Sign in to follow this  
nunavilan

"இரணைமடு நீர்மட்டம் 39 அடியாக அதிகரிக்கும் வரையில் ஏன் வான்கதவுகள் திறக்கப்படவில்லை"

Recommended Posts

Image may contain: people standing, ocean, sky, cloud, beach, outdoor and water
Image may contain: sky, cloud, ocean, beach, outdoor, water and nature
Vicky Vigneswaran

"இரணைமடு நீர்மட்டம் 39 அடியாக அதிகரிக்கும் வரையில் ஏன் வான்கதவுகள் திறக்கப்படவில்லை" என்ற கேள்வி ஒன்றையும் 
"மழை பெய்துகொண்டிருந்தபோது பொறுப்பான பொறியியலாளர்கள் பொறுப்பற்று யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள்" என்ற கருத்து ஒன்றையும் பார்த்தபோது அவசரத் தகவல் திரட்டல் ஒன்றை எத்தனித்தேன்.

எனது நீர்சார் அறிவையும் இணைத்து....

1. ஆங்கிலத்தில் antecedent conditions என்று சொல்லப்படுகிற 'உடனடியாக முன்னர் இருந்த நிலை' என்ன என்பது கடும் மழைக்காலத்தில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கும். உலர் நிலத்தில் பெய்யும் மழைக்கும் ஏற்கெனவே மழை பெய்து முழு ஈரமாக இருக்கும் நிலத்தில் பெய்யும் மழைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பின்னைய மழை ஒவ்வொரு துளியையும் வெள்ளமாக மாற்றும்.

2. Rainfall intensity என்ற மழைவீழ்ச்சி வீதம் வெள்ளம் வருவதில் கணிசமான பங்கை வகிக்கும். ஒரு வாரத்தில் பெய்து வெள்ளம் வராத மழை ஒரே நாளில் பெய்தால் வெள்ளம் வரும். இதுவே சில மணிநேரத்தில் பெய்தல் வெள்ளம் (flash flood) அடித்துக்கொண்டு ஓடும்.

3. வானிலை அவதான நிலையம் 78 மில்லிமீற்றர் மழை வரும் என்று சொன்னபோது 375 - 400 மில்லிமீற்றர் மழை ஒரு நாளில் கொட்டித் தீர்த்தது. அதாவது, கிளிநொச்சியின் ஆண்டுச் சராசரி (1240 மில்லிமீற்றர்) மழையின் காற்பங்கு ஒரு நாளில் அடித்திருக்கிறது. Risk Assessment என்ற இடர் மதிப்பீடு இந்த அளவுக்கு வெள்ளம் வந்து வைக்கும் என்று சுட்டியிருக்காது. இரவுகளில் தமது தொலைபேசிகளைத் திறந்து வைத்திருந்தாலும் பொறியியலாளர்களும் பொறுப்பாளர்களும் தூக்கத்துக்குப் போயிருப்பார்கள்.

4. எனது தகவல்களின்படி, பெருமழை கொட்டி நிலைமை சிக்கலானபோது கிளிநொச்சியில் நின்ற பொறியியலாளர் சுதாகரன் உடனடியாகவே இரணைமடு சென்றிருக்கிறார். குள முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர் பரணீதரன் யாழ்ப்பாணத்திலிருந்து அவசரமாகப் புறப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறார். தீர்மானம் எடுக்கவேண்டிய தொழில்சார் நிபுணர்கள் இரவிலேயே குளத்தருகில் இருந்திருக்கிறார்கள்.

5. நீரேந்து பகுதிக் கிராமங்களில் நீர்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும் அந்த உயர்வு கொஞ்சம் கொஞ்சமாகவே நடந்ததால் நீரேந்துபகுதி மக்கள் உயர்வை அவதானித்து நகர்வார்கள் என்று ஒரு தீர்மானத்தை அந்த இடத்தில் பொறியியலாளர்கள் எடுத்திருப்பார்கள். இதேவேளை, குளத்தின் இறங்குபகுதில் நிலைமை மோசமாக இருந்திருக்கும். ஏற்கெனவே நனைந்து போயிருக்கும் பிரதேசத்தில் திடீரென்று திறந்துவிடப்படும் அணை வெள்ளம் குறைந்தது நான்கு கிராமங்களையாவது சிதைத்திருக்கும். மக்களை இரவிரவாக எழுப்புகிற வசதியோ அவர்களது ஆடு மாடுகளை அவிழ்த்து காக்கிற வாய்ப்போ இருந்திருக்காது. திக்குத் தெரியாது ஓடி அவர்களே நீரில் அடிபட்டுப் போயிருப்பார்கள். இப்போது அதிக உயிர் இழப்பில்லாது தப்பியிருக்கும் கிளிநொச்சி, கதவுகளை இரவுடன் திறந்துவிட்டிருந்தால் மக்களையும் கால்நடைகளையும் ஆனையிறவு உப்புநீரேரியில் மட்டுமல்ல சுண்டிக்குளம் தொடுவாயிலும் பொறுக்கி எடுத்திருக்கும்.

6. அன்று இரவே கொஞ்சம் கொஞ்சமாகக் கதவுகளைத் திறக்க ஆரம்பித்து பகல் வெளிச்சத்தின் பின்னரே மக்களை எச்சரித்து கதவுகள் மேலும் திறக்கப்பட்டன. அப்படியிருந்தும் சில கிராமங்களில் கடற்படையின் துணையுடன் மக்கள் மீட்கப்பட்டிருந்தனர்.

7. கதவுகளைத் துரிதமாக திறந்திருந்தால் பல வீதிகளும் வீடுகளும் நீருடன் போயிருக்கும்.

திறந்தாலும் தவறு - திறக்காவிட்டாலும் தவறு என்றால் பொறியியலாளர்கள் எங்கே போவது?

இவ்வளவு மழை வரும் என்று உறுதியாகத் தெரிந்திருந்தால் முதலே கதவுகளைத் திறந்து நீரை வெளியேற்றி குறைந்த அளவு நீருடன் இரணைமடுவை வைத்திருந்திக்கலாம்.

எனது தகவல்கள் உண்மையானால் இந்த அளவுடன் கிளிநொச்சியைக் காத்த பொறியியலாளர்களைப் பாராட்டலாம் என்றே தோன்றுகிறது.

  •  
     
     
     
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this