Jump to content

2 படம் பார்க்க பேரன்களுடன் சென்ற ரஜனிக்கு வந்த தலைவலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி தனது மனைவி லதா மற்றும் பேரன்கள் யாத்ரா, லிங்காவுடன் சேர்ந்து தியேட்டரில் 2.0 படம் பார்த்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படங்களில் லதா ரஜினிகாந்தின் இருக்கைக்கு பின்னால் ஒரு பெண் நிற்கிறார். அந்த பெண் ரஜினி வீட்டு பணிப்பெண் என்றும் அவர் நின்று கொண்டே படம் பார்த்தார் என்றும் சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. தியேட்டரில் இருக்கை இருந்தும் பணிப்பெண்ணை நிற்க வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஜினியின் பிறந்தநாளான இன்று அந்த புகைப்படங்களை மீண்டும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து விமர்சிக்கிறார்கள்.

Controversial photos: Put an end to this Rajini sir

 

அவர் பணிப்பெண் தான் என்றும், தியேட்டரில் இருக்கைகள் இருந்தும் அவரை நிற்க வைத்தனர் என்றும் தமிழ் நடிகர் ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 

Controversial photos: Put an end to this Rajini sir


https://tamil.filmibeat.com/news/controversial-photos-put-an-end-this-rajini-sir-057331.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட் போராட்டத் தருணத்தில் ரஜினி அளித்த பேட்டியையும் ஏழு பேர் விடுதலை பற்றிய கேள்விக்கு அவர் உளறியதையும் வைத்துப் பாருங்கள். பொது வாழ்வில் இவரிடம் என்ன பெரிய தரத்தை எதிர்பார்க்கிறீர்கள்? இத்தகையோருக்குக் கோடி கோடியாய் வெற்றியை அள்ளித் தரும் நம் மடமையை என்னவென்று சொல்ல? கலை வேறு நிலை வேறு என்று நம்மவர்களிடமிருந்து விளக்கம் வேறு. ஆரிய வரவு முதல் 'வந்தாரை வாழ வைப்போம்'  என்ற பெயரில் அவர்களுக்கு அடிமைப்பட்டுப் போவதே நம் அழிவிற்கு ஒரு முக்கிய காரணம்- இந்தியாவானாலும் இலங்கையானாலும். மேற்கண்ட நிகழ்வை குறியீடாகப் பார்க்கலாம்- வீற்றிருப்பது ஆரியம், பின் நின்று பணி செய்வது தமிழினம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

அந்த புகைப்படங்களில் லதா ரஜினிகாந்தின் இருக்கைக்கு பின்னால் ஒரு பெண் நிற்கிறார். அந்த பெண் ரஜினி வீட்டு பணிப்பெண் என்றும் அவர் நின்று கொண்டே படம் பார்த்தார் என்றும் சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. தியேட்டரில் இருக்கை இருந்தும் பணிப்பெண்ணை நிற்க வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஜினியின் பிறந்தநாளான இன்று அந்த புகைப்படங்களை மீண்டும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து விமர்சிக்கிறார்கள்.

பெரிய இடத்து சங்கதியெல்லாம் இப்படித்தான் .உஸ்.

இதைவிட வேலைக்காரிகள் எனும் பெயரில் வயது வந்த மகனுக்கென்றே வீட்டில் ஆளை வைத்திருப்பார்கள்.மகன் வெளியே போகத் தான் போறான்.ஏன் அதை வீட்டிலேயே ஒழுங்குபண்ணீட்டாப் போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்... அந்தப் பெண் இருப்பதற்கு கதிரை கொடுக்காமல் விட்டிருந்தால். மிகவும் கண்டனத்துக்குரிய விடயம். 😡
அந்தப் பெண்... படம் பார்க்கிற ருசியில்... எழுந்து நின்று பார்த்தாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/13/2018 at 4:59 AM, தமிழ் சிறி said:

உண்மையில்... அந்தப் பெண் இருப்பதற்கு கதிரை கொடுக்காமல் விட்டிருந்தால். மிகவும் கண்டனத்துக்குரிய விடயம். 😡
அந்தப் பெண்... படம் பார்க்கிற ருசியில்... எழுந்து நின்று பார்த்தாரோ தெரியவில்லை.

அட ரஜனியே, அமைதியா தானே படம் பார்க்கிறார்.... எழும்பி நின்று கத்தலை, படம் பிடிக்கல்ல போல...😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.