Jump to content

அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சிலர் எம் மூத்த அரசியல் வியாதிகளின் சனநாயக விரோத மக்கள் விரோத அரசியலுக்கு புலிக்கொலை வடிவம் கொடுத்து அதனை சனநாயகமாக்க நினைக்கிறார்கள்.. அல்லது அப்படி இப்படி பேசி பேசி இன்னும் காலத்தை வெட்டியாகக் கழிக்க நினைக்கிறார்கள்.

எது சனநாயகம்

உ+ம்: பிரித்தானியா.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதா விடுவதா என்ற வாக்கெடுப்பை மக்களுக்கு வழங்கிய ஊறுதி மொழிக்க அமைய கொண்டு வந்து.. அது விலகக் கூடாது என்பதற்காக பிரச்சாரம் செய்து.. அது மக்களால் தோற்கடிக்கப்பட்டதும்.. தான் மக்கள் பிரதிநிதியாக எனியும் இருக்க முடியாது என்ற அடிப்படையில்.. பதவி விலகினார்... பிரித்தானிய முன்னாள்.. பிரதமர்.. டேவிட் கம்ரூன்..

இதே எங்கள் நாட்டில்.. இதோ அடுத்த தைப் பொங்கலோடு தமிழீழம் அமைக்கிறம்.. தமிழீழமே தமிழ் மக்களின் ஒரே தீர்வு என்று முழங்கி.. இரத்தத் திலகமிட்டு.. மக்களின் ஏகோபித்த ஆதரவோடு சிங்கள பாராளுமன்றம் சென்ற அமிர்தலிங்கம் வகையறாக்கள்.. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும்.. சனநாயகம் என்றால்.. பதவி விலகி இருக்க வேண்டும்.

கடந்த 20 - 25 வருடங்களாக.. சித்தார்த்தன்.. கட்சிக்கு தலைவர்.. டக்கிளஸ் தலைவர்.. சம்பந்தன் தலைவர்..  இப்படி உலகில் எந்த சனநாயகக் கட்சியில்.. (போராளி அமைப்புகளின் நிலை என்பது வேறு. அதன் பரிமானம் வேறுபட்டது).. ஒரு சிலரே தலைமையில் இருந்து வருகின்றனர். அப்படி இருந்தவர்களான.. சதாம் குசைன்.. கடாபி.. இடியமீன் போன்றவர்களை எல்லாம் அரசியலில் இருந்து குண்டு போட்டே உலகம் அகற்றி விட்டது. ஏனெனில்.. அவர்கள் மக்களின் ஆணையை மட்டுமல்ல.. சர்வதேசங்களின் குறிப்பாக அமெரிக்க சார்பு நாடுகளின் நலனை மதிக்கவில்லை என்பதற்காக.

ஆனால்.. தமிழ் மக்களின் நலனை.. உரிமையை பேசிவிட்டு.. தமிழ் மக்களின் நலனில்.. உரிமையில் அக்கறையற்றிருந்த எமது அரசியல் வியாதிகளை களத்தில் இருந்து அகற்ற வேண்டின்.. ஒன்றில் அவர்களாக பதவிகளை விட்டு விலகிப் போயிருக்கனும்.. இல்ல அவர்களை அகற்ற வேண்டும். துரதிஷ்டவசமாக.. எமது அரசியல் வியாதிகள்.. இரண்டாம் தெரிவை மக்கள் முன் வைத்தது... சுமந்திரன் வகையறாக்களுக்கு விளங்காது.. காரணம்.. சுமந்திரன் தான் செய்வது சனநாயகம் என்று நினைச்சுக் கொண்டு மக்கள் விரோத செயற்பாடுகளை செய்வதை மக்கள் தட்டிக்கேட்க வலுவற்ற நிலையில் இருப்பதை தனக்கு சாதமாகப் பாவித்துக் கொண்டிருப்பதற்கான சூழல் இலங்கைத் தீவில் இருப்பதும்.. ஒரு காரணமாகும்.

ஆனால்.. இவர்கள் உண்மையில்.. மக்களால்.. மக்களின் விருப்புக்கு தெரிவுக்கு குரலுக்கு ஏற்ப மக்களுக்காக பணி செய்யக் கூடியவர்களே அல்ல. உண்மையில்.. சனநாயக அளவுகோலின் கீழ்.. சுமந்திரன்.. சம்பந்தன்.. அமிர்தலிங்கம்.. யோகேஸ்வரன்.. சித்தார்த்தன்... டக்கிளஸ்.. இவர்கள் யாருமே.. சனநாயகத்தின் பெயரில்.. மக்களுக்கான அரசியல் செய்வதற்குரிய தகுதி உடையவர்கள் அல்ல. ஆனால் இவர்களை மக்கள் விரும்பினாலும்.. அரசியல் களத்தில் இருந்து அவ்வளவு இலகுவாக அகற்ற முடியாது. அந்த நிலையில்.. உலகிற்கு சனநாயகத்தை போதித்த அமெரிக்காவே ஆயுதத்தை தான் நம்பும். அதுவே நமது மண்ணிலும்... அமைய நேரிட்டதற்கு புலிகளோ மக்களோ காரணமல்ல.. உண்மையான சனநாயகம் எது என்று தெரியாமல்.. அல்லது தெரிந்து கொண்டும்.. அதனைப் பின்பற்றாமல்.. மக்கள் பிரதிநிதிகள் என்ற போலிப் போர்வையின் கீழ் சுயலாப சுகபோக வாழ்க்கை தேடிக் கொள்ளும் தனிநபர்கள் தான் இவர்கள்.. அவர்கள் தான் துப்பாக்கிகளை தம் பக்கம் தாமே திருப்பி தம் தலையில் வேட்டு வைத்துக் கொண்டனர்...!!

இதை விளங்க மறுக்கும்.. சனநாயகமற்ற சிலர் இப்ப பேசும்.. புலிகளால் தான் எல்லாம்.. சனநாயகம் இல்லாமல் போச்சு என்பது சுத்தப் போக்கிரித்தனம் மட்டுமன்றி.. உண்மையான சனநாயகப் பண்புகள் எம் மக்களால் இனங்காணப்படாமல்.. பாசிச தலைமைகள் தொடர்ந்தும் மக்கள் முன் சனநாயக சாயம் பூசி.. மக்கள்.. மண் விரோத அரசியலை முன்னெடுக்க காரணமாகவும் இருக்கின்றனர். உண்மையில் இவர்களே.. ஈழமண்ணில்.. உண்மையான சனநாயகம்.. இல்லாமல் போக முக்கிய காரணம். இவர்களே உண்மையில் சனநாயக விரோதிகளாவர். மக்கள் விரோதிகளாவர். ஈழத்தில் சனநாயகம் இல்லாமல் போக இவர்களே காரணமும் ஆவர். 😊

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவைதான் நடந்தன என்று என்னால் உறுதிபடக் கூறமுடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

அமிர் தழ்த்தேசியத்திற்கு எதிரானவரென்று நம்பவில்லை. அதன் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரே அவர். ஆனாலும், அவரது இந்தியச் சார்பு நிலை, குறிப்பாக இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயகத்தின் மீது மிகக் கொடூரமான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தபொழுது அமிர் செயற்பட்ட விதம் அவரை இலக்காக மாற்றியிருக்கலாம். இதுபோன்றே யோகேஸ்வரனின் கொலையும். இவர்கள் தவறு செய்திருந்தால்க் கூட கொல்வதற்குப் புலிகளுக்கு எந்த நியாயமும் இல்லை, ஆனால், புலிகளின் அன்றைய நிலையினைப் பலவீனப்படுத்தியதற்காகக் கொல்லப்பட்டார்கள்.

திருமதி யோகேஸ்வரன் அவர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்திருந்துவிட்டு, சந்திரிக்கா காலத்தில் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபட்டார். யாழ்ப்பாண உள்ளூராட்சி அமைப்பில் இருந்துகொண்டு தீவிரமான புலியெதிர்ப்பில் ஈடுபட்டவர். தமக்கெதிரான அரசியலில் ஈடுபட்டதற்காக கொல்லப்பட்டார்.

நீலன் திருச்செல்வம் சந்திரிக்கா, பீரிஸ் ஆகியோருடன் இணைந்து தீர்வுப் பொதி தயாரிப்பில் ஈடுபட்டவர். இவரது புலியெதிர்ப்பு பற்றி எம்மில் பலர் அறிந்துகொண்டிருக்கவில்லையாயினும் கூட, பேரினவாதிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார். தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, சர்வதேசத்தில் பயங்கரவாதிகள் என்று தடைசெய்யப்பட முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவரான லக்‌ஷ்மன்  கதிர்காமரின் நெருங்கிய சகா மட்டுமல்லாமல் அவரை சந்திரிக்காவிற்கு அடையாளம் காட்டியவர். இதனால் கொல்லப்பட்டார்.

லக்‌ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டது சரியா தவறா என்று நான் விவாதிக்க விரும்பவில்லை. அப்படியொரு விவாதம் வீணானது என்பதே எனது எண்ணம். 

இறுதியாக, புலிகள் ஜனநாயக அரசியலை எதிர்க்கவில்லை. அப்படி எதிர்த்திருந்தால் 1990 இல் புலிகளின் அரசியல்த்துறையை நிறுவியிருக்க மாட்டார்கள். தமிழ்க் கூட்டமைப்பை தனது அரசியல் முகமாகக் காட்டியிருக்க மாட்டார்கள்.

அவர்கள் எதிர்த்தது தேசியத்திற்கெதிரான, அதனைப்ப்பலவீனப்படுத்தும் அரசியலைத்தான். 

இங்கே நான் பட்டியலிட்டவர்களில் சிலர் நிச்சயமாக தமிழரின் நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்த சிங்களத்துடன் சேர்ந்து வேலை செய்தவர்கள். அதனால் இலக்குவைக்கப்பட்டார்கள்.

ஆனால், புலிகள் இவற்றைச் செய்தது சரியா தவறா என்றால், நிச்சயமாகச் செய்திருக்கத் தேவைதில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், நீங்கள் கேட்டதற்காகச்  சொல்கிறேன். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் யார் அரசியல் செய்தார்கள் என்று கேட்கிறீர்கள், இனவழிப்பிற்கெதிரான, தமது இருப்பினைப் பாதுகாக்கப் போரிட்டுக் கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டம் எவ்வாறான அரசியலை எதிர்பார்த்திருக்கும், அல்லது அவ்வாறான ஒரு அரசியலுக்கான சூழ்நிலை அங்குதான் இருந்திருக்குமா?

நாளாந்தம் உயிரை காப்பாற்றுவதே போராட்டமாக இருந்த ஒரு சூழ்நிலையில் வேறு அரசியல் பேசுவதோ அல்லது தமது இருப்பிற்கான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, அதை மலினப்படுத்தும் ஒரு அரசியலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிதிலிருந்த மக்கள் விரும்பித் தேர்ந்திருப்பார்கள் என்று உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ragunathan said:

இறுதியாக, புலிகள் ஜனநாயக அரசியலை எதிர்க்கவில்லை. அப்படி எதிர்த்திருந்தால் 1990 இல் புலிகளின் அரசியல்த்துறையை நிறுவியிருக்க மாட்டார்கள். தமிழ்க் கூட்டமைப்பை தனது அரசியல் முகமாகக் காட்டியிருக்க மாட்டார்கள்.

என்ன ரகு அண்ணா.. இங்கு சிலர் இப்ப பேசும் எல்லாம் புலிகளால் தான் என்பதை நீங்களும் நம்பிக் கொண்டு இருக்கிறீர்களா.

விடுதலைப்புலிகள்.. 1987 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியை உருவாக்கி தேர்தல் களம் காணக் கூடிய நிலை இருந்தும். பாலகுமார் தலைமையிலான... ஈரோஸ் போன்ற ஓரளவு மக்கள் கருத்தை செவிமடுக்கக் கூடிய மக்கள்.. மண்ணின் நலனில் சிறிதளவேனும் அக்கறை கொண்டிருந்த.. சக்திகளோடு இணைந்து மக்களுக்கான தேர்தலில் வென்று.. ஹிந்தியப் படை வெளியேற்றதுக்கு காரணமாகவும் இருந்திருக்கிறார்கள்.

உண்மையில்.. இன்று எல்லாம் புலிகளால் தான்.. சனநாயகம் பேசும்.. சுமந்திரன்... சம்பந்தன்.. சித்தார்த்தன்... டக்கிளஸ்.. வரதராஜப்பெருமாள்.. வகையறாக்கள்.. உண்மையான.. சனநாயக அரசியல் களத்தில் இருப்பதற்கே தகுதி அற்றவர்கள் என்பதே உலக யதார்த்தமாகும்.

இவர்களை காக்க..எல்லாம் புலிகளால் தான் வகுப்பெடுப்பவர்கள் யார் என்று பாருங்கள்.. உண்மையில் அவர்களுக்கு சனநாயகத்தின் அடிப்படை அம்சமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

இங்கு வந்து எல்லாமே புலிகளால் என்பவர்கள்.. ஈராக்கில்.. சதாம் குசைன்.. லிபியாவில்..கடாபி.. பொஸ்னியாவில்... மிலோசவிச் என்று.. இவர்களை எல்லாம் அவர்களுக்கு விளங்கி இருந்த சனநாயக அரசியல் களத்தில் இருந்து அகற்றிய.. அமெரிக்காவையும்.. அது சார்ந்த நாடுகளையும்.. எல்லாம் அமெரிக்காவால்.. தான் என்று சொல்லி அமெரிக்காவுக்கு சனநாயகம் படிபிக்க இவர்களால் முடியுமா...?! முடியாது.

புலிகள் என்ற அதி கூடிய சனநாயகச் சொல்லின் மேல் தான் இப்போ எல்லோரும் ஏறி இருந்து ஈழத்துக்கான சனநாயக நொண்டிக் குதிரையை ஓட்ட முனைகிறார்கள். அது சனநாயகம் அல்ல.. பச்சை சந்தர்ப்பவாதம் ஆகும். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்கும் இந்தியாவுக்கும் இல்லாத புலிகளை இருக்கு எனக்கூறி தமிழர் விரோத அரசியல் நடாத்தவேண்டும்.

கூட்டமைப்பிடம் இதுவரை நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை எனக்கேட்டால் புலிகள் ஜனநாயகவாதிகள் இல்லை அவர்களால் நாம் ஜனநாயக ரீதியில் அரசியல் செய்ய முடியவில்லை எனக்கூறுகிறார்கள் 

ஆக இந்த இருவருக்கும் இல்லாத புலிகளது தேவை இப்போதும் உள்ளது.

அ அனால் உண்மையாகவே அப்படி ஒரு புலி முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு இருப்பதாக இல்லை. புலம்பெயர் தேசங்களில் காசு அடித்துக்கொண்டு ஒதுங்கியவர்கள்போக இப்போது புலி எனக்கூறிச்செல்வோர் தாங்கள் வெள்ளையும் சுள்ளையுமாக சமூகமட்டத்தில் திரியலாம் என்பதற்காகவே திரிகிறார்கள் மற்றும்படி வெள்ளத்துக்கு நிவாரணம் எனும் போர்வையில் எதையாவது கிள்ளிப்போடுவது அங்கிருக்கும் வறுமை நிலையிலுள்ள முன்னாள் போராளிகளுக்கு, கனவு வந்து திடுக்கிட்டு எழுந்து ஒட்டுவதுபோல் திடீர் பாசம் வந்து ஏதாவது செய்வது இவைகளுடன் அவர்களது அரசியல் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

இப்போது பிலியும் இல்லை ஒரு புண்ணாக்கும் இல்லை 

இல்லாத புலிகளை, நீங்கள் செய்த, செய்யும் தவறுகளை நியாயப்படுத்துவதற்காக ஏன் இழுக்குறியள்.

இத்தால் சகலருமறிவது புலிகள் பயங்கரவாதிகள் புலிகள் ஜனநாயக விரோதிகள் ஆனால் அவர்களது கதை முடிந்துவிட்டது இனிமேல் தமிழர் உரிமைக்காக உண்மையாகப்போராடுவோம் அதுவும் உலகஜனநாயக எசமானர்கள் எது ஜனநாயகம் எனக்கூறுகிறார்களோ அவ்வழியில் தவிர உள்ளூரில் சயந்தன் சுமந்திரன் இன்னபிற பேர்வழிகளின் ஜனநாயக வழிகாட்டுதல்களுடன் இப்படிச்சொல்லிவிட்டு போராடி அடுத்த பொங்கலுக்கிடையில் ஏக்க ராஜ்ய எனும் சொல்லுக்குள் ஒத்து வருமாப்போல தமிழர்க்கு ஒரு தீர்வைப்பெற்றுத்தரவும்.

ஏதோ கடைக்குப்போனேன் கால்றாத்தல் வெங்காயம் கேட்டன் பழையகடன் பாக்கி இருக்கு அதைப் பைசல்பண்ணு எனக்கூறி கையில் இருந்த காசை சிங்களவன் புடுங்கிப்போட்டு திருப்பி அனுப்பிவிட்டான் எனக்கூறுவதைப்போல், தமிழர் உரிமைபெற்றுத்தர உங்களை அரசியல் செய்ய அனுப்பினால் புலி புண்ணாக்கு எனக்கூறுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக செத்தகுரங்கு செம்மத்திலும் வராது என்பது உண்மை.

இப்ப எனது கெள்வி என்னவென்றால் கடந்த பத்துவருடமாக புலிகள் இல்லை  உங்களிடம்தான் அரசியலும் அரசியல் தலைமையும் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தர எத்தனை காததூரம் எனக்கூறவேண்டாம் எத்தனை மில்லி மீற்றர் தூரம் முன்னெறிச்சென்றிருக்கிறியள் என சம் சும் குழுவினரும் யாழின் ஜனநாயகவாதிகளும் கொஞ்சம் கூறமுடியுமா? 

இல்லாத புலிகளுக்கு எதுக்காக வக்காளத்து வாக்குவான்

ஜஸ்டின் இதற்கு உங்களது பதில் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Elugnajiru said:

இப்படி மொட்டையாக் கேட்டால் எப்படி..

முன்னுரை.. செயல்முறை.. தரவு.. விளக்கம்.. முடிவு.. உசாத்துணை.. என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வடிவில் வந்தால் தான்.. நாங்கள் எங்க அதி உன்னத சனநாயக ஆராய்ச்சி அறிவின் அடிப்படையில்.. அது எத்தனை மில்லிமீற்றர் என்று அளந்து சொல்ல முடியும்.

உலகில்.. எத்தனையோ விஞ்ஞான பூர்வ முடிவுகள் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்.. இந்தக் காலத்தில் கூட... எங்கட சில ஆட்கள்.... இன்னும்.. பழைய சித்தாந்தக் கோட்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டு..??! அவர்களிடம் போய்... சனநாயகம் பேசுவது முட்டாள்..தனம் என்பது இத்திரியில் அப்படியே தெரிகிறது. 

இதில நீங்க வேற... கேள்வி கேட்டு ஏன் அவைய கடுப்பேத்திறீங்க. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

சரி! தேவையற்ற சத்தங்களை விடுவோம். இலங்கையில் தமிழர் பிரச்சினை இடியப்பச் சிக்கல் என்பது அனேகமானோர் ஏற்றுக் கொண்ட ஒன்று. இந்தச் சிக்கலில் பங்களிக்கும் காரணிகள் எவையென்று இங்கே ஒரு பட்டியல் மட்டும் தருவீர்களா? அது புலிகள் வர முன்னர்/வந்த பின்னர் ஆகப் பிரித்துச் சொன்னாலும் சரி. தர முடியுமா?

இங்கு எவருக்கும் வெட் கமில்லை இப்போதும் புலிப்புராணம் பாடியே மிகுதி விடையங்களை மறைத்துவிட முனைகிறார்கள். புலிகள் காலத்திலும் அவர்கள் ஜனநாயக விரோதிகள் என இதே ஆர்வலர்கள் கூக்குரல்போட்டார்கள் சரி அவர்கள் காணாமலோ அழிந்தோ போய்விட்டார்கள்(உண்மையாகை இது ஒரு எடுகோளுக்காகவல்ல) இப்போதும் இவர்கள் தங்கள் கையாலாகாத்தனத்துக்கு அவர்களை இழுக்குறார்கள். 

இதைக்கூற முற்பட்டால் "ஜஸ்ட் கைக் தட்"  என்பதாக அதைப்பின்தள்ளிவிடுகிறார்கள் 

இவர்கள் இருக்கும்வரைக்கும் எமக்கான சாபக்கேட்டைத் தவிர்க்க முடியாது.

சிங்கள அரசசார்பு நிலை அல்லது அதற்கு எதிரான முழுமையான ஒத்துழையாத எதிர்ப்புநிலை இவை இரண்டையும் தவிர்த்த "நால்லிணக்கம்" இதுவரை தமிழர்க்குக்கொண்டுவந்ததென்ன?

சிங்கள் அரசிடமிரிருந்து உங்களுக்குச் சலுகைகள் வேண்டுமெனில் டக்ளசுக்கோ விஜயகாலாவுக்கொ அங்கயனுக்கோ வாக்களித்து அவர்களை ஆதரியுங்கள் தமிழர் உரிமைவிடையத்தில் எதுவித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை அதற்கான பேச்சுக்குக்கே இடமில்லை எனக்கூறி உண்மையாகப்போராடுவோம் இணக்க அரசியல் செய்யோம் எனும் கொள்கை முடிவுடன் இதயசுத்தியுடன் அரசியல் செய்யுங்கள் தமிழர் உரிமை என்பது எது என்பதில் அளவுகோல் ஒன்றை வையுங்கள் முற்றாக எதிர்த்து நில்லுங்கள் தனிழர் உரிமை தொடர்பாக எப்போதுமே மாற்றம் செய்ய முடியாத, தமிழரில் எல்லாத்தரப்பும் ஒத்துக்கொள்கிற ஒரு வரைவை சகல தரப்புக்கும் முன்வையுங்கள், ஒருபுறம் மேற்கூறிய இன்னோரன்ன பேர்வழிகள் மறுபுறம் நீங்கள் என நில்லுங்கள் அதுதான் தமிழர் உரிமையைப் பெற்றுத்தர அரசியல் செய்யும் அழகு அதைவிடுத்து,

தொலைந்துபோனவர்களை ஏன் சாட்சிக்கு அழைக்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஆதரவு இல்லாமல் இவர்களால் அரசியல் செய்ய முடியாது.1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் 1987 இல் நடந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அமிர்தலிங்கம் உட்பட பல தலைவர்கள் தோல்வியுற்றனர்.அப்போது புலிகளின் மறைமுக ஆதரவு பெற்ற ஈரோஸ் அமைப்பே அதிக இடங்களை வென்றது.அதன் பின் நடந்த தேர்தலில் திருகோணமலையில் சம்பந்தர் தோற்று தமிழ்ப்பிரதிநித்துவம் இல்லாத சூழ்நிலையில் பிரிந்து நின்றால் திருகோணமலை திரந்தரமாகப் பறிபோய்விடும் என்பதால் சிவராம் போன்றவர்கள் 4 கட்சிகளை இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை (தமிழ்க்காங்கிரஸ்,தமிழர் விடுதலைக்கூட்டணி,ஈபிஆர்எல்எவ்,ரெலோ)தமிழரசுக் கட்சி கூட்டமைப்பில் இல்லை,அரசியல் களத்திலும் இல்லை. புளொட்டும் உள்வாங்கப்படவில்லை)உருவாக்கினார்கள்.சின்னம் உதயசூரியன்.அடுத்து வந்த தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புலிகளால் நெறிப்படுத்தப்பட்டு புலிகளை கடுமையாக விமர்சித்த ஆனந்த சங்கரிக்கு இடம் கொடுக்காத காரணத்தால் ஆனந்த சங்கரி வழக்குப் போட்டு உதயசூரியன் சின்னத்தை கடைசி நேரத்தில் பறித்த காரணத்தால் கடைச்சிநேரத்தில் பொதுச்சின்னம் ஒன்று உருவாக்க கால அவகாசம் இல்லாத காரணத்தால் தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னம் தூசி துடைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.அந்த தேர்தலில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானதுடன் திருகோணமலையில் 2 உறுப்பினர்கள் தெரிவானார்கள்.நாழ்ப்பாணத்தில் புலிகளால் களமிறக்கப்பட்ட கஜேந்திரன் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.புலிகளால் களமிறக்கப்பட்ட பல புதுமுகங்கள் வெற்றி பெற்றனர்.2009 இல் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் 2010 தேர்தலில் புலிகளால் களமிறக்கப்பட்டவர்களை ஒதுக்கப்பட்ட நிலையில் அவர்கள் தமிழ்க்காங்கிரஸ் தலமையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கினார்கள். தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் மேலோங்கியது.சுமத்திரனை பின்கதவால் தேசியப்பட்டியல் ஊடாக உள்வாங்கினார்கள்.ஈபிஆர்எல்எவ் சார்பில் களமிறக்கப்பட்ட சிறிதரன் தமிழரசுக்கட்சிக்குத் தாவினார்.புலிகளின் தளபதியின் மச்சான் என்ற காரணத்தால் 2015 தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றார்.சம்பந்தராலோ,சுமத்திரன்,மாவை போன்றவர்களாலோ அதிக வாக்குகளைப் பெற முடியவில்லை.2013 வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரைத் தவிர்த்து அதிக வாக்குகளை புலிகளின் திருகோணமலை அரசியல் துறை வேட்பாளர் அனந்த பெற்றார்.இந்தத் தேர்தலில் புலிகளால் நிராகரிக்கப்பட்ட புளொட்டும் ஆனந்த சங்கரியும் சம்பந்தரால் உள்வாங்கப்பட்டனர்.பின்னர் அனந்தியும் வெளியேற்றப்பட்டார்.ஆக மொத்தத்தில் புலிகளின் சார்பானவர்களை தேர்தல் வாக்குகளுக்காகப் பயன்படுத்தி விட்டு வெளியற்றுவதையே தமிழரசுக் கட்சி செய்கிறது. தற்போது உள்ள கூட்டமைப்பில் ஆதன்ரெ ஆரம்ப கால கூட்டணிக்கட்சிகளில்  ரெலோ மட்டுமே எஞ்சி நிற்கிறது.இடையில் வந்த தமிழரசுக்கட்சி தலமைப் பாத்திரத்தை வகிக்கிறது.தமிழரசுக்கட்சி(இப்தபோதுள்மிள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அப்படித்தான் அழைக்க வேண்டும்)சிறிலங்கா அரசின் பங்கீளிக்கட்சி போல் செயற்படுகின்றது.தமிழர் பிரச்சினை தொட்ர்பாக பேசக்கூடிய வாய்ப்புகளை வேண்டுமென்றே புறந்தள்ளி ரணிலுக்கு சேவகம் செய்கிறது. தேர்தல் வரும் போது மட்டும் புலிக்கோசம் பொட்டுக் கொண்டு வருவார்கள்.ணிறிதரன் போன்றவர்கள் அதற்குப் பயன் படுத்துவார்கள்.வென்றபின்பு புலிகளை மறந்து விடுவார்கள்.

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு,அரசியல்பைமிகள் விடுதலை,காணி விடுவிப்பு,போர்க்குற்ற விசாரணை போன்ற முக்கிய விடயங்களை காற்றில் பறக்க விட்டு ரணிலுக்கு சேவகம் செய்வதே குறியாக இருக்கிறார்கள்.சிறிலங்காவின் ஜனதாயகத்தைக்கீப்பாற்றுவமீகப் பொய்சொல்லுகிறார்கள்.தமிழ்மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு தமிழ்மக்களின் ஜனதாயகத்தைப்பற்றி எந்த அக்கறையுமற்ற இவர்கள் சிறிலங்காவின் ஜனநாயகத்தை க்காப்பற்றுவதாகச் சொல்லுவது வேடிக்கயாக இருக்கிறது.சோழியன் குடுமி சும்மா ஆடாது.நக்கினார் நாவிழந்தார் என்ற பழமொழிகள் நினைவுக்கு வந்து போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ragunathan said:

இவைதான் நடந்தன என்று என்னால் உறுதிபடக் கூறமுடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

அமிர் தழ்த்தேசியத்திற்கு எதிரானவரென்று நம்பவில்லை. அதன் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரே அவர். ஆனாலும், அவரது இந்தியச் சார்பு நிலை, குறிப்பாக இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயகத்தின் மீது மிகக் கொடூரமான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தபொழுது அமிர் செயற்பட்ட விதம் அவரை இலக்காக மாற்றியிருக்கலாம். இதுபோன்றே யோகேஸ்வரனின் கொலையும். இவர்கள் தவறு செய்திருந்தால்க் கூட கொல்வதற்குப் புலிகளுக்கு எந்த நியாயமும் இல்லை, ஆனால், புலிகளின் அன்றைய நிலையினைப் பலவீனப்படுத்தியதற்காகக் கொல்லப்பட்டார்கள்.

திருமதி யோகேஸ்வரன் அவர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்திருந்துவிட்டு, சந்திரிக்கா காலத்தில் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபட்டார். யாழ்ப்பாண உள்ளூராட்சி அமைப்பில் இருந்துகொண்டு தீவிரமான புலியெதிர்ப்பில் ஈடுபட்டவர். தமக்கெதிரான அரசியலில் ஈடுபட்டதற்காக கொல்லப்பட்டார்.

நீலன் திருச்செல்வம் சந்திரிக்கா, பீரிஸ் ஆகியோருடன் இணைந்து தீர்வுப் பொதி தயாரிப்பில் ஈடுபட்டவர். இவரது புலியெதிர்ப்பு பற்றி எம்மில் பலர் அறிந்துகொண்டிருக்கவில்லையாயினும் கூட, பேரினவாதிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார். தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, சர்வதேசத்தில் பயங்கரவாதிகள் என்று தடைசெய்யப்பட முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவரான லக்‌ஷ்மன்  கதிர்காமரின் நெருங்கிய சகா மட்டுமல்லாமல் அவரை சந்திரிக்காவிற்கு அடையாளம் காட்டியவர். இதனால் கொல்லப்பட்டார்.

லக்‌ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டது சரியா தவறா என்று நான் விவாதிக்க விரும்பவில்லை. அப்படியொரு விவாதம் வீணானது என்பதே எனது எண்ணம். 

இறுதியாக, புலிகள் ஜனநாயக அரசியலை எதிர்க்கவில்லை. அப்படி எதிர்த்திருந்தால் 1990 இல் புலிகளின் அரசியல்த்துறையை நிறுவியிருக்க மாட்டார்கள். தமிழ்க் கூட்டமைப்பை தனது அரசியல் முகமாகக் காட்டியிருக்க மாட்டார்கள்.

அவர்கள் எதிர்த்தது தேசியத்திற்கெதிரான, அதனைப்ப்பலவீனப்படுத்தும் அரசியலைத்தான். 

இங்கே நான் பட்டியலிட்டவர்களில் சிலர் நிச்சயமாக தமிழரின் நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்த சிங்களத்துடன் சேர்ந்து வேலை செய்தவர்கள். அதனால் இலக்குவைக்கப்பட்டார்கள்.

ஆனால், புலிகள் இவற்றைச் செய்தது சரியா தவறா என்றால், நிச்சயமாகச் செய்திருக்கத் தேவைதில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு. 

பதிலுக்கு நன்றி ரகு! பெரும்பாலோனோர் போல ஒளிந்து கொள்ளாமல், அல்லது "புலிகளா கொன்றார்கள்? நேக்குத் தெரியாதே??" என்று விழிக்காமல் பதில் தர நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள்: 

புலிகளின் அரசியல் துறை என்பது அரசியல் கட்சியல்லவே? அது புலிகளின் செயல் திட்டத்தை முன்னகர்த்த உருவான பல அமைப்புகளில் ஒன்று. இறுதிப் போரின் போது மக்களை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் இணைத்ததை இந்தத் துறை செய்தது என அதில் இருந்தோர் உட்பட மக்களே சான்று பகர்கின்றார்கள். ஜனநாயகத்தின் ஒரு அம்சமான அரசியல் கட்சிகள் புலிகள் கட்டுப் பாட்டில் இருந்த வட-கிழக்குப் பகுதியில் ஒன்றும் இருக்கவில்லை! த,தே.கூ உருவாக்கம் புலிகளின் முன்முயற்சி அல்ல என்று எழுதப் பட்டும் ஆவணப் படுத்தப் பட்டும் விட்டது. "கொல்ல மாட்டோம், இனித் தேர்தலில் நில்லுங்கள்!" என்று புலிகள் த.தே.கூ கட்சிகளிடம் சொன்னது தாங்களே தமிழ் தலைமைகளுக்குப் போட்டிருந்த விலங்கைப் புலிகள் கழட்டிய நிகழ்வே ஒளிய வேறொன்றும் இல்லை. இதை எப்படி மறுதலிக்க முடியும் உங்களால்?

கதிர்காமர், நீ.தி தவிர்த்துப் பார்த்தால் புலிகள் கொன்ற மற்றத் தலைவர்கள் தங்களை மீறி தேர்தலில் நின்றது, வென்றது, புலி சாரா அரசியல் செய்ததே கொல்லப் படக் காரணம். இது எப்படி ஜனநாயகத் தடை இல்லை என்று எனக்கு விளக்குங்கள். நான் அறிய திருமதி யோகேஸ்வரன் புலி எதிர்ப்பு என்று ஒரு ஆணியும் செயற்பாட்டில் பிடுங்கவில்லை! சில சமயம் பேட்டிகளில் சாடியிருப்பார். அவரது கணவரை புலிகள் கொன்று விட்டார்கள், பாதிக்கப் பட்ட மனைவியிடமிருந்து கோப வார்த்தைகள் வருவது இயல்பில்லையா? இதெல்லாம் புலி எதிர்ப்பு செய்றபாடா? மேலும் நீலன் திருச்செல்வம் எங்கே புலிகளுக்கு எதிராக என்ன செய்தார்? தீர்வுத் திட்டங்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதினார், சந்திரிக்காவுக்கு அந்த விசயத்தில் உதவினார். ரணிலை பின்னர் நம்பியதை விட, சந்திரிக்காவைப் புலிகள் அதிகமாக நம்பி யுத்த நிறுத்தம்  செய்ததன் பின்னர் நடந்தது இது!

புலிகள் பகுதிகளில்   வெகுஜன அமைப்புகள் எத்தனை அவர்களது முடிவுகளைச் சவாலுக்குட்படுத்தின என நீங்கள் சொல்லவே இல்லை. பதில் பூச்சியம் என்பது தான். இதுவும் ஜனநாயக மறுப்பில் புலிகள் ஊறியிருந்ததன் அறிகுறி தான். உங்கள் துலங்கல் என்ன?  

பதில்கள் இருந்தால்  தாருங்கள், உரையாடுவோம்! இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கு!

7 hours ago, Elugnajiru said:

இங்கு எவருக்கும் வெட் கமில்லை இப்போதும் புலிப்புராணம் பாடியே மிகுதி விடையங்களை மறைத்துவிட முனைகிறார்கள். புலிகள் காலத்திலும் அவர்கள் ஜனநாயக விரோதிகள் என இதே ஆர்வலர்கள் கூக்குரல்போட்டார்கள் சரி அவர்கள் காணாமலோ அழிந்தோ போய்விட்டார்கள்(உண்மையாகை இது ஒரு எடுகோளுக்காகவல்ல) இப்போதும் இவர்கள் தங்கள் கையாலாகாத்தனத்துக்கு அவர்களை இழுக்குறார்கள். 

இதைக்கூற முற்பட்டால் "ஜஸ்ட் கைக் தட்"  என்பதாக அதைப்பின்தள்ளிவிடுகிறார்கள் 

இவர்கள் இருக்கும்வரைக்கும் எமக்கான சாபக்கேட்டைத் தவிர்க்க முடியாது.

சிங்கள அரசசார்பு நிலை அல்லது அதற்கு எதிரான முழுமையான ஒத்துழையாத எதிர்ப்புநிலை இவை இரண்டையும் தவிர்த்த "நால்லிணக்கம்" இதுவரை தமிழர்க்குக்கொண்டுவந்ததென்ன?

சிங்கள் அரசிடமிரிருந்து உங்களுக்குச் சலுகைகள் வேண்டுமெனில் டக்ளசுக்கோ விஜயகாலாவுக்கொ அங்கயனுக்கோ வாக்களித்து அவர்களை ஆதரியுங்கள் தமிழர் உரிமைவிடையத்தில் எதுவித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை அதற்கான பேச்சுக்குக்கே இடமில்லை எனக்கூறி உண்மையாகப்போராடுவோம் இணக்க அரசியல் செய்யோம் எனும் கொள்கை முடிவுடன் இதயசுத்தியுடன் அரசியல் செய்யுங்கள் தமிழர் உரிமை என்பது எது என்பதில் அளவுகோல் ஒன்றை வையுங்கள் முற்றாக எதிர்த்து நில்லுங்கள் தனிழர் உரிமை தொடர்பாக எப்போதுமே மாற்றம் செய்ய முடியாத, தமிழரில் எல்லாத்தரப்பும் ஒத்துக்கொள்கிற ஒரு வரைவை சகல தரப்புக்கும் முன்வையுங்கள், ஒருபுறம் மேற்கூறிய இன்னோரன்ன பேர்வழிகள் மறுபுறம் நீங்கள் என நில்லுங்கள் அதுதான் தமிழர் உரிமையைப் பெற்றுத்தர அரசியல் செய்யும் அழகு அதைவிடுத்து,

தொலைந்துபோனவர்களை ஏன் சாட்சிக்கு அழைக்கிறீர்கள். 

ம்..நான் கேட்டதற்கு இது பதிலா? இந்தப் புலம்பலுக்கு பதில் எழுதுவது என் முழு- நேரத் தொழில் அல்ல! தெரியாது என்று ஒரு சொல்லில் சொன்னால் நான் பேசாமல் போக மாட்டேனா? 

Link to comment
Share on other sites

21 hours ago, நிழலி said:

சம்பந்தர் மறுப்பு தெரிவிக்காதமையாலோ அல்லது சிறிதரன் புலிகளால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானதாக சொல்வதாலோ உண்மையும் இறந்த காலத்தில் நிகழ்ந்ததும் மாறிவிடப் போவதில்லை. சம்பந்தருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் புலிகளின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் தேவை இன்றும் இருப்பதால் கள்ள மவுனம் சாதிக்கின்றனர். இதனாலும் வரலாறு மாறிவிடப் போவதும் இல்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் புலிகளின் பங்கு இருக்கவில்லை. ஆனால் அதன் பின் ஒரு சனனாயக ரீதியில் தெற்கிலும் சர்வதேச ரீதியிலும்  இயங்க கூடிய ஒரு proxy தேவைப்பட்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆசிர்வதித்து உள்வாங்கினர். எவ்வளவு தான் அவர்கள் அப்படி ஆசிர்வதித்து உள்வாங்கி இருந்தாலும், தம் இறுக்கமான பிடியை அவர்கள் மீது வைத்து இருந்தாலும், அவர்களால் குறிப்பிடப்பட்டவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களாக நியமித்து இருந்தாலும், தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் படி அவர்கள் ஒரு போதும் வெளிப்ப்டையாக அறிவிப்பதில் இல்லை என்பதிலும் தெளிவாக இருந்தனர்.

இந்த செய்தியில் புலிகளின் தமிழ் அரசியல்வாதிகள் மீதான படுகொலை பற்றியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றியும் இருக்கு. இதற்கு ஏன் இன்னொரு திரி? இதுவே போதும்.. நீங்கள் தராசுக்கான படிகளை போடுவதாலோ அல்லது போட மறுப்பதாலோ கண்ணுக்கு முன் நிகழ்ந்த எதுவும் மாறிவிடப்போவதில்லை.

என்னை கற்பனைவாதி என்கிறீர்களா??  

Link to comment
Share on other sites

17 hours ago, Justin said:

நுணா சொல்வது போல புலிகளின் ஆசீர்வாதம் இல்லாமல் த.தே.கூ ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்க இயலாது தான்! படுகொலைகள் நிறுத்தப் படும் என்பதற்கு இந்த ஆசீர் முன்னறிவித்தலாக வந்தது, த.தே.கூ தேர்தலில் நின்றது. இதையே சும் சொன்னால் கிழித்துக் காயப் போட்டு விடுவர், நுணா வேறு வார்த்தைகளில் சொன்னால் அதைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்வர். 

நுணா உங்களிடம் ஒரு கேள்வி: அந்தக் காலப்பகுதியில் அவதானிகளாக இருந்த பலர் நிழலியின் பதிவில் உள்ள தரவை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள்! சம்பந்தர் வாய் திறந்து சொல்லாதது தான் உங்கள் வலுவான ஆதாரமா? சம்பந்தர் பல விடயங்களைப் பற்றி வாய் திறப்பதில்லையே?

யார் அந்த ஆவணப்படுத்திய ஆட் கள் என அறியலாமா??

வார்த்தைகளால் நான் பெருமைப்பட வேறு  சிலர் இருக்கிறார்கள்.  நான் அவனில்லை.

Link to comment
Share on other sites

மாவட்ட சபைகள்! ஆனைப் பசிக்கு சோளப்பொரி! - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 26
 
z_page-07-Violendfdce02.jpg

ஒரு தொடர் துரோகத்துக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளாகிவந்த ஒரு சமூகம் தமக்கான தலைவிதியை தாமே தீர்மானித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்திருந்த ஒரு காலப்பகுதி அது. இன்னொருவகையில் சொல்லப்போனால் தனிநாட்டுக் கோரிக்கைக்கு அம்மக்களை தள்ளிக்கொண்டு வந்து நிறுத்திய காலம் அது. பிரிவினையே ஒரு தீர்வு ஒற்றையாட்சிக்குள் இனி தீர்வு சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு வந்த அம்மக்களை மீண்டும் ஒரு தடவை தீர்வு என்கிற பெயரில் திசை திருப்பிவிடலாம் என்கிற நப்பாசை தென்னிலங்கை சிங்களத் தலைமைகளுக்கு.
 
அதை சமாளிப்பதற்கான பொறிமுறையாகவே அன்று மாவட்ட அபிவிருத்தி சபைகள் (DDC) உருவாக்கப்பட்டன. மாவட்ட சபை தீர்வு என்பது ஒரு காலம் கடந்த ஞானம். யானைப் பசிக்கு சோளப்பொரி. இதுவே 50களில் முன்வைக்கப்பட்டிருந்தால் கூட சிலவேளை அது தமிழர் தரப்பில் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.
 
1978 அக்டோபர் மாதம் மாவட்ட அமைச்சர் என்ற புதிய பதவியை அறிமுகப்படுத்தினார். மாவட்ட அமைச்சுப் பதவிகளைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் வழங்கத் தயாராக இருந்தபோதும், கூட்டணி அதனை ஏற்க மறுத்தது. ஜே.ஆர். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான முன்மொழிவாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்கிற முறைமையை முன்வைத்தார். இது ஏற்கெனவே முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்க ஆட்சியின் போது உரையாடப்பட்ட எண்ணக்கரு தான்.
 
தன் கையாலேயே கண்களை குருடாக்கள்
மாவட்ட சபைக்கான சாத்தியங்களை ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை 1979 ஓகஸ்ட் மாதம் ஜே.ஆர் நியமித்தார். அதை தென்னகோன் ஆணைக்குழு என்றும் அழைப்பார்கள். குற்ற விசாரணை ஆணைக்குழு சட்டம் என்கிற ஒன்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர் விக்டர் தென்னகோன். 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது அவர்களை தனித்து விசாரிப்பதற்கான பொறிமுறையாக அந்த சட்டத்தை 1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கொண்டுவந்தார். இன்றைய அரசாங்கத்தில் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு அந்த ஆணைக்குழு தான் பயன்படுத்தப்படுகிறது.
 
இந்த ஆணைக்குழு விக்டர் தென்னக்கோன் தலைமையில் ஏ.சீ.எம்.அமீர், பேராசிரியர் ஏ.ஜே.வில்சன், கலாநிதி நீலன் திருச்செல்வம், என்.ஜீ.பீ.பண்டிதரட்ண, எம்.ஆர்.தாஸிம், கலாநிதி ஜே.ஏ.எல்.குரே, கணபதிப்பிள்ளை நவரட்ணராஜா, பேராசிரியர் கே.எம். டி சில்வா மற்றும் எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் ஆணைக் குழுவில் நியமிக்கப்பட்டார்கள்.
 
z_page-07-Violence02s.jpg
நீலன் திருச்செல்வம் - ஏ.ஜே.வில்சன்
வழமைபோல தமிழர்களின் கரங்களைக் கொண்டே தமிழர்களின் கண்களை நோண்டும் கைங்கரியத்தை லாவகமாக நிறைவேற்றினார்கள். தமிழ் மக்களின் நீதியான அரசியல் உரிமைக்காகவே வாழ்ந்து மடிந்த செல்வநாயகத்தின் மருமகன் ஏ.ஜே.வில்சன், தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த முருகேசன் திருச்செல்வத்தின் மகன் நீலன் திருச்செல்வம் போன்றோர் இந்த மாவட்ட சபை முறைமையை உருவாக்குவதில் பிரதான பங்கை வகித்தார்கள் என்பது நம்பத்தான் முடிகிறதா? ஆனால் அது தான் நடந்தது. கூட்டணி சார்பில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலும் இவர்கள் இருவரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
 
இதைவிடக் கொடுமை என்னவென்றால் அந்த ஆணைக்குழுவுக்கு நீலன் திருச்செல்வத்தை ஜனாதிபதி ஜே.ஆருக்கு பரிந்துரைத்ததே அமிர்தலிங்கம் தான். இதனை பிற் காலத்தில் நீலன் திருச்செல்வம் எழுதி ICES வெளியிட்ட “சிவில் ஒத்துழையாமையும் ஏனைய கட்டுரைகளும்” என்கிற நூலில் அவர் விபரிக்கிறார். ஜே.ஆர்.பற்றி அந்த நூலில் எழுதிய கட்டுரையொன்றில் ஜே.ஆரை மிகவும் புகழ்கிறார். ஓரிடத்தில்
 
“தமிழ் அரசியல் தலைமைத்துவத்தில் புதிய பரம்பரை பிரவேசித்த போது அவர்களோடு இயைபாக செயலாற்றுவதற்கு ஜெயவர்த்தனாவுக்கு கஷ்டமாக இருந்தது. அவரது தனிப்பட்ட தொடர்புகள் மூன்று பிரத்தியட்சமான தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், எம்.திருச்செல்வம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகியோருடன் இருந்தன. இவர்கள் மூவருமே தேர்தலுக்கு முந்திய 6 மாத இடைவெளிக்குள் இறந்து போனார்கள்.” என்று குறிப்பிடுகிறார்.
 
படிப்பினைகள் போதாதா
விக்டர் தென்னகோன்
அதுபோல இந்த மாவட்ட அபிவிருத்திச் சபை யோசனைக்கு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை இணங்கச் செய்வதில் தான் பிரதான பாத்திரம் வகித்தத்தை ஏ.ஜே.வில்சன் எழுதிய “The Break-up of Sri Lanka: The Sinhalese-Tamil Conflict” (இலங்கையின் உடைவு) நூலில் ஒப்புக்கொள்கிறார். இந்த ஆணைக்குழுவுக்குத் தலைவராக வில்சனைத் தான் ஜே.ஆர். நியமிக்க இருந்தார். செல்வநாயகத்தின் மருமகனை நியமிப்பதால் அன்றைய இனவாத சக்திகள் சந்தேகிக்கும் என்பதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. என்.ஜீ.பீ.பண்டிதரத்ன நீதியான தீர்வுக்கு முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் ஏ.சீ.எம்.அமீர் மற்றும் எம்.ஏ.அஸீஸ் ஆகியோரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் வில்சன் அந்த நூலில் தெரிவிக்கிறார். இதன் உச்சமாக ஆணையாளர் தென்னகோன் இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்தை வகுப்பதில் பெருந்தடயாகவே இருந்தார் என்றும் அதில் குறிப்பிடுகிறார். நீதியரசர் விக்டர் தென்னகோன் ஜே.ஆரின் உறவினர் என்பதும் இத இடத்தில் சுட்டிக் காட்டவேண்டும்.
 
1980 பெப்ரவரி நடுப்பகுதியில் அறிக்கை வெளியானது. ஏற்கெனவே நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி முறையை ஆராய்வதுடன், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஸ்தாபித்தல், அதன் அமைப்பு, அதிகாரங்கள், இயங்குமுறை உள்ளிட்ட அனைத்து விடயங்கள் பற்றியும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது அந்த ஆணைக்குழு. தொடர்பிலும் விரிவானதொரு அறிக்கையை அளிப்பதாக இருந்தது.
 
1979ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தென்னகோன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் 1980ஆண்டின் 35ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபை சட்டமாக பிரதமர் ரணசிங்க பிரமதாசவால் பாராளுமன்றத்தில் ஓகஸ்ட் 8 சமர்ப்பிக்கப்பட்ட மசோதா 20 அன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.  சுதந்திரக் கட்சி இந்த மாவட்ட சபையை பகிஸ்கரித்து அந்த விவாதத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. தேர்தலையும் பகிஸ்கரிப்பதாக அறிவித்தது. வழமைபோல சிங்கள பௌத்த இனவாத சக்திகளின் பலத்த எதிர்ப்பு பிரச்சாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் மத்தியில் இது நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் 24 சபைகள் உருவாக்கப்பட்டன.
 
கூட்டணி எதிரியாக ஆனது
Untitled-1.jpg
அமிர்தலிங்கத்துக்கும், கூட்டணிக்கும் எதிராக பலமான எதிர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் உருவெடுத்தது. அமிர்தலிங்கத்தின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. அன்றைய தமிழ் இளைஞர் முன்னணியின் தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா அப்போது தான் அவரசகால சட்டத்தின் கீழ் சிறை சென்று விடுதலையாகியிருந்தார். தமிழரசுக் கட்சியின் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் கோவை மகேசன் கூட்டணியின் இந்தப் போக்கை விமர்சித்ததற்காக பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்டார். கூடவே எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன், டொக்டர்.தர்மலிங்கம், ஈழவேந்தன் ஆகியோரும் விலகினார்கள். அவர்கள் தமிழீழ விடுதலை முன்னணி (TELF) என்கிற அமைப்பையும் தொடங்கினார்கள். இப்படித்தான் கூட்டணியின் மீது நம்பிக்கையிழந்து, ஆத்திரம் மேலெழுந்து, கூட்டணியின் மீதான எதிர்ப்புநிலையும் வளர்ந்து; தீவிரப் போக்கு மிக்க மாற்று அரசியல் தலையெடுத்தது.
 
18922048_804572163034996_234178201440725
கூட்டணி இந்த எதிர்ப்புகளை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. அமிர்தலிங்கம்; நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதனை நடைமுறைப்படுத்தத் தான் போகிறார்கள் என்றும் இதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்கிற தொனியில் தமிழ் மக்களை ஆசுவாசப்படுத்த முயன்றபோதும் அது எடுபடவில்லை.
 
1970கள் வரை நடைமுறையிலிருந்த கிராமிய சபைகள், சிறு நகர சபைகள், மாநகர சபைகள் அத்தனையும் 1980 ஆண்டின் மாவட்ட அபிவிருத்திச் சட்டத்தின் கீழான திருத்தத்திற்கு உட்பட்டது. அவை உப காரியாலயங்களாக ஆக்கப்பட்டு அபிவிருத்திச் சபைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது. 1988ஆம் ஆண்டு மாவட்ட சபைகள் முறைமை நீக்கப்பட்டு சிறு நகர சபைகளும், கிராமிய சபைகளும் நீக்கப்பட்டு பிரதேச சபை முறை கொண்டுவரப்பட்டது. 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் அந்த பிரதேச சபைகள் அத்தனையும் மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 83 நகர சபைகளும் 549 கிராமிய சபைகளும் கலைக்கப்பட்டு 1981 ஆம்ஆண்டு ஜூலை 1 இலிருந்து இயங்கத் தொடங்கின
 
வெற்று மாவட்ட சபை
மாவட்ட அபிவிருத்தி சபையும் அதிகாரமில்லாத வெற்றாகவே இருந்தது. அது ஒவ்வொரு மாவட்ட அமைச்சரின் கிழ் இயங்கும். மாவட்ட அமைச்சருக்கு உதவியாக செயலாளர் காணப்படுவார். மாவட்ட அமைச்சரையும், செயலாளரினையும் ஜனாதிபதி நியமிப்பார். இவ் மாவட்ட அமைச்சர் பாராளுமன்ற குழுவிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் எனும் நியதி பின்பற்றப்பட்டது. மேலும் இம் மாவட்ட அபிவிருத்தி சபைகள் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டோர் ஆகிய உறுப்பினர்களை கொண்டு காணப்படும்.
 
முதலாவது தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்து வந்த வடக்கு கிழக்குக்கான சமஷ்டி கோரிக்கையை அரசியல் தீர்வாக தமிழ் மக்கள் முன்மொழிந்து வந்திருந்த சூழலில் மாவட்டங்களாக கூறுபோட்டது இதன் முதலாவது தோல்வி. அடுத்ததாக இச் சபை அதிகாரப்பரவலாக்கத்துக்கான பொறிமுறையாக கூறப்பட்டபோதும் இது முழு அதிகாரத்தையும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கபட விதிகளையே கொண்டிருந்தது.இந்த சபையில் ஆண்கம் வகிக்கும் மாவட்ட அமைச்சரையும், செயலாளரையும் ஜனாதிபதியே நியமிப்பார். ஆக அவர்கள் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குக்கு உரியவர்களே. நடைமுறையிலும் அது தான் நிகழ்ந்தது.
 
Exhibition%2B%252891%2529.jpg
 
இம் மாவட்ட அமைச்சர் தமது செயற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு பெறுப்பு கூற வேண்டியவராகவும் காணப்பட்டார். இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மாவட்ட அமைச்சரின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு இயல்பாகவே கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன. பாராளுமன்ற குழுவிலிருந்து மாவட்ட அமைச்சர் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் அமைச்சரவை சாராத அமைச்சர்களில் இருந்தே தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அபிவிருத்தி தொடர்பான சகல அதிகாரங்களும் அமைச்சரவை சார்ந்த அமைச்சர்களிடமே காணப்பட்டது. இதனால் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கு மாவட்ட அமைச்சர் அமைச்சரவை சார்ந்த அமைச்சர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே இருந்தது. அதாவது எந்தவொரு அபிவிருத்தி செயற்பாடுகளையும் மாவட்ட அமைச்சர் தான் திட்டமிடும் விடயங்களை கூட மேற்கொள்ள முடியாது இருந்தன. மொத்தத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாதவர்கள் கைகளிலேயே ஒட்டுமொத்த அதிகாரங்களும் குவிக்கப்பட்டிருந்தன. அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதற்குப் பதிலாக, அதிகாரங்கள் அனைத்தையும் பிடுங்கி மையப்படுத்தி தன்னகத்தே குவித்துவைத்துக் கொண்டது. அதை இனப்பிரச்சினைக்கு தீர்வு என்றது.
 
ஜே.ஆர். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை பற்றி கூறும்போது “ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர மற்றெல்லா அதிகாரங்களையும் ஜனாதிபதியாகிய தனக்கு இந்த அரசியலமைப்பு வழங்கியுள்ளது” என்று தெரிவித்திருந்ததை இங்கு நினைவு படுத்த வேண்டும் ஜே.ஆரின் அதிகார வெறி நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தே ஏற்படுத்திக் கொண்டதுடன் மட்டும் தணியவில்லை. கூடவே மாவட்ட சபை விடயத்திலும் மொத்த அதிகாரத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார்.
 
மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலை 1981 ஜூன் 4 அன்று நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
 
தமிழர்க்கு வேறு தெரிவில்லை.
Kumar-Ponnambalam.jpg
வடக்கில் அபிவிருத்தி சபையின் அதிகாரத்தை அம்மக்களுக்கு வழங்காது பலாத்காரமாக கைப்பற்றிவிட அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி விபரீதத்தில் தான் முடிந்தது. பெருமளவு தேர்தல் முறைகேடுகளை செய்தும், யாழ்ப்பாண நூல் நிலையத்தைக் கொழுத்தியும் தான் சாதித்தது. அதன் விளைவு ஆளும் அரசாங்க கட்சியை தோற்கடிப்பதற்காக வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட்டணியை வெற்றி பெறச் செய்தார்கள் மக்கள்.  
 
கூட்டணி 263,369 வாக்குகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் 10ஆசனங்களைக் கைப்பற்றியது. அத்தனை தேர்தல் மோசடிகளை செய்தும் கூட ஐ.தே.க 23,302 மட்டுமே பெற்றுக்கொண்டது. குமார் பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் 21,682 வாக்குகளைப் பெற்றது.
 
தாம் விரும்பாத மாவட்ட சபைக்கு நடைமுறை வடிவம் கொடுத்தார்கள். வரலாறு முழுவதும் இந்தபோக்கை காணலாம். தமக்கெதிரான கட்சியைத் தோற்கடிப்பதற்காக தாம் விருப்பப்படாத  கட்சியை ஆதரிப்பதே ஒரே தெரிவாக கொண்டார்கள். பேயிலேயே எது மோசமான் பேய், எது சுமாரான பேய் என்பதை அளந்து வாக்கிடும் மரபு மிதவாத ஜனநாயகப் போக்கின் அம்சமாகவே காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.
 
ஐ.தே.க மிகவும் மோசமான தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டது.  பல வாக்குப் பெட்டிகள் காணாமல் போயின. ஆனால் அந்த தேர்தல் செல்லுபடியானது என்று தேர்தல் ஆணையகம் அறிவித்தது. தேர்தலுக்காக தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பட்டிருந்த தேர்தல் ஊழியர்கள் ஐ.தே.கவின் ஆதரவாளர்களாக இருந்தார்கள்.
 
ஐ.தே.க. அம்பாறையில் மாத்திரம் வென்றது. இந்தத் தேர்தலில் ஐ.தே.க யாழ் மாவட்டத்தில் களமிறக்கிய அ.தியாகராஜா 24.05.1981இல் துவிச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1970 இல் வட்டுக்கோட்டைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமிர்தலிங்கத்தையே தோற்கடித்து வென்றவர் தியாகராஜா. அதன் பின்னர் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு கொடுத்து 1972 அரசியலமைப்புக்கும் ஆதரவளித்த அவர் தமிழ் மக்களின் அதிருப்தியையும், தமிழ் போராளிகளின் இலக்குக்கும் ஆளாகியிருந்தார்.
 
ஏற்கெனவே 1977 பொதுத் தேர்தலில் கூட்டணியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் புதல்வர் குமார் பொன்னம்பலம் அத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியித்திருந்தார். அதன் பின்னர் அகில இலங்கைதமிழ் காங்கிரசை 1978இல் ஆரம்பித்திருந்தார். அதே கட்சியின் கீழ்  மாவட்ட சபைத் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.
 
images-%25285%2529.jpg
தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முதற்தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் வாக்கு கேட்டு வந்தது இந்தத் தேர்தலில் தான். ஜே.வி.பியை ஒரு கட்சியாக தேர்தல் திணைக்களம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சுயாதீன குழுவாகவே போட்டியிட்டனர். சுதந்திரக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சிஆகியன தேர்தலை பகிஸ்கரித்த நிலையில் நாடளாவிய ரீதியில் ஐ.தே.க வுக்கு சவாலாக இருந்த ஒரே கட்சி ஜே.வி.பி தான். மொத்த வாக்குகளில் 10 வீதத்தை அவர்கள் கைப்பற்றினார்கள். முதல் தடவையாக தேர்தல் அரசியலுக்கு இந்த மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலின் மூலம் அவர்கள் பிரவேசித்து மொத்தமாக 13 உறுப்பினர்களை பெற்றுகொண்டார்கள். 
 
நம்ப நட! நம்பி நடாதே!
இந்த சபை எப்படி ஒரு கேலிக்கூத்தாக முடிவடைந்தது என்பதைப் பற்றி மகிந்த தீகல்ல எழுதிய “நவீன இலங்கையில் பௌத்தமும், பிணக்கும், வன்முறையும்” என்கிற நூலில் விளக்குகிறார்.
 
ஏ.ஜே.வில்சன் இது பற்றி தனது கட்டுரைகளிலும், நூல்களிலும் விளக்கியிருக்கிறார். ஜே.ஆரை நம்பி தாமும் மோசம் போனதாகவே அவரது தொனியில் எதிரொலித்தன. மாவட்ட சபையைக் கூட நடைமுறைப்படுத்தும் எண்ணம் ஜே.ஆருக்கு இருக்கவில்லை என்றும், கூட்டணியை அரசியல் அரங்கில் தணித்து வைத்திருப்பதே ஜே.ஆரின் உள்நோக்கமென்றும் அவர் குறிப்பிடுகிறார்.
 
மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் கேலிக்கூத்து நாடகம் அரசாங்கத்தால் அரங்கேற்றப்பட்டது இப்படித்தான். இந்த வரலாறு மீண்டும் இன்று 2017இல் நினைவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. கண்துடைப்புக்காக ஒரு தீர்வு, அதே எதிர்க்கட்சி தலைமை பதவியில் தமிழர், வெற்றுத் தீர்வு யோசனை, அந்த வெற்றுத் தீர்வில் தமிழ் தலைமையும் நேரடி பங்கேற்பு. 37 வருடங்களின் பின்னர் வரலாறு சுழற்சிமுறையில் அதே புள்ளியில் வந்து நிற்கின்றது. இந்த இடைக்காலத்தில் பெரும் இழப்பை விலையாகக் கொடுத்த ஒரு சமூகத்தால் இதனை சகிக்கத் தான் முடிகிறதா?
 
இந்தத் தேர்தல் எப்பேர்பட்ட அழிவுகளை ஏற்படுத்தியது என்பதை தனியாக பார்ப்போம்
 
துரோகங்கள் தொடரும்..
 
நன்றி - தினக்குரல்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ம்..நான் கேட்டதற்கு இது பதிலா? இந்தப் புலம்பலுக்கு பதில் எழுதுவது என் முழு- நேரத் தொழில் அல்ல! தெரியாது என்று ஒரு சொல்லில் சொன்னால் நான் பேசாமல் போக மாட்டேனா? 

இங்கு யாரும் புலம்பவில்லை கடந்தகாலங்களில் தவறுகளுக்குக்கான காரணிகளாக புலிகளே இருந்துவிட்டுப்போகட்டும் அதைத்தான் சொல்லவந்தேன் உங்களுக்கான முழுநேரத்தொழில் என்ன என அறியும் ஆவலும் எனக்கில்லை.

இப்போ பந்து சம் சும் கையில் கடந்த பத்துவருடங்களில் இவர்கள் சாதித்ததென்ன ஜனநாயக விரோதப் புலிகள் அப்புறப்படுத்தப்பட்டபின்னர். அதுவே இன்றைய கேள்வி. எமைச்சுற்றி நடந்த எழுபதுகளின் காலத்து அரசியலிலிருந்து நான் ஓரளவு அறிந்திருக்கிறேன் இ ப்போ காரணிதேடி பட்டிமன்றம் நடாத்துவதால் எதுவும் நடக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ragunathan said:

இவைதான் நடந்தன என்று என்னால் உறுதிபடக் கூறமுடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

அமிர் தழ்த்தேசியத்திற்கு எதிரானவரென்று நம்பவில்லை. அதன் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரே அவர். ஆனாலும், அவரது இந்தியச் சார்பு நிலை, குறிப்பாக இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயகத்தின் மீது மிகக் கொடூரமான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தபொழுது அமிர் செயற்பட்ட விதம் அவரை இலக்காக மாற்றியிருக்கலாம். இதுபோன்றே யோகேஸ்வரனின் கொலையும். இவர்கள் தவறு செய்திருந்தால்க் கூட கொல்வதற்குப் புலிகளுக்கு எந்த நியாயமும் இல்லை, ஆனால், புலிகளின் அன்றைய நிலையினைப் பலவீனப்படுத்தியதற்காகக் கொல்லப்பட்டார்கள்.

திருமதி யோகேஸ்வரன் அவர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்திருந்துவிட்டு, சந்திரிக்கா காலத்தில் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபட்டார். யாழ்ப்பாண உள்ளூராட்சி அமைப்பில் இருந்துகொண்டு தீவிரமான புலியெதிர்ப்பில் ஈடுபட்டவர். தமக்கெதிரான அரசியலில் ஈடுபட்டதற்காக கொல்லப்பட்டார்.

நீலன் திருச்செல்வம் சந்திரிக்கா, பீரிஸ் ஆகியோருடன் இணைந்து தீர்வுப் பொதி தயாரிப்பில் ஈடுபட்டவர். இவரது புலியெதிர்ப்பு பற்றி எம்மில் பலர் அறிந்துகொண்டிருக்கவில்லையாயினும் கூட, பேரினவாதிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார். தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, சர்வதேசத்தில் பயங்கரவாதிகள் என்று தடைசெய்யப்பட முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவரான லக்‌ஷ்மன்  கதிர்காமரின் நெருங்கிய சகா மட்டுமல்லாமல் அவரை சந்திரிக்காவிற்கு அடையாளம் காட்டியவர். இதனால் கொல்லப்பட்டார்.

லக்‌ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டது சரியா தவறா என்று நான் விவாதிக்க விரும்பவில்லை. அப்படியொரு விவாதம் வீணானது என்பதே எனது எண்ணம். 

இறுதியாக, புலிகள் ஜனநாயக அரசியலை எதிர்க்கவில்லை. அப்படி எதிர்த்திருந்தால் 1990 இல் புலிகளின் அரசியல்த்துறையை நிறுவியிருக்க மாட்டார்கள். தமிழ்க் கூட்டமைப்பை தனது அரசியல் முகமாகக் காட்டியிருக்க மாட்டார்கள்.

அவர்கள் எதிர்த்தது தேசியத்திற்கெதிரான, அதனைப்ப்பலவீனப்படுத்தும் அரசியலைத்தான். 

இங்கே நான் பட்டியலிட்டவர்களில் சிலர் நிச்சயமாக தமிழரின் நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்த சிங்களத்துடன் சேர்ந்து வேலை செய்தவர்கள். அதனால் இலக்குவைக்கப்பட்டார்கள்.

ஆனால், புலிகள் இவற்றைச் செய்தது சரியா தவறா என்றால், நிச்சயமாகச் செய்திருக்கத் தேவைதில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு

1986 கால பகுதியில் இருந்து .... (பின் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு தொடக்கம்- முடிவு)
தமிழீழ நிலப்பரப்பில் 80 வீதத்துக்கு அதிகமான நிலப்பரப்பும் 
85 வீதத்துக்கு மேலான தமிழ் மக்களும் புலிகளின் கட்டுப்பாடு பிரதேசத்தில்தான் 
வாழ்ந்தார்கள்,  இருந்தது.
இது எதோ லொட்டவில் சீட்இழுப்பில் புலிகள் வெல்லவில்லை 
அத்தனையும் உலகம் இதுவரை அறிந்திராத பல உன்னத உயிர்கொடையால் 
மட்டுமே சாத்தியமான ஒன்று.

இதை முறியடித்து மக்களையும் நிலப்பரப்பையும் கைப்பற்றி 
தமிழ்  அழிப்பை சீரும் சிறப்புமமாக முன்னெடுக்க 1981இல் இருந்து 
பல நாடுகளுடன் கைகோர்த்து சிங்களம் பல வடிவில் முனைந்து கொண்டே இருந்தது 

இதில் பல தமிழர்களை 
பல போராளிகளை 
எதோ ஒரு ஆசை சுகபோகம் காட்டி 
தமிழர் விரோத செயலுக்கு தோரோகிகள் ஆக்கி 
இவர்கள்  மூலம் அதற்கு ஒரு செயல் வாடும் கொடுத்து 
புலிகளின் உன்னத போரடடத்தை திசை திருப்ப 
இன  அழிப்பை மெருகூட்ட சிங்கள முயன்றுதான் வந்தது.

எதிரியுடன் கூடி இந அழிப்பை முன்னெடுத்த 
அல்லது எதோ ஒரு  வகையில் போராடடத்துக்கு தடையாக 
இருந்தவர்களை அகற்றாது போயிருப்பின் ....

=உங்களை நோக்கிய எனது கேள்வி=
புலிகளின் வெற்றியும் 
தமிழ் இன  அழிப்பை தடுப்பதும் இவாறு சாத்தியம் ஆகியிருக்கும்? 

நேரடி கள நிலையில் நேர் எதிர் நின்ற இராணுவத்தால் புலிகளுக்கு 
ஆபத்து என்பது என்னமோ சங்கூதி தேதி குறித்து நடப்பதாகவே இருந்தது 
எண்ணியிருக்க முடியாத இழப்புகளையும் அழிவுகளையும் புலிகள் சந்தித்தது 
என்பது திரைமறைவு சித்து விளையாடுகளால்தான் என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் 
என்று நம்புகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

பதிலுக்கு நன்றி ரகு! பெரும்பாலோனோர் போல ஒளிந்து கொள்ளாமல், அல்லது "புலிகளா கொன்றார்கள்? நேக்குத் தெரியாதே??" என்று விழிக்காமல் பதில் தர நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள்: 

புலிகளின் அரசியல் துறை என்பது அரசியல் கட்சியல்லவே? அது புலிகளின் செயல் திட்டத்தை முன்னகர்த்த உருவான பல அமைப்புகளில் ஒன்று. இறுதிப் போரின் போது மக்களை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் இணைத்ததை இந்தத் துறை செய்தது என அதில் இருந்தோர் உட்பட மக்களே சான்று பகர்கின்றார்கள். ஜனநாயகத்தின் ஒரு அம்சமான அரசியல் கட்சிகள் புலிகள் கட்டுப் பாட்டில் இருந்த வட-கிழக்குப் பகுதியில் ஒன்றும் இருக்கவில்லை! த,தே.கூ உருவாக்கம் புலிகளின் முன்முயற்சி அல்ல என்று எழுதப் பட்டும் ஆவணப் படுத்தப் பட்டும் விட்டது. "கொல்ல மாட்டோம், இனித் தேர்தலில் நில்லுங்கள்!" என்று புலிகள் த.தே.கூ கட்சிகளிடம் சொன்னது தாங்களே தமிழ் தலைமைகளுக்குப் போட்டிருந்த விலங்கைப் புலிகள் கழட்டிய நிகழ்வே ஒளிய வேறொன்றும் இல்லை. இதை எப்படி மறுதலிக்க முடியும் உங்களால்?

கதிர்காமர், நீ.தி தவிர்த்துப் பார்த்தால் புலிகள் கொன்ற மற்றத் தலைவர்கள் தங்களை மீறி தேர்தலில் நின்றது, வென்றது, புலி சாரா அரசியல் செய்ததே கொல்லப் படக் காரணம். இது எப்படி ஜனநாயகத் தடை இல்லை என்று எனக்கு விளக்குங்கள். நான் அறிய திருமதி யோகேஸ்வரன் புலி எதிர்ப்பு என்று ஒரு ஆணியும் செயற்பாட்டில் பிடுங்கவில்லை! சில சமயம் பேட்டிகளில் சாடியிருப்பார். அவரது கணவரை புலிகள் கொன்று விட்டார்கள், பாதிக்கப் பட்ட மனைவியிடமிருந்து கோப வார்த்தைகள் வருவது இயல்பில்லையா? இதெல்லாம் புலி எதிர்ப்பு செய்றபாடா? மேலும் நீலன் திருச்செல்வம் எங்கே புலிகளுக்கு எதிராக என்ன செய்தார்? தீர்வுத் திட்டங்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதினார், சந்திரிக்காவுக்கு அந்த விசயத்தில் உதவினார். ரணிலை பின்னர் நம்பியதை விட, சந்திரிக்காவைப் புலிகள் அதிகமாக நம்பி யுத்த நிறுத்தம்  செய்ததன் பின்னர் நடந்தது இது!

புலிகள் பகுதிகளில்   வெகுஜன அமைப்புகள் எத்தனை அவர்களது முடிவுகளைச் சவாலுக்குட்படுத்தின என நீங்கள் சொல்லவே இல்லை. பதில் பூச்சியம் என்பது தான். இதுவும் ஜனநாயக மறுப்பில் புலிகள் ஊறியிருந்ததன் அறிகுறி தான். உங்கள் துலங்கல் என்ன?  

பதில்கள் இருந்தால்  தாருங்கள், உரையாடுவோம்! இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கு!

ம்..நான் கேட்டதற்கு இது பதிலா? இந்தப் புலம்பலுக்கு பதில் எழுதுவது என் முழு- நேரத் தொழில் அல்ல! தெரியாது என்று ஒரு சொல்லில் சொன்னால் நான் பேசாமல் போக மாட்டேனா? 

ஜஸ்டின்,

புலிகளின் அரசியல்த்துறை என்பதன் தோற்றம்கூட ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான பரிணாமம் ஒன்றை வழங்குவதற்கே என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள் கூறியதுபோல், இறுதிக் கட்டத்தில் ஆட்சேர்ப்பில் இவர்கள் ஈடுபட்டது அதன் உண்மையான நோக்கத்திற்கு உதவவில்லை.

2001 இற்குள் பிறகான சர்வதேச ஒழுங்கின் அழுத்தமே புலிகளைசமாதானப் பேச்சுக்களுக்கோ அல்லது தமிழ்க் கூட்டமைப்பின் மூலமான அரசியலுக்கோ அவர்களைத்  தள்ளியது என்று நான் நினைக்கிறேன்.

துரையப்பா முதல், புலிகளால் இறுதியாகக் கொல்லப்பட்ட லக்‌ஷ்மண் கதிர்காமர் வரையானவர்கள் தமிழினத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்பதை நாம் நம்புகிறேன். அமிர், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் ஆகியோரின் கொலைகளுக்கான காரணங்களை நான் அறியவில்லை. ஆனால், இவர்கள் எவருமே கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை. இவர்கள் கொல்லப்பட்டதால் எமக்குக் கிடைத்த பின்னடைவுகளுடன் ஒப்பிடும்பொழுது இவர்கள் கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை  என்று நான் கூறியது ஒரு தர்க்கத்திற்காக மட்டுமே. நியாயப் படுத்தலுக்காக அல்ல.

விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் எமக்கு இன்னமும்வராதபொழுது, ஆயிரக்கணக்கில் போராளிகளைக் காவுகொடுத்து வாழ்விற்கும் சாவிற்குமிடையே போராட்டம் நடத்திய புலிகளை மட்டும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நாம் கேட்பது நடவாது.

உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1995 நில ஆக்கிரமிப்பை.. இன அழிப்பை நியாயப்படுத்த சந்திரிக்கா அம்மையார் முன்னெடுத்த நடவடிக்கைகளில் ஒன்றே.. பொம்மையார்... திருமதி.. யோகேஸ்வரன்.. அடாத்தாக தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற போலிப் போர்வையில் முன்னிறுத்தி.. சர்வதேசத்தின் முன் தன்னை சமாதான தேவதையாகக் காண்பிக்க முனைந்தார்.. சந்திரிக்கா.

அதற்கு கொடுக்கப்பட்ட விலை தான் திருமதி.. யோகேஸ்வரன்.

புலிகள் நிராகரித்த பின்னும்.. சாத்தியமே இல்லாத தமிழ் மக்களின் பெரு விருப்புக்களை பூர்த்தி செய்யாத போலித் தீர்வுத் திட்டம் மூலம்.. மீண்டும் சந்திரிக்கா அம்மையார் அரங்கேற்றிய தமிழீழ நில ஆக்கிரமிப்புக்கு வக்காளத்து வாங்கும்.. வகைக்கு திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்த நீலன்.. தமிழ் மக்கள் விரோத செயலுக்காக எச்சரிக்கப்பட்டும்.. தொடர்ந்து அதைச் செய்து வந்த நிலையில்.. மக்கள் சார்பில் அவருக்கு யாரோ தீர்ப்பெழுதினார்கள்.

ஹிந்தியப் படை வெளியேற்றத்தின் முன் பின்.. தாயகத்தில்... வெகு சன ஊடகங்கள் பல செயற்பட்டன. சில ஊடகங்கள் மக்கள் விரோத உளவுச் செயற்பாடுகளுக்கு துணை போனதன் விளைவாக இயங்க அன்றைய சூழலில் முடியாமல்.. போனவை தவிர்க்கப்பட முடியாதது ஆகும்.

இருந்தாலும்.. இன்றைய உதயன் தொடங்கி.. ஹிந்தியா ருடே.. புரன்ட் லைன்..  பிபிசி தமிழ்.. என்று பல ஓரளவு பக்கச் சார்பற்று நடந்து கொண்ட.. சனநாயகத் தன்மையை கொஞ்சம் என்றாலும் காண்பித்த.. வெகுசன ஊடகங்கள்.. தமிழர் தாயகப் பிரதேசத்தை அடையவும்.. செயற்படவும்.. விடுதலைப்புலிகளோ மக்களோ தடை போட்டிருக்கவில்லை. 

வரலாற்று உண்மைகளை.. கால ஓட்டத்தில்.. திரித்து.. எழுதுவதன்.. மூலம்.. தாம் யார் என்பதை யாழ் களத்தில் சிலர்.. இனங்காட்டிக்கொள்கின்ற போதும்.. அவர்கள்.. தமக்கு தாமே சனநாயகப் பிரியர்கள் என்ற பெயர் சூட்டிக் கொள்வது தான் மகா கொடுமை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

இங்கு யாரும் புலம்பவில்லை கடந்தகாலங்களில் தவறுகளுக்குக்கான காரணிகளாக புலிகளே இருந்துவிட்டுப்போகட்டும் அதைத்தான் சொல்லவந்தேன் உங்களுக்கான முழுநேரத்தொழில் என்ன என அறியும் ஆவலும் எனக்கில்லை.

இப்போ பந்து சம் சும் கையில் கடந்த பத்துவருடங்களில் இவர்கள் சாதித்ததென்ன ஜனநாயக விரோதப் புலிகள் அப்புறப்படுத்தப்பட்டபின்னர். அதுவே இன்றைய கேள்வி. எமைச்சுற்றி நடந்த எழுபதுகளின் காலத்து அரசியலிலிருந்து நான் ஓரளவு அறிந்திருக்கிறேன் இ ப்போ காரணிதேடி பட்டிமன்றம் நடாத்துவதால் எதுவும் நடக்காது.

அந்த தரப்புகளுக்கு ஆதி அந்தம் எல்லாம் தேவையில்லை....அதாகப்பட்டது 50கள் தொடக்கம் 70/80கள்   வரைக்கும் சிங்களவருக்கும் தமிழருக்கும் நடந்த வியாக்கியானங்கள் பிரச்சனையள் ஒண்டும் எங்களுக்கு தேவையுமில்லை...அவசியமுமில்லை.....அதாவது அன்றைய ஈழத்தமிழர்  
மீதான சிங்கள இனக்கலவரங்கள் கொலை கொள்ளை நிலம் காணிகள் பறிப்பு அதெல்லாம் தேவையில்லை.....

அந்த தரப்புக்கு பிரச்சனை புலி மட்டும் தான்.....சிங்களம் என்ன நாசகாரம் செய்தாலும் அதுகளுக்கு செம திருப்தி...... அந்த தரப்பு எங்கேயாவது சிங்களத்தை குறை சொன்ன சரித்திரமே இல்லை....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

அந்த தரப்புக்கு பிரச்சனை புலி மட்டும் தான்.....சிங்களம் என்ன நாசகாரம் செய்தாலும் அதுகளுக்கு செம திருப்தி...... அந்த தரப்பு எங்கேயாவது சிங்களத்தை குறை சொன்ன சரித்திரமே இல்லை..

இதுதான் இங்கு மெயின் ...................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1986 தொடக்கம் 80 வீதமான நிலப்பரப்பும் 85% துக்கு அதிகமான 
மக்களும் புலிகளிடம் இருந்துள்ளது.

சிங்கள அரசே புலிகளை தாண்டி எதுவும் செய்யமுடியாத நிலைமை இருந்தது 
சிங்களத்துக்கு இருந்த ஒரே வழியே தனது ஆக்கிரப்பு இராணுவத்தை வைத்து 
புலிகளின் இடங்களை பிடிப்பதும் ஓடுவதும்தான்.

அதுவரையில் மக்களை கூட சந்திக்க முடியாத அல்லது 
ஏதாவது ஒன்றை நேரில் பார்த்திராத இந்த விண்ணர்கள் 
புலிகள் இருந்த போது .......... புலிகளை தாண்டி முன்னெடுத்த 
அரசியல் என்ன?
அது யாருக்கானது? 
அதுக்கு புலிகள் எவ்வாறு தடையாக இருந்திருக்க முடியும்?

On 12/29/2018 at 9:08 AM, பிழம்பு said:
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
m.a.jpg?zoom=1.1024999499320984&resize=8
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுடனான டீலில் உருவானது என கருத்து தெரிவித்தமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு பதிலளித்தார்.
 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
 
 தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான போது நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கவில்லை. அதனால் எந்தவிதமான டீல் நடந்தது என்றோ , அல்லது டீல் நடந்ததா ? என்பது பற்றி எனக்கு  தனிப்பட்ட அறிவு கிடையாது, ஆனாலும் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த உண்மை இருக்கின்றது.
On 12/29/2018 at 11:43 AM, நிழலி said:

நுணா,

தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதையும், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் அமைப்பும், கிழக்கை சேர்ந்த மேலும் சில புத்திசீவிகளும் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர்கள் என்பதையும் எத்தனையோ பேர் தெளிவாக பலமுறை சொல்லியிருப்பதை அறியவில்லையா?. த.தே.கூ உருவாக்கத்தில் டி.சிவராமுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும் மறந்து விட்டீர்களா?
த.தே.கூ உருவாக்கப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தல் 2001 இன் போது முழுக்க முழுக்க த.தே.கூ. வினால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தான் தேர்தலில் நின்றனர். அதன் பின்னர் தான் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டு அடுத்த தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் புலிகளின் பரிந்துரைப்பினால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர்

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.

அத்துடன், புலிகள் தமிழ் கட்சிகளின் சார்பாக தேர்தலில் நின்ற / நின்று வென்ற பலரை கொல்லும் போது, மனமகிழ்ந்தவர்களும் அதை ஆதரித்தவர்களும், பட்டாசு கொளுத்தியவர்களும் தான் இன்று சயந்தனும் சுமந்திரனும் புலிகள் தமிழ் அரசியல்வாதிகளை சொன்றனர் என்று சொல்வதை பார்த்து பொங்கி எழுகின்றனர். மாற்று இயக்கம் சார்பாக, ஐதேக, சுதந்திரக் கட்சிகள் சார்பாக மட்டுமல்ல நவசமசமாஜக் கட்சியில் நின்று போட்டியிட்ட அண்ணாமலை போன்ற ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் புலிகள் கொன்று உள்ளனர்.

இப்பவாவது ஆயுதம் ஏந்தாத தமிழ் வேட்பாளர்களை / வென்றவர்களை கொன்றது சரியான செயல் இல்லை என்று புரிந்து கொள்கின்றார்கள் என்பதை காணும் போது சந்தோசம் வந்தாலும், இந்த புரிதல் ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் மறுக்க மனம் ஒப்புதில்லை.

அது என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடை விதித்திருந்தனர்.

அதனை மீறி ஜனநாயக அரசியலில் ஈடுபட்டவர்கள் அதனை மீறியமைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு பின்னரே தமிழ் அரசியல் கட்சிகள் அரசியலை முன்னெடுக்க விடுதலைப்புலிகள் இணங்கினார்கள்.
 
விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைகளுக்கு வரும் போது அதன் இடைநடுவில் செயற்பட்ட நேர்வே போன்ற நாடுகள் அவர்களுக்கும் ஜனநாயக சக்தி இருப்பது அவசியம் என வலியுறுத்தி இருந்தனர். அவ்வாறு இருந்தாலே சர்வதேச நாடுகளுடன் பேச முடியும், இலங்கை அரசாங்கத்துடன் பேசி சில இணக்க பாடுகளை ஏற்படுத்த முடியும் என்ற ஆலோசனைகளை விடுதலைப்புலிகளுக்கு பல நாடுகள் கொடுத்தன.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் ,  புலிகளினதும் தேவைப்பாடுகளும் சந்தித்தன. அதனாலையே ஜனநாயக ரீதியில் அரசியல் செய்வதற்கான அனுமதி விடுதலைப்புலிகளால் கொடுக்கப்பட்டது. என தெரிவித்தார்.
 
13 minutes ago, Maruthankerny said:

1986 தொடக்கம் 80 வீதமான நிலப்பரப்பும் 85% துக்கு அதிகமான 
மக்களும் புலிகளிடம் இருந்துள்ளது.

சிங்கள அரசே புலிகளை தாண்டி எதுவும் செய்யமுடியாத நிலைமை இருந்தது 
சிங்களத்துக்கு இருந்த ஒரே வழியே தனது ஆக்கிரப்பு இராணுவத்தை வைத்து 
புலிகளின் இடங்களை பிடிப்பதும் ஓடுவதும்தான்.

அதுவரையில் மக்களை கூட சந்திக்க முடியாத அல்லது 
ஏதாவது ஒன்றை நேரில் பார்த்திராத இந்த விண்ணர்கள் 
புலிகள் இருந்த போது .......... புலிகளை தாண்டி முன்னெடுத்த 
அரசியல் என்ன?
அது யாருக்கானது? 
அதுக்கு புலிகள் எவ்வாறு தடையாக இருந்திருக்க முடியும்?

வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டது. அப்போது  வீட்டுக்குள் இருந்து கொண்டு கம்பராமாயணமும், பகவத் கீதையும் படித்துக் கொண்டிருக்க முடியாது. முதலில் எப்படி அந்த பாம்பை துரத்துவது , பின்பு அது திரும்பவும் வீட்டுக்குள்  வராமல் தடுப்பது. அந்த நேரத்தில் எங்களுக்கு தெரிந்த அரசியல் இதுதான். சிலர் அந்த பாம்பு வீட்டுக்குள் வர, தெரிந்தும் தெரியாமலும் உதவினார்கள். வலிகள் நிறைந்த போராட்டம் நடத்தினவர்கள், அவர்களுக்கு அறிவுரை கூறினாலும், அவர்கள் அந்த பெடியலின் சொல்லு கேட்டதாக தெரியவில்லை. இப்போது புலிகள் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. அவர்கள் தான் அரசியல். மக்கள் அவர்களையே பின் பற்றுகிறார்கள் . தமிழ் மக்களின் வாக்குகள், ஒற்றுமை  சிதறி விடாமல் பாக்கிறார்கள். அதை ஒரு தரப்பு தங்களின் வெற்றி என்கிறார்கள். என்ன செய்வது எமக்குள் ஆயிரம் சண்டைகள் இருக்கலாம், பேரம் பேசும் சக்தியை இழந்து விடாமல் பாக்கிறார்கள். அடுத்த தேர்தலிலும் சுமந்திரன்   அல்ல வேறு யாரும் கூட்டமைப்பு சார்பில் வடமராட்சியில் நின்றால் வெல்லுவினம். இது யாரின் வெற்றி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

புலிகள் பகுதிகளில்   வெகுஜன அமைப்புகள் எத்தனை அவர்களது முடிவுகளைச் சவாலுக்குட்படுத்தின என நீங்கள் சொல்லவே இல்லை. பதில் பூச்சியம் என்பது தான். இதுவும் ஜனநாயக மறுப்பில் புலிகள் ஊறியிருந்ததன் அறிகுறி தான். உங்கள் துலங்கல் என்ன?

சொறி லங்கா சிங்கள பாராளுமன்ற  இனநாயகத்தை விடுவோம்.

ஓர் யுத்த பிரதேசத்தில், காலத்தில், ஜனநாயகத்தில் கூட இடம் கொடுக்க கூடாது என்று பாராளுமன்ரத்தால் தீர்மானிக்கப்படும் விடயங்களிற்றுக்கு, சாவுக்கும் வாழ்வுக்கும் என்ற கத்தி கூர்மை வெட்டும் போதும், வீழத்தப்பட்டாலும்  மானத்துடன் வீழ்வோம் என்று போராடியவர்களிடம் நீங்கள் இவற்றை எதிர்பார்க்கிறீர்கள்.

சொறி லங்கா சிங்கள பாராளுமன்ற இனநாயகத்தை கூட சனநாயமாக காட்டுவது, சிங்களத்தின் ராணுவ வலிமையே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Elugnajiru said:

இங்கு யாரும் புலம்பவில்லை கடந்தகாலங்களில் தவறுகளுக்குக்கான காரணிகளாக புலிகளே இருந்துவிட்டுப்போகட்டும் அதைத்தான் சொல்லவந்தேன் உங்களுக்கான முழுநேரத்தொழில் என்ன என அறியும் ஆவலும் எனக்கில்லை.

இப்போ பந்து சம் சும் கையில் கடந்த பத்துவருடங்களில் இவர்கள் சாதித்ததென்ன ஜனநாயக விரோதப் புலிகள் அப்புறப்படுத்தப்பட்டபின்னர். அதுவே இன்றைய கேள்வி. எமைச்சுற்றி நடந்த எழுபதுகளின் காலத்து அரசியலிலிருந்து நான் ஓரளவு அறிந்திருக்கிறேன் இ ப்போ காரணிதேடி பட்டிமன்றம் நடாத்துவதால் எதுவும் நடக்காது.

அன்புள்ள எழுஞாயிறு, 
நன்றி குறு விளக்கத்திற்கு. ஆனால் நீங்கள்  இடியப்பச் சிக்கலின் காரணிகளைத் தெரிந்திருந்தால், ஏன் த.தே.கூவோ அல்லது அவர்கள் இடத்தில் இருக்கும் புலிகள் சாராத ஒரு தலைமையோ சில இடங்களில் இணங்கியும் சில இடங்களில் தமிழர் நலனை இரண்டாம் இடத்தில் வைத்தும் (அண்மையில் ரணில் ஆதரவைச் சொல்கிறேன்) சில இடங்களில் அடம் பிடித்தும் நடக்க வேண்டி இருக்கிறது என்று புரிந்திருப்பீர்கள். எழுபது மட்டுமல்ல, அதற்கு முதலே 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் வந்த காலத்தில் இருந்து இந்தச் சிக்கலின் பெரிய காரணி சிங்களவர்கள்! இலங்கையில் சிங்களவர்களின் 2/3 பெரும் பான்மை எடுத்து தமிழர்களுக்கு 90% சார்பான ஒரு தீர்வைக் கொண்டு வருவது இன்னுமொரு தலைமுறைக்கு இயலாது! இதனால் அவர்களது விருப்பத்தோடு அடையக்கூடிய எமக்கு ஒரு 50% சார்பான தீர்வைப் பெறும் முயற்சி மட்டுமே இப்போது முடியும்!  எனக்கு விளங்கிய வரை, த.தே.கூ இதையே செய்ய முயல்கிறது. இந்தச் சிக்கலின் ஏனைய காரணிகள்: இந்தியா, இந்தியாவை மீறி எதுவும் செய்ய விரும்பாத மேற்கு நாடுகள். இந்தக் காரணியால் எங்களுக்கு தனி நாடு கிடைக்காது, இந்தியா விடாது. எனவே உள்ளதை வைத்து கை நழுவிப் போய்க்கொண்டிருக்கும் நிலம், மாகாண அதிகாரம், மாவட்ட அதிகாரம், வெளிநாடுகளின் கரிசனை என்பவற்றைக் காப்பாற்றுவது மட்டுமே இப்போதைக்கு சாத்தியமான ஒன்று என்பது என் அபிப்பிராயம். இதை விட வேறு தெரிவுகள் இருந்தால், அவை என் சிறு மூளைக்கு எட்டவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். உரையாடலாம். 

மேலும், இந்த விவாதம் புதிய விடயங்களை அறியத் தர வேண்டிய ஒரு அரிய வாய்ப்பு என நினைக்கிறேன். இதில் என் தனிப்பட்ட இயல்புகள், தொழில், இன்னபிற மீதான தாக்குதல்கள் ஒருவருக்கும் ஒன்றையும் புதிதாகப் படிப்பிக்காது என்பதை இந்தத் தாக்குதலை நடத்துவோர் புரிந்து கொள்ள வேண்டும்! இவர்களுக்கு இது பற்றி நான் எழுதும் ஒரே பதிலும் கடைசிப் பதிலும் இது! பயனுள்ள கருத்துகளை இடுவோருக்கு தொடர்ந்து துலங்கல் தருவேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Ahasthiyan said:

வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டது. அப்போது  வீட்டுக்குள் இருந்து கொண்டு கம்பராமாயணமும், பகவத் கீதையும் படித்துக் கொண்டிருக்க முடியாது. முதலில் எப்படி அந்த பாம்பை துரத்துவது , பின்பு அது திரும்பவும் வீட்டுக்குள்  வராமல் தடுப்பது. அந்த நேரத்தில் எங்களுக்கு தெரிந்த அரசியல் இதுதான். சிலர் அந்த பாம்பு வீட்டுக்குள் வர, தெரிந்தும் தெரியாமலும் உதவினார்கள். வலிகள் நிறைந்த போராட்டம் நடத்தினவர்கள், அவர்களுக்கு அறிவுரை கூறினாலும், அவர்கள் அந்த பெடியலின் சொல்லு கேட்டதாக தெரியவில்லை. இப்போது புலிகள் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. அவர்கள் தான் அரசியல். மக்கள் அவர்களையே பின் பற்றுகிறார்கள் . தமிழ் மக்களின் வாக்குகள், ஒற்றுமை  சிதறி விடாமல் பாக்கிறார்கள். அதை ஒரு தரப்பு தங்களின் வெற்றி என்கிறார்கள். என்ன செய்வது எமக்குள் ஆயிரம் சண்டைகள் இருக்கலாம், பேரம் பேசும் சக்தியை இழந்து விடாமல் பாக்கிறார்கள். அடுத்த தேர்தலிலும் சுமந்திரன்   அல்ல வேறு யாரும் கூட்டமைப்பு சார்பில் வடமராட்சியில் நின்றால் வெல்லுவினம். இது யாரின் வெற்றி ?

இங்கு குத்தி முறிக்கிறவர்களின் கதையை பார்த்தால் 
புலிகள் எதோ லாட்ரி சீட்டு வாங்கி வென்று இடத்தை சிங்கள அரசு அவர்களிடம் கொடுத்தது போல்  
இருக்கிறது.

இந்த பச்சை துரோகிகளின் 
துரோகத்தலும் நாசகார பரப்புரைகளாலும் 
பாதிக்கபட்ட மக்களையும் அவர்களுக்குக்காக போராடி மடிந்த 
புலிகளையும் 
இந்த மீட்பர்கள் எதோ மீட்டுவிட்டு பேசுவதுபோலதான் 
இங்க எழுதுகிறார்கள்.

யாழ் ஆஸ்பத்தரியில் இந்திய இராணுவம் கொலைவெறி ஆடி 
மருத்துவர்களையும் நோயாளிகளையும் கொன்று 4 நாட்கள் கழிந்து 
அமிர்தலிங்கம் என்ற பச்சை துரோகி இந்திய வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு 
பேட்டி கொடுக்கிறார் ............. இந்திய அமைதிகாக்கும் படை இறப்பர் ரவைகளைத்தான் 
பாவிக்க்கிறார்கள் ஆதலால் மக்களுக்கு அங்கே எந்த பாதிப்பும் இல்லை என்று. 
இந்த கேடு கேட்ட துரோகியை தமிழ் இரத்தம் ஓடும் ஒருவன் ஏன் வெட்டி கொன்று போட்டுருக்க கூடாது?
யாழில் இறந்துபோன  பாலியல் சித்திரவதைக்கு ஆளான ஒரு பெண்ணை தன்னிலும் 
இங்கு வாந்தி எடுக்கும் கூட்டம் மீட்டிருக்கும்மா? 

கூத்தமைப்புக்குதான் இடியப்ப சிக்கல் இருக்கிறது 

புலிகளுக்கு ரயில் ரோட்டும் 
இரண்டு வழி கை வே யும் இருந்தது.
போட்டு கொடுத்தவர்களே இவர்கள்தானே ..........
இவளவு செய்தும் புலிகள் துரோகிகளை போட்டு தள்ளினால் 
கோபம் வரத்தானே செய்யும்?? 

Link to comment
Share on other sites

.... அரசியல்/சகோதர படுகொலைகள் எம்மை புதைப்பதற்கு மிக முக்கிய காரணிகளில் ஒன்றென்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை!!

... துரையப்பாவை விஞ்சிய அமிர், அமிரை விஞ்சிய சித்தார்த்தன், மாவை, டக்லஸ், கதிர்காமர் என்று இன்று சுமந்திரனில்! ... நாளை சுமந்திரனை விஞ்ச இன்னுமொரு ?! ... போடுவதினால் தடுக்கப்படுமா, எட்டப்பர் கூட்டம் உருவாவது?

... ஆனால் இதில் நகைச்சுவை என்னவெனில், ஈழத்தமிழ் அரசியல்/சகோதர படுகொலைகள் என்றவுடன்,  எம்மவர் மட்டுமல்ல சர்வதேசமும் புலிகளை முத்திரை குத்துவதுதான்!!!

சகோதர படுகொலைகளின் தோற்றுவித்தவர்களே, இன்று சுமந்திரனின் வேறூற்றுக்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியோ அல்லது தமிழரசுக்கட்சிதான்!

அன்று தமிழ் இளைஞர்களை தமது அரசியல் வாழ்வுக்காக பலியாக்கிய அமிர்/மாவை/யோகேஸ்வரன்... போன்றோரே என்பது மறுக்க முடியாத உண்மை! அன்று சிங்கள சுதந்திர கட்சியில் இருந்து யாழ் மாநகரசபை முதல்வராகவும் இருந்த துரையப்பாவின் அபிவிருத்தி செயர்பாடுகள், தமது அரசியல் வாழ்வுக்கு குறுக்கிடுகிறது என்பதனால்,ஈழத்தமிழர் வரலற்றில் "துரோகி" எனும் பட்டம் அமிர் கும்பலினால் சூட்டப்பட்டு,  இளைஜர்களை ஏவி சுட்டுக்கொல்லப்பட்டவரே துரையப்பா! ... 

பின்னர் சகோதரப்படுகொலைகள் புளொட், ரெலோ அமைப்புகளுக்குள் ஆயிரக்கணக்கில் நிகழ்ந்தவைகள் இன்று மறைக்கப்பட்டுள்ளன>.

83/84 காலபகுதியில் ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்ற சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பின், பலரது விரல்கள் புலிகளை நோக்கியே நீன்றன. பின் தான் தெரியவந்தது, சிறி சபாரட்னத்தின் உத்தரவில் ரெலோவினரால் இக்கொலைகள் நடாத்தப்பட்டுள்ளன என்று!

அமிர்தலிங்கள், யோகேஸ்வரன் போன்றோர் புலிகளின் இரு உறுப்பினர்களால் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டனர். புலிகளின் உறுப்பினர்கள் சுட்டமையினால் இக்கொலைகளும் புலிகளின் தலையில்! ... உண்மையில் எந்த பிராந்திய வல்லரசின் உத்தரவில், அன்று பிராமதாச-புலிகளின் பேச்சுவார்த்தையை குழப்புவதற்காக, யார் மூலம் அவ்வுதரவு வழங்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டது என்பதெல்லாம், புலிகளின் அழிவுடன் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது!

பின்னர் ஈபிடிபி/கருணாவினால் நடத்தப்பட்ட படுகொலைகள் ... மண்ணெண்ணை மகேஸ்வரன்,  ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், ... பெரிய பட்டியல் இவற்றை பற்றி சுமந்திரனின் பினாமிகள் சயந்தன் உட்பட சுமந்திரன் கூட கதைப்பார்களா??

... கொழும்பு வட்டாரத்தில் கதிர்காமர் கொலை, கோத்தபாயாதான் திட்டமிட்டு சுட்டுக்கொன்றதாக தகவல். சகோதரரின் அரசியல் நகர்வுக்கு பாரியதடையாக கதிர்காமர் இருந்தததினால், தமிழ்த்தரப்பையே வைத்து கொல்லப்பட்டதாக தகவல். புலிகளும் உரிமையும் கோரவுமில்லை, உறுதியாக மறுக்கவுமில்லை, இது புலிகளின் தலை மீதே வீழ்ந்தது.

கூட்டமைப்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் "Sleeping Cell Leading Member" ஆன சுமந்திரன்/சுமந்திரனின் அல்லக்கைகள் வரலாற்றை/உண்மைகளை திட்டமிட்டு மறைத்து, எஜமானர்களின் உத்தரவுகளை கடந்த சில காலங்களாக சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்கள்!

.... நாளை சுமந்திரன் சிங்களத்தினால் போடப்படத்தான் போகிறார்! ... ஆனால் அக்கொலையும் புலிகளின் ஆதரவாலர்கள் மேல்தான்! ... நாமும் விசிலடுத்து வரவேற்போம்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.