Jump to content

மட்டக்களப்பில் முதன்முறையாக உருவாகியுள்ள முழுநீள திரைப்படம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் முதன்முறையாக உருவாகியுள்ள முழுநீள திரைப்படம்

_18087_1545633664_61D91661-3EBD-4D0D-A6F9-C585E50EC4E1.jpeg

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முதல்முறையாக முழு நீள திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளிவரவுள்ளது.

வேட்டையன் என்னும் பெயரில் உருவாகியுள்ள குறித்த திரைப்படத்தின் பாடல்களின் வெளியீட்டு மற்றும் திரைப்பட முன்னோட்ட நிகழ்வு ட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கூழாவடி அஞ்சனா கிராண்ட் மண்டபத்தில் வேட்டையன் படக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வேட்டையன் திரைப்படத்தின் இயக்குனர் எஸ்.என்.விஸ்ணுஜன் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திரைப்படத்தில் கடமையாற்றிய கலைஞர்கள்,இரசிகர்கள்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் கலைத்துறையில் தனக்கென தனியிடம் கொண்ட இளம் கலைஞர்கள் மரக்கன்றுகள் வழங்கி வித்தியாசமான முறையில் கௌரவிக்கப்பட்டன.

அத்துடன் வேட்டையன் திரைப்படத்தின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதுடன் பாடல்கள் அடங்கிய இறுவெட்டும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உருவாகியுள்ள முழுநிள திரைப்படத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த நிகழ்வுக்கு பெருமளவனோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.battinaatham.net/description.php?art=18087

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டையன் மக்களை வேட்டையாடி மனங்குளிரட்டும் ,பணம் பெருகட்டும்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...படம் மட்டு மண்ணை பிரதிபலிக்க வேண்டும்...வெற்றி நடை போட வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2018 at 2:22 AM, ரதி said:

வாழ்த்துக்கள்...படம் மட்டு மண்ணை பிரதிபலிக்க வேண்டும்...வெற்றி நடை போட வேண்டும் 

ரெயிலர் பார்த்தன் ஆனால் இந்திய சாயல் தான் அதிகம்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர் படைப்பு  என்று சொல்ல கோமாளி கிங்சையும் பார்த்தன் ம் பரவாயில்லை என்று சொல்லலாம் கோமாளி கிங்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ரெயிலர் பார்த்தன் ஆனால் இந்திய சாயல் தான் அதிகம்  

 

படம் எப்ப வெளியிலை வரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎29‎/‎2018 at 10:41 AM, தனிக்காட்டு ராஜா said:

ரெயிலர் பார்த்தன் ஆனால் இந்திய சாயல் தான் அதிகம்  

 

நன்றி படம் வரட்டும்...பார்ப்போம் 

19 hours ago, குமாரசாமி said:

படம் எப்ப வெளியிலை வரும்?

பெப்ரவரி என்று நினைக்கிறேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு நீள திரைப்படம் என்றால் என்ன? 

இதன் அர்த்தம் 70 - 210 நிமிடம் வரை இருக்கவேணும் அல்லது இருக்கலாம் 
என்கிறார்கள். 

இதை தவிர வேறு ஏதும் வரைமுறை இதற்கு இருக்கிறதா?

எப்போ அடிக்கடி இப்படி முழு நீள திரைப்படம் பற்றி வருகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

முழு நீள திரைப்படம் என்றால் என்ன? 

இதன் அர்த்தம் 70 - 210 நிமிடம் வரை இருக்கவேணும் அல்லது இருக்கலாம் 
என்கிறார்கள். 

இதை தவிர வேறு ஏதும் வரைமுறை இதற்கு இருக்கிறதா?

எப்போ அடிக்கடி இப்படி முழு நீள திரைப்படம் பற்றி வருகிறது 

சிக்கலான கேள்வி. வேறு வேறான வரைவிலக்கணங்கள் உள்ளன.

 

What is a feature film?

A feature film (or just “feature”) is a full-length film, the kind you buy a ticket for at your local theater. The term is also used to distinguish between films that are first shown theatrically versus those made for television.

A modern feature is typically between 80 and 180 minutes long, but different groups have different minimum lengths to be considered a feature. The Screen Actors Guild definition sets the minimum length at 80 minutes, while AFI and BFI’s definitions call any film longer than 40 minutes a feature. The Academy also uses the 40 minute benchmark to determine if a film is a feature or a short. The Sundance Film Festival sets the line at 50 minutes.

https://screenwriting.io/what-is-a-feature-film/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சிக்கலான கேள்வி. வேறு வேறான வரைவிலக்கணங்கள் உள்ளன.

 

What is a feature film?

A feature film (or just “feature”) is a full-length film, the kind you buy a ticket for at your local theater. The term is also used to distinguish between films that are first shown theatrically versus those made for television.

A modern feature is typically between 80 and 180 minutes long, but different groups have different minimum lengths to be considered a feature. The Screen Actors Guild definition sets the minimum length at 80 minutes, while AFI and BFI’s definitions call any film longer than 40 minutes a feature. The Academy also uses the 40 minute benchmark to determine if a film is a feature or a short. The Sundance Film Festival sets the line at 50 minutes.

https://screenwriting.io/what-is-a-feature-film/

எனக்கு இது சரியா புரியவில்லை ......
80துக்கும்  180துக்கும் இடையில் 
நூறு நிமிடங்கள் இருக்கிறது ........ அதாவது ஒரு மணிநேரமும் 40 நிமிடங்களும் உள்ள போது 

எப்படி 65 நிமிட படம் ஒன்று முழு நீள திரைப்படம் ஆகா முடியாது? 

நேர விதியை தவிர்த்து வேறு ஒன்றையும் காணோம்.
ஆகவே ஒரு 65 நிமிட படத்தில் 16 காட்சிகள் இருந்தால் 
ஒவொன்றிலும் ஒரு நிமிடம் கூட்டினாலே இவர்களின் முழு நீள திரைப்படம் 
எனும் தகுதியை பெறுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/30/2018 at 6:39 AM, குமாரசாமி said:

படம் எப்ப வெளியிலை வரும்?

ஊருக்கு வாங்க சாந்தி தியட்டர்ல பார்ப்போம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.