Jump to content

ட்ரம்பின் சிரிய மீளப்பெறும் உத்தரவு வாஷிங்டனில் அரசியல் கொந்தளிப்பை தூண்டியுள்ளது 


Recommended Posts

ட்ரம்பின் சிரிய மீளப்பெறும் உத்தரவு வாஷிங்டனில் அரசியல் கொந்தளிப்பை தூண்டியுள்ளது 

By Bill Van Auken 
 

சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து 2,000 அமெரிக்கத் துருப்புக்களையும் அடுத்த 60 முதல் 100 நாட்களில் மீளப்பெறுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள ஒரு தெளிவான உத்தரவு, பென்டகனிலும், Capitol Hill இல் உள்ள உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடமும், அத்துடன் வாஷிங்டனின் நேட்டோ நட்பு நாடுகளிலும் அதிர்ச்சியையும் கூர்மையான எதிர்ப்பையும் தூண்டியுள்ளது.

நிர்வாக மற்றும் இராணுவ மூத்த அதிகாரிகள் மூலம் ஊடகங்களுக்கு கசிந்த இந்த மீளப்பெறும் உத்திரவு வெளிப்படையாக தெரிவிப்பதை புதனன்று ட்ரம்ப் அறிவித்த பின்வரும் ஒரு சுருக்க டுவிட்டுரை உறுதிப்படுத்தியது, “சிரியாவில் ISIS ஐ நாங்கள் தோற்கடித்துவிட்டோம், ட்ரம்ப் ஜனாதிபதியாக இருக்கும் போது அங்கே இருந்ததற்கான ஒரே காரணம் அது தான்.”

அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரான சாரா சாண்டர்ஸ் அதே நாளில் விடுத்த ஒரு அறிக்கை, “இந்த பிரச்சாரத்தை அடுத்த கட்டத்திற்கு நாங்கள் மாற்றவிருக்கும் நிலையில், அமெரிக்கத் துருப்புக்களை தாயகத்திற்கு திரும்பியழைக்க நாங்கள் ஆரம்பித்துள்ளோம்,” என்றும் “தேவை ஏற்படும் போது அமெரிக்க நலன்களை பாதுகாக்க அனைத்து மட்டங்களிலும் துருப்புக்களை மீண்டும் ஈடுபடுத்தும் வகையில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தயார் நிலையில் இருப்பர்” என்றும் தெரிவித்தது.

வெள்ளை மாளிகை அறிவிப்பைத் தொடர்ந்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் டானா வொய்ட் வெளியிட்டதான, “ISIS-கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியத்தை கூட்டணி விடுவித்தது, என்றாலும் ISIS க்கு எதிரான பிரச்சாரம் இன்னும் ஓயவில்லை” என்ற மற்றொரு அறிவிப்பு அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அடியோடு முரண்படுவதாக இருந்தது. ISIS என்பது இஸ்லாமிய அரசு பயங்கரவாதக் குழு என்பதன் சுருக்கமாகும்.

“ISIS இயங்கும் பகுதிகளில் அதனை தோற்கடிக்க எங்களது பங்காளிகள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்று அவர் தெரிவித்ததுடன், “படை பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு பாதுகாப்பிற்கான காரணங்களை” குறிப்பிட்டு அதற்கான காலவரையறை பற்றி எதையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், ராய்ட்டர்ஸ் பத்திரிகை, சிரியாவிற்குள் செயலாற்றும் அமெரிக்க அரசுத்துறை பணியாளர்கள் அனைவரும் அந்த நாட்டிலிருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டனர் என்று புதனன்று ஒரு பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி தெரிவித்ததை குறிப்பிட்டது.

ட்ரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டொகன் இடையிலான கடந்த வெள்ளிக்கிழமை தொலைபேசி உரையாடலின் போது எட்டப்பட்ட ஒரு உடன்படிக்கையின் நேரடி விளைவாகவே இந்த மீளப்பெறும் திட்டங்கள் உருவாகின என்றும் அந்த அதிகாரி சேர்த்துக் கூறினார். மேலும், “அந்த தொலைபேசி உரையாடலில் எட்டப்பட்ட உடன்படிக்கையின் படி தான் அனைத்தும் செயல்படுத்தப்படுகின்றன,” என்றும் தெரிவித்தார்.

சிரிய-துருக்கிய எல்லைக்கு அருகே சிரிய குர்திஷ் பிரிவினைவாத YPG போராளிகளின் பிரசன்னம் பற்றிய துருக்கிய கவலைகள் குறித்து விவாதிப்பதற்காகவே அந்த உரையாடல் நிகழ்த்தப்பட்டது என கூறப்படுகிறது. வடகிழக்கு சிரியாவில் அமெரிக்கா ஆதரவளித்து வந்த பினாமி தரைப்படையான சிரிய ஜனநாயகப் படைகளின் (Syrian Democratic Forces) ஒரு முக்கிய கூறாக இந்த YPG உள்ளது. எர்டோகன் அரசாங்கம், YPG ஐ, துருக்கிய குர்திஷ் பிரிவினைவாத PKK இன் ஒரு விரிவாக்கமாக பார்க்கிறது, இதற்கு எதிராக அங்காரா ஒரு தசாப்த காலம் நீண்ட கிளர்ச்சி எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்தி வந்ததுடன், YPG க்கு எதிரான ஒரு துருக்கிய தலையீடு தவிர்க்கமுடியாததாக உள்ளது என்று பலமுறை அச்சுறுத்தியுள்ளது. இந்நிலையில், போர் கவசத்துடன் கூடிய துருக்கியப் படைகள் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேட்டோ கூட்டணியின் ஒரு உறுப்பினர் நாடான துருக்கியுடன் நிகழக்கூடிய இராணுவ மோதலுக்கான வாய்ப்பை தவிர்க்க சந்தேகத்திற்கு இடமின்றி வாஷிங்டன் ஆர்வமாக உள்ளது, அதே நேரத்தில் வாஷிங்டனின் மறைமுக ஆதரவைப் பெற்ற தோல்வியடைந்த ஜூலை 2016 இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் பாதிப்பிற்கு உள்ளான அமெரிக்க-துருக்கிய உறவுகளை மீட்டெடுக்கும் நோக்கமுள்ள வேறு சில நடவடிக்கைகளை ட்ரம்ப் வெள்ளை மாளிகை எடுத்துள்ளது.

மீளப்பெறுதல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ரேய்த்தியான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Turkey Patriot பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை விற்பதற்கு திட்டமிடப்பட்ட 3.5 பில்லியன் டாலர் ஒப்பந்தம் பற்றி காங்கிரஸூக்கு அரசுத்துறை தெரிவித்தது. ரஷ்யாவிடம் இருந்து S-400 விண்ணில் பாயும் ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான தனது உள்நோக்கம் பற்றி முன்பே அங்காரா சமிக்ஞை செய்திருந்தது. அத்தகைய கொள்முதல், US F-35 ரக போர் விமானங்களை துருக்கி கொள்முதல் செய்வதை முன்கூட்டியே தவிர்க்கச் செய்திருக்கும் என்பதுடன், நேட்டோ உடனான நாட்டின் உறவுகளை ஒரு முறிவு புள்ளிக்கு இட்டுச் சென்றிருக்கும்.

அமெரிக்கத் துருப்புக்களை மீளப்பெறும் இந்த அறிவிப்பு, கிழக்கு சிரியாவிற்குள் ஊடுருவும் அதன் அச்சுறுத்தலைத் தொடங்கவும், எல்லையில் இருந்து குர்திஷ் படையினரை விரட்டவும் எர்டோகன் அரசாங்கத்தை அனுமதிக்கும் ஒரு சமிக்ஞையாக இருக்கலாம். அமெரிக்கத் துருப்புக்கள் அங்கு இல்லாத நிலையில், டமாஸ்கஸ் உடன் YPG ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த முனையலாம் என்பதுடன், அப்பிராந்திய கட்டுப்பாட்டை ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் சிரிய அரசாங்கத்திற்குக் கீழ் மீட்டெடுக்கலாம்.

அமெரிக்காவின் சட்டவிரோதமான சிரிய ஆக்கிரமிப்பு என்பது, ஐ.நா.விடமிருந்தோ அல்லது சிரிய அரசாங்கத்திடமிருந்தோ எவ்வித அங்கீகாரமுமின்றி, அக்டோபர் 2015 இல் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்டு, அதுவே ட்ரம்பின் கீழ், வடகிழக்கு சிரியாவில் குறைந்தபட்சம் 2,000 அமெரிக்கத் துருப்புக்களையும், தெற்கில் ஈராக் மற்றும் ஜோர்டன் எல்லைகளுக்கு அருகில் சிறப்புப் படைகளையும் நிலைநிறுத்துவது என்ற வகையில் விரிவாக்கம் கண்டது.

சிரியாவில் ISIS க்கு எதிராக இந்த போர் ஆரம்பிக்கப்பட்டமையானது, ஆசாத் அரசாங்கத்தை கவிழ்க்கும் ஒரு இரத்தக்களரியான போரில் அல் கொய்தாவுடன் இணைந்த போராளிகளுக்கு சிஐஏ வழங்கிய ஆதரவு அடிப்படையிலான “ஆட்சி மாற்றம்” குறித்து தோல்வியுற்ற அமெரிக்க மூலோபாயத்தில் ஒரு மாற்றத்திற்கு சமிக்ஞை செய்தது. ISIS கட்டுப்பாட்டில் இருந்த ராக்கா மற்றும் ஏனைய நகரங்களை இடித்து தகர்த்து வெறும் குவியல்களாக்கிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுக்களைக் கொண்ட ஒரு கொடூரமான பிரச்சாரத்திற்கு சிரியாவில் களத்தில் நின்ற அமெரிக்கத் துருப்பினர் உடனுழைத்தனர்.

2016 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிரியாவில் இருந்து அமெரிக்கப் படையினரை திரும்பப் பெறுவேன் என்று ட்ரம்ப் சபதமேற்று, அதன்படி அவர் செயல்படுவதை எதிர்த்து பென்டகன், உளவுத்துறை மற்றும் ஏனைய தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் “Mad Dog” மாட்டிஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் மற்றும் பணியாளர்களின் கூட்டு தலைவர்களுக்கான தலைவர் ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் போன்ற முக்கிய பிரமுகர்கள் சில வாரங்களுக்கு முன்பு கூட, சிரியாவில் ஒரு வெளிப்படையான முடிவில்லாத அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாயம், அது ஈரானிய மற்றும் ரஷ்ய செல்வாக்கை பின்வாங்கச் செய்வதற்கும், மற்றும் அசாத் ஆட்சியை தூக்கியெறிந்து டாமஸ்கஸில் ஒரு முதுகெலும்பற்ற கைப்பாவை அரசாங்கத்தை திணிக்கவும் முற்படும் வாஷிங்டனின் உண்மையான இறுதியான நோக்கத்தை பாதுகாப்பதற்கும் நோக்கம் கொண்டிருந்தது என்பதை வலியுறுத்தினர்.

இந்த மாத தொடக்கத்தில், டன்போர்ட் அவரது பங்கிற்கு, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க திறம்பட்ட “பாதுகாப்பை” வழங்க வடகிழக்கு சிரியாவில் 35,000 முதல் 40,000 வரையிலான பினாமி துருப்புக்களைக் கொண்ட படைகளுக்கு பயிற்சியையும் ஆயுதங்களையும் வழங்கும் அதன் இலக்கை நோக்கி ஐந்தில் ஒரு பங்கு அளவிற்கே அமெரிக்க இராணுவம் முன்னேறியுள்ளது எனத் தெரிவித்தார்.

வடகிழக்கு சிரியாவை ஆக்கிரமிப்பதில், அமெரிக்க இராணுவமும் அதன் பினாமி படையினரும், மிக முக்கியமாக, சிரியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தளங்கள் உட்பட அநேகமாக நாட்டின் முக்கால் பங்கு பகுதியையும், அத்துடன் ஈராக் உடனான அதன் கிழக்கு எல்லைப் பகுதியையும் கட்டுப்படுத்தி கைப்பற்றியுள்ளனர். இந்த ஆதிக்கத்தை பராமரிப்பதன் மூலம், போரில் சிதைந்த நாட்டில் நிகழும் எந்தவொரு மறுஒருங்கிணைவு மற்றும் மறுகட்டமைப்பை தடுப்பதாகவும், மற்றும் அமெரிக்கா அதன் மூலோபாய நோக்கங்களை அடையும் வரை கொலைகார மோதலைத் தொடர்வதாகவும் வாஷிங்டனின் நோக்கம் இருந்தது.

இந்த திட்டமிடப்பட்ட மீளப்பெறும் அறிவிப்பு, கொள்கை மாற்றத்தின் காரணமாக கண்மூடித்தனமான தோற்றப்பாடுள்ள காங்கிரஸில் இருக்கும் முன்னணி குடியரசுக் கட்சியினரிடம் இருந்து கூர்மையான விமர்சனங்களை பெற்றது.

2011 ல் ஈராக்கில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை ஒபாமா திரும்பப் பெற்றது குறித்து முந்தைய குடியரசு கட்சியினர் எழுப்பிய விமர்சனங்களை முன்வைத்து, இந்த மீளப்பெறுதல் கூட, “ஒபாமாவைப் போல ஒரு மாபெரும் குற்றத்தை” செய்துவிட்டதாக செனட்டர் லிண்ட்சே கிரஹாம் விவரித்தார்.

“சிரியாவை விட்டு படையினரை வெளியேற்றுவதற்கு எதிராக அதிகளவு இராணுவ ஆலோசனைகள் இருந்த போதிலும், அதை மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது,” என்றும், “இது ஒரு மிகப்பெரிய தவறாகும். இது [அப்படியே] திரும்ப மாற்றி அமைக்கப்படவில்லை என்றால், வரும் ஆண்டுகளில் இந்த நிர்வாகத்திற்கும், மற்றும் அமெரிக்காவிற்கும் குடைச்சல் கொடுக்கும்” என்றும் குடியரசுக் கட்சி செனட்டர் மார்கோ ருபியோ டவீட் செய்தார்.

சிரியா குறித்த அமெரிக்காவின் இந்த அப்பட்டமான கொள்கை மாற்றம், வாஷிங்டனின் நெருங்கிய நேட்டோ கூட்டாளியான அதற்கு  எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சரான டோபியாஸ் எல்வுட், ட்ரம்பின் முடிவை அவர் “கடுமையாக எதிர்ப்பதாக” அறிவித்து ஒரு அறிக்கை விடுத்தார். மேலும், “இது [ISIS] ஏனைய வடிவங்களிலான தீவிரவாதத்திற்கு மாறியுள்ளது என்பதுடன், அது குறித்த அச்சுறுத்தல் மிகுந்த உயிர்ப்புடன் உள்ளது,” என்றும் ஒரு டுவிட்டுரையில் அவர் தெரிவித்தார்.

முன்கூட்டிய எச்சரிக்கையைப் பெற்றவர்களில் ஒருவராக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவும் இருந்தார். அவர், “சிரியாவில் இருந்து அவர்களது படைகளை வெளியேற்ற ஜனாதிபதி நோக்கம் கொண்டிருப்பதாக அமெரிக்க நிர்வாகம் என்னிடம் தெரிவித்தது. அந்தப் பிராந்தியத்தில் அவர்களது செல்வாக்கை நிலைநாட்ட வேறு வழிகளை அவர்கள் கொண்டிருப்பதை அவர்கள் தெளிவுபடுத்தினர்,” என்று இஸ்ரேலிய செய்தித் தாளான Haaretz க்கு தெரிவித்தார்.

அமெரிக்க “செல்வாக்கு” எனும் முக்கிய கருவி, கட்டார் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலுமான தளங்களில் இருந்து தொடங்கப்பட்ட அமெரிக்க வான் தாக்குதல்களை நாசமாக்கிவிட்டன. இதற்கிடையில், கிழக்கு சிரியாவிற்குள் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திறன்வாய்ந்த குறைந்தபட்சம் 5,000 துருப்புக்களை ஈராக் எல்லை முழுவதிலும் நிறுத்தும் வகையில் அமெரிக்கா படைகளை பராமரித்து வருகிறது.

சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை மீளப்பெறும் அறிவிப்பு, சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் மற்றும் அரசிற்குள் பரஸ்பர மோதல்களை உக்கிரப்படுத்தும், அதே நேரத்தில் மத்திய கிழக்கில் பதட்டங்களை அதிகரிக்கும். இப்பிராந்தியத்தில் ஆயுதமேந்திய மோதல்களின் எந்தவொரு விரிவாக்கமின்மைக்கும் முன்னறிவிப்பாக இது இல்லை. சிரியாவில் “களத்தில் படையினரின் கால்பதிப்பு” இருக்கிறதோ அல்லது இல்லையோ, ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ ஆக்கிரமிப்பு என்பது மட்டும் தொடர்ந்து உக்கிரமடையும்.

https://www.wsws.org/tamil/articles/2018/12-Dec/syri-d24.shtml

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.