Jump to content

ரணில் தலைமையிலான அமைச்சரவையில் ஸ்ரீ.சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

0b3079625ed50d96c18af4d0014dae15_XL-720x450.jpg

ரணில் தலைமையிலான அமைச்சரவையில் ஸ்ரீ.சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி!

ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில், முதற்கட்டமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆறு உறுப்பினர்கள் இணைந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர்களுக்கான அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எனினும், குறித்த ஆறு பேரும் ஒரு கட்சியாக அன்றி, தனி நபர்களாகவே அரசாங்கத்தில் இணைந்துக் கொள்ள போவதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.தே.க.யுடன் இதற்கான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஒரு உடன்படிக்கைக்கு வந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்ற போதிலும், அரசாங்கத்தில் இணையும் உறுப்பினர்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

http://athavannews.com/ரணில்-தலைமையிலான-அமைச்சர/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.