Jump to content

கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று

அண்ணா அறிவாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கவுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னைக்கு பயணிக்கவுள்ளனர்.

அந்தவகையில் கருணாநிதியின் சிலையுடன் அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட சிலையையும் திறந்துவைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இச்சிலை திறப்புவிழா மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளமையால் அப்பகுதி மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பாதுகாப்பு மற்றும் சனநெரிசலை கருத்திற்கொண்டு முக்கிய பிரமுகர்களுக்கு மாத்திரம் தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது.

கருணாநிதியின் 9 அடி உயரமான முழு உருவ வெண்கல சிலையை தீனதயாளன் என்ற சிற்பி வடிவமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/கருணாநிதியின்-சிலை-திறப-2/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.. உணர்ச்சி வசப்பட்ட சோனியா !

sonia23-1544969889.jpg

சென்னை: கருணாநிதியை நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. இதையடுத்து ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான பொதுக்கூட்டம் நடந்தது.இந்த விழாவில் பல மாநில அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசியதாவது,இந்திய அரசியலில் கருணாநிதி பெரிய புரட்சியாளர். அண்ணா மற்றும் பெரியாரின் வழியை பின்பற்றி அரசியல் செய்தவர் கருணாநிதி. திராவிட அரசியலின் ஊற்றுக்கண் கருணாநிதி. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மகிழ்ச்சியடைகிறேன்.

கருணாநிதி பொது வாழ்க்கை தமிழகத்தின் வரலாறாக உள்ளது. தமிழகத்தின் முதல்வராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி.கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்து தமிழகத்தை மொத்தமாக மாற்றியவர்.அவர் இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் தோற்றது இல்லை. இந்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது.

கருணாநிதிக்கு தமிழ் மீது பெரிய ஆசை இருந்ததுதமிழை வளர்க்க அவர் பெரிய பாடுபட்டார். அவர் அற்புதமான பேச்சாளர்.அவரின் எழுத்திற்கு முன் எதுவும் சாத்தியமில்லை. தமிழ் மீதான ஆசையால் அவர் பல படைப்புகளை இயற்றி இருக்கிறார்.நாளும் பொழுதும் தமிழை வளர்க்க கருணாநிதி பாடுபட்டார் கருணாநிதி கையில் தமிழ் விளையாடியதை பார்த்து வியக்கிறேன்.

தமிழ் மீது தனியாக தாகம் கொண்டவர் கருணாநிதி. பல்லாயிரக்கணக்கான சிறு, குறு கதைகளை எழுதியவர் கருணாநிதி. 7000 கடிதங்களை கருணாநிதி தனது உடன்பிறப்புகளுக்கு எழுதினார்அவரின் வாழ்க்கையில் தமிழ் செம்மொழி ஆனதுதான் பெரிய மகிழ்ச்சி.அண்ணாவின் வழியில் செயல்பட்ட சமூக சீர்திருத்தவாதி கருணாநிதி.

அரசு வேளைகளில் பெண்களுக்கு இடஓதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அவர் கொண்டு வந்த சட்டம். கூட்டாச்சி தத்துவத்திற்கு அவர் கொடுத்த மதிப்பு.பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் செய்த் நன்மைகள். அவர்களுக்காக அவர் கொண்டு வந்த இடஒதுக்கீடு. பாராளுமன்ற நிகழ்வுகளிலும், மரபுகளிலும் நம்பிக்கை கொண்டவர்.

அவர் மதசார்பற்ற அரசியல்வாதி. அவர் எப்போதும் மக்களுக்காக உழைத்துக் கொண்டு இருந்தார்.மாநில உரிமைகளுக்காக இறுதி வரை போராடிய மாபெரும் போராளி கருணாநிதி. கருணாநிதியை நாங்கள் வாழக்கை வரை மறக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சிக்கு திமுக சார்பாக அவர் கொடுத்த ஆதரவை நாங்கள் எப்போதும், எந்த காலத்திலும் மறக்க மாட்டோம்.எப்போதெல்லாம் தேசிய அரசியலில் பிரச்சினை வந்ததோ அப்போது கருணாநிதி ஆலோசனை கேட்பேன்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி அளித்த ஆதரவை மறைக்க மாட்டேன்அவரின் காலத்தை போலவே அவருக்கு அடுத்த இந்த காலத்திலும் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மதவாத சக்திகளை ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும். தமிழக அரசியலை 60 ஆண்டுகாலம் ஆட்டிப்படைத்தவர் கருணாநிதி.

https://tamil.oneindia.com/news/chennai/we-won-t-forget-karunanidhi-our-lifetime-says-sonia-gandhi-dmk-function-336686.html

டிஸ்கி :

2009 ஆம் ஆண்டு செய்த உதவி ? ரொம்பவே உணர்ச்சி வசப்படுறார் போல ..🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கருணாநிதியை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.. உணர்ச்சி வசப்பட்ட சோனியா !

அது தானே சொந்த இனத்தையே அழிக்கும் போது ஒருத்தன் துணையாக இருந்திருந்தால் எப்படி மறக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கருணாநிதியை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.. உணர்ச்சி வசப்பட்ட சோனியா !

தமிழக மக்கள் மீதான அக்கறையில் இது வரவில்லை. ஏனெனில்.. 2009 க்குப் பின் தமிழக மக்கள் சந்தித்த எந்த துன்பத்திலும் பங்கெடுக்காத இந்த கருணாநிதியின் சொக்கத் தங்கம்.. சொந்த பழி உணர்ச்சிக்கு பொய்களை முன்வைத்து...  ஒரு இனத்தை அழித்தொழிக்க ஒத்தூதிய ஒருவரை எப்படி மறக்க முடியும்.

இவர்களை எல்லாம் இயற்கை ஒரு நாள் முறையாக தண்டிக்கும். நீங்களும்.. நீங்கள் அழித்தொழித்த மக்களிடம் போய் சேரும் காலம் வரும்... கருணாநிதிக்கு வந்தது போல. 😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.