Jump to content

கேரளத்து பெண்களின் ரகசியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேரளத்து பெண்கள் என்றாலே நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் இவைகள் தான் ஞாபகத்துக்கு வரும்.

இதற்கு அவர்களின் அழகு பராமரிப்புதான் காரணம். அந்த மாநிலம் இயற்கை வளங்களால் சூழப்பட்டதும் இப்பெண்களின் அழகுக்கு காரணம் ஆகும்.

தேங்காய் எண்ணெய்
கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடிபட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.

மஞ்சள்
சருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்.

கற்றாழை
முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள். இதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.

காஜல்
கேரளத்து பெண்களின் கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களின் கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள்.

அதிலும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள்.

கடலை மாவு
கடலை மாவு கொண்டுவாரம் ஒருமுறையாவது ஃபேஸ் பேக் போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம்.

செம்பருத்தி
கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் இதுதான். அது என்னவெனில் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்குபதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.

கறிவேப்பிலை
பொடுகு வராமல் இருப்பதற்கு, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.

சிவப்பு சந்தனம்
இதுதான் இருப்பதிலேயே முக்கியமானது. கேரளத்து பெண்கள் தினமும் இரவில் படுக்கும் போது, சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக உள்ளது.

சீகைக்காய்
ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காயை அரைத்து, அவற்றையும் பயன்படுத்துவார்கள்.

http://mithiran.lk/archives/976

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளத்து பெண்குட்டிகள் அழகே :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கேரளத்து பெண்குட்டிகள் அழகே :27_sunglasses:

220px-Sardina_pilchardus_Gervais.jpg

கொழும்பான்... ஓமனக்குட்டியிண்ட கஞ்சி, மத்தி மீன் எல்லாம் ருசிச்சு சாப்பிட்டுப்போட்டு,  அதை விட்டுட்டு, ஓமனக்குட்டியின்ட  அழகினை ஆராய வெளிக்கிட்டார் போல தெரியுது. 

குளிர் எண்டுறியள்... எந்த ஊர்ல எண்டு சொல்லலாமே.... நாமளும் ஓமனக்குட்டியிண்ட சாப்பாட்டினையும், அழகையும் ரசிப்போமே..

photo-thumb-9402.jpg

colombanToday 5:54
நேற்று இரவு ஓமனகுட்டியின் மலையாள ஓட்டலில் அருமயான இரவு சாப்பாடு. சுட சுட சிவப்பரிசி கஞ்சும், தொட்டுக்கொள்ள எழுமிச்ச்சை உறுகாய், தேங்காய் துவையல், பாசிப்பயரு. அத்தோடு ஒரு மத்தி மீன் பொரியல் கஞ்சை கரண்டியில் எடுத்து குடித்து விட்டு, ஊறுகாயை நாக்கில் வைத்து நக்கி விட்டு, சூடனா பொரித்த மத்தி மீனை பிய்த்து கடிக்கும்போது, அப்பப்பா என்ன அதீத சுவை குளிருக்கு அந்த மாதிரி அள்ளி பருகினேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஜல் என்டால் என்ன?...கண் மையா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/13/2018 at 7:43 AM, colomban said:

காஜல்
கேரளத்து பெண்களின் கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களின் கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள்.

அதிலும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள்.

http://mithiran.lk/archives/976

47 minutes ago, ரதி said:

காஜல் என்டால் என்ன?...கண் மையா?
 

ஓமனக்குட்டி யின் அழகு ரகசியத்தை சொன்னா.... கொழும்பான் கஞ்சிக்கும் வழி இல்லாமல் திரிவார்.

அநேகமா சொல்ல மாட்டார் எண்டு நினைக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

ஓமனக்குட்டி யின் அழகு ரகசியத்தை சொன்னா.... கொழும்பான் கஞ்சிக்கும் வழி இல்லாமல் திரிவார்.

அநேகமா சொல்ல மாட்டார் எண்டு நினைக்கிறேன்...

 

மஸ்கரா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.