Jump to content

சிரியா போர்: "அமெரிக்கப் படைகள் வெளியேறினால் ஐஎஸ் மீண்டும் தலைதூக்கும்" - குர்துகள் அச்சம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • பகிர்தலுக்கான பகுதியை மூடவும்
     
சிரியா: "அமெரிக்க படைகள் வெளியேறினால் ஐஎஸ் மீண்டும் தலைதூக்கும்" - குர்துகள் எச்சரிக்கைபடத்தின் காப்புரிமை Getty Images

சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவு அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் தலையெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கூட்டணிக்கு குர்துகள் தலைமை வகிக்கின்றனர்.

சிரியா ஜனநாயகப் படை (SDF) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், சிரியாவில் ஒரு ராணுவ வெற்றிடம் ஏற்பட்டால் தங்களது அமைப்பு "எதிரிப்படைகளுக்கு" இடையில் சிக்கும் நிலை உண்டாகும் என்று கூறியுள்ளது.

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று (புதன்கிழமை) அறிவித்தார்.

இருப்பினும், முக்கிய கூட்டாளிகளும் சில அமெரிக்க அரசியல்வாதிகளும் டிரம்பின் அறிவிப்பிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல்முறையாக அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் உத்தரவின்பேரில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரோடு போரிட்டு வந்த உள்ளூர் குர்தீஷ் போராளிகளுக்கு உதவ அமெரிக்க துருப்புகள் அங்கு சென்றன.

தற்போது வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப்படையினர் உதவி செய்கின்றனர்.

அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெற்றால், அது ஐஎஸ் அமைப்புக்கெதிரான போர் நடவடிக்கையில் 'எதிர்மறையான தாக்கத்தை' ஏற்படுத்துவதுடன், ஐஎஸ் அமைப்பு 'மீண்டும் உயிர்த்தெழ' வழிவகுக்கும் என்று குர்துகள் தலைமையிலான ஐ.எஸ். எதிர்ப்புக் கூட்டணி தமது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

சிரியா: "அமெரிக்க படைகள் வெளியேறினால் ஐஎஸ் மீண்டும் தலைதூக்கும்" - குர்துகள் எச்சரிக்கைபடத்தின் காப்புரிமை AFP

அமெரிக்காவின் நடவடிக்கை பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு எதிரான "அபாயகரமான தாக்கத்தை" ஏற்படுத்துவதுடன், "அரசியல் மற்றும் இராணுவ வெற்றிடத்தை" உருவாக்கும் என்றும், மேலும் ஐஎஸ் படைகளின் பிடியில் தங்களது படையினர் சிக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாங்கள் தீவிரவாதக் குழுவாகக் கருதும் குர்து படைகள் மீது ராணுவத் தாக்குதல் தொடுக்கவுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.

துருக்கி அத்தகைய தாக்குதலைத் தொடுக்குமானால், அது அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலைக்கு கொண்டு செல்லும்.

அமெரிக்காவின் திட்டம் என்ன?

ஐஎஸ் அமைப்பை ஒழிப்பதற்கான முயற்சியில் "அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதாக" பென்டகன் கூறினாலும், அதுகுறித்த மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.

சிரியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிகளைப் பெற்றுள்ள அமெரிக்கப் படையினரை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்று டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் இவரது பதிவு @realDonaldTrump: Getting out of Syria was no surprise. I’ve been campaigning on it for years, and six months ago, when I very publicly wanted to do it, I agreed to stay longer. Russia, Iran, Syria & others are the local enemy of ISIS. We were doing there work. Time to come home & rebuild. #MAGAபுகைப்பட காப்புரிமை @realDonaldTrump @realDonaldTrump <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @realDonaldTrump: Getting out of Syria was no surprise. I’ve been campaigning on it for years, and six months ago, when I very publicly wanted to do it, I agreed to stay longer. Russia, Iran, Syria &amp; others are the local enemy of ISIS. We were doing there work. Time to come home &amp; rebuild. #MAGA" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/realDonaldTrump/status/1075718191253504001~/tamil/global-46636592" width="465" height="272"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @realDonaldTrump</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@realDonaldTrump</span> </span> </figure>

நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், சிரியாவிலிருந்து அமெரிக்க ராணுவம் எத்தனை நாட்களில் திரும்பப் பெறப்படும் என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்நடவடிக்கையை அடுத்த 30 நாட்களுக்குள் முடிப்பதற்கு டிரம்ப் விரும்புகிறார் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன?

அமெரிக்க செனட் உறுப்பினரும், டிரம்பின் ஆதரவாளருமான லிண்ட்ஸே கிரஹாம், அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறுவது, "ஒபாமா எடுத்தது போன்ற மிகப் பெரிய தவறான முடிவு" என்றும், இது சிரியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் "நாசகரமான விளைவுகளை" ஏற்படுத்துமென்றும் தெரிவித்துள்ளார்.

சிரியா: "அமெரிக்க படைகள் வெளியேறினால் ஐஎஸ் மீண்டும் தலைதூக்கும்" - குர்துகள் எச்சரிக்கைபடத்தின் காப்புரிமை Reuters

இப்பகுதியில் ரஷ்யா மற்றும் இரான் செல்வாக்கு செலுத்துவதற்கு இது வழிவகுக்கும் என்று தான் அஞ்சுவதாக அவர் மேலும் கூறினார்.

அமெரிக்கா என்ன சொல்கிறது?

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான உலகளாவிய கூட்டணிக்கான அமெரிக்கத் தூதரான பிரெட் மெக்கர்க் சில நாள்களுக்கு முன்பு இது பற்றிக் கூறும்போது, "ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லாமல் போய்விடுவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. யாரும் அவ்வளவு விவரமில்லாதவர்கள் இல்லை. எனவே நாங்கள் களத்தில் நீடித்து நிற்கவும், அதன் மூலம் இந்தப் பகுதிகளில் ஸ்திரத்தன்மை நிலவுவதை உறுதி செய்யவும் விரும்புகிறோம்" தெரிவித்திருந்தார்.

பிற நாடுகள் என்ன சொல்கின்றன?

பிரிட்டன்: "இன்னும் செய்வதற்கு நிறைய உள்ளது. ஐஎஸ் தரப்பினர் உருவாக்கும் அச்சுறுத்தலை உற்றுநோக்குவதை நாம் தளர்த்திட விடக்கூடாது" என்று பிரிட்டனின் வெளிநாட்டு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியா: "அமெரிக்க படைகள் வெளியேறினால் ஐஎஸ் மீண்டும் தலைதூக்கும்" - குர்துகள் எச்சரிக்கைபடத்தின் காப்புரிமை AFP

பிரான்ஸ்: இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள பிரான்சின் பாதுகாப்புத்துறை அமைச்சர், பிளோரென்ஸ் பார்லே, ஐஎஸ் அமைப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, வரைபடத்திலிருந்து முழுமையாக நீக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

"இந்த பயங்கரவாத அமைப்பு முழுவதுமாக, இராணுவ ரீதியாக உறுதியாகத் தோற்கடிக்கப்பட வேண்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இஸ்ரேல்: அமெரிக்கா "இப்பகுதியில் செல்வாக்கு செலுத்த வேறு வழிகளில்" முயற்சிக்க உள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம், முறை குறித்து கண்காணிப்பதோடு, அது தங்களுக்கு ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து ஆராயவுள்ளதாக இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளது.

ரஷ்யா:தமது வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அமெரிக்காவின் முடிவை வரவேற்றார். ஆனால், அமெரிக்கா வெளியேறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அவர் கூறினார். "அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாக உள்ளது. தாங்கள் வெளியேறப்போவதாக அவர்கள் கூறிக்கொண்டேதான் இருக்கிறார்கள்" என்றும் புதின் கூறினார்

https://www.bbc.com/tamil/global-46636592

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.