Jump to content

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து

Editorial / 2018 டிசெம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:23 Comments - 0

image_e23d71ef2f.jpg

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுக் காணப்படுகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

இலங்கை: 282/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 83, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 80, திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்கள்.  பந்துவீச்சு: டிம் செளதி 6/68, நீல் வக்னர் 2/75, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, ட்ரெண்ட் போல்ட் 1/83)

நியூசிலாந்து: 311/2 (துடுப்பாட்டம்: டொம் லேதம் அ.இ 121, கேன் வில்லியம்சன் 91, றொஸ் டெய்லர் ஆ.இ 50, ஜீட் றாவல் 43 ஓட்டங்கள்.  பந்துவீச்சு: தனஞ்சய டி சில்வா 1/30, லஹிரு குமார 1/79)

 

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இலங்கைக்கெதிரான-முதலாவது-டெஸ்டில்-முன்னிலையில்-நியூசிலாந்து/44-226635

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி!

நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, தடுமாற்றத்துடன் விளையாடி வருகின்றது.

தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து, 20 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (திங்கட்கிழமை) Wellingtonஇல் நடைபெற்று வருகின்றது.

இதில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைிவில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து, 20 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், எஞ்சலோ மெத்தியூஸ் 83 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 80 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் டிம் சௌத்தீ 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கு பதிலடித்தாடிய நியூசிலாந்து அணி, அதன் முதல் இன்னிங்சில் Tom Latham இன் இரட்டைச் சதத்தின் துணையுடன் 578 ஓட்டங்களைப் பெற்றது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய Tom Latham இறுதிவரையில் ஆட்டமிழக்காது 264 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

அவரைத் தவிர, அணித்தலைவர் வில்லியம்சன் 91 ஓட்டங்களையும், ரொஸ் டெய்லர், Henry Nicholls ஆகியோர் தலா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், லஹிரு குமார 4 விக்கட்டுக்களையும், டில்ருவன் பெரேரா, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 296 ஓட்டங்கள் பின்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 20 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அணித்தலைவர் மென்டிஸ்,  மெத்தியூஸ் ஆகியோர் களத்தில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடுகின்றனர்.

இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், தோல்வியைத் தடுக்க இலங்கை அணி போராடுகிறது. 7 விக்கட்டுக்களே கைவசமிருக்க இன்னும் 276 ஓட்டங்களினால் இலங்கை அணி பின்னிலையில் உள்ளது.

 

http://athavannews.com/நியுசிலாந்துக்கு-எதிராக/

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.