Sign in to follow this  
கிருபன்

நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: வெற்றியை நோக்கி இந்தியா

Recommended Posts

நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: வெற்றியை நோக்கி இந்தியா

d0227-15459183655679-800-5-720x450.jpg

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய 399 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற வேண்டுமாயின் 170 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது.

ஆட்டநேர முடிவில் பெட் கம்மின்ஸ் 40 ஓட்டங்களுடனும், நதன் லியோன் 1 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர். மெல்பேர்ன் மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக புஜாரா 106 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 82 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் நதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 151 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிம் பெய்ன் மற்றும் மார்க்கஸ் ஹரிஸ் ஆகியோர் தலா 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் பும்ரா 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதற்கமைய அவுஸ்ரேலியா அணிக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது இந்தியா அணி சார்பில், மயங்க் அகர்வால் அணியின் அதிகபட்ச ஓட்டமாக 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதற்கமைய 399 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, களமிறங்கியுள்ள அவுஸ்ரேலியா அணி ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 2 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், அவுஸ்ரேலியா அணி, 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நாளை, போட்டியின் இறுதிநாளை எதிர்கொள்ளவுள்ளது.

 

http://athavannews.com/நான்காம்-நாள்-ஆட்டம்-நிற/

 

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this