Jump to content

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தடையாகவிருப்பதனால் வீதியில் இறங்கிய மக்கள்!

Recommended Posts

பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தி சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தடையாக இருப்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தியில் உளள சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் மதுபானசாலையை அகற்றக் கோரி பொது மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகர சபை உறுப்பினர்கள் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பள்ளிவாசலுக்கு அருகில் மதுபானசாலை, வியாபார உரிமம் இல்லாது இயங்கலாமா? வேண்டாம் வேண்டாம் மதுக்கடை வேண்டாம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு அமைதியான போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இந்த போராட்டத்தின் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த 7 வருட காலமாக எந்த விதமாக அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வருகின்றதாகவும், இப்பகுதியில் மதுபானக்கடை இருப்பதனால், பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று வர முடியவில்லை.

சனசமூக நிலையத்திற்குச் சென்று மாணவர்கள் படிக்க முடியவில்லை. மதுபானசாலையில் மதுவாங்கி கொண்டு வந்து அந்தப் பகுதியில் வைத்து அருந்துவதுடன், வீதியால் செல்பவர்களுக்கு மதுப்பிரியர்கள் இடையூறு விளைவிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதேவேளை, இந்த மதுபானசாலை சிவன் கோவிலுக்கு அருகாமையில் இருப்பதனால், அதனை அகற்றக் கோரி பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் இருப்பதனால் மேலதிகமான வழக்குகளைப் பதிவு செய்ய முடியாதுள்ளது. பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, மதுபானசாலை தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த மதுபானசாலையை அகற்ற முடியாது என தெரிவித்திருந்தார். இந்த மதுபானசாலையை அகற்ற முடியாதவாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தடையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.

அதேவேளை, இந்த மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை சிறியிடம் மகஜர் கையளித்ததுடன், தமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும், இந்த மதுபானசாலையை தடை செய்யாவிடின் தொடர்ந்தும் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்

https://www.ibctamil.com/srilanka/80/111461

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களே அறிந்திருக்கிறார்கள், உயர் நீதி மன்றில் வழக்கு இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை எதுவும் மேற்கொண்டு செய்ய இயலாது! இதை சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாகச் சொன்னால் அது மதுபான சாலையை அகற்ற அவர் தடை என்று அர்த்தமா? குட்டிச் சுவரில் வேலை வெட்டியில்லாமல் குந்தியிருந்து அரைகுறைகள் எழுதும் இதெல்லாம் ஒரு செய்தியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை தாண்டி தான் கிருபன் படிக்க போய் இருப்பார்🤔🤔🤔🤔

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

இதை தாண்டி தான் கிருபன் படிக்க போய் இருப்பார்🤔🤔🤔🤔

கிருபன் அவ்வளவு சின்ன பிள்ளையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

கிருபன் அவ்வளவு சின்ன பிள்ளையா?

ஏன்?

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

ஏன்?

இந்த சட்டவிரோத சாராயத் தவறணை கடந்த 7 வருட காலமாகத் தான் எந்த விதமாக அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வருகின்றதாக செய்தியில் உள்ளது.

வேறொன்றும்  கருத்தாழமுடைய விடயம் இல்லை மீரா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, போல் said:

இந்த சட்டவிரோத சாராயத் தவறணை கடந்த 7 வருட காலமாகத் தான் எந்த விதமாக அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வருகின்றதாக செய்தியில் உள்ளது.

இது பரு-யாழ் வீதியில் சிவன் கோவில் பிள்ளையார் வாசலுக்கு முன்பாக பல தசாப்தங்களாக உள்ளது.

(நம்பாதீங்க நம்பாதீங்க சைக்கிள்காரரை நம்பாதீங்க- இந்த விடயத்தில்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

இது பரு-யாழ் வீதியில் சிவன் கோவில் பிள்ளையார் வாசலுக்கு முன்பாக பல தசாப்தங்களாக உள்ளது.

(நம்பாதீங்க நம்பாதீங்க சைக்கிள்காரரை நம்பாதீங்க- இந்த விடயத்தில்)

ம்...பார்த்தீர்களா? குட்டிச் சுவர் செய்தி ஆசிரியர்களின் செய்தி இப்படித் தான் இருக்கும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மதுபானக் கடை இருப்பதால் அயலில் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் தான். குறிப்பாக பூதராயர் (?) ஒழுங்கையில் குடியிருப்பவர்களுக்கு. குடித்து விட்டு சண்டை & ஒழுங்கையில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம்.

Link to comment
Share on other sites

13 minutes ago, MEERA said:

இது பரு-யாழ் வீதியில் சிவன் கோவில் பிள்ளையார் வாசலுக்கு முன்பாக பல தசாப்தங்களாக உள்ளது.

தற்போதைய நடைமுறைகளின் படி ஒரு மதுவியாபார நிலையம் பாடசாலை, கோவில், வைத்தியசாலை எல்லைகளில் இருந்து 100 m தூரத்துக்கு அப்பால் அமையவேண்டும்.

நீங்கள் சொல்லும் குறித்த கடை சிவன் கோவில் எல்லையிலிருந்து 10 m தூரத்துக்குள், தெருவின் அடுத்த பக்கத்தில், அமைந்திருந்ததாக எனக்கு நினைவுள்ளது.

இதன் காரணமாகவே கடந்த 7 வருடங்களாக இது அனுமதிப்பத்திரமின்றி இயங்குகிறது என்பது எனது கணிப்பு!

Link to comment
Share on other sites

49 minutes ago, Justin said:

அவர்களே அறிந்திருக்கிறார்கள், உயர் நீதி மன்றில் வழக்கு இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை எதுவும் மேற்கொண்டு செய்ய இயலாது! இதை சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாகச் சொன்னால் அது மதுபான சாலையை அகற்ற அவர் தடை என்று அர்த்தமா? குட்டிச் சுவரில் வேலை வெட்டியில்லாமல் குந்தியிருந்து அரைகுறைகள் எழுதும் இதெல்லாம் ஒரு செய்தியா?

அது தானே,
சிங்கள அரசுகளின் ஜனநாயகத்துக்கும், தமிழினப் படுகொலைகாரர்களை போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பதற்கும் நாய்படாதபாடாக ஓடி ஓடி உழைக்கும் சுமந்திரன் பற்றிய செய்திகளை இப்படி கண்டபடி ஊடங்கங்கள் பிரசுரிக்கலாமா?
பிரசுரித்து சுமந்திரன் ஆதரவாளர்களை திடுக்கிட வைக்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

என்ன போல்? இப்படி flat ஆக சிங்கள என்று மட்டும் விளிக்கிறீர்கள்? உங்கள் "சிங்கள பௌத்த பேரின..." டைட்டில் எங்கே? உங்களுக்கே கையுளைந்து விட்டதா? ஆமாம் திடுக்கிட்டுத் தான் விட்டேன்!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, போல் said:

தற்போதைய நடைமுறைகளின் படி ஒரு மதுவியாபார நிலையம் பாடசாலை, கோவில், வைத்தியசாலை எல்லைகளில் இருந்து 100 m தூரத்துக்கு அப்பால் அமையவேண்டும்.

நீங்கள் சொல்லும் குறித்த கடை சிவன் கோவில் எல்லையிலிருந்து 10 m தூரத்துக்குள், தெருவின் அடுத்த பக்கத்தில், அமைந்திருந்ததாக எனக்கு நினைவுள்ளது.

இதன் காரணமாகவே கடந்த 7 வருடங்களாக இது அனுமதிப்பத்திரமின்றி இயங்குகிறது என்பது எனது கணிப்பு!

ஆம் சிவன் கோயிலில் இருந்து 10m தூரத்திலும் பள்ளிவாசலில் இருந்து 20/25 m தூரத்திலும் உள்ளது.

Link to comment
Share on other sites

மதுபான கடையை நீக்க சொல்லி போராடுவது மிகவும் தேவையான ஒன்று , சுமந்திரன் இதனை உடனடியாக செய்யலாம் . அவருக்கு பரிவு பேசுபவர்கள் முதலில் அவசியத்தை புரிய வேண்டும் .
சுமந்திரனுக்கு எங்கள் விடயங்களை விட சிங்களத்திக்கு கழுவுவது தான் அவரின் வேலை .
இங்க கொஞ்ச பேர் அவருக்கு கழுவுவது பிழைப்பாகி போய்விட்ட்து ....

2 hours ago, Justin said:

அவர்களே அறிந்திருக்கிறார்கள், உயர் நீதி மன்றில் வழக்கு இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை எதுவும் மேற்கொண்டு செய்ய இயலாது! இதை சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாகச் சொன்னால் அது மதுபான சாலையை அகற்ற அவர் தடை என்று அர்த்தமா? குட்டிச் சுவரில் வேலை வெட்டியில்லாமல் குந்தியிருந்து அரைகுறைகள் எழுதும் இதெல்லாம் ஒரு செய்தியா?

இதனை நாங்கள் நம்பிடடம் , அடுத்த தேர்தலில் தெரியும் சுமந்திரனுக்கு மக்கள் யார் என்று .
ரணிலுக்கு சேவகம் செய்யட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிலே குடிச்சிட்டு கும்மியடிக்கிற நாவன்னா கூட்டங்களுக்கு கோவிலுக்கு பக்கத்தில மதுபானக்கடை இருந்தால் என்ன விபச்சார  விடுதி இருந்தால் என்ன ? வாங்கிற காசுக்கு நாங்கள் செம்பு தூக்கியே தீருவோம் எண்டத்தில மாத்திரம் குறியாய் இருக்கிதுகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

இதை தாண்டி தான் கிருபன் படிக்க போய் இருப்பார்🤔🤔🤔🤔

நான் பள்ளிக்கூடம் போகும் காலத்தில் மதுபான வியாபார நிலையம் இருப்பதை எல்லாம் கவனத்தில் எடுக்கவில்லை. கூல் ட்ரிங்ஸ் பாருக்குள் போனாலே யாரும் தெரிந்தவர்கள் கண்டால் செவிட்டைப் பொத்திப் போட்டு அனுப்புவார்கள். இந்த இலட்சணத்தில் மதுபானக் கடைக்கு கிட்டக் கூட போகமாட்டோம்!

இப்போது அப்படியல்ல. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தண்ணிப்பார்ட்டி வைக்கின்றார்கள்😳

சட்டங்களை மாற்றியதால் மதுபானக் கடைகள் பாடசாலை, வழிபாட்டுத் தலங்களுக்கு அண்மையில் இருக்கக்கூடாது என்றுதான் நினைக்கின்றேன்.

11 hours ago, போல் said:

கிருபன் அவ்வளவு சின்ன பிள்ளையா?

இப்பவும் சின்னப்பிள்ளைதான்😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபாதாசன் said:

மதுபான கடையை நீக்க சொல்லி போராடுவது மிகவும் தேவையான ஒன்று , சுமந்திரன் இதனை உடனடியாக செய்யலாம் . அவருக்கு பரிவு பேசுபவர்கள் முதலில் அவசியத்தை புரிய வேண்டும் .

நீங்கள் லோயரா? யாழ் நகரத்திலோ அல்லது வேறு நகரத்திலோ மதுபான லைசென்ஸ் எப்படி வழங்ப படுகிறது என்று தெரியுமா? எப்படி சும், excise வழங்கிய லைசென்சை இல்லாமலாக்கலாம் என்று கூற முடியுமா? உயர் நீதி மன்றில் வழக்கு இருந்தால் என்ன அர்த்தம் என்றாவது தெரியுமா? இவற்றுக்கெல்லாம் பதில் இருந்தால் தாருங்கள், இல்லையேல் "தாசனாக" இருந்து விட்டுப் போங்கள்! யாருக்கும் நன்மையில்லை, விக்கினமும் இல்லை!😎

3 hours ago, Eppothum Thamizhan said:

அமெரிக்காவிலே குடிச்சிட்டு கும்மியடிக்கிற நாவன்னா கூட்டங்களுக்கு கோவிலுக்கு பக்கத்தில மதுபானக்கடை இருந்தால் என்ன விபச்சார  விடுதி இருந்தால் என்ன ? வாங்கிற காசுக்கு நாங்கள் செம்பு தூக்கியே தீருவோம் எண்டத்தில மாத்திரம் குறியாய் இருக்கிதுகள்!

நாவன்னா என்றால் என்ன? நீங்கள் அதிகம் மற்றவர்களிடம் கேட்ட சொல்லாக இருப்பதால் உங்களுக்குப் பரிச்சயமாக இருக்கும்! எனக்கு அர்த்தம் விளங்கவில்லை! செம்பு தூக்குவதும் தூக்காததும் என் சுதந்திரம்! நான் குடிப்பதும் என் உழைத்த காசில், தென் ஆபிரிக்காவில் கடைசி யுத்தத்திற்கு தேவையெண்டு சேர்த்த காசில் தின்னும் உங்களுக்கே இவ்வளவு கெத்தென்றால், அமெரிக்காவில் சொந்த உழைப்பில் வாழும் எனக்கு எவ்வளவு இருக்க வேணும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று தருவதாக கூறி வென்று நாடளுமன்றம் சென்றவர்கள் இவ்வளவுகாலமும் ஒட்டு போட்டு அனுப்பிய தமிழர்களை மறந்து தங்கள் வயிறுகளையும் தங்கள் சந்ததியின் வயிறுகளையும் வளர்ப்பது ஒன்றே முக்கிய கடமையாக கொண்டது பத்தாது தங்களை நோக்கி கேள்விகள் கேட்க்க கூடாது எனும் கபட எண்ணத்துக்கு அமைவாக கிளிநொச்சியில் சிறிதரன் மதுபான சாலை இல்லை ஓநாய் போல் கொஞ்சகாலத்துக்கு முன் அழுதவர் . இவர் சுமத்திரன் சட்டம் முழுதும் படிச்சு கிளிச்சவர் என்னும் மமதையில் இருப்பவர் அனுமதியின்றி இயங்கும் மதுசாலை பற்றி கதைக்க கூடாது என்று சொல்கிறார் தமிழர்கள் குடித்து போதையில் இருக்கணும் அப்பத்தான் பொய்யும் பித்தலாட்டமும் செய்து மறுபடியும் பதவிக்கு வரலாம் எனும் கபட எண்ணமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Eppothum Thamizhan said:

அமெரிக்காவிலே குடிச்சிட்டு கும்மியடிக்கிற நாவன்னா கூட்டங்களுக்கு கோவிலுக்கு பக்கத்தில மதுபானக்கடை இருந்தால் என்ன விபச்சார  விடுதி இருந்தால் என்ன ? வாங்கிற காசுக்கு நாங்கள் செம்பு தூக்கியே தீருவோம் எண்டத்தில மாத்திரம் குறியாய் இருக்கிதுகள்!

அப்பிடி போடுங்க அரிவாளை......tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணமே தெரியாமல் சுமந்திரனுக்கு எதிராக போராடிய முன்னணி உறுப்பினர்கள்!

December 28, 2018
mun-696x392.jpg

பருத்தித்துறையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய மதுபானச்சாலை ஒன்றுள்ளது. கோயில், பாடசாலைக்கு அருகில் உள்ளது, அதை அகற்ற வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கைகளும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால், யப்பான் லைசன்ஸ் உள்ள அந்த மதுபானச்சாலையை இதுவரை அகற்ற முடியவில்லை.

இந்த விவகாரம் இப்பொழுது உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையிலும் இருக்கிறது.

இப்பொழுது அதுவல்ல விடயம். இது தொடர்பாக நேற்று ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. அதுதான் விடயம்.

இந்த மதுபானச்சாலையை அகற்றும்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என சொற்ப அளவானவர்கள் நேற்று ஒரு ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது, ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர் சுரேஷ்- மதுபானச்சாலையை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தடையாக இருக்கிறார், அதனை கண்டிக்கிறோம் என்றார்.

அதாவது, மதுபானச்சாலையை அகற்ற வேண்டும், அதை அகற்ற தடையாக இருக்கும் சுமந்திரனை கண்டிக்கிறோம் என்ற இரண்டு காரணங்களிற்காக அந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக காட்டப்பட்டது.

அந்த சம்பவம் நடந்ததும், அந்த செய்தியை தமிழ்பக்கமும் பிரசுரித்திருந்தது. ஆனால், முன்னணி சொல்வதை போல, சுமந்திரன் மதுபானச்சாலைக்கு ஆதரவாக செயற்படவில்லையென்ற அடிக்குறிப்பையும் பிரசுரித்திருந்தோம்.

அந்த சம்பவம் ஒரு செய்தியாக நடந்தது. ஒரு ஊடகமாக அதை பிரசுரித்திருந்தோம். அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் இப்பொழுது குறிப்பிடுகிறோம்.

அந்த செய்தி நேற்றையதினம் கைக்கு கிடைத்ததுமே, முன்னணி தவறான காரணமொன்றை முன்வைத்திருக்கிறது என்பது தெரிந்தது. ஏனெனில், இறுதியாக நடந்த பருத்தித்துறை பிரதேசசெயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும், மதுச்சாலையை அகற்ற வேண்டுமென சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். முதலில் வந்த செய்தியை பிரசுரித்து விட்டு, மாலையில் பருத்தித்துறை நகரசபை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசினோம்.

அதில் ஒரு உறுப்பினர் நீண்டகால பரிச்சயமுடையவர். ஆர்ப்ப்பாட்டத்தை பற்றி கேட்டோம். விலாவாரியாக சொன்னார். சரி, மதுச்சாலையை அகற்ற சுமந்திரன் எப்படி தடையாக இருந்தார் என கேட்டோம். நீண்டகால பரிச்சயத்தின் அடிப்படையில் சொன்னார்- உண்மையில் தனக்கு அதைப்பற்றி தெரியாது என. ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் மதுச்சாலைக்கு எதிராக சுமந்திரனும் பேசியிருந்தாரே என கேட்க, அப்படித்தான் பத்திரிகைகளில் படித்த நினைவுள்ளது, தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

சுமந்திரனை கண்டிப்பது கூட தமது நோக்கமாக இருக்கவில்லை, சுரேஷ் தான் (போராட்டத்தில் ஊடகங்களிடம் பேசியவர்) திடீரென அப்படி சொன்னார். தமக்கு அதைப்பற்றி தெரியாது என்றார்.

இன்னொரு உறுப்பினரை தொடர்பு கொண்டு, தமிழ்பக்கத்தில் இருந்து பேசுகிறோம் என்றோம். தமது போராட்டத்தை பற்றி செய்தி வெளியிட்டுள்ளீர்கள் என நன்றி சொன்னார். சில விசயங்களை பேசிய பின்னர், கொஞ்சம் நெருக்கமாக பேச ஆரம்பித்த பின்னர், முதலாவது உறுப்பினரிடம் கேட்ட கேள்வியை அவரிடமும் கேட்டோம். “சுமந்திரன் மதுச்சாலைக்கு ஆதரவாக இருக்கிறார் என எனக்கு தெரியாது. போராட்டத்திற்கு போன பின்னரே அறிந்து கொண்டேன்“ என கள்ளம்கபடமில்லாமல் சொன்னார்.

முன்னணியின் நகரசபை மூத்த உறுப்பினருடன் பேசினோம். மதுச்சாலை போராட்டத்தில் சுமந்திரனுக்கு எதிராக பேசப்பட்டவற்றை அவர் கவனிக்கவேயில்லையென்றார்.

சரியென விசயத்தை இத்துடன் முடித்து விட்டோம்.

போராடத்தான் வேண்டும். அதற்கு சரியான காரணங்களை கண்டு போராட வேண்டாமா?

http://www.pagetamil.com/30014/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பிரண்டிக் கடை" என்று அழைக்கப்படும் இந்த மதுபானக்கடை சிவன் கோயில் கட்டப்படுவதற்கு முன்னரே இருந்ததற்கான ஆவணத்தை தற்போதைய உரிமையாளர் நீதிமன்றில் சமர்ப்பிருந்தார் என்று கேள்விப்பட்டேன்.

19 hours ago, கிருபன் said:

நான் பள்ளிக்கூடம் போகும் காலத்தில் மதுபான வியாபார நிலையம் இருப்பதை எல்லாம் கவனத்தில் எடுக்கவில்லை. கூல் ட்ரிங்ஸ் பாருக்குள் போனாலே யாரும் தெரிந்தவர்கள் கண்டால் செவிட்டைப் பொத்திப் போட்டு அனுப்புவார்கள். இந்த இலட்சணத்தில் மதுபானக் கடைக்கு கிட்டக் கூட போகமாட்டோம்!

இப்போது அப்படியல்ல. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தண்ணிப்பார்ட்டி வைக்கின்றார்கள்😳

சட்டங்களை மாற்றியதால் மதுபானக் கடைகள் பாடசாலை, வழிபாட்டுத் தலங்களுக்கு அண்மையில் இருக்கக்கூடாது என்றுதான் நினைக்கின்றேன்.

நான் எழுதியது 

On 12/28/2018 at 1:35 AM, MEERA said:

இதை தாண்டி தான் கிருபன் படிக்க போய் இருப்பார்🤔🤔🤔🤔

நீங்கள் இதை தாண்டி படிக்க போனது, ஆனால் நான் இதை தாண்டி தான் பள்ளிக்கூடம் போனது,

Link to comment
Share on other sites

எமது கலாச்சாரம் தான் உயர்ந்தது அதை ஐரோப்பிய நாடுகளில் வாழும் எமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு மறுபக்கம் மதுபானச்சலை உள்ள தெருவால் மக்கள் சுதந்திரமாக செல்லமுடியவில்லை என்று புலம்பல் வேறு. இந்த கலாச்சாரத்தையா ஐரோப்பிய பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறோம். ஏனெனில் ஐரோப்பாவில் ரெஸ்ட்லோராண்டில் மது அருந்தும் நபர்களின் பக்கத்து மேசையில் குடும்பந்த்துடன் பிள்ளைகளுடன்  கெளரவமாக அமர்ந்து மதிய உணவையோ இரவு உணவையோ அருந்த முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

நாவன்னா என்றால் என்ன? நீங்கள் அதிகம் மற்றவர்களிடம் கேட்ட சொல்லாக இருப்பதால் உங்களுக்குப் பரிச்சயமாக இருக்கும்! எனக்கு அர்த்தம் விளங்கவில்லை! செம்பு தூக்குவதும் தூக்காததும் என் சுதந்திரம்! நான் குடிப்பதும் என் உழைத்த காசில், தென் ஆபிரிக்காவில் கடைசி யுத்தத்திற்கு தேவையெண்டு சேர்த்த காசில் தின்னும் உங்களுக்கே இவ்வளவு கெத்தென்றால், அமெரிக்காவில் சொந்த உழைப்பில் வாழும் எனக்கு எவ்வளவு இருக்க வேணும்?

நாவன்னா என்றால் உங்களுக்கு விளங்காதுதான். ஆங்கிலத்திலே பச்சையா சொன்னாத்தான் விளங்கும்போல? southern Africa  என்றால் தென் ஆப்பிரிக்கா என்று மட்டும்தான் விளங்கிற ஆங்கில அறிவையும் சட்ட அறிவையும் உங்களோட வச்சு கொள்ளுங்கோ! மத்தவன்ட காசில் தின்னவேண்டுமென்ற அவசியம் உங்களைப்போல் எனக்கில்லை. அப்படி ஒரு ஈனப்பிறவியாக என்னை என் பெற்றோர் வளர்க்கவுமில்லை.

அமெரிக்காவிலே இருந்தால் நீங்கள் ஒன்றும் சட்ட  ஆங்கில மேதையல்ல. டிரம்ப் ரேஞ்சுக்கு மற்றவர்களை  மட்டம் தட்டுவதை கொஞ்சம் குறைத்தால் களத்தில் மரியாதை கிடைக்கும்.

நானும் அந்த மதுபானக்கடையை தாண்டித்தான் பள்ளிக்கூடம் சென்றிருக்கிறேன். அதனால் அருகில் உள்ள குடும்பங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும் பார்த்திருக்கிறேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

On 12/28/2018 at 7:31 AM, Eppothum Thamizhan said:

அமெரிக்காவிலே குடிச்சிட்டு கும்மியடிக்கிற நாவன்னா கூட்டங்களுக்கு கோவிலுக்கு பக்கத்தில மதுபானக்கடை இருந்தால் என்ன விபச்சார  விடுதி இருந்தால் என்ன ? வாங்கிற காசுக்கு நாங்கள் செம்பு தூக்கியே தீருவோம் எண்டத்தில மாத்திரம் குறியாய் இருக்கிதுகள்!

ஐயா எ. த, 

நாவன்னா, செம்பு தூக்குதல், கழுவுதல் போன்ற வார்த்தைகள் உங்கள் குடும்பச் சூழலில் அதிகம் புளங்கியிருப்பதால் உங்களுக்குப் பரிச்சயம் இருக்கக் கூடும்! ஆனால், முன் பின் தெரியாதவர்கள் இருக்கும் பொது இடங்களில் இப்படியான பிரயோகங்கள் இருக்கக் கூடாது என்று இலங்கையில் மூன்றாம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுத்திருப்பார்கள்! நீங்கள் டபுள் புறொமோஷனில் வந்ததால் மிஸ் பண்ணி வீட்டீர்கள், எனவே இப்போது தெரிந்து கொள்ளுங்கள்! நீங்கள் சௌதெர்ன் இல் இருந்தால் என்ன சௌத்தில் இருந்தால் என்ன? ஆட்டையைப் போட்ட காசில் சாப்பிடுவதில் வாழும் இடம் ஒரு கேடா? மரியாதை.. ம்ம்? தருவோருக்கு மட்டுமே கொடுத்தே எனக்குப் பழக்கம்! இந்த விஷயத்தில் நான் ட்ரம்ம் விசிறி தான்! two can play this game! 

Link to comment
Share on other sites

On 12/28/2018 at 4:31 AM, Eppothum Thamizhan said:

அமெரிக்காவிலே குடிச்சிட்டு கும்மியடிக்கிற நாவன்னா கூட்டங்களுக்கு கோவிலுக்கு பக்கத்தில மதுபானக்கடை இருந்தால் என்ன விபச்சார  விடுதி இருந்தால் என்ன ? வாங்கிற காசுக்கு நாங்கள் செம்பு தூக்கியே தீருவோம் எண்டத்தில மாத்திரம் குறியாய் இருக்கிதுகள்!

1 hour ago, Eppothum Thamizhan said:

 மத்தவன்ட காசில் தின்னவேண்டுமென்ற அவசியம் உங்களைப்போல் எனக்கில்லை. அப்படி ஒரு ஈனப்பிறவியாக என்னை என் பெற்றோர் வளர்க்கவுமில்லை.

ஈனப்பிறவிகளை அவர்கள் எழுதுவதில் இருந்து தானே நாம் அடையாளம் காண்கிறோம்? 
நீங்களே உங்களை  அடையாளம் காட்டி விட்டீர்களே? 
மற்றவர்களின் காசில் தின்னும் ஈனப்பிறவிகள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை என்பது தெரிந்தது தானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.