெறுமதியல்ல என்ற ஒரு மெல்லியகுரல் உள்ளுர எங்கோ முணுமுணுத்துக்கொண்டிருக்க்கிறது. அதனால், அந்நியபெறுமதிகளின் கைப்படல் கொண்டாட்டத்தைப் பிரசவிக்காது நகர்ந்துபோகிறது. காலம் செல்லச் செல்ல, எனது பெறுமதி இதுவல்ல என்ற குரல் மட்டும் இருக்கிறதே அன்றி, எனது பெறுமதி என்ன என்பது என்னால் அறியப்படமுடியாததொன்று என்பது போல் பயப்படுத்துகின்றது.

மரபணு மாற்றப்பட்ட உணவு

எனது பெறுமதி என்ன என்பதை என்னால் அடையாளங்காணமுடியாதபோது, அனைத்தும் பயப்பிடுத்துகின்றன. நான் கடைசியாகக் கொண்டாடிய தருணம் எது என்று மனம் ஆராய்கின்றது. அந்தத் தருணம் என்னால் கொண்டாடப்பட்ட தருணமாய் இருந்ததனால், அந்தத்தருணத்திற்குள் எனது பெறுமதி இருந்திருக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த ஆராய்தல் நடக்கின்றது. ஆனால் அந்தத் தருணம் சார்ந்து இன்றைக்கு என்னிடம் உள்ள பதிவு கொண்டு தான் என்னால் அந்தத் தருணத்தை ஆராய முடியும் என்பதனால், அந்தத் தருணத்தின் பதிவினை சல்லடைபோட்டுத் தேடுகின்றேன். அந்தத் தருணத்தில் நான் உண்ட உணவு, சுவாசித்த காற்று, நுகர்ந்த வாசனைகள், கேட்ட ஒலிகள் என்று அனைத்தும் எனது கவனத்தைப் பெறுகின்றன. அன்றைக்கு நானுண்ட கத்தரிக்காய் மட்டுமல்ல கறிவேப்பிலை கூட எனது பெறுமதியாயிருக்கலாம் என்று மனம் சந்தேகப்படுகிறது.

இந்த அடிப்படையில் தான் மரபணு மாற்றப்பட்ட உணவுகள் மீதான சண்டை ஆரம்பிக்கிறது. இந்தக் கத்தரிக்காய் அந்தக் கத்தரிக்காய் மாதிரியில்லை என்று வெளிப்படைக்குக் கேட்கும் அடம்பிடித்தலில் மறைந்திருந்து கேட்பது எனது பெறுமதியினை எனக்கு மீட்டுத்தாருங்கள் என்ற ஏக்கமே.

மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் தீங்கு உண்டா இல்லையா என்ற வாதத்திற்குள் செல்லவே போவதில்லை. மாறாக, எனது மரபணு நான் பிறந்தபோது இருந்தபடியே இருக்கின்றதா என்ற கேழ்வியினை முன்வைக்கிறேன். CRISPR, ஜீனோம் எடிற்றிங் போன்ற தலைப்புக்களிற்குள் செல்லவேண்டாம். எமது வாழ்க்கைப் பாதையில் நாம் சந்தித்தித் வைரசுகள் முதற்கொண்டு இன்னோரன்ன விடயங்கள் எமது மரபணுக்களை எங்கனம் மாற்றியுள்ளன என்று திட்டவட்டமாக ஒப்பிடல் இன்றைக்கு அனைவரிற்கும் சாத்தியமான ஒன்றல்ல என்றபோதும் மாற்றங்கள் நடக்கின்றன என்பது பொது அறிவு. எயிட்ஸ் போன்ற பரிணமிப்புக்களில் வெளிப்படையாகின்ற மரபணு மாற்றங்கள், சிறிய அளவுகளில் புலப்படாது நடப்பினும் மாற்றம் நடக்கிறது. அது மட்டும் அன்றி, இன்றைக்கு Design Biology என்பது நோய்களிற்கான சிகிக்சையாக மாத்திரைக்குப் பதில் மரபணு மாற்றம் சார்ந்து சிந்தித்துக் கொடிருக்கிறது. கிறிஸ்ப்பர் மட்டுமன்றி வைரசுகளும் எம்முட் சென்று எமது மரபணுவினை மாற்றும் இலக்கிற்காகக ஆராய்ச்சி கூடங்களில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.. எமது வாழ்நாளில் இது சர்வசாhதரணமான விடயமாக வந்துவிடும். 


ஆக, அன்றைக்குக் கத்தரிக்காய் சாப்பிட்ட நானே மரபணு மாற்றப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் எனும் போது, அன்றைக்கு நான் சாப்பிட்ட கத்தரிக்காய் மட்டும் அப்படியே இருந்தால் மட்டும் என்ன லாபம்?

எனவே எனது பெறுமதி என்ன என்பதைக் கடந்தகாலத்தில் தேடுவது பலன்தராது ஏனெனில் நான் அன்றைக்கு இருந்தவனாய் இன்றைக்கு இல்லை.

எல்லாரும் குருவாண்டி

இன்றைய தேதிக்கு சமூகவலைத்தளங்கள் மற்றும் வாழ்வில் அனைவரும் கருத்துக் கூறுவதை மட்டும் விரும்புகிறார்கள். கேட்பது என்பதோ அறிந்துகொள்வது என்பதோ உவப்பான விடயமாக இஇன்றைக்கு இல்லை. எனது பெறுமதி என்ன என்பதே எனக்குத் தெரியவில்லை, எனது குளப்பங்கள் சார்ந்து எங்கு தேடுவது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் கருத்துக்கூறியே ஆகவேண்டும் என்று என்மீது யாரோ திணித்துவிட்ட பிணியில் நான் குருவாகிக் கொண்டிருக்கிறேன்.

Augmented Reality (AR) video game போல உலகு ஆகிப்போய்விட்டது. உண்மை என்பது அவரவர்க்கான பிரத்தியேகமானதே அன்றி அனைவரிற்கும் பொதுவான உண்மை என்று ஏதும் இல்லை என்பதாக உளவியல் மாறிக்கொண்டிருக்கின்றது. அவரவர்க்கு அவர்க்கான உண்மை. பொதுமறை என்று எதையும் எவரும் ஏற்கத் தயாரில்லை. 

எல்லோரும் தன்னைப் பெருப்பித்துக் காட்ட விழைந்து கொண்டிருப்பதால் கேட்பது பாதகம் என்றாகிப்போகிறது. மற்றையவன் பேச நான் கேட்பின் பேசுபவன் பெரியாள் ஆகி விடுவான். எனவே எனது கருத்துக்களை அங்கங்கே நானும் தூவுவது அவசியம். விடயம் புரிகிறதோ இல்லயோ நுனிப்புல்லுகளை நானும் சப்பித் துப்புவது அவசியம் என்பது இன்றைய நிலை. இதனால் அனைவரும் குருவாண்டி. சிஸ்யப் பிள்ளைகள் பற்றாக்குறை. இந்நிலையின் வீச்சு அனைவரும் தமக்காக மட்டும் இருக்கும் ஒரு நிலையினை நோக்கியதாக நகர்கிறது. ஆனால், இயற்கை மனிதனை கொம்பின்றி, நகம் இன்றி, பலம் இன்றி கூட்டத்தில் பலம் பெறுகின்ற சமூக விலங்காகப் படைத்திருக்கிறது. அதனால், எங்கும் பெருங்குளப்பம்.

ஆன்மிகம்

சரியை கிரியை யோகம் ஞானம் என்று வந்தால் என்ன,  சத் சித் ஆனந்தம் என்று கொண்டால் என்ன, பதி பசு பாசம் என்றால் என்ன, தத் துவம் அசி என்று கேட்டு அதன் வழி அகம் பிரம்மாஸ்மி என்று கொண்டால் என்ன முடிவில் விடுதலை பெறுவதற்கு ஞானம் அவசியம் என்பதாய் ஒரு பொதுமை காணப்படுவதாய்த் தோன்றினும், போதகர்கள் முரண்டு பிடிக்கிறார்கள்.

அத்வைதம் சைவ சித்தாந்தத்தைப் புறக்கணிக்க, சித்தர்கள் பிரம்மத்தைப் புறக்கணிக்க, சாமியார்கள் சட்ட ஒழுங்கைப் புறக்கணிக்க என்று எங்கும் மோதல். எல்லோரும் குருவாண்டி. குளப்பம் பிரவாகம். எல்லாவற்றிலும் சந்தேகம் தெளிவு எங்குமில்லை, கொண்டாட்டம் வரண்ட வாழ்வில் ஓட்டம் மட்டும் இதயத்துடிப்பு.

முடிவு

ஒரு சமயப் பேச்சாளர் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பிரபல ஆலயத்தின் உற்சவத்தில் பேசுவதற்காக, பேருந்தில் செல்வதற்காகப் பேருந்து நிலையம் சென்றாராம். பேருந்து நிலையம் பக்த்தகோடிகளால் நிரம்பி வழிய, பேருந்தில் ஏறுவது அசாத்தியமாய் இருந்ததாம். கசங்கிப் போன மேலாடையோடு தனது கடைசி முயற்சியும் பயனிழந்து, வியர்வைப் பெருக்கோடு அவர் கூட்டத்தில் இருந்து விலக முயல்கையில், இளைத்த உடலுடன் இரு முதியவர்கள் இவரை மறித்து அந்தப் பேருந்து குறித்த ஆலயத்திற்கா செல்கிறது எனக் கேட்டார்களாம். இவர், ஆம் அது அங்கு தான் செல்கிறது, ஆனால் கூட்டம் அலைமோதுகிறது, என்னால் கூட ஏற முடியவில்லை, நீங்கள் ஏற மாட்டீர்கள் என்றாராம். அதற்கு அந்த முதியவர்கள், ஏறுவதை விடுங்கள் அந்தப் பேருந்து அந்த ஆலயத்திற்குத் தான் செல்கிறது என்பது உங்களிற்கு உறுதியாகத் தெரியுமா எனக் கேட்டார்களாம். இவர், ஆமாம் என்று கூறி விட்டு நகர்ந்து வந்து வாடகைக்கு ஒரு கார் எடுத்துக் கொண்டு நிகழ்விற்குப் பேசச் சென்றாராம்.

நிகழ்வு மேடையில் ஏறிய பேச்சாளரால் ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லையாம். ஏனெனில் மண்டபத்தில் முன் வரிசை ஆசனத்தில் அந்த முதியவர்கள் அமர்ந்திருந்தார்களாம். பேசி முடித்ததும் அவர்களிடம் சென்று எப்படி வந்தீர்கள் என இவர் வினவ, அவர்கள் தாங்கள் அதே பஸ்சில் தான் வந்ததாகச் சொன்னார்களாம். நம்ப முடியாத இவர், எப்படி ஏறினீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்களாம்: பஸ் சரியான இடத்திற்குச் செல்கிறது என்பதை அறிந்தபின்னர் கூட்டத்துள் நின்று கொண்டோம். கூட்ட அலை எம்மை பேருந்துள் தானாகத் திணித்தது, பின்னர், பேருந்து கோவில் அருகில் நின்றதும், மறுபடி அனைவரும் அங்கே இறங்கியதால் மறுபடி அந்த அலை எம்மையும் பேருந்தில் இருந்து வெளியே துப்பிவிட்டது என்றனாராம்.


ஒட்டம் என்பது சக்த்தி வேண்டுவது. ஓடுவதற்கான சக்தியினைத் தக்க வைப்பதற்கு உடல் மட்டும் ஒத்துழைத்து ஒரு பலனும் இல்லை. உளம் உடன்படா ஓட்டம் அவசியம் மூச்சிரைக்கப் பண்ணும். எமது ஓட்டங்கள் எமக்கு அன்னியமானவையாக உளம் ஒவ்வாதனவாக உருக்குலைக்கும் படி இருக்கும் வகை மூச்சிரைத்தல் தவிர்க்க முடியாதது. 

அன்னிய பெறுமதிகளின் நிமித்தம் புரியாத ஓட்டத்தை மூச்சிரைக்கத் தொடர்வதற்குப் பதில், உள்ளுரக் கேட்கும் மெல்லிய குரலின் திசையறிவிப்பில் சென்று எமக்கான அலையினைத் தேடிக்கண்டடைந்து, கையைத் தூக்கிக் கொண்டு அலை எம்மை இழுத்துச் செல்ல அனுமத்தித்தல் வினைத்திறன் மிக்கது.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டது மகிழ்ச்சி இன்னுமொருவன். Random musing போல தெரிகிறது, ஆனாலும் சம காலத்தில் மற்றைய திரிகளில் எரியும் தீயின் வாசனையும் சாடையாக அடிக்கிறது. எனக்கு விளங்கிய இரு பகுதிகளில் மட்டும் என் கருத்துகள் இவை:

1. மரபணு மாற்றம்: நீங்கள் குறிப்பிட்ட எல்லா மாற்றங்களும் வைரசுகளால், இரட்டிப்பாகும் ஜீன்களால் அல்லது நிரவிக் கிடக்கும் junk DNA இனுள் ஒளிந்திருக்கும் வேறு கட்டுப் படுத்திகளால் காலங்காலமாய் நடந்து வருகின்றன. அதை விட எங்கள் சூழல், பதற்ற வாழ்வு, மாசுக்கள், உணவு இவை மூலம் epigenetic ஆகவும் இவை நடக்கின்றன. இதுவே கூர்ப்பின் ஒரு பாதையாக இருக்கிறது. எமது கட்டுப் பாட்டில் இல்லை!

2. எல்லாரும் குருவாண்டி: ஆகலாம், ஒரு தவறுமில்லை! ஆனால் தொடர்ந்து மாணவனாக இருப்பவனே/ளே சில நாட்களாவது குருவாண்டி யாக இருக்க முடியும். இந்தச் செயன் முறை பிழைத்தது, மாணவனாக இருக்காமலே குருவாண்டியாக இருக்கப் பெரும்பாலோர் முயலும் நிலையினால்! மாணவனாக இருக்கும் ஆர்வம் குறைந்து போகக் காரணம் துரித உணவு போல சத்தற்ற (சில சமயம் தீங்கான) ஆனால் உடன் கிடைக்கும் இணைய மூலத் தகவலால், "உசாத்துணை' (reference) என்பதன் அர்த்தமே தெரியாமல் பயனர்கள் இருக்கிறார்கள். ஒரு தகவலைக் கேட்கவும், பார்க்கவும் மட்டுமே விரும்பும், ஆனால் புத்தகத்தில் வாசித்து விளங்கும் பொறுமையின்மை, நேரமின்மை என்பன இந்த நிலைக்குக் காரணம். இப்படி இருப்பது கிரிமினல் குற்றமல்ல! ஆனால், இந்தத் தேடல் துறந்த அலட்சியத்தை இன்னொருவர் மீது தீர்ப்பிட அடிப்படையாகப் பாவிப்பது குற்றம்! இது எமது கட்டுப்பாட்டிலேயெ உள்ளது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரபணு மாற்றம் என்பது.. இயற்கையாகவே நிகழ்கிற ஒன்றுதான். ஆனால்.. அதனை மனிதன் மாற்றி அமைக்கிற போது நிகழும் மாற்றங்களின் குறுகிய கால நலனை வைச்சுக் கொண்டு நீண்ட கால விளைவுகளை தீர்மானிப்பது என்பது கடினம் என்ற அடிப்படையில்.. பிரித்தானியாவில் மரபணு மாற்றம் என்பது மிகவும் கட்டுப்பாட்டின் கீழ் தான் நிகழ்த்தப்படுகிறது. அதிலும்.. மனித முளைய மரபணு மாற்ற விளையாட்டுக்கள்.. முளைய ஆரம்ப நிலைக்கு அப்பால்.. நகர்த்தப்பட அனுமதியில்லை. 

மரபணு மாற்ற விளையாட்டு என்பது.. கண்ணைக் கட்டி நிகழ்த்தப்படும்.. யுத்தம் போன்றது. அழிவு சேதாரம் நிச்சயம் உண்டு.. நன்மைக்கும் அப்பால். 🤣

Link to comment
Share on other sites

16 hours ago, Innumoruvan said:

எமது பெறுமதி என்று ஒன்று இருந்து, அந்தப் பெறுமதி கைப்படும்போது கொண்டாட்டம் தானாகத் தலைப்படும். ஏதேதோ பெறுமதிகளை எம்முடையதாக நாம் ஒவ்வொரு பொழுதில் நம்பிக்கொள்கின்றபோதும், இது எனது பெறுமதியல்ல என்ற ஒரு மெல்லியகுரல் உள்ளுர எங்கோ முணுமுணுத்துக்கொண்டிருக்க்கிறது. அதனால், அந்நியபெறுமதிகளின் கைப்படல் கொண்டாட்டத்தைப் பிரசவிக்காது நகர்ந்துபோகிறது. காலம் செல்லச் செல்ல, எனது பெறுமதி இதுவல்ல என்ற குரல் மட்டும் இருக்கிறதே அன்றி, எனது பெறுமதி என்ன என்பது என்னால் அறியப்படமுடியாததொன்று என்பது போல் பயப்படுத்துகின்றது

உண்மையில் அறிய முடியாததொன்று தான். இதற்கு பல தரப்பில் இருந்து காரணங்களை ஒவ்வொருவரும் உணர முடியும். மீனுக்கு தண்ணீரில் பலம் போல் யானைக்கு காட்டில் பலம்போல் பெறுமதியை உணர்வதற்கு தாயகம் ஒன்றையே மனம் அதரமாக உணர்கின்றது ஆனால் பேரினவாதத்திற்கு அடிமைப்பட்ட தேசத்தில் எமது பெறுமதி இங்கிருப்பதை விட மோசமானநிலையில் இருக்கும். வாழ்க்கை வெளிச்சத்தை நோக்கி நகர்கின்றதா இல்லை சூனியத்தை நோக்கி நகர்கின்றதா என்பதற்கு விடையின்றியே முடிகின்றது. உங்கள் பின் பந்திக்கு முன்பந்தியில் பதில் இருப்பது போலும் உள்ளது. 

 

16 hours ago, Innumoruvan said:

புலம்பெயர் தேசத்தின் வேற்றின வைத்தியரிடம் போன தமிழ் முதியவரைப் போல அனைவரும் ஆகிப்போகின்றோம். பிறரிடம் மட்டுமல்ல, எமக்கே எமது பிரச்சினைகளைப் புரியவைக்க எம்மால் முடிவதில்லை.

உங்கள் முதல் பந்தியின் கொண்டாட்டம் குறித்து பார்க்கையில், கொண்டாடத் தெரியாதவனா இல்லை இங்கு வெற்றியின் கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது வேறெங்கோ அல்லது வேறெதிலோ தோற்கின்றேன் என்று உணர்வு மேலோங்குகின்றதா என்ற தர்ம சங்கடத்தில் காலம் கரைகின்றது. 

அறிதலே கடந்து செல்லுதல்" பல வருடங்களுக்கு முன்னர் படித்த பழமொழி பலதையும் அறிந்துகொள்ளவும் வாசிக்கவும் பெருந்தூண்டுதலாக இருந்தது. இன்றைய காலத்தில் இந்த தூண்டுதல் ஒரு ஐயத்தை தோற்றுவிப்பது போலும் உள்ளது.. 

வழக்கம் போல சிந்தனையை தூண்டும் உங்கள பதிவிற்கு நன்றி. உங்களை கண்டதிலும் மகிழ்ச்சி. 

 

Link to comment
Share on other sites

நன்றி ஜஸ்ரின், நுணாவிலான், புங்கையூரான், நெடுக்காலபோவன் மற்றும் சண்டமாருதன், உங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும்.

ஏறத்தாள எனது 2018ன் இரைமீட்பாகத் தான் இதைப் பதிவிட்டேன். உங்கள் கருத்திற்கான பின்னூட்டத்திற்குச் செல்வதற்கு முன்னர் இப்பதிவிற்கான ஒரு கொன்ரெக்ஸ்ற்றைச் சுருக்கமாக ஒரு பந்தியில் கூறிவிட்டு நகர்கிறேன்.

2018ல் நான் ஒரு புத்தகம் தன்னும் வாசிக்கவில்லை—சித்தர்கள் சொன்ன "சாத்திரம் எரி" என்ற ரீதியில் அல்ல, மாறாக, புத்தகங்கள் கிழர்ச்சி தரவில்லை ஒரே மாவு வேறுவேறு பரிமாணத்தில் அரைக்கப்படுவதாய்த் தோன்றியதால் ஆர்வம் போய்விட்டது. ஒரு conference தன்னும் செல்லவில்லை. செய்திகளை, குறிப்பாக அரசியல், முற்றாகத் தவிர்த்திருந்தேன்—மிக முக்கிய அதுவும் என்னை நேரடியாகப் பாதிக்கும் செய்திகளை மட்டும் செவிவழியாக பிறர்மூலம் அறிந்ததைத் தவிர எந்தச் செய்தியையும் படிக்கவில்லை. இது தானாக நடக்கவில்லை, நானாகத் திட்டமிட்டுத் தவிர்த்திருந்தேன். வேலையில் மட்டும் வேலையோடு நேரடித் தொடர்புபட்ட தவிர்க்கமுடியாத அறிதல்கள் இருந்தன. வேலை உச்சவேகத்தில் நகர்ந்தது. வேலை உச்ச வேகத்தில் நிகழ்ந்ததால், அது சார்ந்த விளைவுகளும் புது உயரங்களைத் தொடப்பட்டபோதும் ஒரு துளி கொண்டாட்டமும் உள்ளுரப் பிறக்கவில்லை. ஏறத்தாள 600 மணிநேரம் ஏழு உபநிடதங்களைப் podcast வழியாகக் கேட்டுச் சிந்தித்திருந்தேன். பலநூறு மணிநேரம் அமைதியாய் உட்கார்ந்திருப்பதற்கு ஒதுக்கியிருந்தேன். ஒரு மாதம் பிற நாடுகளிற்குப் பயணித்திருந்தேன். மற்றும் இதர வழமையன வாழ்வு நிகழ்ந்தது. வருடத்தின் நகர்வில் ஏதேதோ பெருந்தெளிவுகள் கிடைத்ததாய்த்த தோன்றினும் முடிவில் சொல்லும்படியான எந்தப் பெருந்தெளிவும் அடையப்பட்டதாய்த் தெரியவில்லை. இந்த வகையில் தான் மேற்படி பதிவு...

ஜஸ்ரின்:

எல்லாரும் குருவாண்டி என்பதனை academics ரீதியிலோ, அல்லது ஆராய்ச்சி மற்றும் உசாத்துணை என்ற அடிப்படையிலோ கூறவில்லை. நாளாந்த வாழ்வு சார்ந்து அதைக் குறிப்பிட்டிருந்தேன். உதாரணமாக, இன்றைய தேதிக்கு ஏதாவது விருந்துபசாரங்களிற்குச் செல்லின், அதாவது தொழில் சாரா உறவினர் போன்ற சந்திப்புகளிற்குச் சென்றால், புவி வெப்பமடைதல், quantum physics, மரபணு மாற்றப்பட்ட உணவு, இஸ்லாம், அமெரிக்க கறுப்பினம், artificial intelligence, பல்கலைக்களகம், stock market, ஆன்மீகம், Trump என ஏறத்தாள ஒரு பத்துப் பதினைந்து தலைப்புக்கள் அனைவராலும் பேசப்படுகின்றன. அனேகமாக கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் மேற்படி அனைத்துத் தலைப்பிலும் பேசக்கூடியவர்களாக வெளிப்படுகிறார்கள். ஒவ்வொரு தலைப்பிலும் முனைவராகி ஆராய்ச்சி பண்ணித் தான் ஒன்றைப் பேசவேண்டும் என்ற அடாவடி மனநிலை எனக்குக் கிஞ்சித்தும் இல்லை. இன்னமும் சொல்லவதானால் பட்டம் மற்றும் படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் தொலைந்துகொண்டிருப்பதாகவே பலகாலமாக உணருகிறேன். நான் சொல்ல வருவது, மேற்படி உரையாடல்கள அனைத்தும் sound bitesசாக மட்டுமே இருக்கின்றனவே அன்றி ஒரு மில்லி மீற்றர் ஆழத்தில் தன்னும் அவை பற்றிச் சிந்திக் எவரும் தயாராயில்லை. அதே நேரம் மேற்படி தலைப்புக்களில் உள்ள அனைத்தும் அறிந்து முடிவெடுப்பதாக ஒரு வலிந்துருவாக்கப்பட்ட அமைதி அவர்களில் காணப்படுகிறது. இன்னமும் சொல்வதானால் மேற்படி தலைப்புகள் பற்றி அறிந்து தான் வாழ்வு நகர வேண்டும் என்ற ஒரு அவதானமும், அவ்வவதானம் திருப்த்திப்படுத்தப்பட்டதான அமைதியும் தெரிகிறது. இது மிகச் சுவரசியமான ஒரு அவதானிப்பாக எனக்குப் பட்டது.

எனக்கு எந்தக் கட்சி அரசியலிலும் உடன்பாடில்லை நான் எந்தக் கட்சியினையும் சேர்ந்தவனும் இல்லை. ஆனால், நான் அவதானித்தவரை, மேற்பந்தியில் நான் குறிப்பிட்ட சந்தைக்கு அவசியமான mind programming, நான் அவதானித்தவரை பழமைவாத (Conservative) அரசியல் பிரச்சாரங்கள் வழி வந்தே பலரைச் சேர்வதாகத் தோன்றுகிறது. அதாவது, பழமைவாத அரசியல் சார்பு பணம்சேர்ப்பதற்கு அனுகூலம் என்ற பரவலான கருத்தின் வாயிலாக மேற்படி கட்சிநிலை எடுக்கும் பலர் காலப்போக்கில் முற்றாகச் சிக்கிக் கொள்கிறார்கள். ஏறத்தாள ஒரு cult போல் இது ஆகிப்போகிறது. 

ஜோடன் பீற்றசன் பிரபலமாவதற்கு முன்னர், ஏறத்தாள 2006ம் ஆண்டளவில் இங்குள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவ்வப்போது அவர் தோன்றுவது வாயிலாக அறிந்திருந்தேன். மிகுந்த பிரமிப்பு மிக்க ஆழுமையாக அப்போது அவர் இருந்தார். தற்போது அவர் ஒரு பிறாண்ட் ஆனதும் அந்த ஆள் தானா இது என நினைக்கும் வகை பல மாற்றங்கள் பாதமான முனையில் எனக்குத் தென்படுகின்றன. ஆனால் இன்றையத் தேதிக்கு ஜோடன் பீற்றசன் எதிர் சாம் ஹரிஸ், அல்லது ஜோடன் பீற்றசன் சக பென் சப்பீரோ அல்லது ஜோ றோஜன் நிகழ்ச்சி போன்ற குறிப்பிட்ட ஒரு சில வாய்க்கால்கள் வழி வரும் துளித் தண்ணி போதும் என்றாகிக் கொண்டிருக்கின்றது. யாரைக் கேட்டாலும் நான் ஒரு சமூக லிபரல் பொருளாதார பழமைவாதி (Socially Liberal Fiscal conservative: more of a Libertarian) என்பதை ஒரு அந்தஸ்த்து statement ராக வைக்கிறார்கள், ஆனால் சமூகம் சார்ந்த உங்கள் லிபரல் நிலை பற்றிக் கூறுங்கள் என்றால் Gay Rights என்பதற்கப்பால் அவர்களால் செல்ல முடிவதில்லை. இதை எந்த வகையிலும் எவர் மீதான அவமரியாதையாகவோ, judgementஆகவோ  நான் முன்வைக்கவில்லை. மாறாக, இவை தான் நான் எனது பதிவில் குறிப்பிட்ட சகபாடிகளை நாம் தொலைத்ததற்கான காரணிகள் என்கின்றேன். இதனால்த் தான் நாம் தனிமையினை உணருகின்றோம். சந்தை ஒரு வைறஸ் போன்று ஆகி மூளையினைக் கழுவிக்கொண்டிருக்கிறது. நோய் முற்றாகப் பாதித்தவர்கள் zombieகள் போன்று உணர்வு மறந்து, வாய் திறந்து ஓடிக்கொண்டிருக்க, நோய் பாதிக்காதவர்கள் மேலும் மேலும் தனிமையினை உணருகிறோம் என்பது மட்டுமே மேற்படி கருத்து.

நெடுக்காலபோவான்:

மரபணு மாற்றங்கள் சார்ந்து நீங்கள் முன்வைக்கும் கருத்தை நான் மறுதலிக்கவில்லை. இன்றைக்கு எலியைப் பிடித்து lyme disease பரப்பா வகை மரபணு மாற்றிக் காட்டில் விடுவதில் இருந்து, நுளம்பை மாற்றுவதில் இருந்து ஏதேதோ மாற்றங்களை மனிதன் துரித கதியில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். நாய் மற்றும் தாவரங்கள் தொட்டு தோந்தெடுத்த தெரிவு மூலம்  இனப்பெருக்கம் என்பதன் வாயிலாக மட்டும் மரபணு தேர்வை முன்னர் நகர்த்திய மனிதன் இன்று ஜீன் எடிற்றிங்கை உடுப்புத் தைப்பது போல் அணுகுகின்றான். இது வெறும் ஆரம்பம். MicroSoft Windows வரும்வரை கொம்பியூட்டர் utilityயாகவில்லை, இப்போ எப்படி என்பது சொல்லத் தேவையில்லை. எந்தத் தொழில் நுட்டபமும் அப்படித்த தான்: மலைப்பு, இருந்தால் நல்லம், அவசியம், சர்வசாதாரண கருவி என்ற நான்கு நிலை கடக்கும். தற்போது எத்தனையோ தொழில் நுட்பங்கள் தத்தமது அச்சில் சர்வசாதாரண கருவி நிலையினை ஒரே நேரத்தில் அடைந்திருப்பதனால், இவற்றைத் தொகுத்து மனிதன் முன்னெப்போதும் இருந்திரா கதியில் விளையாடுகிறான். 

விஞ்ஞானம் ஆய்வுகூடங்களை விட்டு வெளியேறிவிட்டது. நான் மேலே குறிப்பிட்டது போல ஜீன் எடிற்றிங் kitறினை நீங்கள் தபால் வழி இன்று பெற்றுக் கொள்ள முடியும். மைக்றோசொப்ற் வின்டோஸ் வந்து கொப்பியூட்டர் எப்படி வெறும் கருவியானதோ அது போன்று தொழில் நுட்டபம் அனைத்து முனையிலும் எங்கள் வாழ்நாளில் இதை சர்வசாதாரணம் ஆக்கும். சட்டம் போட்டு மரபணு மாற்றம் தடுக்க முடியாது. அவனவன் garageசில் வச்சு எலியை மட்டுமல்ல குழந்தைகளையும் மாற்றிக் கொண்டிருப்பான். மாறுகின்ற உலகம் சார்ந்து எந்த அரசியல் அங்கமும் பூரண தெளிவோடு இல்லை. சுனாமிக்குத் தடுப்பு மதில் சாத்தியமில்லை. experts என்பவர்கள் பங்கு பூம்பனி போன்று மறைந்து கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட மாற்றங்கள் மேலும் மாற்றங்களிற்கான momentumதை அதிகரித்தபடி இருக்கின்றன. இந்த முனையில் உங்கள் எச்சரிக்கையினை நான் கிஞ்சித்தும் மறுக்கவில்லை. 

ஆனால், ஒரு கணம் இப்படி ஜோசிப்போம். 2 பில்லியன் ஆண்டுகளாக நீலப்பச்சைப் பாசி நிகழ்த்திய சூழல் மாற்றம் Ozoneனை உருவாக்கி மனிதனை உருவாக்கியது. மனிதன், அனைத்து உயிரனத்தையும் போல, தன்னைத் தக்கவைப்பதை மட்டுமே கருத்தாய்க் கொண்டு, உலகம் தன்னைச் சுற்றி மட்டும் சுழல்வதாய் பூமி மையமாக மனத்தை வைத்துக்கொண்டிருக்கிறான். இன்றைய தேதிக்கு மனிதன் அறிந்த மிகப்பெரும் அறிவாளி மனிதன் என்பதனால், கூர்ப்பின் உச்சம் மனிதனோடு நிற்கவேண்டியதில்லையே. மனிதன் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போதல் என்பது மனிதனின் காதுகளில் நாராசமாய்த் தான் பாயும். ஆனால், யார் கண்டார், நாளைய உலகு மனிதனை நீலப்பச்சைப் பாசி அளவிற்குச் சிறுப்பிக்கலாம். இவை சார்ந்து பயமோ கவலையோ என்னைப் பொறுத்தவரை அவசியமற்றது. மாற்றமொன்றே மாற்றமற்றது. என்ன தொழில்நுட்பம் என்ற காரணி சார்ந்து மாற்றம் நாம் எவரும் உள்வாங்கா நம்மால் கிரகிக்க முடியா கதியில் நடக்கும் என்பது புதுமை.

சுகன்:
உங்கள் கருத்துகளிற்கு நன்றி. தாயகம் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பாகங்களும் ஒரே மாதிரித் தான் இனை;றைக்கு ஆகிக் கொண்டிருக்கின்றன. இதற்கு பேரினவாதம் மட்டும் காரணியல்ல. சந்தை நுகர்வோரை மண்டை கழுவுவதை அத்தியாவசியம் என்று கருதுகிறது. ஐன்ஸ்ரைன் குறிப்பிட்டதைப் போல, பிரச்சினையினை உருவாக்கிய மனநிலையில் இருந்து தீர்வு அசாத்தியம். என்னைப் பொறுத்தவரை இன்றைக்கு முன்னால் இருக்கும் ஒரே தெரிவு அலையில் மிதந்து செல்வது மட்டுமே. இதை gloomyயாகப் பாhக்கவேண்டும் என்பதில்லை. ஆன்மிக ரீதியில் நோக்கினும், அறிவு ரீதியில் நோக்கினும் மிதந்து செல்லகையில் புதிய கோணங்கள் கைப்படும்.

அனைவரையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

On 12/29/2018 at 11:07 AM, Innumoruvan said:

கொண்டாட்டம்

உயர்வுகளைத் தொடுவது கட்டாயம் என்று பிறந்தநாள் முதல் திணிக்கப்பட்டுவிட்ட நிலையில், நினைவு தெரிந்தவரை ஒட்டம் இருந்து கொண்டேயிருக்கின்றது. அருவரி தொட்டு வெற்றிகளைக் குறிவைத்த முயற்சியும் வெற்றியைக் கொண்டாடுவதும் நடக்கிறது. இருப்பினும், காலப்போக்கில் ஒட்டம் மட்டும் தொடர, வெற்றிகளைக் கொண்டாடுவதற்குத் தெரியாமல் போய் விடுகிறது.

வெற்றிகைளத் கொண்டாடத் தெரியாமல் போவதற்கான அடிப்படைக் காரணம், வெற்றிகளை அடையாளங் காண்பது மறந்துபோகின்றது. ஓட்டம் மட்டும் வாழ்வாகி, ஓட்டம் நிற்காது தொடர்வதற்கான அடிப்படையாக வெற்றி என்பது எதிர்காலத்தில் எங்கோ ஒரு பொழுதில் பிறக்கவிருக்கும் வரைவிலக்கணப்படுத்தப்படாத ஒன்றாகிப்போகின்றது. ஓட்டமே மதமாக மொழியாக மூச்சாக பிணைப்பாக ஆகிக்கொள்கிறது. வெற்றி மறந்து போகிறது. கொண்டாடத் தெரியாமல் போய் விடுகிறது. வெறுமனே ஓட்டந் தொடர்கிறது.

 

சின்ன சின்ன விடயங்களுக்கு கூட பெரு மகிழ்ச்சியையும் வெடிச் சிரிப்பையும் கொள்ளக் கூடிய மனநிலையில் அனேகமானவற்றை நான் அணுகுவதால் எனக்கு சிறு வெற்றி கூட கொண்டாட்ட மன நிலையையே உருவாக்கி வைத்துள்ளது. உயர்வுகளை தொடுவது தான் வாழ்க்கையின் வெற்றி என்ற சூத்திரத்துக்குள் இருந்து விடுபட்டு சீரான வேகத்துடன் நகரும் வேலை செய்யும் முறையை தெரிந்தெடுத்து இருப்பதால் (No promotions at work unless I choose) வெற்றி தோல்வி என்ற அடிப்படையில் மனதை மகிழ்சிக்குள் வைத்திருக்க முடிகின்றது என்னால். இது வேலை தொடர்பானது மட்டுமல்ல, அனேகமான விடயங்களிலும் அவ்வாறு தான் நான் இருக்கின்றேன்.

எனவே என் இந்த மன நிலையில் இருந்து நீங்கள் மேற் சொன்ன விடயத்தை என்னால் உணர முடியவில்லை. கொஞ்சம் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட மனனிலை ஒன்றினூடாக எழுதப்பட்ட பதிவாகவே என் மனம் உணர்கின்றது.

Quote

எமது பெறுமதி என்று ஒன்று இருந்து, அந்தப் பெறுமதி கைப்படும்போது கொண்டாட்டம் தானாகத் தலைப்படும். ஏதேதோ பெறுமதிகளை எம்முடையதாக நாம் ஒவ்வொரு பொழுதில் நம்பிக்கொள்கின்றபோதும், இது எனது பெறுமதியல்ல என்ற ஒரு மெல்லியகுரல் உள்ளுர எங்கோ முணுமுணுத்துக்கொண்டிருக்க்கிறது. அதனால், அந்நியபெறுமதிகளின் கைப்படல் கொண்டாட்டத்தைப் பிரசவிக்காது நகர்ந்துபோகிறது. காலம் செல்லச் செல்ல, எனது பெறுமதி இதுவல்ல என்ற குரல் மட்டும் இருக்கிறதே அன்றி, எனது பெறுமதி என்ன என்பது என்னால் அறியப்படமுடியாததொன்று என்பது போல் பயப்படுத்துகின்றது.

எம் பெறுமதி ஒன்று இருந்தது என்பதனூடாக தாயக விடுதலை போரையும் அதன் தோல்வியினையுமா குறிப்பிடுகின்றீர்கள்?  நாடற்றவர்களிற்கு பெறுமதி என்பது இல்லையா? ஒரு சிறு முதலீடு கூட இல்லாமல் பல மடங்கு கடனுடன் வந்து இன்று வெற்றியீட்டும் ஒரு இனமாக பல நாடுகளில் முன்னேறிக்கொண்டு இருக்கும் தமிழர்கள் அடையும் முன்னேற்றம் நாடற்றவர்கள் என்பதனால் மட்டும் பெறுமதியல்லதாகி விடுமா?

 

 

 

On 12/29/2018 at 11:07 AM, Innumoruvan said:

மரபணு மாற்றப்பட்ட உணவு

எனது பெறுமதி என்ன என்பதை என்னால் அடையாளங்காணமுடியாதபோது, அனைத்தும் பயப்பிடுத்துகின்றன. நான் கடைசியாகக் கொண்டாடிய தருணம் எது என்று மனம் ஆராய்கின்றது. அந்தத் தருணம் என்னால் கொண்டாடப்பட்ட தருணமாய் இருந்ததனால், அந்தத்தருணத்திற்குள் எனது பெறுமதி இருந்திருக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த ஆராய்தல் நடக்கின்றது. ஆனால் அந்தத் தருணம் சார்ந்து இன்றைக்கு என்னிடம் உள்ள பதிவு கொண்டு தான் என்னால் அந்தத் தருணத்தை ஆராய முடியும் என்பதனால், அந்தத் தருணத்தின் பதிவினை சல்லடைபோட்டுத் தேடுகின்றேன். அந்தத் தருணத்தில் நான் உண்ட உணவு, சுவாசித்த காற்று, நுகர்ந்த வாசனைகள், கேட்ட ஒலிகள் என்று அனைத்தும் எனது கவனத்தைப் பெறுகின்றன. அன்றைக்கு நானுண்ட கத்தரிக்காய் மட்டுமல்ல கறிவேப்பிலை கூட எனது பெறுமதியாயிருக்கலாம் என்று மனம் சந்தேகப்படுகிறது.

இந்த அடிப்படையில் தான் மரபணு மாற்றப்பட்ட உணவுகள் மீதான சண்டை ஆரம்பிக்கிறது. இந்தக் கத்தரிக்காய் அந்தக் கத்தரிக்காய் மாதிரியில்லை என்று வெளிப்படைக்குக் கேட்கும் அடம்பிடித்தலில் மறைந்திருந்து கேட்பது எனது பெறுமதியினை எனக்கு மீட்டுத்தாருங்கள் என்ற ஏக்கமே.

மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் தீங்கு உண்டா இல்லையா என்ற வாதத்திற்குள் செல்லவே போவதில்லை. மாறாக, எனது மரபணு நான் பிறந்தபோது இருந்தபடியே இருக்கின்றதா என்ற கேழ்வியினை முன்வைக்கிறேன். CRISPR, ஜீனோம் எடிற்றிங் போன்ற தலைப்புக்களிற்குள் செல்லவேண்டாம். எமது வாழ்க்கைப் பாதையில் நாம் சந்தித்தித் வைரசுகள் முதற்கொண்டு இன்னோரன்ன விடயங்கள் எமது மரபணுக்களை எங்கனம் மாற்றியுள்ளன என்று திட்டவட்டமாக ஒப்பிடல் இன்றைக்கு அனைவரிற்கும் சாத்தியமான ஒன்றல்ல என்றபோதும் மாற்றங்கள் நடக்கின்றன என்பது பொது அறிவு. எயிட்ஸ் போன்ற பரிணமிப்புக்களில் வெளிப்படையாகின்ற மரபணு மாற்றங்கள், சிறிய அளவுகளில் புலப்படாது நடப்பினும் மாற்றம் நடக்கிறது. அது மட்டும் அன்றி, இன்றைக்கு Design Biology என்பது நோய்களிற்கான சிகிக்சையாக மாத்திரைக்குப் பதில் மரபணு மாற்றம் சார்ந்து சிந்தித்துக் கொடிருக்கிறது. கிறிஸ்ப்பர் மட்டுமன்றி வைரசுகளும் எம்முட் சென்று எமது மரபணுவினை மாற்றும் இலக்கிற்காகக ஆராய்ச்சி கூடங்களில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.. எமது வாழ்நாளில் இது சர்வசாhதரணமான விடயமாக வந்துவிடும். 


ஆக, அன்றைக்குக் கத்தரிக்காய் சாப்பிட்ட நானே மரபணு மாற்றப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் எனும் போது, அன்றைக்கு நான் சாப்பிட்ட கத்தரிக்காய் மட்டும் அப்படியே இருந்தால் மட்டும் என்ன லாபம்?

எனவே எனது பெறுமதி என்ன என்பதைக் கடந்தகாலத்தில் தேடுவது பலன்தராது ஏனெனில் நான் அன்றைக்கு இருந்தவனாய் இன்றைக்கு இல்லை.

 

 

மரபணு மாற்றம் என்பது வைரசுகளாலும் எமக்குள் நிகழ்த்தப்படுகின்றது என்பதை உங்கள்து பதிவின் மூலமும் ஜஸ்ரினின் பதிலின் மூலமும் இன்றுதான்  அறிந்து கொண்டேன். உங்களிருவருக்கும் நன்றிகள்

கடந்தகாலம் ஒன்றிற்கு போய் எம் பெறுமதிகளை தேடக் கூடாது என்பது சரி; ஆனால் அதை கடந்து வந்து நிற்கும் நிகழ்காலத்திலும் கண்டு பிடிக்க முடியாமைக்கு வரண்டு போன எதிலும் திருப்தி கொள்ளாது விதண்டாவாதம் செய்யும் ஒரு மனநிலைதான் காரணம் என நம்புகின்றேன். இப்படியான மனனிலையில் இங்கு எம் தமிழர்கள் பலரிலும் காண்கின்றேன். எதற்கெடுத்தாலும் ஊரில் இருப்பதை / இருந்ததை ஒப்பிட்டு இங்குள்ள / இன்று வாழும் வாழ்வை விரக்தியாக பார்க்கும் மனனிலை.

 

On 12/29/2018 at 11:07 AM, Innumoruvan said:

எல்லாரும் குருவாண்டி

இன்றைய தேதிக்கு சமூகவலைத்தளங்கள் மற்றும் வாழ்வில் அனைவரும் கருத்துக் கூறுவதை மட்டும் விரும்புகிறார்கள். கேட்பது என்பதோ அறிந்துகொள்வது என்பதோ உவப்பான விடயமாக இஇன்றைக்கு இல்லை. எனது பெறுமதி என்ன என்பதே எனக்குத் தெரியவில்லை, எனது குளப்பங்கள் சார்ந்து எங்கு தேடுவது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் கருத்துக்கூறியே ஆகவேண்டும் என்று என்மீது யாரோ திணித்துவிட்ட பிணியில் நான் குருவாகிக் கொண்டிருக்கிறேன்.

Augmented Reality (AR) video game போல உலகு ஆகிப்போய்விட்டது. உண்மை என்பது அவரவர்க்கான பிரத்தியேகமானதே அன்றி அனைவரிற்கும் பொதுவான உண்மை என்று ஏதும் இல்லை என்பதாக உளவியல் மாறிக்கொண்டிருக்கின்றது. அவரவர்க்கு அவர்க்கான உண்மை. பொதுமறை என்று எதையும் எவரும் ஏற்கத் தயாரில்லை. 

எல்லோரும் தன்னைப் பெருப்பித்துக் காட்ட விழைந்து கொண்டிருப்பதால் கேட்பது பாதகம் என்றாகிப்போகிறது. மற்றையவன் பேச நான் கேட்பின் பேசுபவன் பெரியாள் ஆகி விடுவான். எனவே எனது கருத்துக்களை அங்கங்கே நானும் தூவுவது அவசியம். விடயம் புரிகிறதோ இல்லயோ நுனிப்புல்லுகளை நானும் சப்பித் துப்புவது அவசியம் என்பது இன்றைய நிலை. இதனால் அனைவரும் குருவாண்டி. சிஸ்யப் பிள்ளைகள் பற்றாக்குறை. இந்நிலையின் வீச்சு அனைவரும் தமக்காக மட்டும் இருக்கும் ஒரு நிலையினை நோக்கியதாக நகர்கிறது. ஆனால், இயற்கை மனிதனை கொம்பின்றி, நகம் இன்றி, பலம் இன்றி கூட்டத்தில் பலம் பெறுகின்ற சமூக விலங்காகப் படைத்திருக்கிறது. அதனால், எங்கும் பெருங்குளப்பம்.

 


 

நான் உணருகின்ற இதே மாதிரியன உணர்வை எழுத்தில் அழகாக கொண்டு வந்து இருக்கின்றீர்கள். எதையும் ஆழ அறிய விரும்பாமல் நுனிப்புல் கூட மேய விரும்பாமல் வெறுமனே தன்னை குருவாண்டியாக நினைத்துக் கொண்டு பெருப்பித்து காட்ட முற்படும் தன்மையை சமூக வலைத்தள காலம் உருவாக்கி விட்டுள்ளது.

Link to comment
Share on other sites

நிழலி,
நீங்கள் கொண்டாண்டத்துடன் வாழ்வதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்களும் கூட.

சொந்தமான பெறுமதி என்பதை ஊர் சார்ந்ததாக, ஞாபக வீதி சார்ந்ததாக நீங்கள் நினைத்தது போல் நான் கிஞ்சித்தும் குறிப்பிடவில்லை. இன்னமும் சொல்வதானால் தாயகம் சார்ந்து மட்டுமல்ல எந்த இடம் பொருள் பதவி பாத்திரம் காலம் சார்ந்தும் பேசவில்லை. அத்தனையையும் கடந்த உள்ளார்ந்த சுயத்தின் அலைவரிசை சார்ந்ததாக மட்டும் பேசியிருந்தேன். எமது சொந்த அலைவரிசையே நமக்கு மறந்துபோயுள்ள நிலையில் பெறுமதி என்பதைப் பிறிதொன்றைச் சார்ந்ததாக மட்டும் தான் பொதுவில் பார்க்க முனைவது புரிகிறது. ஆனால், ஒன்றின் தன்மை இன்னுமொன்றைச் சார்ந்து மட்டும் தான் இருக்க முடியுமா? உங்கள் நிறம் என்ன என்பதை இன்னுமொன்றின் நிறம் அல்ல என்பதாக மட்டும் தான் பதிலளிக்க முடியுமா? ஒரு அணையாத ஹோம்சிக் ஏதோ ஒரு அலைவரிசையோடு ஒட்டிவிடவேண்டும் என்ற அவாவில் உள்ளுர உழன்று தேடுவதைப் பற்றிப் பேசியிருந்தேன். இந்த ஹோம்சிக்  வேண்டும் ஹோம்,  இடம், காலம், பொருள், பரிமாணம் கடந்ததொன்றுக்கான ஆர்ப்பரிப்பு.

மற்றையவரைக் கொண்டாடக் கூடாது என்றோ அவரவர் பாணியில் கொண்டாடக் கூடாது என்றோ சொல்வது கிஞ்சித்தும் எனது நோக்கமில்லை. என்னை ஒத்த மனநிலையில் இருக்கும் சகபாடிகளைத் தேடியது மட்டுமே பதிவின் நோக்கம். உதாரணத்திற்கு, ஊரில் எனது வகுப்பில் படித்தவர்கள் முப்பது வருடங்களின் பின்னர் தங்கள் வாட்ஸ்ஆப் குழுமத்தில் என்னையும்இணைத்துக் கொண்டார்கள். ஞாபகவீதி ஒருகணம் திறந்தது உண்மைதான். இருப்பினும் எட்டாம் வகுப்பில் பார்த்தது போல் இன்னமும் அவர்கள் பெண்கள் படங்களை வைத்துக் கிளர்ச்சியுடன் அங்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யக் கூடாது என்று நான் புனிதம் பேசவோ கருத்துக்கூறவோ முயலவில்லை. அறவே அது எனது நோக்கமும் இல்லை. ஆனால் என்னால் எட்டாம் வகுப்பில் இருந்ததைப் போல் படத்தைப் பார்த்துக் கிளரும் மனநிலையினைக் கைப்படுத்தமுடியவில்லை என்பதையே பதிவு செய்கின்றேன். 

அதற்காகக் கொண்டாட்டம் அறவே இல்லை என்று கூறவில்லை. இந்த வருடம் கூட 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படத்தை அணுவணுவாக ரசித்தேன். அங்கு பேசப்படும் சாதியம் நிலம் மற்றும் இன்னும் எதுவும் எனக்கு அறவே சம்பந்தமற்றன. அந்த முரண்கள் முற்றிலும் எனக்கு அந்நியமானவை என்னால் என்றைக்கும் உணரப்படாதவை. இருப்பினும். அந்தப் படத்தை என்னால் கொண்டாட முடிகிறது. ஒரு சகபாடியைக் கண்டுகொண்ட கூத்துப் பிறக்கிறது. ஒவ்வொரு துளியிலும் ஒட்டிக்கிடக்கும் ஆனந்தம் மடையுடைத்து என்னுள்ளும் பிரவாகிக்கிறது. அப்படியே அள்ளிப் பருக முடிகிறது. ஏனெனில் அந்தப் படம் ஒருவனின் சுய அலைவரிசையில் பரிணமித்ததால் என்னாலும் அந்த அலைவரிசைக்கு ரியூன் பண்ண முடிகிறது. கமரா நகரும் ஒவ்வொரு துளியும் முயற்சியின்றி என்னுள்ளும் பிரவாகிக்கின்றன. நான் சொல்லவருவது, இன்றைய உலகில் இத்தகைய பிரவாகம் மிக அரிதாக்கப்பட்டுவிட்டது. இன்னமும் சொல்வதானால் அத்தகை பிரவாகம் மறக்கடிக்கப்படுகிறது. ஓட்டம் என்பது ஓழுங்குபடுத்தப்பட்ட விதி அறிவிப்பாக ஆக்கி மலட்டு உணர்வுகளைப் பிரசவிக்கின்றது.

நீங்கள் கூறும் கடன் பொறுப்பு சேமிப்பு தேவை அவசியம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் சவால்களாக இருக்கும் வரை பணம் மனதைக் குவியப் படுத்தி அர்த்தம் தரலாம். ஒரு பேச்சிற்கு, உங்களிற்குப் பணம் என்பது தேவை நிமித்தமற்றதாகி ஒரு தசாப்த்தமே முடிந்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். வெறும் வீடியோ கேம் விளையாடுகையில் கிடைக்கும் ஸ்கோர் போல் ஒரு நம்பர் என்பதாக பணம் ஆகுகையில் எங்கனம் பணத்திற்குள் அர்த்தத்தைத் தக்கவைப்பீர்கள்? அவ்வாறு பணம் அர்த்தப்படுகையில் பணத்தின் சேர்க்கையினை எங்கனம் கொண்டாடுவீர்கள்? 

அதுபோன்றே, வேலையில் உயர்வு வேண்டாது ஓரு நேர்கோட்டில் செல்வதாகக் குறிப்பிடுகின்றீர்கள். இது கொண்டாட்டத்திற்கு முரணானது இல்லையா? உயர்வு என்பது புறோமோஷன் மட்டுமல்ல, புதுப் புதுச் சவால்களின் உச்சங்களைத் தொடர்வதும் கூட. நேர்கோட்டில் அளவாய் ஆசைப்பட்டுப் பயணிப்பது களிப்புக் கூத்திற்குச் சரிப்படுமா? அப்படியாயின் எதற்காக அந்த வேலைக்குச் செல்லவேண்டும்? இக்கேழ்விக்கு, வேலைக்குச் செல்வது வாழ்வாதாரத்திற்கான அவசியம் என்பது மட்டும் பதிலாயின் அதைத் தான் கொண்டாட்டம் தொலைந்த வரண்ட ஓட்டம் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒருவேளை நீங்கள் கூறுவதைப் போன்று இந்தக் மெத்தனப்போக்கு முற்றுமுழுதான கொண்டாட்டத்தை எப்போதும் உணராவிடினும் கனகாலம் கொஞ்சக் கொண்டாட்டத்தையேனும் தக்கவைக்க உதவலாம். ஆனால் இந்த மனநிலை அனைவர்க்கும் கைப்படாது. இன்னுமொருவர் சொல்லி றூம் போட்டு யோசித்து எவரும் உச்சம் தொட நினைப்பதில்லை. மாறாக, சிலரிற்குள் காட்டருவி மட்டுமே ஓடுகிறது. எதிர்ப்டும் சிதிலங்கள் அனைத்தையும் பிழிந்து சுவைத்துத் திமிர்த்தெழுந்து ஒரு பூதம் போல் காட்டருவி மேலும் சிதிலம் தேடுகிறது. அப்போது தான் சந்தை உலகின் வரையறை உறைத்து வரட்சி தலைகாட்டுகிறது.

நீங்கள் கேட்ட கேழ்விக்காச் சற்று எதைப் பேசுகிறேன் என்பதைக் குறிப்பிடுவதற்கா இந்தப் பின்னூட்டம். ஆனால் நீங்கள் கொண்டாட்டத்துடன் மகிழ்ந்து நகர்வது மகிழ்ச்சி. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மூச்சில் இந்தத் தலைப்பில் உள்ள அனைத்தையும் படித்துவிட்டேன்.  வெறும் நுனிப்புல் மேய்ந்தமாதிரி உள்ளதால் ஆறுதலாக இன்னொமொருமுறை  வாசிக்கவேண்டும். 

வாழ்வின் ஓட்டம் என்பது எந்த இலக்குமில்லாமல் போகும்போது குழப்பங்கள் வருகின்றன. இளவயதில் இருந்த இலட்சியக் கனவுகள் காணாமல் போய் சிறு வட்டத்திற்குள் உழலும் சராசரி வாழ்வாகிப் போகக்கூடாது என்ற பயம் தொற்றிக்கொண்டுள்ளது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.