Jump to content

சுவையான ஆட்டுக்கால் சூப் செய்ய வேண்டுமா...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1545999423-2831.jpg
 
 
தேவையான பொருட்கள்:
 
ஆட்டுக்கால் - 250 கிராம்
மிளகு - 2 மேசைக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
சீரகம் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
தக்காளி - 2
இஞ்சி - 2 அங்குல துண்டு
பூண்டு பல் - 3
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு
 
செய்முறை விளக்கம்:
 
தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடித்து வைக்கவும்.
 
காய்ந்த மிளகாய், வெங்காயம் ஒன்று, இஞ்சி, பூண்டு, தக்காளி ஒன்று, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாக அரைத்து  வைக்கவும்.
 
முதலில் ஆட்டுக்காலை தீயில் போட்டு சுட்டெடுக்கவும். கடையிலே அப்படி செய்தும் விற்பார்கள். அப்படி செய்வதால் அதிலுள்ள ரோமம் எல்லாம் உதிர்ந்துவிடும். நன்கு சுத்தம் செய்து போதிய அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 10-15 விசில் வரும்  வரை வேக விடவும்.
 
எண்ணெய்யை காய வைத்து மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம்  சிறிதளவு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அதிகம் குழைய தேவையில்லை. அதனால் சிறிதளவு வெந்ததும் வேகவைத்துள்ள  ஆட்டுக்கால் மற்றும் தண்ணீரை இதனுடன் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கலவையை சேர்த்து தீயை குறைத்து வைக்கவும்.
 
பதினைந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லி தூவினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழம்பு அண்ணே... வருசம்  முடியிற  வெள்ளிக்கிழமை  ஆவது, 
எங்களுக்கு,  "சைவ சூப்"  செய்யுற முறையை.. காட்டித் தரக் கூடாதா?  :grin:

மனுசர்....  கொஞ்சம் பக்தியாய் இருப்பம்  எண்டு  பார்க்க,    "ஆட்டுக் காலில் சூப்"   போட்டு... 
எங்கள் விரதத்தை...  குழப்புவது  நியாயமா?  😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப் குழம்பு மாதிரி இருக்கு.உறைப்பாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ...இதை பார்க்க அரியண்டமாய் இருக்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.