Jump to content

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

60.jpg

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், இன்று காலமானார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதியன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் பத்திரிகையுலகில் நுழைந்தார். தமிழில் உள்ள பிரபலப் பத்திரிகைகளில் பணியாற்றினார். இவரது முதல் சிறுகதை 1961ஆம் ஆண்டு வெளியானது. அன்று முதல் தொடர்ந்து படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வந்தார் பிரபஞ்சன். சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்கி வந்தார். இதனால் பத்திரிகையுலகை விட்டு விலகி எழுத்துலகில் பயணித்தார்.

பிரபஞ்சன் எழுதிய வானம் வாசப்படும் நாவல் தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் டயரிக்குறிப்பை ஆதாரமாகக் கொண்டு இது படைக்கப்பட்டது. இவரது படைப்புகள் ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்ச் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 57 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் எழுத்துலகில் இயங்கி வந்த இவர், இளம் எழுத்தாளர்கள் பலரது ஆதர்சமாகவும் அறியப்படுகிறார்.

100க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய பிரபஞ்சன், கடந்த ஓராண்டாகப் புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். கடந்த 15ஆம் தேதியன்று அவரது உடல்நலம் மோசமடைந்தது. இதையடுத்து புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (டிசம்பர் 21) பிரபஞ்சன் காலமானார். இவரது வயது 73.

 

https://minnambalam.com/k/2018/12/21/60

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி:பிரபஞ்சன்

pra

 

மூத்த தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று [21-12-2018] மறைந்தார். பாண்டிச்சேரியின் கதையாசிரியர். முறையான தமிழ்க்கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழவேண்டும் என்ற  விழைவால் ஆசிரியர் பணியை மறுத்தவர். எழுதிவாழவேண்டும் என்னும் நிலை அவரை இதழாளர்தான் ஆக்கியது. இதழாளர் அல்லாமலிருந்தால் அவர் மேலும் எழுதியிருக்கக்கூடும்

யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவர் பிரபஞ்சன். ஆனால் இன்று ஆசிரியராக அவரை நிலைநிறுத்தும் முக்கியமான இலக்கியப்பங்களிப்பு பாண்டிச்சேரி வரலாற்றை மறுஆக்கம் செய்து அவர் எழுதிய ‘மானுடம் வெல்லும்’ ‘வானம் வசப்படும்’ என்னும் இரு நாவல்கள்தான்.

வரலாற்றுநாவல் என்பதை நாம் வரலாற்றுக்கற்பனை நாவலாகவே உருவகித்திருந்தோம்.[ Historical romance] கற்பனையற்ற, [ அதாவது கட்டமைப்பையும் தொடர்ச்சியையும் உருவாக்குவதற்காக மட்டுமே கற்பனையைக் கையாண்ட] வரலாற்று ஆக்கம் என மானுடம் வெல்லும் நாவலைச் சொல்லலாம். அவ்வகையில் தமிழில் அதுவே முதல் படைப்பு.

மானுடம் வெல்லும் வரலாற்றின் இயல்பான ஆதிக்கப்பரிணாமத்தை அதிலுள்ள குரூரத்தை ஒட்டுமொத்தமான பொருளின்மையை கற்பனையால் மிகையாக்காமல் அப்படியே சொல்ல முற்பட்ட ஆக்கம். சமகால வரலாற்றுச் சித்திரம் என்பதனால் அது இயன்றது. பண்டைய வரலாற்றை அப்படி எழுதுவதற்கான வரலாற்றுச் சான்றுகள் நமக்கு இல்லை. ஆனந்தரங்கம்பிள்ளையின் தினப்படிச் சேதிக்குறிப்பு அத்தகைய வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்க பிரபஞ்சனுக்கு உதவியது

இன்னொருவகையிலும் பிரபஞ்சனின் அந்நாவல் முக்கியமானது. எழுதப்பட்டதை திரும்ப எழுதுவது என்பது ஒரு பின்நவீனத்துவ எழுத்துமுறை. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் மறு ஆக்கம் மானுடம் வெல்லும். கதையாடலின் மறுகதையாடல். அதனூடாக வரலாறு எப்படி மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது என்னும் பார்வையை வாசகன் அடையமுடியும்

மானுடம் வெல்லும் நாவல் வெளிவந்தபோது 1990ல் அதற்கு முதல் விமர்சனக்கூட்டத்தை தர்மபுரியில் நான் நண்பர்கள் மொரப்பூர் தங்கமணி போன்றவர்களுடன் இணைந்து நடத்தினேன். பிரபஞ்சன் அதில் கலந்துகொண்டார். தன் நாவலுக்கு நடத்தப்பட்ட முதல்கூட்டம் என அப்போது பிரபஞ்சன் கூறினார். நான் தமிழகத்தில் ஒருங்கிணைத்த முதல் இலக்கியக்கூட்டமும் அதுதான்.

வானம் வசப்படும் மானுடம் வெல்லும் நாவலின் தொடர்ச்சி. ஆனால் தினமணி கதிர் வார இதழில் அந்நாவல் திடீரென நிறுத்தப்பட்டமையால் அது முழுமையாக வடிவம் கொள்ளவில்லை. அதை முழுமையாக்கி எழுத உத்தேசித்திருப்பதாக அவர் சொன்னார். ஆனால் அது நிகழவில்லை.  1995ல் வானம் வசப்படும் நாவலுக்காக பிரபஞ்சன் சாகித்ய அக்காதமி விருது பெற்றார்.

பிரபஞ்சனுடன் எப்போதும் நல்லுறவு இருந்தது. சென்னை செல்லும்போது பீட்டர்ஸ் காலனியிலிருந்த அவருடைய இல்லத்திற்கு நண்பர்களுடன் சென்று சந்திப்பதுண்டு. எப்போதுமே நூல்கள் நடுவே ஊதுபத்தி ஏற்றிவைத்து தூய ஆடை அணிந்து அமர்ந்து வாசித்துக்கொண்டிருப்பார் என்பது என் உளச்சித்திரம். அவர் நோயுற்று சிகிழ்ச்சையில் இருந்த போது அருகிருந்த விடுதியில் சென்று பார்த்தபோது நோயை பற்றி பேசுவதை தவிர்ப்போம் என்று சொன்னார். கடைசியாகப் பார்த்தது வெண்முரசு நாவல்களுக்கான வெளியீட்டுவிழாவில் அவர் பேசியபோது.

தமிழிலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர் என பிரபஞ்சனைச் சொல்லமுடியும். பிற்காலத்தில் வாழ்வின்பொருட்டு எழுதிய இதழியல் எழுத்துக்களால் இலக்கியம் படைப்பதற்கான உளநிலையை இழந்திருந்தார். மீண்டு வந்து எழுதுவேன் என்பதே எப்போதும் அவர் சொல்லிவந்ததாக இருந்தது

பிரபஞ்சனுக்கு அஞ்சலி

ஜெயமோகன்

 

https://www.jeyamohan.in/116380#.XB06pS-nxR4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்துலகில்... தனக்கென்று  ஒரு இடம் பிடித்த,
எழுத்தாளர் வரிசையில்... பிரபஞ்சனின்  பங்களிப்பும் நிச்சயம் உள்ளது.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.